Friday, December 26, 2008

பா.ம.க: தமிழ் நாட்டின் தலிபான்கள்??

எல்லாம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது.... 

"எங்கள் மண்ணில் சோவியத் படைகளுக்கு இடமில்லை..." என்று சில வருடங்களுக்கு முன் தலிபான்கள் ஆரம்பித்த போது உண்மை முகங்களையும் நோக்கங்களையும் புரிந்து கொண்டவர்கள் அதிகமில்லை...
..
இசை மதத்திற்கு எதிரானது...இசை நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை...பெண்கள் உடல் முழுதும் மூட வேண்டும்...கண்கள் கூட வெளியே தெரியக் கூடாது...குடும்பத்து ஆண் இன்றி வெளியே செல்லக் கூடாது...மது முற்றிலும் ஒழிப்பு... 

கோர முகங்களின் சில பகுதிகள் வெளி வந்த போதும் பலருக்கு உறைக்கவில்லை....

நல்லது தான சொல்றாங்க....என்று ஜால்ரா தட்டியவர்கள் பலர்... 

ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது, தாடி வளர்க்க வேண்டும்..தினம் ஐந்து முறை தொழாவிட்டால் சவுக்கடி.... பெண்கள் பள்ளிகள் இழுத்து மூடப்படும்...வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம்...கல்லடி மரணம்....மது முற்றிலும் ஒழிப்பு அதே சமயம் உலக நாடுகளுக்கு ஒப்பியம் கடத்தலாம்.. பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடி குண்டு...மாணவிகள் கடத்தல்.... 

உண்மையான முகங்கள் வெளியே வந்த போது அய்யோ அய்யோ என்று அலறி என்ன பயன்?? 

பொது மக்களை நேருக்கு நேர் சந்தித்து பெருவாரியான ஓட்டுக்களில் வெற்றி பெற்ற திரு.அன்பு மணி பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்த போது வாழ்த்தி வரவேற்றவர்கள் அனேகம் பேர்....

சரி, பொது இடம் என்றால் என்ன?? மக்கள் அடர்ந்த கும்பலான பிரதேசங்கள் பொது இடம் என்றால் சரி...ஆனால், காடு, ரோடு, தெரு, குட்டிச்சுவரு, ரோட்டு ஓரமாக நிற்கும் என் சொந்தக் கார் என்று எல்லா இடமும் பொது இடமென்றால்...  

சிகரெட்டில் ஆரம்பித்தது இப்பொழுது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது...

பத்து மணிக்கு மேல் மது விற்பனைக்கு தடை....

அடுத்த கட்டம் என்ன என்பதை பதவி ஆசையற்ற, என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று ஒரு காலத்தில் சத்தியம் செய்த திரு. ராமதாஸ் கொஞ்சமும் மறைக்கவில்லை...  

முழுமையான மதுவிலக்கு என்பதே எங்களின் குறிக்கோள்.... 

அப்படியானால் மது குடிப்பவர்கள் என்ன செய்வது?? திருந்துங்கள் என்று சொல்லக் கூடும்...ஒருவன் மதுக் குடிப்பதும் குடிக்காததும் அவனவன் விருப்பம்..அவனவன் காசில் அவனவன் குடிக்கிறான்... ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட இவர்களுக்கு என்ன அதிகாரம்?? 

ராமதாசிடம் பிச்சை வாங்கி யாரும் குடிக்கவில்லை...யார் காசையும் திருடியோ ரோடு போட கான்ட்ராக்ட் வேணும்னா 10% கமிஷன் என்று ஊர்ப்பணத்தை கொள்ளையடித்தோ குடிக்கவில்லை....என் பணம்!  

குடித்து விட்டு கலாட்டா செய்கிறார்கள் என்று சில ஒழுக்க சீலர்கள் சொல்லக்கூடும்... குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களை சிறையில் அடைக்க ஏற்கனவே சட்டம் இருக்கிறது.... 

சரி, கலாட்டா செய்வதால் மதுவுக்கு முழு தடை என்றால், அரசியல் வியாதிக‌ளால் தான் பல கலவரங்கள் நடக்கின்றன... தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்ததும், தினகரன் பத்திரிகை ஊழியர்களை எரித்ததும்....வட மாவட்டங்களில் பல ஜாதிக் கலவரங்களுக்கு காரணமும் அரசியல் வியாதிகள் தான்....

அப்படியானால் அரசியல் கட்சிகளை தடை செய்தால் என்ன??? அதிலும் வன்முறையாலேயே வளர்ந்த கட்சி, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட ஒருவரை முக்கிய பொறுப்பில் வைத்திருந்த கட்சி ஒன்றிருக்கிறது....இந்த கட்சியை முதலில் தடை செய்து சமூக நீதியை நிலை நாட்டினால் என்ன??  

