Monday, December 29, 2008

பதிவுத் திருடர்களுடன் வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர் : அரச கவி வாழ்கையிலே இன்னைக்கு தான் உருப்படியான காரியம் பண்ணி இருக்கியரு, நோகாம நொங்கு திங்கவங்களை பாத்து பேச ஏற்ப்பாடு எப்படி பண்ணுனீங்க

அரச கவி : அவிங்க வழியிலே போய் அவங்களை பிடிச்சேன், இதெல்லாம் உங்களுக்கு புரியாது, அதனாலே வந்த வேலையை பார்ப்போம் .

வ.மு : அறிவுத்தனமா கேள்வி கேட்டா "உனக்கு புரியாதுன்னு" அறிவு பூர்வமா பதில், இருக்கட்டும்..இருக்கட்டும்

அரச கவி : நிலா நிலா ஓடிவா..நிலா நிலா ஓடிவா

வ.மு: யோவ் என்ன பள்ளி ௬டத்து புள்ளைக பாட்டு திடிர்ன்னு எடுத்து வுடுரீரு, நான் கேட்கவே இல்லையே

அரச கவி : ஸு .. ஸு, இது இவங்களோட ரகசிய பாசை, இவங்க அப்படிதான் பேசிக்குவாங்க

வ.மு : ஆமா இது ஒரு பெரிய ராணுவ அமைப்பு, ரகசிய பாசை, தோசை ன்னு

(பதிவு திருடர்கள் வருகிறார்கள்)

அரச கவி : வணக்கம் ஆஇ, உச,முதல்வர் ஐயா இது இவங்க எம்ப்லோயீ நம்பர், இவங்க சொந்த பேரு என்னனு எனக்கும் தெரியாது.

வ.மு : ஒ. இவங்க சோலியே இதுதானா?, வணக்கம் ஆஇ, உச சமிப காலமா நிறையா பதிவுகளை, சினிமாவிலே கதையை திருற மாதிரி திருடி உங்க இணைய தளத்துல போடுறீங்க, இப்படி நோகாம நொங்கு திங்கனும்ன்னு யோசனை எப்படி வந்ததது

ஆஇ : இதுல யோசிக்க என்ன இருக்கு, கோவில் மாடு வயல் வெளியிலே மேயுற மாதிரி பதிவுகள்ல்ல மேய்வோம், நல்லா இருக்க பதிவை காப்பி பண்ணுவோம், திருட மாட்டோம்

அரச கவி : மாடு நல்ல தீனி கிடைக்க இடத்துல மேயற மாதிரி நல்ல சரக்கு இருக்க இடத்திலே மேயுவீங்க

உச : சரியா சொன்னீங்க அரச கவி , உங்களுக்கு அறிவோ அறிவு

வ.மு : ஹும். பாராட்டு எல்லாம் அப்புறம், நீங்க செய்றது தப்புன்னு தோணலையா? எடுக்கிறதுக்கு முன்னாடி கேட்கணும்ன்னு தெரியாதா, திறந்த வீட்டுல எதோ நுழைந்த மாதிரி வந்தா எப்படி?

உச : ஐயா நீங்க ரெம்ப கேள்வி கேட்குறீங்க, எங்களுக்கு பதில் சொல்லி பழக்கம் இல்லை.

வ.மு : இதுக்காவது பதில் சொல்லுங்க என் நமிதாவை திருடினது யாரு... என் நமிதாவை திருடினது யாரு

அரச கவி : என்னது உங்க நமிதாவா? சொல்லவே இல்லை,அதாவது திருடி தான் பழக்கம், பதில் சொல்லி பழக்கம் இல்லைன்னு சொல்லுறாங்க

உச : அவங்க நமிதாவை பத்தி எழுதின பதிவை பத்தி சொல்லுறாங்க, ஐயா பல கம்பனிகள் இதே தொழில் செய்யுறாங்க, நீங்க கேக்கிறது தமிழ் நாட்டுல முருகன்னு ஒருத்தரை தெரியும், அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிற மாதிரி இருக்கு

அரச கவி : இந்த பதிவை எழுதினவனை விட ரெம்ப அறிவாளிகள் நீங்க.

