Friday, December 5, 2008

நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 1

பொறுப்பு அறிவித்தல் :ஒரு முன்னுரையாக நினைத்து கொண்டு,கொஞ்சம் சுய விளம்பரம் அதிகம் இருந்தாலும் பொறுத்து கொண்டு உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூடத்திலே தெரிவிக்கவும்

நெல்லை மாவட்ட மக்களை பத்தி எழுதனுமுன்னு வருங்கால முதல்வர் ஒரு கோரிக்கை வச்சாரு, முதல்வர் சொன்னதை மறுக்க முடியலையே தவிர என்ன எழுதன்னு தெரியலை.

அருவாள் தயாரிப்புக்கு திருப்பாச்சி சொந்தமானாலும், அதை எப்படி பயன் படுத்துறதுன்னு திருநெல்வேலி மக்களுக்கு தான் நல்லா தெரியுன்னு சொல்லுவாங்க(?), ஒரு பொருளை எப்படி பயன்படுத்தன்னுமுன்னு ரெம்ப நல்லா தெரியும், அதனாலே என்னவோ தென் இந்தியாவிலே அதிக கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரமாக நெல்லை திகழ்கிறது(தகவல் தப்பா இருந்தா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்).


மங்களூர் கணேஷ் பீடி, சொக்கலால் பீடி சேட்டு இன்னைக்கு பணத்தை எண்ண முடியாம கட்டிலுக்கு அடியிலே வச்சி படுத்து தூங்குவதுக்கு எங்க மாவட்ட தாய்குலங்கள் தான் காரணம், இங்க உள்ள பிரசித்தி பெற்ற தொழில்களில் ஒன்று பீடி சுத்துவது, தாய் குலங்கள் மட்டுமல்ல, சில வீடுகளில் தந்தை குலங்களும் பீடி சுத்துவாங்க, எனக்கே பீடி இலையை எப்படி வெட்டுவது, சுத்துவது எல்லாம் தெரியும், இவ்வளவும் சொன்ன நான் அதை குடிக்கவும் தெரியுமுன்னு சொல்லிகிறேன், அன்புமணி ஐயா பார்க்க மாட்டாரு என்கிற தைரியத்திலே சொல்லிபுட்டேன், சீக்கிரமா நம்ம புதுகை.அப்துல்லா அண்ணன் மாதிரி விட்டுடனும்.


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு அடுத்தபடியா சங்கம் வைத்து சாதி வளர்க்கிற மாவட்டம், தெருவுக்கு குறஞ்சது நாலு சாதி சங்கம்மாவது இருக்கும் அவ்வளவு பெரிய ஆளுங்க நாங்க,உண்மையை சொல்லி புட்டேன்ன்னு ஊரு நாட்டாமைகள் எல்லாம் அருவாளை தூக்கி போட்டு கிட்டு வரவேண்டாம் என வருங்கால முதல்வர் சொல்லுறாரு.


பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கிறார்கள், தஞ்சை மாதிரி எங்க ஊரு எல்லாம் நெற்களஞ்சியம் இல்லை,அதற்க்காக நெல் விளையாமலும் இல்லை.குடும்பமாக விவசாயம் செய்யும் பங்காளிகள் பிரச்சனைன்னு வந்தா ஒரு பிடி மண்ணை ௬ட யாருக்கும் விட்டு தரமாட்டாங்க, அவ்வளவு பாசக்காரங்க, தாமிர பரணி நதி ஓடுதுன்னு சின்ன வயசுலே இருந்து படிச்சு இருக்கேன், அதிலே தண்ணி வந்தா அதையே அதிசயமா எல்லாரும் போய் பார்ப்பாங்க.

அல்வாக்கு பேரு போனது நெல்லை,கடை பேரு தான் இருட்டு கடை, அந்த கடைக்கு எப்போதுமே இருட்டே கிடையாது.திரைப் படங்களிலே அல்வாவிற்கு பல அர்த்தங்கள் சொல்லி ரெம்ப பிரபல படித்தினது சத்தியராஜ்(பதிவர் கிடையாது)

மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு, அந்த மலைகளின் நடுவே ஏழைகளின் கொடைக்கானல்(?) ஆகிய குற்றாலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம், நிறைய திரைப் படப் பாடல்கள் தென்காசி சாரல் பத்தி வந்து இருக்கு, ஒரு கொசுறு தகவல் எங்க ஊரு குற்றாலத்திற்கு 25 கிலே மீட்டர் தொலைவில் உள்ளது.


மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், தொழில்,கல்வி ௬டங்கள்,பல்கலை கழகங்கள் எல்லாம் அடுத்த பாகத்திலே பார்க்கலாம்

29 comments:

இலவசக்கொத்தனார் said...

ஐயா

கொஞ்சம் எழுதி முடிச்ச உடனே ஒரு முறை படியுங்க. எழுத்துப் பிழைகள் இருந்தாப் படிக்கவே தோண மாட்டேங்குது.

இருந்தாலும் நம்மூரைப் பத்தி இல்ல எழுதி இருக்கீய. அதான் படிக்கேன். வெளங்குதா?

பழமைபேசி said...

இருந்தாலும் உங்க ஊரைப் பத்தி எழுதி இருக்கீய. அதான் படிக்கேன். வெளங்குதா?

குடுகுடுப்பை said...

நசரேயன் அதிரடியா ஆரம்பிச்சு இருக்கீங்க கலக்குங்க. கொத்தனார் சொன்னா கேட்டுக்கனும்(ஏய் குடுகுடுப்பை உனக்கும்தான்)

இராகவன், நைஜிரியா said...

கொத்தன்னார் மட்டுமில்ல யார் சொன்னாலும் கேட்டுக்கிடணும்..

என்ன புரிஞ்சுதா ?

திருச்செந்தூர், நவதிருப்பதி, பாளையங்கோட்டை எல்லாம் பற்றி வெவரமா எழுதுங்கப்பு..

நசரேயன் said...

/*
ஐயா

கொஞ்சம் எழுதி முடிச்ச உடனே ஒரு முறை படியுங்க. எழுத்துப் பிழைகள் இருந்தாப் படிக்கவே தோண மாட்டேங்குது.

இருந்தாலும் நம்மூரைப் பத்தி இல்ல எழுதி இருக்கீய. அதான் படிக்கேன். வெளங்குதா?
*/
தப்பை சுட்டி காட்டியதுக்கு நன்றிங்க, ஓரளவுக்கு திருத்தி விட்டேன், அடுத்த முறை எழுதும் போது ஒரு தடவைக்கு நாலு தடை படிச்சு திருத்தி கொள்கிறேன்.

வந்து கருத்து சொன்னதுக்கு இன்னொரு நன்றி

santhaaspaththri said...

Nellai Iruttukkadaiyoda founder namma saathikkaran :) kidaiyaathu, avaru peru Bijili SINGH.

Iruttu kadaiyoda, kilai peru "Visakam", but yaarum anga paoi vaangurathu illai.yaen..

courtalla road, town.

குடுகுடுப்பை said...

செய்யது பீடி,அதோட டூப்ளிகேட்டும் உங்கூருதானே?

rapp said...

:):):)

இராகவன், நைஜிரியா said...

//செய்யது பீடி,அதோட டூப்ளிகேட்டும் உங்கூருதானே//

செய்யது பீடி.. அப்படின்னா செய்யாதது என்னங்க...

சகாதேவன் said...

ஜில்லாவுக்குள்ளேயே உற்பத்தியாகி கடலில் கலக்கும் நதி தாமிரபரணி. இப்போதுதான் அடுத்த ஜில்லாவில் போய் கடலில் சேர்கிறது. தூத்துக்குடி பற்றியும் சொல்லுங்க.
சகாதேவன்

சின்ன அம்மிணி said...

நெல்லைக்காரவுகளுக்கு கோவம் சட்டுனு வந்துருமாமில்ல!!!

தாமிரா said...

அன்பு நசரேயன்,

முன்னர் உங்கள் படைப்புகளை படித்ததில்லை. இந்தப்பதிவை மட்டும் கணக்கில் கொண்டே பதிலிடுகிறேன். தவறெனில் பொறுத்துக்கொள்ளவும்.