பா.ம.கவின் வரலாற்றை திரும்பி பார்த்தால்...தலிபான்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை...  

"வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்...." (எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் ‍ தலிபன்)  

"நீதிபதிகள் பதவியில் வன்னியருக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்" (ஒரு முஸ்லிம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்... தலிபன்

"உலகின் சிறந்த ஜனநாயக வாதி ராமதாசுக்கு மதுரையில் கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீது உருட்டுக் கட்டை தாக்குதல்" ( அமெரிக்காவில் 9/11 தாக்குதல்...தலிபன்)  

"பாபா படப்பெட்டி கடத்தல்" (அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை..இசைத்தட்டு விற்பனை செய்யும் கடைகள் அடித்து நொறுக்கல்: தலிபன்)  

"தமிழ் நாட்டில் எல்லாரும் தமிழில் மட்டுமேபடிக்க வேண்டும்...ஆனால் அதே சமயம் அவரது பேரக்குழந்தைகள் டெல்லியில் தமிழ் சொல்லித் தராத ஒரு பள்ளியில் படிப்பார்கள்" (மக்கள் எல்லாரும் கடும் குளிரில் பஞ்சத்தில் வாட, உல்லாசமாக இருந்த தலிபன் அரசின் முக்கிய புள்ளிகள்

"தமிழ் எழுதாத பெயர்ப்பலகை மீது தார் பூச்சு.....ஆனால் என் பேரக் குழந்தைகளின் பெயர் சம்யுக்தா...சங்கமித்ரா...." (புத்தர் சிலைகளை உடைத்து நொறுக்கிய தலிபன்கள்!)  

குடிக்கிற நாய்ங்களுக்கு தான் இதனால பிரச்சினை...எனக்கெல்லாம் ஒண்ணுமில்ல...நானெல்லாம் ரொம்ப நல்லவன் என்று நினைக்கும் ஒழுக்க சீலர்கள் பா.ம.க வின் கடந்த கால வரலாற்றை கொஞ்சம் எண்ணிப் பார்ப்பது நல்லது..  

எது எப்படி போனாலும் எனக்கென்ன என்று நினைத்தால்..... சாரு நிவேதிதாவின் வலைத் தளத்தில் Rev. Martin Niemoller சொன்னதாக படித்தது... 

In Germany, the Nazis first came for the communist 
and I did not speak up because I was not a Communist  
Then they came for the jews, 
and I did not speak up because I was not a jew.  
Then they came for the trade unionists, 
and I did not speak up because I was not a trade unionist. 
Then they came for the Catholics, 
and I did not speak up because I was protestant.. 
Then they came for me, 
and by that time, there was no one left to speak up for me!

மீண்டும்....எல்லாம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது!

(இந்த பதிவை என் மற்றொரு வலைத் தளமான முரண்தொடையில் போடலாமா இல்லை வருங்கால முதல்வரில் போடலாமா என்று நீண்ட சிந்தனைக்கு பின், இந்த தளத்திலேயே இடுகிறேன்...வருங்கால முதல்வர்னு தளத்துக்கு பேர் வச்சிக்கிட்டு அரசியல் பேசாட்டி எப்படி? :))

அம்மா தாயே....ஓட்டுப் போடுங்கம்மான்னு அஞ்சா நெஞ்சன் அழகிரியே கேட்கும் போது அஞ்சு காசு பெறாத அது சரிக்கு என்ன வந்துச்சி? அதனால பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க எசமான்! பிடிக்காட்டி தமிழ்மண தம்ஸ் டவுன் குடுத்துட்டு போங்க!

17 comments:

நசரேயன் said...

சரக்கு அடிச்சுட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

குடுகுடுப்பை said...

அப்படியானால் மது குடிப்பவர்கள் என்ன செய்வது?? திருந்துங்கள் என்று சொல்லக் கூடும்...ஒருவன் மதுக் குடிப்பதும் குடிக்காததும் அவனவன் விருப்பம்..அவனவன் காசில் அவனவன் குடிக்கிறான்... ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட இவர்களுக்கு என்ன அதிகாரம்?? //

மனிதன் பிறந்தப்பவே மதுவும் பிறந்திருக்கும்,இதையெல்லாம் சட்டம் மூலம் தடுக்கமுயல்வது வீண்வேலை

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
சரக்கு அடிச்சுட்டு யோசிக்க வேண்டிய விஷயம்
//

அப்ப நீங்க இன்னும் அடிக்கலையா?? ஜீஸஸ் பேர சொல்லி இங்க ரெண்டு நாளா அது தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்!