உச : கதையை திருடி படமா எடுத்தா வழக்கு போடலாம், பதிவை திருடி போட்டா வழக்கு போட முடியாதே

வ.மு : நம்ம கட்சி கொள்கையிலே இதையும் சேர்த்து கொள்வோம், வருங்கால முதல்வர், முதல்வர் ஆனால் உங்களுக்கு கையிலே காப்பு கொடுப்போம்

உச : தங்கமா கொடுங்க, அடகு வச்சி இன்னும் ரெண்டு கம்ப்யூட்டர் வாங்கணும், வேலைக்கும் ஆள் எடுக்க வசதியா இருக்கும்.

அரச கவி :கட்டடம் கட்ட ஆள் எடுக்கிற மாதிரி சொல்லுற, மண்டைய கசக்கி பிழிஞ்சி நாங்க பதிவு எழுதுறோம், நீங்க லாவகமா நவட்டிட்டு போய், என்னவோ நீங்களே எழுதின மாதிரி போடுறது நல்லா இல்லை

ஆஇ : அருமை..அருமை

வ.மு : என்ன அரச கவி பேசியே மனசை மாத்தீட்டீங்க போல

ஆஇ : ஐயா நான் புதுசா ஒரு பதிவு கிடைச்சு இருக்கு அதை பத்தி சொல்லுறேன்,உச நம்ம தணிக்கை குழுவுக்கு இந்த பதிவை அனுப்பி வை, அவங்க சரி பார்த்த உடனே காப்பி பண்ணலாம், மன்னிக்கணும் இது எமெர்ஜென்சி பதிவு, அதனாலே இதுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும், ஹும், நீங்க என்ன சொன்னீங்க.

வ.மு: அரச கவி இவங்க அடங்க மாட்டங்க போல தெரியுதே .

அரச கவி: ஐயா இது நம்ம இடி விழுந்த இருளாண்டி யோட "பதிவு திருடர்களுடன் வருங்கால முதல்வர்"

வ.மு : அவன் பதிவு எழுதி முடிக்கும் முன்னாடியே திருடிட்டாங்க,படம் வெளியிலே வரும் முன்னாடி இணைய தளத்துல முழு படமும் வலம் வருகிற மாதிரி இருக்கு

அரச கவி: வகை வஞ்சனை இல்லாம திருடுறாங்க, இவங்களையெல்லாம் பார்த்தா நம்ம பதிவு எழுத முடியாது, அதனாலே நாம் இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போவோம் .

வ.மு : இந்த மாதிரி அட்டு பதிவுகளை ௬ட விடுறது இல்லை, இங்க வந்ததே தப்பு .

ஆஇ : ஆமா உண்மைதான் என்ன ரகசியம் தெரிஞ்ச நீங்க, எங்களுக்கு ரெண்டு பதிவு காப்பி அடிக்க துப்பு கொடுக்கணும்.

வ.மு : கொடுக்கலைன்னா ?

உச : நாங்க கொடுப்போம்

அரச கவி: என்னது?

ஆஇ : அங்கே பாருங்க

வ.மு : நாங்க அங்க பார்க்கிறது இருக்கட்டும், நீ இங்கே பார்

உச :சாட், பூட், திரி..சாட், பூட், திரி....சாட், பூட், திரி..சாட், பூட், திரி..

(அனைவரும் இந்த பதிவை படிச்சு புட்டு ஓடுற மாதிரி ஓடி விடுகிறார்கள்)

அரச கவி: தப்பிச்சு ஓடுறதுக்கு பயன்படுத்திற ரகசிய பாசை, எப்படி முதல்வர் இப்படி?

வ.மு : புதுசா பதிவு வந்திருக்குன்னு கடை பக்கம் எட்டி பார்க்க வந்தவங்களை பார்த்து இப்படி பயந்து ஓடுறாங்க

அரச கவி: இதுக்கு முடிவு சொல்ல முடியாது, வழக்கம் போல இருக்கிறதை நாம சுட்டுட்டு போவோம்

31 comments:

ராஜ நடராஜன் said...

மீ த பர்ஸ்ட்?

ராஜ நடராஜன் said...

