Thursday, December 11, 2008

விருது நகர் மாவட்டம் 01

பழைய விருதுபட்டி, இன்னைக்கு விருது நகர்ல ஆரம்பிச்சி வடக்க திருமங்கலம், தெற்க சாத்தூரு, கோயிலுபட்டி, கிழக்கால அருப்புக்கோட்டை, மேக்கால சீவில்லிபுத்தூரு, சிவாசி, ராசபாளயம்ன்னு இது தாங்க எங்க சாதி சனமெல்லாம் இருக்க பகுதி. இதுல திருச்சுழி, அபிராமம், கமுதி, முதுகொளத்தூரு, சாயல்குடி எல்லாம் வருமான்னு சொல்ல முடியாது.

நம்மூரு கரிசலு பூமிங்க. கந்தக பூமின்னும் சொல்லுவாக. எல்லாம் பெரும்பாலும் மானம் பாத்த பூமிங்க. காஞ்சு கெடுக்கிற மழ எங்கூரு பக்கம் பேஞ்சி கெடுக்கிறதுமுண்டு. விவசாயமுண்டு பாத்தீகன்னா பருத்தி, உளுந்து, சோளம், கம்பு. இடையிடையே கொஞ்சமா சும்மா ரொம்ப கொஞ்சமா நெல்லும் உண்டுங்க. பணப்பயிருக இருந்தாலும் நம்ம மக்க கிட்டயும், மண்ணுலயும் பெரும்பாலும் வறட்சிதான். எங்க பக்கம் பனங்கள்ளு, பதனி மற்றும் நொங்கு பேமஸ்.

விருது நகர் முழுக்க முழுக்க வியாபாரந்தேன். பால் சோறும், பக்கோடாவும் சாப்பிட்டு சாதுவாய் தெரிந்தாலும் வியாபார நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்த நாடார் மக்கள் நிறைந்த பகுதி. காமராசர் பிறந்த ஊரு. பர்மா கடை, அப்பறம் விருதுநகர் பொறிச்ச புரோட்டா.

சிவாசில தீப்பெட்டி ஆவீசுங்க ரொம்ப பேமசு. ஒரு காலத்துல அருப்புக்கோட்டை வரைக்கெல்லாம் பஸ் அனுப்பி தீப்பெட்டி ஆபீசுல வேலைக்கு ஆள் பிடிச்சிகிட்டு இருந்தாங்களாம். இப்ப காலம் மாறிப் போச்சு. அக்கம்பக்கத்துலேயே நிறைய ஆளுக வேலைக்கு கெடக்குது. குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு. தீப்பெட்டி மட்டுமில்ல. காலண்டர்ல ஆரம்பிச்சு அமெரிக்கன் டாலர் வரைக்கும் அடிக்கிற அச்சாபீசுங்க சாஸ்தி இங்க.

சாத்தூரு பேனா நிப்புக்கு ஒரு காலத்துல பேமசு. இப்பமும் பேனா நிப்பு செய்யிறாகளாண்டு தெரியலே.

ராசபாளையம், கோயிலுபட்டி பக்கம் பருத்தி மில்லுங்க. சின்னிங் மில்லும்பாக. இங்கே தெலுகு பேசும் நாயக்கர், நாயுடு, ரெட்டியார்கள் அதிகம்.

சீவில்லி புத்தூரு பால்கோவா.

ரமண மகரிஷி அவதரித்தது திருச்சுழி.

அருப்புக்கோட்டை ரெண்டு தனியார் பள்ளிக்கூடங்க, ரெண்டு தனியாரு காலேசு, ரொம்ப காலமா இருக்க ஒரு பாலி டெக்னிக், அப்பறமா செயவிலாசு மில்லு. இம்புட்டுத்தேன். முக்கிய விசயம் அருப்புக்கோட்டை தண்ணிப் பஞ்சம். கோடை வந்தா கு... கழுவ கூட தண்ணி கெடக்காதது ஒரு காலம். இப்பம் கொஞ்சம் தேவல. வியாபாரிகளாக நாடார்களும், சவுராஷ்டிரா பேசும் செட்டியார்களும் போட்டி போடும் பகுதி இது. இங்கும் கொஞ்சம் உடைந்த தெலுகு மாட்லாடும் சனங்களும் கலவை இங்கே.

அபிராமம், கமுதி, முதுகொளத்தூரு இங்கன இருக்க மக்கமாரு எல்லாஞ் சேந்துதேன் திருநவேலிகாரவுகளோட சேந்து திருப்பாச்சில அருவா போடுற தொழில இன்னும் வாழ வச்சிகிட்டு இருக்காங்க. ஐயா முத்துராமலிங்கத் தேவர் பொறந்த பசும்பொன் இங்கிட்டுத்தான். நிறைய தேவர்கள் இங்கே.

