Wednesday, December 3, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் நகைச்சுவையான அறிமுகம் - உணவு- பாகம் 3

பாகம் 1
பாகம் 2
சமூக சீர்திருத்ததில் தஞ்சையின் பங்குக்கு முன்னால், இன்னும் உணவு, வாழ்க்கை முறை, கல்வி, தமிழ் அறிஞர்கள் பற்றி எழுதுகிறேன்.பதிவு ஒரு சீரான நேர்கோட்டில் செல்லாமல் மாறி மாறி செல்கிறது மன்னிக்கவும்.ஒருங்கினைந்த தஞ்சைப்பகுதியின் வரலாறு நான் எழுத நினைக்கவில்லை அதற்கான அறிவும் இல்லை,இவர்களின் பொதுவான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக அனுகுவதே என் நோக்கமே.

மீன் உணவு ஒரு பிரதான உணவு, கடலோர தஞ்சையினர் பெரும்பாலும் கடல் மீன்களை விரும்பி சாப்பிடுவர்.குறிப்பாக நாகைக்கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் கோலா மீன் அநேகரின் விருப்ப மீனாக இருக்கும்.இதன் தலையை உண்ண மாட்டார்கள், சில வீடுகளில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள் ஏதோ விஷம் உள்ளது சாப்பிடும் கோழி கூட இறந்துவிடும் என்று, எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.இந்த கோலா மீன் தமிழகத்தின் வேறு பகுதிகளில் உண்டா எனத்தெரியவில்லை.

இந்த மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தும் நாகை மீனவர்கள், இயற்கை மற்றும் இலங்கையின் சீற்றங்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டிய கட்டாயம்.இவர்கள் வாழ்வில் ஒருநாள் ஒளி பிறக்கும் என நம்புவோம்.

தஞ்சை நகர்ப்பகுதி ஒட்டியுள்ளவர்கள ஆத்து மீன்,மற்றும் ஏரி மீன் விரும்பிகள் குறிப்பாக விரா மீன்,சேற்று நாத்தம் அடித்தாலும் ஏரிக்கெழுத்தி,ஆறா,குறவை போன்ற மீன்களும் விருப்பமான மீன் உணவு.வளர்ப்பு கெண்டை மீன்கள் மலிவான ஒரு மாற்று மீன். இவர்கள் பெரும்பாலும் கடல் மீன் உண்ணமாட்டார்கள், குறிப்பாக அண்ணன் ஜோசப் பால்ராஜ் கல்லணை மீன் சாப்பிடுவார் ஏன் கருவக்காய் கூட சாப்பிடுவார்,ஆனால் கடல் மீன் உண்ணமாட்டார்(உண்மையா?).கோலா மீன் தஞ்சையை அடையும்போது கோழா மீனாகிவிடும்....இரண்டு வகை மீனையும் வகை தொகை தெரியாமல் சாப்பிடும் என்னைப்போன்ற ஏகாம்பரமும் உண்டு.

பின்னூட்டத்தில் நண்பர்கள் சொன்னது போல் கும்பகோணம் டிகிரி காப்பியின் சுவையே அலாதிதான், தஞ்சையில் நான் படிக்கும் போது வெங்கடா லாட்ஜ்ல் ஒரு காப்பி குடித்துவிட்டு, அதே கடையில் உடனடியாக குடிக்க வெட்கப்பட்டு பக்கத்தில் உள்ள காபி பேலஸில் அடுத்த காப்பி குடிப்பதற்கு அதன் சுவையே காரணம். ரயிலில் வரும்போது கும்பகோணம் அருகில் உள்ள ஊரில்(பேரளம்) ஒரு வடை விற்பார்கள் அருமை.

திருநெல்வேலி அல்வா அளவு புகழ் பெறாவிட்டாலும், திருவையாறு அசோகாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது, தஞ்சைக்கு வெளியில் இந்த இனிப்பு வகை வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை,இதன் முக்கியமான மூலப்பொருள் பச்சைப்பயறு அது மட்டும் தெரியும் பின்னூட்டம் மூலம் ஒருவெளை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.


