Monday, December 1, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் ஒரு மொக்கை அறிமுகம்.

தஞ்சை மாவட்டம் அப்படின்னு ஒருங்கினைந்த தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டிணம் மொத்ததையும் எடுத்துக்குவோம், இம்மாவட்ட மக்கள் பற்றி ஒரு நகைச்சுவை அலசல்.

உலகத்திலேயே வெத்திலை,பாக்கு போடர பழக்கம் அதிகம் உள்ளவங்க இந்த மாவட்ட மக்களாத்தான் இருக்கும், அதுலயும் பாக்கு கடிக்க முடியாதுன்னு அதுக்கு ஒரு மெசின் கண்டுபிடிச்சி உடைச்சு(சீவி) சீவல் ஆக்கி சாப்பிட்ட மகா சோம்பேறிகள்.இந்த ஊருல வேற தொழில் பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சு சீவல் கம்பெனி கண்ட தொழிலதிபர்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரியல.

தஞ்சாவூர் நகர்ப்புறத்து மக்கள் ரொம்ப கொஞ்ச பேரு,அவங்களும் பெரும்பாலும் பக்கத்து கிரமாத்திலேந்து புள்ளைங்கள டவுண்ல இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிக்கவைக்க குடியேறுனவங்களாதான் இருப்பாங்க, ஏன்னா முன்னாடியே சொன்னா மாதிரி இங்கே சீவல் கம்பெனிய தவிர வேற ஒன்னும் இல்ல வேல செய்யரதுக்கு, கொஞ்சம் கவருமெண்ட் ஆபிஸ் இருக்கும் அதுல கொஞ்ச பேரு வேல செய்வாங்க.

அந்த காலத்தில காவிரி தண்ணில முப்போகம் விவசாயம் பண்ணிட்டு வெத்திலை போட்டு கொதப்பி ரோட்டுலேயோ , ரோட்டாவிலேயோ துப்பி தமிழ் / கலையெல்லாம் வளர்த்து இருக்காங்க. ஆனா இப்போ ஒரு போக விவசாயமும் டான்ஸ் ஆடரதுனால வெத்தில போட்டு துப்பிட்டு வெட்டிப்பேச்சோட நிறுத்திக்கிராங்க பெரிய மனுசங்க.

சில ஏக்கர் நிலம் வெச்சிருக்கிற கிராமத்து பெரிசுங்க டவுணுகாரங்கள பாத்து, என்ன அங்கேயெல்லாம் வரிசையில நின்னு கூப்பன் அரிசி வாங்கி திங்கிராங்கலாம். நமக்கென்ன வயல்ல முத்து மாதிரி வெளஞ்ச நெல்லு, பொண்ணி அரிசி வெல கூட விக்கும்னு வெளஞ்ச பொண்ணிய வித்துப்புட்டு, பள்ளத்து வயல்ல வெளஞ்ச மட்ட(இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும்) அரிசிய வீடல அவிச்சு சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.

விவசாயக்கூலி மக்கள் அன்னக்கி கெடச்ச கூலி நெல்ல பாதி வித்து குடிச்சிப்புட்டு, கொஞ்சத்த அவிச்சி சாப்பிட்டு அடுத்த நாள் பத்தின கவலை இல்லாம தெரு விளக்கில உக்காந்து நடுச்சாமம் வரைக்கும் சீட்டாடிப்புட்டு, காலைல வேலைக்கு போவாங்க, ஆனா கர்நாடாகாரன் புண்ணியத்துல இப்ப இவங்கெல்லாம் வேலை தேடி திருப்பூர்.ஈரோடுன்னு போயி அங்க சீட்டு வெலாடுராங்க.

கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது, ராத்திரில அப்பா பேசுவாருன்னு பயந்து பள்ளிக்கூடத்தில தூங்கிரது.

தொடர்புடைய இன்னொரு பதிவு முடிஞ்சா பாருங்க

குடுகுடுப்பை: சூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.

அப்படியே பின்னூட்டத்தையும் படிங்க, எதாவது நக்கலா கலக்கிருப்பாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு இன்னோரு பாகம்.. இதுக்கு இடையில் நெல்லை,கொங்கு பகுதி பற்றி நசரேயனும், பழமையாரும் பதிவு போடுவாங்க. ..அப்படியே ஒட்டு மொத்த தமிழ்நாடு பத்தியும் பதிவு போடமுடியுதான்ன்னு பாப்போம்.