திரைப்படங்களில் வெயில், மற்றும் புதுப்படமான பூ இரண்டும் எங்க பக்கத்து கதைகள கொஞ்சம் மண் வாசனையோட சொன்ன படங்கள். இன்னும் நான் பூ பார்க்கல. கேள்வி ஞானம் தான். அதனால நல்லா இல்லேனா என்னை அடிக்க வராதீங்க.

இது தாம் பொத்தாம் பொதுவா எங்க ஏரியா. இங்கிட்டெல்லாமே புரோட்டா, சால்னா பிரசித்தி. நல்ல நாளுன்னா, தீபாளி, பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம். தீமிதி ரொம்ப விசேசம். இப்ப முக்குக்கு முக்கு இன்ஜினியரிங் காலேசுக இருந்தாலும் அப்போலேர்ந்து பேமசு இவை தான்.

1) இன்ஜினியரிங் பள்ளிக்கோடம் சிவாசி மெப்கோ.
2) கோயிலுபட்டி நாலாட்டின் புத்தூர் நேசனல் இன்ஜினியரிங் காலேஜ்.
3) கிருஷ்ணன் கோயில் கலசலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ்.


இன்னும் மண் வாசனையோட விவரமா தெரிஞ்சுக்க ஐயா கி.ராசநாராயணனோட கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள் படிங்க. இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவு இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி.

28 comments:

நசரேயன் said...

நல்ல தகவல்

குடுகுடுப்பை said...

ஆரம்பமே அலப்பறையா இருக்கு கரிசல் அறிமுகம்

குடுகுடுப்பை said...

கோடை வந்தா கு... கழுவ கூட தண்ணி கெடக்காதது ஒரு காலம். இப்பம் கொஞ்சம் தேவல.//

இப்ப என்னா பேப்பரா?

கபீஷ் said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!!

தென்றல் said...

சீவில்லி புத்தூரு - ஆண்டாள்,சாத்தூரு - (மீசைக்கார அமைச்சரு) KKSSRR
மறந்துட்டீங்களே?

/மாரியம்மன் பொங்கல் விசேசம்/
உடம்புள்ளலாம் கருப்பு, சிவப்பு செம்புள்ளி குத்திட்டு ... நம்ம ஊரு Halloween!!

/குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு./
இதபத்தி எந்த பயபுள்ளையும் படமா எடுக்க மாட்டேங்கராங்க...

/இப்ப முக்குக்கு முக்கு இன்ஜினியரிங் காலேசுக இருந்தாலும் /
அப்ப.. Kamaraj College of Engineering and Technology (KCET) ..?? ;(

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)

நான் அந்த காலண்டர் அடிக்கிற இடம் , தீப்பெட்டி செய்யற இடமெல்லாம் ஒரு சமயம் போய் பாத்துருக்கேன்..அவங்க வேகம் என்னை ஆச்சரியப்படுத்தும்.. மிசின் தோற்கும்..

ஜெகதீசன் said...

நீங்க விருதுநகரா???
:))
நான் பக்கத்துல தான்... ஆமத்தூர்..

//
குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு. //
குழந்தை தொழிலாளர் இருக்காங்கன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா??

எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டது... பத்திரிக்கைகளிலும், பதிவுகளிலும் குழந்தைத் தொழிலாளர் பற்றி வரும் செய்திகளெல்லாம் குறைந்தது 10 வருடங்களுக்கு முந்தய நிலை மாதிரி தான் இருக்கு...

சிவகாசியைப் பொறுத்த வரை
-> தொழிலாளர்கள் நிலைமை,
-> அவர்களின் குறைந்த சம்பளம்,
-> சுகாதாரமற்ற வேலைச் சூழல்
எனப் பேச எவ்வளவோ இருந்தும், தற்போது முழுதும் ஒழிக்கப்பட்டுவிட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...
:((

கோவி.கண்ணன் said...

//பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம்//

பங்குனி பொங்கல்னு சொல்லுவாக !

சரியா ?

Mahesh said...

சூப்பர் நாநா... தாமரைக்கனி கூட இங்க பக்கந்தானே?

நான் வத்ராயிருப்புக்கு பல தடவை வந்துருக்கேன். பிளவக்கல் டேம், சங்கரங்கோயில்.....

நாநா said...

//குழந்தை தொழிலாளர் இருக்காங்கன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா??

எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டது... பத்திரிக்கைகளிலும், பதிவுகளிலும் குழந்தைத் தொழிலாளர் பற்றி வரும் செய்திகளெல்லாம் குறைந்தது 10 வருடங்களுக்கு முந்தய நிலை மாதிரி தான் இருக்கு...
//

என்னங்க இப்படி பச்ச புள்ள மாதிரி பேசுறீங்க? இன்னும் இருக்கத் தாங்க செய்யுது. வாங்கின கடனுக்கு பிள்ளைகள வேலைக்கு அடகு வைக்கிறதெல்லாம் இன்னும் நடக்குதுங்க

நாநா said...

தென்றலு....

கொஞ்சம் பொறுங்க. இப்பத் தானே ஆரம்பிச்சிருக்கம். இனி விவரணையா எழுதுவோம்ல

நாநா said...