அசோகா செய்ய

சுட்டிக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

மிகப்பெரிய ஊண் உண்ணியான எனக்கு தஞ்சையின் தனித்துவமான சைவ சாப்பாடு பற்றிய அறிவு எதுவும் இல்லாததால் பின்னூட்டத்தில் வரும் தகவல்கள் வெட்டி ஒட்டப்படும்.நாகை,திருவாரூர்,கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை சிறப்பு உணவு இருக்கலாம் தெரியவில்லை.

காஞ்சி,சின்னாளப்பட்டு மாதிரி இங்கேயும் திருபுவணம் பட்டு சேலைத்தறிகள்,கும்பகோணம் பகுதியில் உண்டு,அதற்கு மேல் எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. பின்னூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.விவசாயம்,சீவல் தாண்டிய தொழிலாகையால் இதனை செய்பவர்கள் சவுராஷிட்டிரா இனத்தை சார்ந்தவர்களே பெரும்பாண்மையினர்.

தொழில் வளர்ச்சி குறைவான பகுதி ஆதாலால், ஒருமுறை மயிலை எம்.பியான மணிசங்கர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தபோது, எப்படி மணல் அடிச்சு ஒட்டகத்த கொண்டு வந்து விடப்போறாரன்னு சொன்ன கும்பகோணம் குசும்பர்களும் உண்டு...

தொடரும்...

17 comments:

கோவி.கண்ணன் said...

அட கோலா மீனு :)

அதற்கு இரண்டு பெயர் இருக்கு, வைகாசி மாதங்களில் மட்டும் தான் கோலா மீன் கிடைக்கும். விடியற்காலை கொண்டுவருவது செத்த கோலா ஏனெனில் கோலாவை பிடிக்க 24 மணி நேரத்திற்கும் மேலாக கடலில் இருப்பார்களாம், மாலையில் வருவது உயிர்கோலா உயிரோடு இல்லாவிட்டாலும் ப்ரஸ்ஸாக இருக்கும்.

கோலாமீனின் சுவை மற்ற மீன்களைவிட மாறுபட்டது. இரண்டு பேர் உள்ள வீடாக இருந்தால் 10 மீன் வாங்குவாங்க, நீங்க சொன்னமாதிரி தலையை புதைக்க மாட்டார்கள், கோழி சாப்பிடும் ஒண்ணும் ஆகாது.

கோலா மீன்கள் மற்ற மீன்களைப் போல் வலையால் பிடிக்கப்படுவது இல்லை. காவால பூண்டு எனப்படும் ஒருவகை செடியை வெட்டி வலைபோல் கடல்மேற்பரப்பில் பாய்போல் விரித்து அதன் மீது பழைய சோற்றை தூவுவார்கள், அதை திண்பதற்காக நீரில் இருந்து பறந்துவரும் (கோலாவுக்கு பறக்கும் திறன் உண்டு) மீன்களை அந்த பாயின் மீதுவிழ விழ எடுத்து கூடைக்குள் போட்டுக்கொள்வார்கள்.

கோவி.கண்ணன் said...

//திருநெல்வேலி அல்வா அளவு புகழ் பெறாவிட்டாலும், திருவையாறு அசோகாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது, //

நாகை சேட்டுக்கடை ஸ்வீட்ஸ் பேமஸ்தான். 'நாகை நெய்மிட்டாய் கடை' என்ற பெயரில் மதுரையில் ஒரு கடையே இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

நாகை ரயில் நிலையம் மீன் ஏற்றுமதியால் எப்போதுமே நாறியபடி இருக்கும்.

நானானி said...

நல்லாருந்துது...தஞ்சையின் அறிமுகம். கொழுந்துவெத்தலையும் வெற்றிலைசீவலும் குதப்பாத வாயும் உண்டா? 'நாகப்பட்டணம் ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை' பாதாம் அல்வா' ட்ரேஸ்பேப்பரில் சுத்தித் தருவார்கள். அம்புட்டு ருசி! 'பாதன் அல்வா' என்று எங்க வீட்டு குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மதுரை போகும் போது வாங்கி வருவார்கள்.
உங்க பதிவைப் படித்ததும் நான் பதிவிட்ட 'என்ன பிரசித்தம்' ஞாபகம் வந்தது. நேரமிருப்பின் படித்து கருத்து சொல்லுங்களேன்.

