Friday, December 26, 2008

இது திருட்டா இல்லை திரட்டியா

வருங்கால முதல்வர் அப்படின்னு கூகில் செய்யப்பட்டபோது வந்த தொடுப்பு இது.

இந்த பதிவை
வருங்கால முதல்வர்: வருங்கால முதல்வர் நடிகை நமீதாவுடன் பேட்டி
அப்படியே காப்பி பண்ணி போட்டிருக்கு
இங்கே

நம்ம பதிவ கூட நகலெடுத்துப்போடுறாங்கன்னு மகிழ்ச்சியா இருக்கு, ஆனா கூடவே எங்க குழமத்தோட இணைப்பையும் கொடுத்திருக்கலாம்.

பதிவர்களே நாங்க வலைப்பதிவுக்கு புதியவர்கள், இது என்ன என்று விளக்குங்கள்

நன்றி

வருங்கால முதல்வர் குழுமம்.

12 comments:

நசரேயன் said...

முதல்வரிடமே திருட்டா, வன்மையாக கண்டிக்கிறேன்

நசரேயன் said...

வர வர இணைய தளத்திலே திருட்டு ரெம்ப அதிகம் ஆகிவிட்டது, என் கதை எல்லாம் எவ்வளவு பேரு திருடி இருக்காங்களோ?
யப்பா.. திருடுரவங்க கொஞ்சம் பாத்து செய்யுங்க அப்பு..

வருங்கால முதல்வர் said...

நமீதா பேட்டி ஒரு மொக்கை அதப்போயி, எனக்கு இன்னும் புரியல அந்த பிளாக்கின் நோக்கம். லாகின் கேக்குது கமெண்ட் போட வில்லங்கமா இருக்கலாம்ல.

புதுகை.அப்துல்லா said...

அட விடுங்க சி.எம்.
எப்படியோ நாலு இடத்துக்கு நம்ப மேட்டர் போய் சேர்ந்தா சரி :))

புதுகை.அப்துல்லா said...

நா ரொம்ப நாளா என் பதிவில் இருந்து மற்ற பதிவுகளுக்கு லிங்க் குடுப்பது எப்படின்னு தெரியாமலேயே இருந்தேன். அப்புறம் நம்ப கிரி அண்ணந்தான் ஒரு நாள் சொல்லிக் குடுத்தாரு. அதுமாதிரி அவங்களும் லிங்க் குடுக்க தெரியாத ஆளுன்னு நினைக்கிறேன். காரணம் வருங்காலமுதல்வர் வளைத்தளத்திற்கு அளித்த பேட்டிங்கிறத அழிக்காம பதிவேத்தி இருக்காங்களே..

நசரேயன் said...

/*அட விடுங்க சி.எம்.
எப்படியோ நாலு இடத்துக்கு நம்ப மேட்டர் போய் சேர்ந்தா சரி :))*/
அண்ணன் சொல்லுறது சரிதான்,நம்மளையே காப்பி அடிக்க நாலு பேரு இருக்காங்கன்னா சந்தோசம் தான், என்ன ஒரு வருத்தம், கழகத்துக்கு வளர்ச்சி நிதி அளிச்சிபுட்டு காப்பி அடிச்சா நல்லா இருக்கும், மறுபடி காப்பி அடிக்கும் போது இதை எல்லாம் பாருங்க சாமிகளா

அது சரி said...

ப்ளாக் அப்படிங்கிறதே நாம என்ன நெனைக்கறோம்னு சொல்லத் தான்...இதுல அடுத்தவங்க எழுதுனத காப்பி & பேஸ்ட் பண்ணி போட்றதை எந்த விதத்தில சேக்குறதுன்னு தெரிலை...

உங்களுக்கு மட்டுமில்ல..இப்ப சமீபமா சுப்பையா வாத்தியார் எழுதுன பல பதிவுகள் திருடப்பட்டிருக்கு...என்னோட ஒரு பதிவு (சட்டக்கல்லூரி கலவரம்...போலீசுக்கு பாராட்டு) கூட திருடப்பட்டிருக்கு....

ரொம்ப அசிங்கமா இருக்கு....என்ன பண்றது...ஏதோ நாம எழுதுனதுல ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டாங்கன்னு விட்ற வேண்டியது தான் :0(

பழமைபேசி said...

//(சட்டக்கல்லூரி கலவரம்...போலீசுக்கு பாராட்டு) கூட திருடப்பட்டிருக்கு....//

அவிங்களால திருட்டைக் கூடத் தடுக்க முடியலைன்னு சுட்டிக் காட்டுறதுக்கு செய்திருப்பாங்களோ? தீயணைப்பு நிலையம் தீ பிடித்து எரிந்ததுன்னு செய்தி வர்றதில்லையா??

இஃகிஃகி!

அது சரி said...

//
பழமைபேசி said...
//(சட்டக்கல்லூரி கலவரம்...போலீசுக்கு பாராட்டு) கூட திருடப்பட்டிருக்கு....//

அவிங்களால திருட்டைக் கூடத் தடுக்க முடியலைன்னு சுட்டிக் காட்டுறதுக்கு செய்திருப்பாங்களோ? தீயணைப்பு நிலையம் தீ பிடித்து எரிந்ததுன்னு செய்தி வர்றதில்லையா??

இஃகிஃகி!
//

நீங்க சொன்னதும் தான் இப்படி ஒரு ஆங்கிள் இருக்கறதே எனக்கு தோணுது....

இந்த திருட்டைக்கூட அவய்ங்களால தடுக்க முடியாது...நீ என்ன அவய்ங்கள பாராட்டுறன்னு எனக்கு குத்தி காமிக்கக் கூட திருடியிருக்கலாம்...:0)

ஆனா, அதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்துச்சி....நாம போடுறதே மொக்கை. இதைக்கூட காப்பி அடிக்கிறாங்கன்னா பாவம் எம்புட்டு கஷ்டத்துல இருக்கோணும் :0))

இளைய பல்லவன் said...

ஆஹா! முதல்வரிடமே திருட்டா? :((

பேசாம ஒரு காபிரைட் டிஸ்கிய போட்டுர வேண்டியதுதான்.

Karthik said...

உங்களுடைய வலைத்தளத்தை Copy செய்கிறார்களா...?

see this post...!

இராகவன் நைஜிரியா said...

ஒருவரின் படைப்பை தமது வலைத்தளத்தில் போடுவற்கு முன் சம்பந்தப்பட்ட வலைப்பதிவரின் முன் அனுமதி பெற்று செய்தால் நன்றாக இருக்கும். வலைப்பதிவின் url மட்டுமாவது கொடுக்கவேண்டும்.

என்னை மாதிரி லிங்க் கொடுக்க தெரியவில்லை என்றால், அந்த லிங்கை அப்படியே டைப் அடித்து விடலாம் அல்லவா?

என்னை பொருத்தவரை ஒருவரின் எழுத்தை அவரின் பெயர் போடாமல் போடுவது தவறுதான்