யோசிங்க...யோசிச்சி பாருங்க...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

மனிதன் பிறந்தப்பவே மதுவும் பிறந்திருக்கும்,இதையெல்லாம் சட்டம் மூலம் தடுக்கமுயல்வது வீண்வேலை
//

அது வீண் வேலை மட்டுமல்ல...திணிப்பு...கல்ச்சுரல் ஃபாஸிசம் என்பது என் கருத்து...அவ்வளவே!

பழமைபேசி said...

வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களை வழி மொழியுறேன்!

Mahesh said...

ஜூப்பரு.... தலிபான் இப்ப மரம்னா பா.ம.க. இப்ப ஒரு விதை அல்லது செடியா இருக்கலாம். எதுவா இருந்தாலும் அதை என்ன பண்ணணும்? இதுக்கு விடை எல்லாருக்கும் தெரியும். ஆனா செய்வோமா? ஒன்று கையாலாகாதவர்களாக இருக்கிறோம் அல்லது அரசியல் வியாபாரிகளா இருக்கறோம்.

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க. :-)

ராஜ நடராஜன் said...

//அம்மா தாயே....ஓட்டுப் போடுங்கம்மான்னு அஞ்சா நெஞ்சன் அழகிரியே கேட்கும் போது அஞ்சு காசு பெறாத அது சரிக்கு என்ன வந்துச்சி? //

ஓட்டு கேட்கிறதுக்கு இப்படியும் கூட வழியிருக்கிறதா என்ன:)எப்படியோ ஓட்டுப் போட்டாச்சு.ஆனால் சரக்கைப் பற்றி பேசும்போது சில விசயங்களை அலசினால் நன்றாயிருக்குமென நினைக்கிறேன்.முன்பெல்லாம் தண்ணி அடிக்கணுமுன்னா கர்நாடகா,ஆந்திராப் பக்கம் தமிழன் போயிட்டு வர்றதால நம்மூர் வருமானம் மற்ற மாநிலங்களுக்குப் போய் விடுகிறது என்ற காரணத்தால் தமிழ்நாட்டுக்குள்ள சரக்கு வந்ததென்று நினைக்கிறேன்.அதனால் கள்ளச்சாராயம் வேறு குடிசைத் தொழிலாகியது.எல்லாம் அரசல் புரசல்தான்.மாற்று போதையாக கஞ்சா,மருத்துவக் கடை மாத்திரைகள் போட்டி போட்டன.இருந்தாலும் போதையர்களின் பங்கு குறைவு எனவே நினைக்கிறேன்.அதுவும் இது நகர் சார்ந்த பகுதிகளை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.மது அரசு அங்கீகாரத்திற்குப் பிறகு சரஷ் போன்றவை குறைந்திருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்குமென நினைக்கிறேன்.மது அருந்துதல் ஒரு கலை.அதை தமிழர்கள் பெரும்பாலோர் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை.காரணம் மது தமிழுக்கு இடையில் புகுந்த கலாச்சாரம்.

http://urupudaathathu.blogspot.com/ said...

WELL SAID..

அப்படியே அட்ரஸ் குடுத்தா வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும் ..

சிவகுமார் சுப்புராமன் said...

//அப்படியே அட்ரஸ் குடுத்தா வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும் ..//

இந்த கட்டுரையை படிச்சானுங்கன்னா ஆட்டோ வராது, லோரிதான் வரும் ஹா ஹா ஹா....

கட்டுரை நெத்தியடி முதல்வரே!!!

வில்லன் said...

//கலாட்டா செய்வதால் மதுவுக்கு முழு தடை என்றால், அரசியல் வியாதிக‌ளால் தான் பல கலவரங்கள் நடக்கின்றன... தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்ததும், தினகரன் பத்திரிகை ஊழியர்களை எரித்ததும்....வட மாவட்டங்களில் பல ஜாதிக் கலவரங்களுக்கு காரணமும் அரசியல் வியாதிகள் தான்....


அப்படியானால் அரசியல் கட்சிகளை தடை செய்தால் என்ன??? அதிலும் வன்முறையாலேயே வளர்ந்த கட்சி, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட ஒருவரை முக்கிய பொறுப்பில் வைத்திருந்த கட்சி ஒன்றிருக்கிறது....இந்த கட்சியை முதலில் தடை செய்து சமூக நீதியை நிலை நாட்டினால் என்ன?? //

வாஸ்தவமான உண்மை. எதை நான் வழிமொழிகிறேன்.