ஜீவன் said...

முடிஞ்சா இத சேர்த்து போடுங்க அண்ணே !

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்

கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.

கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கோவில் தொடர்பு எண்: 04374 -269407.

கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2463354.

கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 256424.

கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737.

கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
கோவில் தொடர்பு எண்: 04364 - 275222.

கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 04368 - 236530.

கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 279423.-

பழமைபேசி said...

இன்னும் இன்னும் வேணும்....தகவல் பசி!

நசரேயன் said...

/*மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தும் நாகை மீனவர்கள், இயற்கை மற்றும் இலங்கையின் சீற்றங்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டிய கட்டாயம்.இவர்கள் வாழ்வில் ஒருநாள் ஒளி பிறக்கும் என நம்புவோம்*/
நம்புவோமாக

நசரேயன் said...

/*
மிகப்பெரிய ஊண் உண்ணியான எனக்கு
*/

புலவா இது?

குடுகுடுப்பை said...

தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன்

குடுகுடுப்பை said...

வாங்க நானானி
//நல்லாருந்துது...தஞ்சையின் அறிமுகம். கொழுந்துவெத்தலையும் வெற்றிலைசீவலும் குதப்பாத வாயும் உண்டா? 'நாகப்பட்டணம் ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை' பாதாம் அல்வா' ட்ரேஸ்பேப்பரில் சுத்தித் தருவார்கள். அம்புட்டு ருசி! 'பாதன் அல்வா' என்று எங்க வீட்டு குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மதுரை போகும் போது வாங்கி வருவார்கள்.
உங்க பதிவைப் படித்ததும் நான் பதிவிட்ட 'என்ன பிரசித்தம்' ஞாபகம் வந்தது. நேரமிருப்பின் படித்து கருத்து சொல்லுங்களேன்.//

வந்து தேடினேன் எங்க இருக்குன்னு தெரியல மீண்டும் வருகிறேன்

நானானி said...

லிங்க் கொடுக்க முடியவில்லை.ஏதோ பிரச்சனை. 2007-மார்ச்-ல் இருக்கும்.சிரமத்துக்கு பொறுத்துக்கொள்ளவும்.

kanchana Radhakrishnan said...

asoka alwaaviRku
http://annaimira.blogspot.com/2008/09/thanjavur-halwa.html

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
பழ்மையார்
நசரேயன்
ஜீவன்
காஞ்சனா மேடம்.

இனியா said...

குடு குடுப்பை,

நல்ல பதிவு. நீங்க தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊர்?
நானும் தஞ்சை மாவட்டந்தான், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் ஒரு கிராமம்

Anonymous said...

Peralam is between MAyiladuthurai and Thiruvarur.
There used to be an IRR (Indian RAilway Restaurant) in MAyiladuthurai Junction and " THAVALAI VADAI " WAS QUITE FAMOUS.

kUMBAKONAM;Murari Sweets: " DHOOD PEDA" is very famous.This is variety of milk sweet which I have not so far come across in many other places.Though most of the sweet stalls of Kumbakonam offer this sweet, the taste of Murari Sweets ,in my view, is the best.

When you are writing on Arts/Culture,you may TRY TO TOUCH UPON
MELATTUR BAGAVATHA MELA,
Contribution to Bharathanatyam:By Thanjai Nalvar .
The Pandhanallur and Vazhuvoor schools of Bharathanatyam -a few points .....

K.G.Subbramanian

குடுகுடுப்பை said...

வாங்க இனியா
//குடு குடுப்பை,

நல்ல பதிவு. நீங்க தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊர்?
நானும் தஞ்சை மாவட்டந்தான், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் ஒரு கிராமம்//
நன்றி, அடுத்தடுத்த பதிவுகள் விரைவில்


திருக்காட்டுப்ப்ள்ளியே கிராமம் அதுக்கும் பக்கத்திலேயே. நானும் உங்கள விட சின்ன கிராமமுங்கோ

Sadashivam said...

Ellam super, thiruvaiyaru Asoka va vittutengalappa!!

Sadashivam said...
This comment has been removed by the author.