கோவி .... இது மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதிப்பு தான். இனி ஒவ்வொரு ஊரா அலசலாம்னு இருக்கேன். அதுல பங்குனி பொங்கல் பத்தி பட்டய கெளப்புவோம்ல

நாநா said...

மகேசு... உண்மைய சொல்லப் போனா நான் நீங்க சொன்ன ஒரு இடத்துக்கும் போனதில்ல. போவணும்

நாநா said...

மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல்லாம் எழுதினா மண் மணம் போயி அரசியல் ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இருக்கேன்

நாநா said...

இல்ல குடுகுடுப்ப உள்ளூரு ஆளுகளுக்கு பருத்தி இல. உன்ன மாதிரி குசும்பு பிடிச்ச வெளியாளுக்கு செந்தட்டி இல

பழமைபேசி said...

ஆகா, இந்த கரிசல்மண் பூமி நமக்கு ரொம்பப் பிடிக்கும்.... பூவாணி, வைகுண்டம், அப்புறம் அப்பிடியே தி. கல்லுப்பட்டி, சீவில்லிபுத்தூர், சின்னமனூர், கம்பம், அந்த பக்கம் சுப்புலாபுரம், ஆண்டிபட்டி, கோயில்பட்டி பக்கம் சுப்ரமணியபுரம்.... நெறய ஊரு நாவகம் வருது இப்ப...

அமுதா said...

//என்னால முடிஞ்ச அளவு இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.

இன்னும் நிறைய இருக்கே எழுதுங்க...

ஆறாம்பூதம் said...

கொங்கு மண்டலத்தை சார்ந்தவன் என்றாலும் கூட... உங்கள் பக்கது கரிசல் மண் என்னை மிகவும் கவர்ந்து இழுக்கிறது... கி. ரா முக்கிய காரணம்.. சமீபத்தில் வேறு ஒரு வேலையாக கரிசல் மண் பக்கம் வந்தவன் அந்த ம்ண்னை விட்டு பிரிய மனமில்லாமல்..மேலும் 2 நாட்கள் ராஜபாளையத்தில் தங்கி டவுன்பஸ் டவுன் பஸாக ஏறி இறங்கி உங்கள் கரிசல் மண் மணத்தை சுவாசித்து மகிழ்ந்தேன்... அப்போது நான் உணர்ந்தது .. நகர்மயமாகி நாசமாகி கிராமிய வாசனையை இழந்து நிற்கும் எங்கள் கொங்கு பூமியின் கொடுமை நிலையையும்.. உங்கள் கரிசல் வாசத்தின் சுகந்தத்தையும்...

Ramu said...

sivakasi pathi pesuradhuku mattume 2 padhivu podanum nu nan yedhir paakuren.. pannuveeyala? ippo than konja naala enga pakkamum indha padam pidikuravaga kavanam thirumbiruku... veyil padatha vida, indha Poo padathula apdiye engaloda vaervayum, veyilayum sethukila irukanuva.... innum unga kitta neraya yedhir paakuren..

Raveendran Chinnasamy said...

//கோயிலுபட்டி // when Kovilpatti become Virudhunagar district. It is part of sivakasi MP area not part . Matches is for kovilpatti and sivakasi is for Fireworks .

THanks

யாழினி said...

sourashtra pesum chettiyarkal enbathu thavaru. kannadam pesum chettiarkal.

Kalki said...

அண்ணே கோவில்பட்டிய தூக்கி தூத்துகுடி பதிவுல போடுங்க

anubaviraja said...

வணக்கம் .. நமக்கு சாத்தூர் ... நம்ப ஊர பத்தி யும் ஒரு நாலு வார்த்தை பார்த்ததும் சந்தோசமா இருக்கு :)

S.A. நவாஸுதீன் said...

///பர்மா கடை, அப்பறம் விருதுநகர் பொறிச்ச புரோட்டா.////

விருதுநகர் வந்தால் இது சாப்பிடாமல் போறதில்லை.

கமாலியா ஃபார்ஸ்ட் புட் பக்கமும் ஒரு ரௌண்ட் போயிட்டுதான் வருவேன்.

அதுபோல தமிழ்நாட்டிலேயே கல்வியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் விருதுநகர் மாவட்டம்தானுங்கோ.

(நான் தஞ்சாவூர் மாவட்டம்)

S.A. நவாஸுதீன் said...

////கோவி.கண்ணன் said...
//பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம்//

பங்குனி பொங்கல்னு சொல்லுவாக !

சரியா ?/////

பொதுவா ”சட்டி” தூக்குறதுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்

☼ வெயிலான் said...

நான் ஒருத்தன் விருதுநகர்க்காரன் இருக்கேன். என்னைக் கேக்காம எப்புடி இது? :)

ramalingam vairakannu said...

thagavalukku migavum nandri enakku miga ubayogamaanathu

ramalingam vairakannu said...

thagavalukku migavum nandri enakku miga ubayogamaanathu