ஆமா அப்படி தடை செஞ்சா நாட்டுல ஒருகட்சியுமே இருக்காதே அப்ப என்ன பண்ண?

Rithu`s Dad said...

நல்ல தான் நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேட்டு இருக்கீங்க.. மருத்துவர் அய்யா கொஞ்சம் படிச்சா நல்ல இருக்கும்.. நாட்டில எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது "ஓட்டுக்காகவும் " " காசுக்காகவும் " இவங்க இப்படி பண்ற கூத்துக்களை தட்டி கேட்க யாருமே இல்லையா??

Anonymous said...

இன்னைக்கு தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.மிகசிறந்த ஆளுமை திறன் கொண்ட தன்மான தலைவர் அய்யா ராமதாஸ் மட்டுமே. படிச்சவர், சமுதாயத்திற்கு தொண்டு செய்யவே தனவேலையை துறந்தவர்.இவ்ளோபேரு இவருக்கு எதிராக comments போட்டுருகிங்க. நல்லது...உண்மையானவர்கள் தான் விமர்சிக்கபடுவார்கள். இன்னைக்கு வரை உங்கள சுத்தி என்ன நடக்குது தெரியல? நீங்களாம் படிச்சது ஏட்டுவரை மட்டுமே...எதுக்குமே உதவாது. தனமனித ஜாதிய வெறிக்காக நல்லதலைவர்களை உதாசினபடுத்துகிறீர்கள்.ஆரம்பம்(அண்ணாவிற்கு பிறகு) முதல் இன்றுவரை தமிழ் உணர்வை காசுக்கும் தி.மு.க விற்கு ஜல்லி அடிக்கும் கூட்டங்களில் உங்களின் ஒரு ஜோடி கைகளும் அடக்கம் தான். ஜாதி ஒழிப்பை பேச்சளவில் செய்துப்பார்க்கும் வெற்றுமண்டைகள் இங்கே நிறையபேர் இருக்கிறீர்கள்.உங்களுக்கு இப்ப சுலபமாக புரியும் பாருங்க...Director Sankar படத்துக்கு பேர்வச்சா ஆங்கிலத்தில் தான் அதிகமாக வைப்பார் Gentleman,Boys,Jeans. இப்பலாம் தமிழில் தான் "எந்திரன்". எங்கே இருந்து வந்தது இந்த மாற்றம்?
நானும் blog எழுதறன்...அப்படின்னு பந்தா பண்ணிக்கிட்டு பெரிய மயிராண்டி மாதிரி topic போடாத.உனக்கு anonymousla comments போடுரதவச்சு மீண்டும் மொக்கையா reply பண்ணாத...ஏன் அப்படின்னா இந்த பதிவிற்கு திரும்ப வந்து என்னால படிக்க முடியாது.
எனக்கு பல பயனுள்ள வேலைகளால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.

Tamil said...

இந்த மாதிரி ஒரு கட்டுரை நான் படித்ததே இல்ல, இந்த கட்டுரை எழுதினவருக்கு மூளைன்னு எதாவது இருக்கா?
நீயெல்லாம் மனிதனா? ஏன் இப்படி எங்கள் நேரத்தை வீனடிகின்றாய் ? இந்தமாதிரியெல்லாம் சிந்திக்க உனக்கு எப்படி தோணுது? நி சொல்லிருக்குற கருத்து ஏதாவது தொடர்புடையதா இருக்கா? ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது நீ வேஸ்ட்.... வெத்து வெட்டு..

Anonymous said...

poda thevidiya payala...punda movana

முரளிதீர தொண்டைமான் said...

பரதேசி, பொரம்போக்கு நீ மருத்துவரைப்பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லாதவன். பன்னாடை பயலே.. தரமான நாளிதழ், தரமான தொ.கா அலைவரிசை.. விவசாயத்திற்க்கென ஒரு முன் மாதிரி நிதிநிலை அறிக்கை.. மது மற்றும் புகையிலை எதிர்ப்பு.. போன்ற தெளிவான கருத்துக்கள் இந்நேரம் நாட்டுக்குத்தேவை அதை ஆக்கப்பூர்வமாக வழங்கக்கூடிய ஒரே தலைவர் மருத்துவர் மட்டுமே. உன்னைபோன்று கொள்கைகளற்ற‌ கூத்தாடிகளுக்கு கொடிபிடித்து திரிந்தும் சினிமா வொன்று வாழ்வென்று சோம்பித்திர்யும் மடையர்களுக்கு என்றும் அவர் ஒரு சிறந்த‌ வைத்தியர்தான்.

Suresh said...

Waste Article