Tuesday, November 2, 2010

இஸ்ரேல் , பால்ஸ்தீன சண்டை ஓயுமா?

இன்றைக்கு உண்மைத்தமிழன் மற்றும் டோண்டுவின் பதிவைப் படித்தவுடன், இஸ்ரேல் பற்றி நான் சந்தித்த சிரியாவைச் சேர்ந்த அரபி ஒருவரின் கருத்தைப் பகிர்ந்திட வேண்டுமென்று தோன்றியது, சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் சிரியாவைச் சேர்ந்த அந்த நபரை சந்தித்தேன். இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட இளைஞன், சீனாவில் கட்டடவியல் மேற்படிப்பிற்காக வந்திருந்தார், தன்னை இறையச்சம் உள்ளவன் என்று பலமுறை அவர் பேச்சிலும் தெரிவித்துக்கொண்டார்.

அவர் கூறியது இஸ்ரேல் என்ற ஒரு நாடு அங்கு இருக்கவே கூடாது, அது அவர்களுக்கு சொந்தமானதல்ல,அரபிகளுக்கு சொந்தமானது அவர்கள் கொல்லப்படும்/விரட்டப்படும் வரை அதன் மீதான போர் தொடரும். இப்படிப்பட்ட மனநிலையில் தான் அங்கிருக்கும் அரேபியர்கள் அனைவரும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இஸ்லாமிய வரலாறுகளில் யூதர்கள் அந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்ததும், அவர்கள் குரங்குகளாக மாற்றப்படுவார்கள் என்றெல்லாம் இணையத்தில் ஆங்காங்கே படித்திருக்கிறேன்.(குரான், ஹதீஸ் போன்ற ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை), இதன் மூலம் என் சிற்றறிவுக்கு புலப்படுவது யூதர்களும், அரேபியர்களும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கமுடியும்.

யூதர்களும் இரண்டாயிரம் ஆண்டுகளாக துரத்தப்பட்டு எப்படியோ, இஸ்ரேல் என்ற நாட்டை தங்களுக்காக உருவாக்கி இருக்கிறார்கள், இஸ்ரேலின் இருப்பை அரேபியர்களும் , பாலஸ்தீனத்தின் இருப்பை இஸ்ரேலும் அங்கீகரிக்காத வரை அங்கே போர் ஒயப்போவதில்லை, இஸ்ரேல் தனியாக அத்தனை எதிரிகளை தாக்குப்பிடிக்க முடியாது,அவர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்தி அவைகளை தாக்குப்பிடிக்கும் நண்பர்களை உருவாக்கிக் கொண்டார்கள்,கிட்டத்தட்ட இதே நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்கள் நண்பர்கள் யாரையுமே உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் என் புரிதல்.

ஆபிரகாமிய மதங்களுக்கிடையேயான ஆதிக்கப்போட்டியாக இச்சண்டை வலுப்பெறலாம், எல்லாவற்றையும் அழித்துவிட்டும் போகலாம், இழப்பின் வலி தெரிந்தவர்கள் மூலமாக சமாதான நிலையையும் அடையலாம்.டாட்டா போன்ற அறிவு ஜீவிகளை உலகுகுக்கு தந்த பாரசீகத்திலிருந்து மாற்றங்கள் உருவாகும் என் மனதில் அடிக்கடி தோன்றும்.

ஒரு கல்லூரி விழாவில் முதல் பரிசு வாங்கிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

"ஓ மேற்காசியாவே
நீ மதங்களை தொற்றுவித்து
மனிதர்களை
மிருகங்களாக்கி விட்டாய்"

ஆனாலும் இயல்பில் கடவுளோ/மதமோ இல்லாமல் மனிதன் வாழப்போவதில்லை, சூபிஸம் போன்ற ஆன்மீக வழிமுறைகள் அரபு நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு மதத்தை அரசியலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் ஏற்பட்டு நிலைமை மாறினால்தான் உண்டு.

Monday, November 1, 2010

இரசித்தலால் இரசிப்பு!

கனிதர வரா
காய்கனியாக் கனிமையில்
கண்களால் கண்டு
கரிய காருண்ய
கனியாள் மண்டு
சிதையாச் சிற்பத்தின்
அங்கமது தங்கமெனச்
செதுக்கிய சிலையொன்று
தரணியின் எழிலென
கண்டவர் களிக்க
பொன்மானின் புள்ளிகளாய்
உளியின் நுட்பமதில்
வடித்துச் சிரிக்கும் சிற்பி!

அசல் இங்கே...