42 comments:

பழமைபேசி said...

//நெல்லை,கொங்கு பகுதி பற்றி நசரேயனும், பழமையாரும் பதிவு போடுவாங்க. ..அப்படியே ஒட்டு மொத்த தமிழ்நாடு பத்தியும் பதிவு போடமுடியுதான்ன்னு பாப்போம். //

ஆமாங்கண்ணே! போட்டுடுவோம்!!

நசரேயன் said...

/*
கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது, ராத்திரில அப்பா பேசுவாருன்னு பயந்து பள்ளிக்கூடத்தில தூங்கிரது
*/
அந்த ௬டத்திலே ஐயாவும் ஒருத்தரா?

இராகவன், நைஜிரியா said...

வெத்திலை பாக்கு போட்டுட்டு மீதி சுண்ணாம்பை அப்படியே விளக்கு கம்பத்து மேலேயும், தந்தி கம்பத்து மேலேயும் வெள்ளை அடிக்கிறமாதிரி தடவி வைப்பதை சொல்ல மறந்தீடீங்க.

சீவல் கம்பெனி மட்டுமில்ல, புகையிலை கம்பெனியும் தஞ்சை மாவட்டம் புகழ் பெற்றது.

வெத்திலை, வறுவல் சீவல், புகையிலை மூன்றையும் போட்டுக்கொண்டு, ஒரு கெட்ட வார்த்தை சொல்வதில் சமர்த்தர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, குத்தல், நையாண்டி இவற்றிலும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.

தஞ்சை மாவட்டத்தை பற்றி சொல்லும் போது, காலாலே மடையை (மடை என்றால் என்னவென்று விளக்கமாக ஒரு பதிவு போடவும்) திறப்பார்கள் எனவும் சொல்வார்கள்.

Anonymous said...

நீங்க தஞ்சாவூரா, இவ்வளவு நக்கல் பண்ணீருக்கீங்க :)

S.R.ராஜசேகரன் said...

உங்க ஊர பத்தி ரெம்ப தெளிவா விளக்கிட்டீங்க குடுகுடுப்பை.

இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும் அரிசிய சாப்பிட்டும் அண்ணாச்சிக்கு குசும்பு மட்டும் குறையவேஇல்ல

அது சரி said...

//
சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.
//

இது சூப்பரு! டவுசரு கிளிஞ்சாலும் உடாம உடுக்கையடிக்கிறப்பவே நெனச்சேன்...தஞ்சாவூரு குசும்பு அப்பிடியே இருக்கேன்னு!

உங்க ஊர்க்காரங்க நக்கலு தான் ஒலக பிரசித்தம் ஆச்சே!

siva gnanamji(#18100882083107547329) said...

எம்பளது (80) மறந்திடுச்சோ?

துளசி கோபால் said...

என்னங்க இந்தக் காச்சுக் காச்சறீங்க!!!

நம்மவீட்டுலே எல்லாம் சாப்புடுவீங்களா என்ன? அதான் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்துருப்பீங்களே!!!

கோவி.கண்ணன் said...

//தஞ்சை மாவட்டம் அப்படின்னு ஒருங்கினைந்த தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டிணம் மொத்ததையும் எடுத்துக்குவோம், இம்மாவட்ட மக்கள் பற்றி ஒரு நகைச்சுவை அலசல்.
//

எங்கூருங்களை நக்கல் அடிக்கிறது நல்லா இல்லே.

நாகை உட்பட திருச்சி - தஞ்சை மாவட்டத்து தமிழ் தான் (திரைப்படங்களிலும்) பேசப்படுது

ஜீவன் said...

நம்ம ஊர பத்தி நல்லாத்தான்(?) எழுதி இருக்கீங்க!

சரி முழுக்க நனஞ்சாச்சு நானும் கொஞ்சம் என் பங்குக்கு!

ஆனா! தண்ணி அடிக்கிறத பத்தியும், தெரு வெளக்குல சீட்டு ஆடுறத

பத்தியும் இன்னும் கொஞ்சம் வெளக்கி இருக்கலாம்!

தெரு வெளக்குல சீட்டு ஆடும் போது கரண்டு போச்சுன்னா எவ்ளோ

கஷ்டம் தெரியுமாண்ணே? அந்த நேரத்துல யார் வீட்டுலயாவது

மண்ணெண்ணெய் வெளக்கு வாங்கியாந்து ஒரே வெளக்குல

அஞ்சாறு பேரு சீட்டு ஆடனும், யாராவது இருட்டுக்குள்ள

''ராங்கு டிக் '' வைக்காம பார்த்துக்கணும்.ரொம்ப கஷ்டம்னே!

