வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் ஊர்களைப்பத்தி மொக்கையா அறிமுகப்படுத்துற எண்ணத்துல ஆரம்பிச்ச இந்த ஊர் அறிமுகம், மொக்கையாக இல்லாமல் தரமான பதிவா வாசகர்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சது தெரிஞ்சு முதல் சுற்றில் மூண்று மாவட்டங்களின் அறிமுகப்படலம் ஆரம்பம் ஆகியிருக்கு.வாசகர்கள் அவரவர் பாணியில் விமர்சனம் பண்ணியிருக்காங்க.
இப்போ இதுவரைக்கும் இடப்பட்ட பதிவுகள் நம்ம ஜட்ஜஸ் 3 பேரும் விமர்சனம் பண்ணப்போறாங்க
தஞ்சை பற்றி.
பீவா: தஞ்சாவூர் போஸ்ட்ல பாத்தீங்கண்ணா குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு, நாலு போஸ்ட் போட்டாரு ஆனா அது மொக்ஸ் ஆவும் இல்ல சக்கையாவும் இல்ல. மொத்தத்தில கொஞ்சம் நெறயாவே மிஸ்ஸிங்.
பங்கீதா: சோ i dont know what to say abt it, tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் அடுத்த roundla சொல்லுங்க.
பயிஸ்வர்யா : tanjore பத்தி சொல்லிட்டு இன்னும் காவிரி பத்தி சொல்லவே இல்ல, somthing is missing yaar, ஒரு பெப்பியா இல்லன்னுதான் சொல்வேன்.
கொங்கு பற்றி:
பீவா:என் சொல்ரதுங், எனக்கு ஒன்னும் புரியலங்.. மகேசு கலக்கிட்டாருங்..ஒரே பதிவில நிறைய விசயம் சொல்லிட்டாரு, குறிப்பா அந்த உச்சா போறதுக்கு பத்து நிமிசம் டைமெல்லாம் உச்ச கட்ட காமெடிங்க.
பங்கீதா:எனக்கு ஒன்னுமே புரியலங்க, கொங்குத்தமிழ் இல்லாம கொங்கிலீஸ்ல சொல்லி இருந்தா நாங்களும் தங்கிலிசுல விமர்சனம் பண்ணிருபோம். ஆனாலும் its fantastic post னு தான் சொல்வேன்.
பயிஸ்வர்யா : கொங்குன்னா எனக்கு என்னனே தெரியாது, நான் ஏதோ நொங்குன்னு நெனச்சேன்.டீப்பா பாத்தப்புரம்தான் தெரிஞ்சது, business ,industries its a very good informative post. keep it up. அடுத்த ரவுண்டுக்காக நானும் வெயிட் பண்றேன்.தென் அந்த சிறுவாணி வாட்டர் இஸ் பைன், இட்ஸ் பெட்டர் தேன் எனி அதர் மினரல் வாட்டர்.
நெல்லை பற்றி:
பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிறதா கொத்ஸ் சொல்றார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்மா விடுகிறேன்.
பங்கீதா:திருநெல்வேலின்னாலே அல்வாதான் ஞாபகத்து வருது, நீங்க அருவாவையும் அல்வாவையும் மிக்ஸ் பண்ணி நல்ல டேஸ்டா இருந்துச்சு.i like the mix of roughness and the softness.
பயிஸ்வர்யா : தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்.
வாசகர்களே அடுத்தடுத்து கொங்கு பற்றி பழமைபேசி, தஞ்சை கோவில்கள் திருவிழாக்கள் இன்ன பிற பற்றி ஜீவன் மயிலாடுதுறை,திருவாரூர் பற்றி சில பிரபலஙகள் விரைவில், நெல்லையை பற்றி நசரேயனும் தொடர்வார்க்ள். சில வாரங்களுக்கு பிறகு பிற மாவட்டங்கள் பற்றிய பதிவுகள் தொடரும்.
புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...