தாமிர பரணி நதி ஓடுதுன்னு சின்ன வயசுலே இருந்து படிச்சு இருக்கேன், அதிலே தண்ணி வந்தா அதையே அதிசயமா எல்லாரும் போய் பார்ப்பாங்க.// படித்திருக்கிறேன் எனில் நீங்கள் அங்கு வாழ்ந்ததில்லையா? பார்த்ததில்லையா? நான் நிச்சயமாக சொல்லமுடியும் கடுங்கோடையிலும் கூட சிறிதளவாவது நீரோட்டமிருக்கும் ஆறு தாமிரபரணி. வற்றாத ஜீவநதியென்றறு பெயர்பெற்ற தென்னிந்திய நதிகள் பலவும் வற்றி மணலாக காட்சியளித்த நிலை உண்டு. இந்த நூற்றாண்டிலும் ஒரு முறையேனும் கூட வற்றிப்போனதல்ல தாமிரபரணி.

அரிவாளைப்பயன்படுத்துதல், பீடி சுற்றுதல், இருட்டுக்கடை, குற்றாலம் என காலங்காலமாக பாடப்படும் அதே பாடலை நீங்களும் இரண்டிரண்டு வரிகள் பாடியிருக்கிறீர்கள், அதுவும் கூட சிறப்பாகவோ, அழகாகவோ சொல்லப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். அப்புறம் தெருவுக்கு இரண்டு ஜாதி சங்கங்கள் என்பதும் தவறான தகவல். பிற மாவட்டங்களைப்போலவேதான் நெல்லையிலும் ஜாதிச்சங்கங்கள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. அதிலும் குறிப்பாக இரண்டே இரண்டு ஜாதிகள் மட்டுமே தவறான புரிதல்களுடன் காலங்காலமாக துடிப்பாக செயல்பட்டு வன்முறைச் செயல்களைச்செய்து மாவட்டத்திற்கு கெட்டபெயர் வாங்கித்தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

எங்கும் கிடைக்காத பாசமும், கேட்கத்தெவிட்டாத நெல்லைத்தமிழும், மண்மணமும், இலக்கியமணமும் (எந்த இலக்கிய அறிவுமில்லாமல் அடித்துச்சொல்லிவிடலாம், நவீன தமிழ் இலக்கியத்தில் பங்கு பெற்ற எழுத்தாளர்களில் 50% ஆட்களைத்தந்தது தனியொரு நெல்லை மாவட்டமே என) என பேசித்தீராத‌ ஆயிரம் விஷயங்கள் இருக்கையில் எந்தச்சிறப்புமில்லாமல் இருக்கிறது இந்தப்பதிவு என நான் சொல்வேன்.

நன்றி.
தாமிரா.

Mahesh said...

ஏம்வே... சட்னு சின்னதாப் போட்டு "தொடரும்" போட்டுட்டிய...

உம்ம ஊருல என்னதான் பீடி சுத்துனாலும், எங்க பல்லடத்துல டூப்ளிகேட்டு போட்டுருவோம்...ஆமா..

நானானி said...

எங்கூரைப் பத்தியா இப்படி பத்தி பத்தியா எழுதியிருக்கீக? இன்னும் எவ்ளவோ நல்ல விசயங்கள்...பாபநாசம், மணிமுத்தாறு, குறவஞ்சிக்குப் பேர் போன குத்தாலம் எல்லா இருக்கில்ல? அதையும் எழுதுவீகல்ல?

குப்பன்_யாஹூ said...

இருக்கறதுல பாதி கூட்டம் நெல்லை கூட்டம் தான் போல.

வற்றாத ஜீவா நதி, தீரா நதி தாமிரபரணி

இதை பற்றி ஏற்கனவே நெல்லை மாவட்ட பதிவர் சங்க செயலாளர் ஆருயிர் சகோதரர் டுபுக்கு ஆறு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்கிறார்.

குப்பன்_யாஹூ (பாபநாசம் பஸ் டெபோ அருகில் இருந்து எழுதுகிறேன்)

கிரி said...

//அன்புமணி ஐயா பார்க்க மாட்டாரு என்கிற தைரியத்திலே சொல்லிபுட்டேன்//

:-))))

ஜீவன் said...

பதிவு நன்றாக உள்ளது

இன்னும் எதிர்பார்க்கிறேன்

thevanmayam said...