ஜீவன் said...

அப்புறம் வயக்காட்டுல உழைச்ச களைப்புல

பாதி நெல்ல வித்து தண்ணி அடிக்கிறத பத்தி

சொன்னிங்க! ''ஒயின் ஷாப்'' ல போய் அடிக்கனும்னா

முழு கூலியும் போய்டும்.நம்ப ஆளுகளுக்ககவே

ஊருக்குள்ள சில வீடுகள்ல தனியா காய்ச்சியே

தராங்க. அந்த வீட்டுல சரக்கு விக்கிராங்கன்னு

குடிக்கிரவங்களுக்கும், போலீஸ் காரங்களுக்கு

மட்டும்தான் தெரியும்.

குடிகிரதுல நம்ப ஆளுங்க ரொம்ப சிக்கனம்

சைடு டிஷ் க்கு ரொம்ப செலவு பண்ண மாட்டங்க!

ஊறுகாதான்!அது போதும்! ஊறுகா கெடைக்காட்டி

புளியங்கா கடிச்சுகிட்டே குடிச்சுடுவாங்க! புளியங்கா

இல்லாட்டி புளியன்கொளுந்து இலைய மென்னுகிட்டே

மேட்டர முடிச்சுடுவாங்க! அம்புட்டு சிக்கனம்!

T.V.Radhakrishnan said...

நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் தான்...ஆனால் வெற்றிலை போடும் பழக்கம் ஏற்படவில்லையே! ஏன் குடுகுடுப்பை?

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//நெல்லை,கொங்கு பகுதி பற்றி நசரேயனும், பழமையாரும் பதிவு போடுவாங்க. ..அப்படியே ஒட்டு மொத்த தமிழ்நாடு பத்தியும் பதிவு போடமுடியுதான்ன்னு பாப்போம். //

ஆமாங்கண்ணே! போட்டுடுவோம்!!//

நட்சத்திரமா இருக்கும்போதே ஆரம்பிச்சு வைங்கண்ணா.

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது, ராத்திரில அப்பா பேசுவாருன்னு பயந்து பள்ளிக்கூடத்தில தூங்கிரது
*/
அந்த ௬டத்திலே ஐயாவும் ஒருத்தரா?

பள்ளிக்கூடத்தில தூங்கிரது உண்டு, ஆனா காரெடுக்கிர கோஷ்டில இல்ல

குடுகுடுப்பை said...

வாங்க இராகவன், நைஜிரியா

அடுத்த பாகத்தில கொஞ்சம் சேக்கிறேன்

குடுகுடுப்பை said...

வாங்க சின்ன அம்மிணி

நீங்க தஞ்சாவூரா, இவ்வளவு நக்கல் பண்ணீருக்கீங்க :)
//
ஆமாங்க மத்தவங்கள் விமர்சனம் பண்ணி அடி வாங்க சொல்றீங்களா?

குடுகுடுப்பை said...

வாங்க S.R.ராஜசேகரன்

உங்க ஊர பத்தி ரெம்ப தெளிவா விளக்கிட்டீங்க குடுகுடுப்பை.

இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும் அரிசிய சாப்பிட்டும் அண்ணாச்சிக்கு குசும்பு மட்டும் குறையவேஇல்ல//

அரிசி மட்டும் இல்லங்க, மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டதுனால:)

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.
//

இது சூப்பரு! டவுசரு கிளிஞ்சாலும் உடாம உடுக்கையடிக்கிறப்பவே நெனச்சேன்...தஞ்சாவூரு குசும்பு அப்பிடியே இருக்கேன்னு!//

கருத்துப்பிழை, டவுசர் கிழிஞ்சது ஒரு வருடம் முன்னாடி, இனிமே தோல் கிழிஞ்சாதான் உண்டு.

உங்க ஊர்க்காரங்க நக்கலு தான் ஒலக பிரசித்தம் ஆச்சே!

//

அய்யா நீங்க எந்தூரு.

குடுகுடுப்பை said...

வாங்க sivananamji(#18100882083107547329) said...

// எம்பளது (80) மறந்திடுச்சோ?//
இது நாகைப்பகுதிக்கு சொந்தமானது, அடுத்த பாகத்தில போடலாம்னு இருந்தேன்.