அய்!நோகாம நொங்கு...சீ பின்னூட்டம் போட யாரும் அவசரப்படலை:)

ராஜ நடராஜன் said...

இஃகி!இஃகின்னு சிரிச்சிகிட்டே பதிவப் படிச்சிகிட்டு வந்தேனா திடீர்ன்னு நமிதான்னதும் நோகாத நொங்கு லிஸ்ட்ல என்பெயரும் சேர்த்துடுவீங்களோன்னு திக் ஆயிடுச்சு.தற்சமயம் நமிதா அதுசரியிடம் உள்ளது.போய்ப் புடிங்க:)

ராஜ நடராஜன் said...

மீ த பர்ஸ்ட்?

குடுகுடுப்பை said...

ஆஇ : ஐயா நான் புதுசா ஒரு பதிவு கிடைச்சு இருக்கு அதை பத்தி சொல்லுறேன்,உச நம்ம தணிக்கை குழுவுக்கு இந்த பதிவை அனுப்பி வை, அவங்க சரி பார்த்த உடனே காப்பி பண்ணலாம், மன்னிக்கணும் இது எமெர்ஜென்சி பதிவு, அதனாலே இதுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும், ஹும், நீங்க என்ன சொன்னீங்க.//

காப்பி அடிக்க தணிக்கை குழு வேறயா.??

குடுகுடுப்பை said...

ஒருவேளை நமீதா பேர பாத்தோன வேற ஏதோன்னு நெனச்சு சுட்டிருப்பாங்களோ

குடுகுடுப்பை said...

அரச கவி : என்னது உங்க நமிதாவா? சொல்லவே இல்லை,அதாவது திருடி தான் பழக்கம், பதில் சொல்லி பழக்கம் இல்லைன்னு சொல்லுறாங்க //

உங்களுதுதான் அ.கவி ஒரு பாட்டப்போடுங்க

பழமைபேசி said...

இஃகி!இஃகி!!

RAMYA said...

//
வா.மு : அரச கவி வாழ்கையிலே இன்னைக்கு தான் உருப்படியான காரியம் பண்ணி இருக்கியரு, நோகாம நொங்கு திங்கவங்களை பாத்து பேச ஏற்ப்பாடு எப்படி பண்ணுனீங்க
//

இதெல்லாம் சொல்லி தெரியனுமா
அதுதான் சுலபமான வழி

பழமைபேசி said...

வலைஞர் தளபதிகூட, கிரேசி மோகன் எல்லாம் தோத்திடுவார் போல இருக்கே? கிளப்புறீங்க தளப்தி!

RAMYA said...

//
அரச கவி : கிட்சி கிட்சி தாம்புலம்.. கிட்சி கிட்சி தாம்புலம் //


அடுத்த வரி என்னா
கியா கியா தாம்பூலம்...

RAMYA said...

//
வா.மு : யோவ் என்ன உம்ம பழைய பாட்டு எடுத்து வுடுரீரு, நான் கேட்கவே இல்லையே

அரச கவி : ஸு .. ஸு, இது இவங்களோட ரகசிய பாசை, இவங்க அப்படிதான் பேசிக்குவாங்க

வா.மு : ஆமா இது ஒரு பெரிய ராணுவ அமைப்பு, ரகசிய பாசை, தோசை ன்னு
//

பழைய பாட்டு தான் கேக்க
நல்லா இருக்கும் அவுரு நினைக்கிறாரு
இது கூடவா தெரியலை???

RAMYA said...

//
அரச கவி : வணக்கம் ஆஇ, உச,முதல்வர் ஐயா இது இவங்க எம்ப்லோயீ நம்பர், இவங்க சொந்த பேரு என்னனு எனக்கும் தெரியாது.//

எனக்கு தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்
சம்திங் கொடுத்தாதான் சொல்லுவேன்

RAMYA said...

//
வா.மு : ஒ. இவங்க சோலியே இதுதானா?, வணக்கம் ஆஇ, உச சமிப காலமா நிறையா பதிவுகளை, சினிமாவிலே கதையை திருற மாதிரி திருடி உங்க இணைய தளத்துல போடுறீங்க, இப்படி நோகாம நொங்கு திங்கனும்ன்னு யோசனை எப்படி வந்ததது//

இதென்னா கேள்வி
ரொம்ப நாளா சுளுவா
இருக்குதாம் ..........