அவுக அவுக ஊரு அவுக அவுக‌ளுக்கு பெருசு! ஊர் எல்லய தொடும்போதே உடம்பெல்லாம் புல்லரிக்கும்!!! நல்லா எழுதியிரிக்கிய அப்பு! தொடர்ந்து எழுதுங்க.
தேவா.

அது சரி said...

//
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு அடுத்தபடியா சங்கம் வைத்து சாதி வளர்க்கிற மாவட்டம், தெருவுக்கு குறஞ்சது நாலு சாதி சங்கம்மாவது இருக்கும் அவ்வளவு பெரிய ஆளுங்க
//

மதுரைய இப்பிடி சிறுமை படுத்துறத நான் வன்மையா கண்டிக்கிறேன்..ஒங்க ஊர்ல தெருவுக்கு நாலு சாதி சங்கம்னா மதுரைல நாலு சாதி சங்கமாவது இருந்தாத்தேன் அத தெருவாவே மதிப்பாய்ங்க..

உங்க போக்க நீங்க திருத்திக்காட்டி ஒங்கள எதிர்த்து எங்க தானைத் தலைவர்..அஞ்சா நெஞ்சன்..சின்ன கணக்கபுள்ள குடுகுடுப்பையார் (யாராவது) சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்குவார்..

அது சரி said...

அதெல்லாம் சரி...நீங்க தின்னவேலியை பத்தி எழுதறீங்க..மகேஷ் அண்ணாச்சி கொங்கு மண்டலத்த பத்தி கெளப்பிட்டாரு...குடுகுடுப்பை தஞ்சாவூரப் பத்தி பின்னி பெடலடுக்குறாரு...துணைத் தலைவர் பழமைபேசி பத்தி கேக்கவே வேணாம்....

நான் எதைப் பத்தி எழுதறது?...இப்பிடி சொந்த கட்சிக்காரனுக்கே ஆப்பு வச்சிட்டீங்களேய்யா!

அது சரி said...

//
இலவசக்கொத்தனார் said...
ஐயா

கொஞ்சம் எழுதி முடிச்ச உடனே ஒரு முறை படியுங்க. எழுத்துப் பிழைகள் இருந்தாப் படிக்கவே தோண மாட்டேங்குது.

இருந்தாலும் நம்மூரைப் பத்தி இல்ல எழுதி இருக்கீய. அதான் படிக்கேன். வெளங்குதா?

//

ஆமா..கொத்தனார கோவப்படுத்தாதீங்க....கடுப்பானாருன்னா உங்க கைல காங்க்ரீட் போட்றப் போறாரு :0))

நசரேயன் said...

வந்து கருத்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி

S.R.ராஜசேகரன் said...

மாப்பிளே என்னவே இது இன்னும் மேட்டர எங்கவே .நம்ம சொக்கம்பட்டி மேட்டர எழுதாம விட்டிடியவே ,

பகுதி-2ல் இன்னும் சிறப்பா எதிர்பாக்கலாம் .பிள்ளையார் சுழி எப்பவுமே வளைஞ்சி தான் இருக்கும்

பழமைபேசி said...

//நசரேயன் said...
வந்து கருத்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி
//

யே, நீர் எதுக்கு நன்றி நன்றின்னு கூவிகினு இருக்கீரு? நாங்க இன்னும் பேச வேண்டியது இருக்குலே.....

நசரேயன் said...

/*
யே, நீர் எதுக்கு நன்றி நன்றின்னு கூவிகினு இருக்கீரு? நாங்க இன்னும் பேச வேண்டியது இருக்குலே.....
*/
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல

வில்லன் said...

நசரேயா, உங்க ஊரு எசுவடியன் நகர் (புளியங்குடி) பத்தி (இருக்குற 10 வீடு 2 தெரு பத்தி) ஒரு பதிவு போடலாம்ல.

வில்லன் said...

பழைய நெல்லை மாவட்டகர்ரங்க (நெல்லை & தூத்துக்குடி மாவட்டம் பசங்க) சிங்கம்ல. தாமரபரணி தண்ணி குடிச்சு வளர்ரோம்ள. ரொம்ப ரோசகாரங்கலாக்கும்

வில்லன் said...

ஆமா யாரு எங்க மாவட்டம் தூத்துக்குடி பத்தி எழுத போறா?

வில்லன் said...
This comment has been removed by the author.