Tuesday, December 9, 2008

கொங்கு நாடு அறிமுகம் - 2

வணக்கம்! அண்ணன் மகேசு அவிங்க கொங்கு நாட்டைப் பத்தி எழுதினதின் தொடர்ச்சியா நாம இப்ப. பாருங்க, கொங்கு நாடு அப்பிடின்னா, வடக்க கொள்ளேகால்ல இருந்து, அந்த மேற்குத் தொடர்ச்சிய மலையத் தொட்டாப்புல பன்னாரி, சத்தியமங்கலம், மேட்டுப் பாளையம், ஊட்டி, குருடிமலை, மருதமலை, நரசிபுரம், வாளையார், வெள்ளியங்கிரி மலை, பாலக்காட்டுக் கணவாய் முகப்பு, கோட்டூர், சமத்தூர், ஆனைமலை, வால்பாறை, காடம்பாறை, ஆழியாறு, எரிசனம்பட்டி, திருமூர்த்தி மலை, அமராவதி, சின்னாறு, மூணாறு எல்லை, பழனி மலை, அங்கிருந்து சாஞ்சாப்புல ஒட்டஞ்சத்திரம், சத்திரப்பட்டி, கரூர், அங்கிருந்து அப்பிடியே சாஞ்சாப்புல மொடக்குறிச்சி, நத்தக்காடையூர், சேலத்தைத் தொட்டாப்புல வெளிப்புறமா, ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுப்புல வந்து, அப்பிடியே மாதேசுவரம் மேட்டைத் தொட்டுட்டு, எங்க ஆரம்பிச்சமோ அந்த எடத்துக்கு வந்தா, அதாங்க‌ குத்து மதிப்பா சொல்லுற, இனிப்பான கொங்கு நாடு!

இந்நேரம் நாம பாத்தது கங்கு(ஓரம்)களைத்தான். உள்ளுக்குள்ள சொல்லணும்னா, பழனி, மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, செட்டிபாளையம், காட்டம்பட்டி, சமுத்தூர், காளியாபுரம், தாராபுரம், மூலனூர், கோவிந்தாபுரம், பெதப்பம் பட்டி, குடிமங்கலம், பூளவாடி, நெகமம், வீதம்பட்டி வேலூர், செஞ்சேரி மலை, பெரியபட்டி, பொங்கலூர், சுலதான் பேட்டை, சூலூர், சிங்காநல்லூர், கேத்தனூர், பல்லடம், திருப்பூர், மொடக்குறிச்சி, சித்தோடு, ஈரோடு, குமாரபாளையம், நாமக்கல், நம்பியூர், சேவூர், திருச்செங்கோடு, பெருந்துறை, சென்னிமலை, சிவன்மலை, சங்ககிரி, காங்கயம், சோமனூர், சின்னியம் பாளையம், அரசூர், கருமத்தம்பட்டி சதுக்கம், கோபி, கொடிவேரி, மேட்டூர், பவானி, அன்னூர், பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூரு, பேருர், ஆலாந்துறை, பூண்டி, பன்னாரி இதெல்லாம் நொம்ப முக்கியமான ஊருக, ஆனா இன்னும் நிறைய இருக்கு. கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு மூணும் தனிப்பட்ட பெரிய ஊருக.

இப்ப நாம சொன்ன ஊருகளைப் பத்தி எழுதினா, எழுதிட்டே இருக்கலாம். அதுக்கு முன்னாடி, கணேசன் ஐயாவிங்க பக்கத்துல போயி, கவியரசு கண்ணதாசன் அவிங்க கோயம்பத்தூரைப் பத்தி வெகு அழகாப் பாட்டுலயே வெவரஞ் சொல்லி இருக்காங்க. அதைப் பாத்திட்டு வாங்க. நாம அடுத்த பதிவுல, ஊர் ஊராப் போயி, அருமை பெருமைகளத் தெரிஞ்சுக்கலாம்.


கோயம்புத்தூர்!

இன்னும் விபரமா, தகவல்களை ந்ம்ம மூத்த பதிவர்கள் ஏற்கனவே பதிஞ்சு வெச்சிருக்காங்க. அதையும் ஒரு எட்டு, போயி பாருங்க. மேலதிகத் தகவல்கள்!

15 comments:

குடுகுடுப்பை said...

பட்டைய கெளப்புங்க

நசரேயன் said...

ஆட்டத்தை ஆரமிங்க

ILA (a) இளா said...

கொங்குவாசல்ல இன்னும் விவரமா இருக்குமே

ILA (a) இளா said...

Gra கொங்குவுக்கு அர்த்தம் கூட சொல்லி இருப்பாரு

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை
@@நசரேயன்

எழுத வெச்சிட்டீங்ளே! எழுத வெச்சிட்ட்ட்ட்டீங்ளே!!