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

//தஞ்சை மாவட்டம் அப்படின்னு ஒருங்கினைந்த தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டிணம் மொத்ததையும் எடுத்துக்குவோம், இம்மாவட்ட மக்கள் பற்றி ஒரு நகைச்சுவை அலசல்.
//

எங்கூருங்களை நக்கல் அடிக்கிறது நல்லா இல்லே.

நாகை உட்பட திருச்சி - தஞ்சை மாவட்டத்து தமிழ் தான் (திரைப்படங்களிலும்) பேசப்படுது

ஆமா நீங்க சொல்ரது சரிதான்.

குடுகுடுப்பை said...

ஜீவன் நீங்க ஒரு பாகம் இதுல எழ்துங்க

குடுகுடுப்பை said...

வாங்க துளசி கோபால்

என்னங்க இந்தக் காச்சுக் காச்சறீங்க!!!

அப்புரமா வரேன்.

புதுகை.அப்துல்லா said...

நாகை உட்பட திருச்சி - தஞ்சை மாவட்டத்து தமிழ் தான் (திரைப்படங்களிலும்) பேசப்படுது
//

அண்ணே அதில எங்க புதுக்கோட்டை மாவட்டமும் அடக்கம் :)

புதுகை.அப்துல்லா said...

வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்ட போடுறதுல உங்க ஊர்காரங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது. நாளு கிழமைன்னா செஞ்ச நிமித்திகிட்டு வெள்ள வேட்டி சட்டையோட நடந்து வர்றத பாக்கனுமே.... இதுல காமெடி என்னன்னா குடிக்க பெருசா கூழுகூட இருக்காது :))))

புதுகை.அப்துல்லா said...

தஞ்சாவூர் நகர்ப்புறத்து மக்கள் ரொம்ப கொஞ்ச பேரு,அவங்களும் பெரும்பாலும் பக்கத்து கிரமாத்திலேந்து புள்ளைங்கள டவுண்ல இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிக்கவைக்க குடியேறுனவங்களாதான் இருப்பாங்க,

//

முன்பு பெரும்பாலும் தஞ்சை மாவட்ட நகர்புற பகுதிகளில் பிராமண சமுதாயத்தினரே இருந்தனர். இப்பல்லாம் தஞ்சை மாவட்ட அக்ரஹாரம் அமெரிக்காவுக்கு ஷிப்ட்டாயிருச்சு.( அமெரிக்கா மட்டும்மல்ல உலகம் முழுவதும் பரவி வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார்கள்)

புதுகை.அப்துல்லா said...

சீவல் கம்பெனி மட்டுமில்ல, புகையிலை கம்பெனியும் தஞ்சை மாவட்டம் புகழ் பெற்றது.
//

புகையிலைக்கு பேர் பெற்ற மாவட்டம் புதுக்கோட்டைதான்னே. தஞ்சை மாவட்டத்தில் மைதீன் புகையிலை, தங்கவிலாஸ், கனி விலாஸ் இப்படி ஒன்னு ரெண்டு கம்பெனிதான். ஆனா எங்கபுதுக்கோட்டையில தெருவுக்கு இரண்டு புகையிலை கம்பெனி இருந்துச்சு :)

சென்ஷி said...

:))

இன்னமும் சிறப்பாக எழுத முடிந்திருக்கலாமோன்னு தோண வைச்சாலும் ஏதும் குறையில்லைன்னும் சொல்ல வைக்குது உங்க எழுத்து..

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

என்னங்க இந்தக் காச்சுக் காச்சறீங்க!!!

நம்மவீட்டுலே எல்லாம் சாப்புடுவீங்களா என்ன? அதான் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்துருப்பீங்களே!!!//

இது ஒரு நகைச்சுவை கதை, குறிப்பாக எங்கள் பகுதியில் உள்ள செட்டியார்கள் சிலர் சில குறிப்பிட்ட ஊர்களிலேயெ திருமணம் செய்வர். அங்கே இவர்கள் செல்லும்போது,பெண்கள் சொல்வார்களாம் கொஞ்சம் மாச்சோறு சாப்பிடுங்கன்னு, அதற்கு அந்த வீட்டில் உள்ள அவங்கெல்லாம் ஹோட்டல்லேயே சாப்பிட்டு வந்திருப்பாக நம்ம வீட்டிலியெல்லாமா சாப்புடுவாங்கனு.
எனக்கு தெரிந்த வரை இதுவும் ஒரு நக்கலே.மற்றபடி இருக்கும் கஞ்சியை வித்தியாசம் பார்க்காமல் பகிர்ந்து சாப்பிடும் மக்களே(அரிசு proud people)

குடுகுடுப்பை said...