அன்புடன் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
(இது ஒரு விளம்பரம்)
Monday, December 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
//பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிரதா கொத்ஸ் சொல்ரார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்ம விடுரேன்.//
பீவா ஐயா, வணக்கம்! எங்க தளபதியப் பத்தி, கொத்சு சொன்னதா சொன்னீங்க. சொல்லும் போது நீங்களும் அதேதான செய்து இருக்கீங்க! இஃகி!ஃகி!!
ஆரம்பிச்சுருக்கிரதா
சொல்ரார்
சும்ம
விடுரேன்
பீவா ஐயா, வணக்கம்! எங்க தளபதியப் பத்தி, கொத்சு சொன்னதா சொன்னீங்க. சொல்லும் போது நீங்களும் அதேதான செய்து இருக்கீங்க! இஃகி!ஃகி!!//
ஆரம்பிச்சுருக்கிரதா
சொல்ரார்
சும்ம
விடுரேன்//
நான் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவன்;
சரி செய்கிறேன்
தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்
நீங்க சொல்ற தண்ணி வேற நசரேயன் சொல்ற தண்ணி வேற
பயிஸ்வர்யா?
பங்கீதா?
//tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் //
ஒன்னும் தெரியாதா.. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணுமா (இங்கு “னு” (அ) “ணு” எது வரும் சொல்லுங்க நண்பர் பழமைபேசி) ... அப்புறம் ஏங்க கமெண்ட் சொல்றாங்க...
ஒன்னுமே புரியவில்லங்க...
இருந்தாலும் விளம்பரம் நன்றாக இருந்தது..
// குடுகுடுப்பை said...
நான் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவன்;//
உருப்பிடாதது அணிமா காத்து அடிச்சுடுச்சா...
திருச்சி மாவட்டத்தைப் பற்றி .. திரு. அணிமா அவர்களை எழுதச்சொல்வீர்களா....
இராகவன், நைஜிரியா said...
திருச்சி மாவட்டத்தைப் பற்றி .. திரு. அணிமா அவர்களை எழுதச்சொல்வீர்களா....
//
நான் சொல்லமாட்டேன் அவரா எழுதுவாரு.
நீதிபதி எல்லாம் வச்சு உள்ளே தள்ளாம விடமாட்டீங்க போல இருக்கு
//குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு//
பீவா மாமா, அவரு ஆரம்பிச்சு வச்சதுக்கு மொதல்ல போடுயா ஒரு சபாசு!
//நசரேயன் said...
நீதிபதி எல்லாம் வச்சு உள்ளே தள்ளாம விடமாட்டீங்க போல இருக்கு
//
நான் மொதல்ல எல்லாம் என்ன ஆச்சு?
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
aduthu puthugai pathivukkaga kathirukiren abdulla
//புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...//
புதுகோட்டை கிட்ட,தட்ட தஞ்சை போல தான்
அப்துல்லா என்ன எழுத போறாரு? ரொம்ப ஆர்வமா இருக்கு!
ஜீவன் said...
//புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...//
புதுகோட்டை கிட்ட,தட்ட தஞ்சை போல தான்
அப்துல்லா என்ன எழுத போறாரு? ரொம்ப ஆர்வமா இருக்கு!//
நானும் எழுதுனாலும் எழுதுவேன்
நசரேயன் இந்த அருவாவையும் அல்வாவையும் வச்சி ஒரு "சாமி" பண்ணலாம்ல. கத எழுதின மாதிரியும் இருக்கும் கொஞ்சம் நம்ம மாவட்ட பெருமைய பரப்புன மாதிரியும் இருக்கும். ஏன்னா எல்லாருக்கும் கொஞ்சம் குளுரு உட்டு போச்சி. ரொம்ப நாளா நம்ம பசங்க வீர தீர சாகசங்கள பேப்பர்ல பாக்கமுடியல. நாம்தான் அந்த பெருமைய கொஞ்சம் எடுதொறைக்கொனும்.
Post a Comment