பழமைபேசி said...

//ILA said...
Gra கொங்குவுக்கு அர்த்தம் கூட சொல்லி இருப்பாரு
//

மூத்த பதிவருக்கு வணக்கம்! தொடுப்புக்கு நன்றிங்க, பதிவிலயும் போட்டுட்டேன். சனங்க ஆசைப் பட்டாங்க, அதான்! முடிஞ்ச வரைக்கும் புதுத் தகவலா தர முயற்சி செய்யுறனுங்க!!!

Udhayakumar said...

perundurai, chennimalai uttupoottenga, nayama ithu?

ராஜ நடராஜன் said...

கொங்கு நாட்டு எல்லைக்குள்ள ஆழியாறு துவங்கி,காடம்பாறை,ஆனைமலை 56 டீ எஸ்டேட்,சோலையாறுன்னு எல்லையப் பதிவு பண்ணுங்க.இல்லாட்டி எதிர்காலத்துல சேட்டன்கள் பழமையோட பதிவுல காடம்பாறை வரைக்கும்தான் கொங்குநாடுன்னு சொல்லியிருக்காருன்னு வழக்கு மன்றம் போயிடப் போறாங்க.சர்வே சரியான்னுப் பார்க்குறதுக்கு வனங்களையும்,மனங்களையும் பத்தி பதிவு போடற காட்டு ஆபிசர்கிட்டயும் கேட்டுடுங்க:)

Mahesh said...

நீங்க வெவெரமான ஆளுதே...

அப்பிடியே பெருமாநல்லூரு, அண்ணனூரு எல்லாம் சேத்திக்கிலாம்.

பழமைபேசி said...

//Udhayakumar said...
perundurai, chennimalai uttupoottenga, nayama ithu?
//

வாங்க, வணக்கம்! விட்டுப் போடோணும்ங்றது இல்லீங்ண்ணா... பரும்படியா எழுதினதுதான்...இப்பச் சேத்திப் போட்டனல்லோ....நொம்ப நன்றிங்கண்ணா....

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said... //

ஐயா வணக்கம். உட்டா எல்லை காந்தி ஆக்கிப் புடுவீங்க போல இருக்கே?

பழமைபேசி said...

// Mahesh said...
நீங்க வெவெரமான ஆளுதே...

அப்பிடியே பெருமாநல்லூரு, அண்ணனூரு எல்லாம் சேத்திக்கிலாம்.
//

வாங்க மகேசு, சேத்திப்புடலாங்க...

ILA (a) இளா said...

//மூத்த பதிவருக்கு வணக்கம்!//
ஸ்மைலி போட்டாதான் மூத்தப்பதிவர்னு அர்த்தம் தெரியுமுங்களா? இப்படி பேர் எல்லாம் சொன்னா மூத்தப் பதிவர் இல்லீங்.

ஆறாம்பூதம் said...

நொய்யல் ஆற்றங்கரையோரம் மரகத மாணிக்கக் கற்களுக்காக யவனர்களும் எகிப்தியர்களும் கப்பல் கப்பலாய் வந்து இற்ங்கிய ஒரு மாபெரும் வணிகத் தலமாக ஒருகாலத்தில் இருந்து.. இன்று திருப்பூர் நகர சாயப் பட்டறைகளின் மாபெரும் கழிவு நீர்த் தொட்டியாக மாறிப்போன ஒரத்துபாளையம் அணையின் அருகில் ,அக்கழிவுகளின் கார நெடியில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூராக மாறிப்போன கொடுமணம் ( தற்போது கொடுமணல் என அழைக்கப்படுகிறது) பற்றி ஒரு சிறு ஆவணப் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்( ஏதொ எனக்கு தெரிஞ்ச அளவு) அதையும் இங்கு வலை பரப்பலாமா..

பழமைபேசி said...

//வசந்த் கதிரவன் said...
நொய்யல் ஆற்றங்கரையோரம் மரகத மாணிக்கக் கற்களுக்காக யவனர்களும் எகிப்தியர்களும் கப்பல் கப்பலாய் வந்து இற்ங்கிய ஒரு மாபெரும் வணிகத் தலமாக ஒருகாலத்தில் இருந்து.. இன்று திருப்பூர் நகர சாயப் பட்டறைகளின் மாபெரும் கழிவு நீர்த் தொட்டியாக மாறிப்போன ஒரத்துபாளையம் அணையின் அருகில் ,அக்கழிவுகளின் கார நெடியில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூராக மாறிப்போன கொடுமணம் ( தற்போது கொடுமணல் என அழைக்கப்படுகிறது) பற்றி ஒரு சிறு ஆவணப் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்( ஏதொ எனக்கு தெரிஞ்ச அளவு) அதையும் இங்கு வலை பரப்பலாமா..
//

தாராளமா, செய்துடலாம், குடுங்க!