வாங்க T.V.Radhakrishnan

// நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் தான்...ஆனால் வெற்றிலை போடும் பழக்கம் ஏற்படவில்லையே! ஏன் குடுகுடுப்பை?//

வெத்திலை போட்டுதான் தஞ்சாவூராங்க சோம்பேறியானங்க நான் நெனச்சேன், வெத்திலை போடரதுக்கு கூட சோம்பேறி படர தஞ்சாவூர் ஆளும் இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது:)

குடுகுடுப்பை said...

புதுகை.அப்துல்லா said...

தஞ்சாவூர் நகர்ப்புறத்து மக்கள் ரொம்ப கொஞ்ச பேரு,அவங்களும் பெரும்பாலும் பக்கத்து கிரமாத்திலேந்து புள்ளைங்கள டவுண்ல இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிக்கவைக்க குடியேறுனவங்களாதான் இருப்பாங்க,

//

முன்பு பெரும்பாலும் தஞ்சை மாவட்ட நகர்புற பகுதிகளில் பிராமண சமுதாயத்தினரே இருந்தனர். இப்பல்லாம் தஞ்சை மாவட்ட அக்ரஹாரம் அமெரிக்காவுக்கு ஷிப்ட்டாயிருச்சு.( அமெரிக்கா மட்டும்மல்ல உலகம் முழுவதும் பரவி வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார்கள்)

இதை பாகம்2 ல சொல்லலாம்னு இருந்தேன்.

குடுகுடுப்பை said...

புதுகை.அப்துல்லா said...

சீவல் கம்பெனி மட்டுமில்ல, புகையிலை கம்பெனியும் தஞ்சை மாவட்டம் புகழ் பெற்றது.
//

புகையிலைக்கு பேர் பெற்ற மாவட்டம் புதுக்கோட்டைதான்னே. தஞ்சை மாவட்டத்தில் மைதீன் புகையிலை, தங்கவிலாஸ், கனி விலாஸ் இப்படி ஒன்னு ரெண்டு கம்பெனிதான். ஆனா எங்கபுதுக்கோட்டையில தெருவுக்கு இரண்டு புகையிலை கம்பெனி இருந்துச்சு :)

//

புகையிலை நீங்க போடுவீங்களா?

குடுகுடுப்பை said...

வாங்க சென்ஷி

:))

இன்னமும் சிறப்பாக எழுத முடிந்திருக்கலாமோன்னு தோண வைச்சாலும் ஏதும் குறையில்லைன்னும் சொல்ல வைக்குது உங்க எழுத்து..//

நீங்கள் சொல்வது சரிதான், நன்றாக எழுதியிருக்கமுடியும், பாகம் இரண்டில் சரி செய்ய பார்க்கிரேன்.

ஆனாலும் அவசரகுடுக்கையா,அரைகுறைதானே எங்க அடையாளம்:)

smile said...

இப்ப இருக்குற நிலைத்த பிளாட் போட்டு வித்துக்கிட்டு
ஊரை சுத்திகிட்டு இருக்காங்க
இதுக்கு அப்புறம் என்ன செய்ய போறாங்க தெரியல

புதுகை.அப்துல்லா said...

புகையிலை நீங்க போடுவீங்களா?
//

புகையிலையை புகையா இழுத்தேன். இப்ப இல்ல... அது ஒரு பொற்காலம் :)

smile said...

அப்துல்லா அண்ணே இப்ப பிளாட்டினம் காலமா

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க கீழ தஞ்சை மாவட்டம்னு உங்க பதிவப் பார்த்தாலே தெரியுது.
நாங்க மேல தஞ்சையில்ல ( பெருமையாக்கும், பின்ன மாரநேரி கிராமம் கல்லணையில இருந்து 10 நிமிசம் தானே, தலமடையில்ல)

அய்யா நாங்க எல்லாம் கர்நாடகத்தான் இந்த அலும்பு பண்ற வரைக்கும் காலால மடையடைச்சு விவசாயம் செஞ்சவனுங்க தான். நல்லா உழைச்சு விவசாயம் செய்வோம். அதே நேரம் நக்கலுக்கு கொஞ்சம் கூட குறை இருக்காது.

ஆனா உங்க பதிவுல எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னான்னா, திருவையாறு இசையப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம உட்டுப்புட்டீங்களே. அது இல்லாம தஞ்சாவூரே இல்லீங்க.

வாங்க பால்ராஜ், நான் இன்னும் முடிக்கல அடுத்த பாகத்தில் வரும், அப்புறம் நானும் மேல தஞ்சைதான், தலைமடை இல்லை நடுமடை.

குடுகுடுப்பை said...

வாங்க smile

இப்ப இருக்குற நிலைத்த பிளாட் போட்டு வித்துக்கிட்டு
ஊரை சுத்திகிட்டு இருக்காங்க
இதுக்கு அப்புறம் என்ன செய்ய போறாங்க தெரியல//

வலி வரும்போது தெரியும்.

இராகவன், நைஜிரியா said...

இது சென்னையில் நடந்த சம்பவம். எங்களது வீட்டில் தோட்ட வேலை செய்வதற்கு ஒருவர் வந்திருந்தார். மண்வெட்டி கேட்ட போது, வீட்டில் இருந்த மண்வெட்டியை கொடுத்தபோது இது தஞ்சாவூர் மண்வெட்டி, எங்களுக்கெல்லாம் சரிபட்டு வராது என்றார். (நான் 6 வது முதல் பட்ட படிப்பு வரை படித்தது கும்பகோணம்) என் தாயிடம் இது பற்றி கேட்ட போது, தஞ்சாவூர் மண்வெட்டிக்கும், செங்கல்ப்பட்டு மாவட்ட மண்வெட்டிக்கும் வித்யாசம் உண்டு, ஏனெனில், தஞ்சை மண்ணில் அதிகம் கொத்த தேவையில்லை, அதனால் மண்வெட்டியின் இலை பாகம் சிறியதாக இருக்கும் எனச்சொன்னார். இது பற்றி யாருக்காவது தெரிந்திருந்தால் பதில் போடலாமே?

கபீஷ் said...

// குடுகுடுப்பை said...
வாங்க T.V.Radhakrishnan

// நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் தான்...ஆனால் வெற்றிலை போடும் பழக்கம் ஏற்படவில்லையே! ஏன் குடுகுடுப்பை?//

வெத்திலை போட்டுதான் தஞ்சாவூராங்க சோம்பேறியானங்க நான் நெனச்சேன், வெத்திலை போடரதுக்கு கூட சோம்பேறி படர தஞ்சாவூர் ஆளும் இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது:)
//

:-):-):-)

மன்மதக்குஞ்சு said...

//நமக்கென்ன வயல்ல முத்து மாதிரி வெளஞ்ச நெல்லு, பொண்ணி அரிசி வெல கூட விக்கும்னு வெளஞ்ச பொண்ணிய வித்துப்புட்டு, பள்ளத்து வயல்ல வெளஞ்ச மட்ட(இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும்) அரிசிய வீடல அவிச்சு சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.// செம நக்கல் தான்.
//கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது// இதுக்கு பேரு தான் 'பந்தா'ன்னு சொல்வாங்க. //ஜீவன் said... அப்புறம் வயக்காட்டுல உழைச்ச களைப்புல பாதி நெல்ல வித்து தண்ணி அடிக்கிறத பத்தி சொன்னிங்க! ''ஒயின் ஷாப்'' ல போய் அடிக்கனும்னா முழு கூலியும் போய்டும்.நம்ப ஆளுகளுக்ககவே ஊருக்குள்ள சில வீடுகள்ல தனியா காய்ச்சியே தராங்க. அந்த வீட்டுல சரக்கு விக்கிராங்கன்னு குடிக்கிரவங்களுக்கும், போலீஸ் காரங்களுக்கு மட்டும்தான் தெரியும். குடிகிரதுல நம்ப ஆளுங்க ரொம்ப சிக்கனம் சைடு டிஷ் க்கு ரொம்ப செலவு பண்ண மாட்டங்க! ஊறுகாதான்!அது போதும்! ஊறுகா கெடைக்காட்டி புளியங்கா கடிச்சுகிட்டே குடிச்சுடுவாங்க! புளியங்கா இல்லாட்டி புளியன்கொளுந்து இலைய மென்னுகிட்டே மேட்டர முடிச்சுடுவாங்க! அம்புட்டு சிக்கனம்!// ரிப்பீட்டு. இந்த பதிவ படிக்கறத்துக்குள்ளாற அடுத்த பாகமும் வந்திருச்சே. தொடரட்டும் தங்கள் பணி