RAMYA said...

//
அரச கவி : மாடு நல்ல தீனி கிடைக்க இடத்துல மேயற மாதிரி நல்ல சரக்கு இருக்க இடத்திலே மேயுவீங்க
//

மறுபடியுமா சரக்கு????

RAMYA said...

//
வா.மு : இதுக்காவது பதில் சொல்லுங்க என் நமிதாவை திருடினது யாரு... என் நமிதாவை திருடினது யாரு //

என்னாது உங்க நமீதாவா
ம்ம்ம் ஒரு அளவே கிடையாதா??
சந்தோஷமா இருங்க அப்பு....

RAMYA said...

//
ஆஇ : ஐயா நான் புதுசா ஒரு பதிவு கிடைச்சு இருக்கு அதை பத்தி சொல்லுறேன்,உச நம்ம தணிக்கை குழுவுக்கு இந்த பதிவை அனுப்பி வை, அவங்க சரி பார்த்த உடனே காப்பி பண்ணலாம், மன்னிக்கணும் இது எமெர்ஜென்சி பதிவு, அதனாலே இதுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும், ஹும், நீங்க என்ன சொன்னீங்க.//


லீகலா தான் பண்ணறாங்க
அப்போ ஒண்ணுமே பண்ண
முடியாதே எல்லாரும்
ஏமாந்தாச்சா????????????

RAMYA said...

//
வா.மு : நம்ம கட்சி கொள்கையிலே இதையும் சேர்த்து கொள்வோம், வா.மு,மு ஆனால் உங்களுக்கு கையிலே காப்பு கொடுப்போம்
//

காப்பு கொடுப்பாங்களா??
காப்பு போடுவாங்களா ???

RAMYA said...

//
உச : தங்கமா கொடுங்க, அடகு வச்சி இன்னும் ரெண்டு கம்ப்யூட்டர் வாங்கணும், வேலைக்கும் ஆள் எடுக்க வசதியா இருக்கும்.
//

மறுபடியும் சேட்டா ???

RAMYA said...

//
ஆஇ : ஐயா நான் புதுசா ஒரு பதிவு கிடைச்சு இருக்கு அதை பத்தி சொல்லுறேன்,உச நம்ம தணிக்கை குழுவுக்கு இந்த பதிவை அனுப்பி வை, அவங்க சரி பார்த்த உடனே காப்பி பண்ணலாம், மன்னிக்கணும் இது எமெர்ஜென்சி பதிவு, அதனாலே இதுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும், ஹும், நீங்க என்ன சொன்னீங்க.
//


தணிக்கை குழு தலையிலே இடி விழ
கசிக்கி பிழிஞ்சு எழுதறாங்க
சுடராங்களா????

ஓட்டு பொறுக்கி said...

சூடான பதிவுகள்ள இது வரணும்னு நமீதா பேர போட்டுடீங்களா?

இராகவன் நைஜிரியா said...

இந்த மாதிரி திருடர்களை, என்ன கிண்டல் அடித்தாலும் அசர மாட்டார்கள்.

அவர்களுக்கு வேண்டுவது எல்லாம், ஹிட்ஸ். ஹிட்ஸ். அவ்வளவுதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

சின்ன அம்மிணி said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். "வா. மு." னா என்னா?

நசரேயன் said...

/*
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். "வா. மு." னா என்னா?
*/
தப்பை திருத்தி புட்டேன் சின்ன அம்மணி, சுட்டி காட்டி சொன்னதுக்கு நன்றி

பழமைபேசி said...

// வா.மு,மு //

இன்னா இது? நல்லாத் திருத்தி பதிவப் போடுங்க ஐயா....நாங்க திருடும் போது, தப்புக எல்லாம் கூடவே வருது இல்ல?

ச்சின்னப் பையன் said...

:-))))

SUREஷ் said...

செம ஹாட் மச்சி

கடையம் ஆனந்த் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Mahesh said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

நசரேயன் said...

கருத்துக்கள் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி