Friday, October 31, 2008

விவசயிகளுக்கு வருமான வரி - நல்ல திட்டம்

//பலனடைபவன் பணக்கார விவசாயி என்கிறீர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் பணக்கார விவசாயி என்றால் நம் பார்வையில் ஏதோ தவறு என்றே கருதுகிறேன்.எங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு செருப்பு போட்டு நடந்ததாக கூட ஞாபகம் இல்லை இவ்வள்வுக்கும் எங்கள் அப்பா ஆசிரியர் அப்போ மற்றவர்கள் நிலமை?.இந்தியாவில் பணக்கார விவசாயி வர்க்கம் மிகக்குறைவு. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே இல்லையெனில் நீங்கள் சொன்ன அதே கருத்தைதான் வரி மாறாமல் நானும் சொல்லியிருப்பேன்.//

மிஸ்டர் ப்ளீச்சிங் பவுடர் சொல்லும் பணக்கார விவசாயிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எனக்கும் ஊரில் 10 ஏக்கர் நிலம் உண்டு, அதில் கொஞ்சம் விவசாயம் உண்டு என்கிற அடிப்படையில் சொல்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் இந்த இலவச மின்சாரத்தால் எனக்கோ இல்லை என் பகுதி கிராமத்தினருக்கோ எந்தப் பலனும் இல்லை. பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். சில நேரங்களில் காய்ந்து கெடுக்கும் மழை, சில நேரங்களில் பெய்தும் கெடுக்கிறது.

இலவச டிவி வழங்கிய பின் மின்சாரம் இல்லாமல் எப்படி மக்கள் மெகா சீரியல் பார்த்து தமிழ்நாட்டை வழங்கொழிக்கும் பூமி ஆக்க முடியும் என்ற ஆதங்கத்தில் தான் இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

//ஆனால் விவசாயத்தை சைனாவில் இந்திய விவசாயி செய்ய முடியாது.//

இப்படி எல்லாம் சொல்லாதீங்க. உடனே யாராவது தமிழக விவசாயிகள் சீனாவிலோ இல்லை மேற்கத்திய நாடுகளிலோ சென்று விவசாயம் செய்ய விசாவுக்கு முயற்சித்தார்களா எனக் கேட்கக் கூடும்.

//மேலே கொடுக்கப்பவை இலவசமா? ஊக்கமா? அப்போ இலவச மின்சாரம் இலவசமா? ஊக்கமா?//

ஊக்கத்திற்கும் இலவசத்திற்கும் வேறுபாடு காண முடியாத போது இது சிரமமான காரியம் தான்.

//வருமான வரி கட்டும் அளவுக்கு எத்தனை விவாசாயி சம்பாதிக்கிறான்.? விவசாயி வீட்டில் ரசம் சாப்பிடுவான், விவசாயக் கூலி கஞ்சி சோறும் ஊறுகாயும் சாப்பிடுவான் அதுதான் வித்தியாசம்.விவசாயமும் செய்து கொண்டு மற்ற தொழில். (காண்டிராக்ட்/கடைகள்/இன்னபிறவும்) செய்பவன் வருமான வரி கட்டும் அளவுக்கு நிறைய சம்பாதிப்பான்.அவனை இனங்கான வேண்டியது அரசாரின் வேலை.//

இப்படி விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்க வேண்டும் என எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க? அப்ப வருமானமே இல்லாமல் பட்டினிச் சாவு செத்த விவசாயிகளுக்கெல்லாம் யார் பதில் சொல்றதாம்?

//பணப்பயிர் செய்யும் விவசாயிகள் மிகசொற்பத்தில் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் காணுவது மிகவும் எளிது, அந்த விவசாயிகளை கண்டு வரி விதிக்க சொல்லுங்கள்.//

பருத்தி பணப்பயிர் தானே? எங்க பக்கம் முழுக்க பருத்தி தான். ஆனா யாரும் விவசாயத்தால் பணக்காரர் ஆனது போல தெரியவில்லை. அதே நேரம் விவசாய நிலத்தில் கல்லூரி கட்டியோ, இல்லை ப்ளாட் போட்டு வித்தோ (இல்லை அரசியல்ல இறங்கியோ) தான் விவசாயி இன்றைய சூழலில் பணக்காரனாக முடியும்.

வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்றாலும், அரிசி 500 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் விவசாயிகளுக்குச் செல்வதில்லை. கொழிக்கும் பணமெல்லாம் இடைத்தரகர்களுக்குத் தான் செல்கிறது என்பது கூட தெரியாதவர்களா நம்ம ஆட்கள் என்று நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுகிறது.

//விவசாயி மட்டும் தான் அவன் தயாரிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏனென்றால் அது உணவுப்பொருள்.//

உணவுப் பொருட்களுக்கல்ல. எந்த விவசாய உற்பத்திக்கும் விவசாயிக்கு நியாய விலை கிடைப்பதில்லை என்பது தான் நிதர்சன உண்மை. விலை நிர்ணயம் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி போன்ற கரிசல் நிலங்களை கவனித்தால் போதும். ஆடைகள் என்ன விலை விற்றாலும், பஞ்சம் என்றாலும், அதீத விளைச்சல் என்றாலும் எதுவாயினும் பருத்தி விலையை நிர்ணயிப்பவர்கள் இந்த ஏரியா மற்றும் கோயமுத்தூர் பருத்தி மில் அதிபர்கள் தான். இது தான் எங்கள் விலை. கொடுத்தால் விலைக்கு கொடுங்கள் இல்லை நீங்களே வைத்திருந்து விலை ஏறிய பின் கொடுங்கள் என சொல்லும் நிலை இன்றும் உள்ளது. இதில் பருத்தியை பாதுகாத்து வைத்திருந்து விற்க நினைக்கும் விவசாயியின் நிலை - முதலில் பருத்தி சேகரிக்க இடம் வேண்டும். அது விவசாயியின் வீடு தான். நாட்பட்டால் பருத்தி காற்றாடி எடை குறையும். இதில் நாட்பட்ட பருத்தி அழுக்காக தூசி சேர அதனாலேயே இன்னும் விலை குறையும். இதுக்கும் மேலே விதைப்பு, களை எடுப்பு, பூச்சி மருந்து, பருத்தி எடுப்பு, பருத்தி மார் பிடுங்குதல் என எல்லாவற்றிற்கும் விவசாயி கடன் வாங்கித் தான் விவசாயம் செய்கிறான். இந்த கடன்களுக்கு வட்டியும், வட்டி போடும் குட்டியும் வேறு வளரும். இப்படி இருக்கும் எப்படி விவசாயி லாபம் பார்ப்பதாம்?

இது மாதிரி தொல்லைகளை நீக்கத் தான் அரசு நியாய விலைக் கொள்முதல் மையங்கள் என தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்குத் தொடங்கியது. ஆனால் நடப்பது என்ன? திரும்ப முதலாளிகள் அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அட்டூழியம் செய்வது இன்னும் நடக்கிறது.

//இதை எல்லாம் வெளியில் இருந்து உணரமுடியாது. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி வெங்காயம் வியாபாரம் செய்து வருமான வரி கட்டுங்கள்.மழை காலங்களில் வெங்காயம் வாங்க நாங்கள் வருகிறோம்.//

வெங்காயம்ன்னு இல்லை. என்ன பயிர் செய்தாலும் நியாய விலையில் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

நான் இலவச மின்சாரம் சரியா தவறா என்று நான் வாதிக்கவே இல்லை. ஆனால் இப்படி விவசாயிகள் பற்றி எக்குத் தப்பாய் பேசுவது தான் எனக்கு வயித்தெரிச்சலாக உள்ளது.

Wednesday, October 29, 2008

தங்கமணி காரணமா?

Here is one more explanation of the crisis.,

For those of you who have difficulty understanding the current world financial crisis and how it evolved, the following should help... Once upon a time in a village in India, a man announced to the villagers that he would buy monkeys for $10.

The villagers seeing there were many monkeys around, went out to the forest and started catching them. The man bought thousands at $10, but, as the supply started to diminish, the villagers stopped their efforts. The man further announced that he would now buy at $20. This renewed the efforts of the villagers and they started catching monkeys again.Soon the supply diminished even further and people started going back to their farms. The offer rate increased to $25 and the supply of monkeys became so little that it was an effort to even see a monkey, let alone catch it! The man now announced that he would buy monkeys at $50! However, since he had to go to the city on some business, his assistant would now act as buyer, on his behalf.In the absence of the man, the assistant told the villagers: 'Look at all these monkeys in the big cage that the man has collected.

I will sell them to you at $35 and when he returns from the city, you can sell them back to him for $50.' The villagers squeezed together their savings and bought all the monkeys.Then they never saw the man or his assistant again, only monkeys everywhere!Welcome to XXLL STREET.

Tuesday, October 28, 2008

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா?

தமிழ்நாடு அரசு கடந்த சில வருடங்கலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து வருகிறது, இலவச மின்சாரத்தை பற்றி நடுத்தர வர்க்க நகர்புறம் சார்ந்த மக்களிடம் கேட்டால் எங்களின் வரிப்பணத்தை வாங்கி பணக்கார விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தவறு என்பர், ஏழை விவசாயக் கூலியிடம் கேட்டாலும் அரசாங்கம் எங்களுக்கு என்ன செய்தது ஆனால் பம்பு செட் வைத்திருக்கும் முதலாளிகளுக்குதான் சலுகையெல்லாம் என்பர்.

பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோரும் இலவசமாக மின்சாரம் வழங்கினால் மின்சாரத்துறை முன்னேறாது,நாடும் முன்னேறாது என்கின்றனர்.

இதே மின்சாரத்தை ஒரு தொழில் முனைவோருக்கு பாதி மானிய விலையில் தந்தால், இது ஏன் என்று கேட்டால் அவர்கள் வேலை வாய்ப்பு உருவாக்குகிறார்கள் அதனால்தான்.(அப்படி நிஜமாவே மானிய மின்சாரம் உண்டா என தெரியவில்லை)

மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், இங்கே பெரும்பான்மை வருடங்களுக்கு கம்பெனிகளுக்கு வரி கிடையாது, காரணம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள், அவர்களின் வருமான வரி அரசுக்கு கிடைக்கிறது, வேலை இல்லாத்திண்டாட்டம் குறைகிறது.

மேலே அரசு சொல்லும் காரணம் நியாயமானதே. இதே நியாயம் விவசாயிக்கு இலவச மின்சாரம் கொடுப்பதிலும் இருப்பதை அரசும் சரி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும் அறிவு ஜீவிகளும் எதிர்ப்பார்கள்.

ஏன் ஒரு நடுத்தர விவசாயிக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்தால் குறைந்த பட்சம் வருடம் 200 பேருக்காவது வேலை வாய்ப்பு கொடுக்கிறான் அது வேலை இல்லையா?.இல்லை விவசாயம் ஒரு தொழிலே இல்லையா ?

சிறப்பு பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதும் இலவச மின்சாரத்தை எதிர்ப்பதுவும் எனக்கு ஒன்றாகவே படுகிறது.ஒன்றை ஆதரித்து மற்றொண்டை எதிர்ப்பதும் ஒருவிதத்தில் சுயநலமே.

மேலை நாடுகள் 90 சதவீதம் மானியம் கொடுத்துமே விவாசாயத்தை காப்பாற்ற முடியாத நிலை உள்ள போது இலவச மின்சாரம் ஒன்றும் பெரிய தவறல்ல என்றே தோன்றுகிறது.

இலவச மின்சாரம் கொடுத்து ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வேண்டுமென்றே மின் தடை ஏற்படுத்திவிடுவார்கள். 24 மணி நேரமும் மின்சாரம் கொடுத்து அதை மானிய விலையில் கொடுத்தால் அனைத்து விவசாயியும் பணம் கட்டுவதோடு கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்துவார்கள்.

எதுவுமே இலவசம் தவறுதான், 24 மணி நேரமும் மின்சாரம் கண்டிப்பாக கொடுத்தால் இலவச மின்சாரம் தேவைபடாது என்றே எனக்கு தோன்றுகிறது.

இல்லாத மின்சாரத்தை இலவசமாக கொடுத்தாலும், காசுக்கு கொடுத்தாலும் கூட்டி கழிச்சி பாத்தா கணக்கு சரியாதான் வரும்.

கோவி.கண்ணன் பயோடேட்டா

பெயர் : கோவி.கண்ணன்

வயது : பதிவெழுத வயது ஏது

பொறுப்பு : மேலாளர் காலம் வலைப்பூ

வேலை : பதிவர்,உபதொழில் பயோடேட்டா எழுதுவது

நண்பர்கள் : ஜொசியக்காரர்கள்,செங்கன்னட குழு

எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.

பிடித்த வேலை : ஆத்திகம்,நாத்திகம் பற்றிய ஆராய்ச்சி.

பிடித்த பொருள் : காலத்திற்கேற்ப மாறும்

பிடித்த இடம் : சிங்கப்பூர் மட்டுமல்ல

விரும்புவது : ஆன்மீகவாதிகள்

வெறுப்பது : ஆன்மீகவாதிகளின் கருத்தை

நம்புவது : தன் எழுத்தை

நம்பாதது : ஜொசியக்காரர்கள் சொல்வதை

ஒரே எரிச்சல் : இந்த பயோடேட்டா

ஒரே சந்தோசம் : எப்போதும் சூடான இடுகையில்

சமீபத்திய சாதனை : கன்னடர்களின் ஆதரவு.

நீண்ட கால சாதனை: ஆத்திகர்,நாத்திகர் அனைத்து தரப்பிலும் நண்பர்கள்

Monday, October 27, 2008

கண்டு கொண்ட திரட்டிக்கு நன்றி!

வருங்கால முதல்வர் கனவோட நாங்களும் எங்களுக்கு தெரிஞ்சதை எழுதறோம், பதியறோம். முந்தா நாள் வரைக்கும் சீண்டுவார் இல்ல. நாங்களும் முடிஞ்சவரைக்கும் எழுதிப் பாத்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை பாருங்க. இருந்தாலும் நாங்க அசருவமா? எழுதிகினே இருந்தோம். எழுதி வெப்போம், படிக்குறவங்க படிக்கட்டும்ங்றது எங்க நெனப்பு.

திடீல்னு பாருங்க.... ஒரு திரட்டி வந்துச்சு. நாங்க பதிஞ்சதுல, நெசமாவே நல்லா இருக்குற பதிவுகளுக்கு ஒரு தெரிவு, ஒரு ஊக்கம், நிறைய வாசகர்கள். நல்ல படைப்புகளை யாரு படைச்சாலும், அதுக்கு ஒரு ஊக்கம் தரணும், பாராட்ட வேணும் இல்லீங்ளா. அப்பத்தானே, எல்லாருக்கும் அது பிரயோசனம்!

அந்த வகையில திரட்டி tamilmanam, tamilish க்கு வருங்கால முதல்வர்கள் சார்பா
நன்றி! நன்றி!! நன்றி!!!

Saturday, October 25, 2008

கதை மணிரத்தினம் கதை

இது ஒரு மறு பதிவு

கதை மணிரத்தினம் கதை

கதை 1: முதலில் பிடிக்கவில்லை, பிறகு பிடிக்கிறது, துணைக்கு ஆபத்து காப்பாற்றுகிறார்.


திரைக்கதை 1 – நாயகி கட்டாயத்தின் பேரில் ஒருவனை மணக்கிறார். பழைய நினைவுகள் மனதில் இருப்பதால் கணவனோடு ஒட்டவில்லை, டெல்லி செல்கிறார், பின்னர் கணவனை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக லவ்வுகிறார்.இதனிடையே கணவனை குண்டர்கள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், டெல்லி பின்னனி , நேர்மை, குண்டர்கள், இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து மவுனராகம் ஆனது.


திரைக்கதை 2 – நாயகி கட்டாயத்தின் பேரில் அக்காவை பெண் பார்க்க வருபவரை மணந்து கொள்கிறார். நாயகிக்கு கணவனை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.கணவனோடு காஷ்மீர் செல்கிறார். உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். இதனிடையே கணவனை தீவிரவாதிகள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், காஷ்மீர் பின்னனி , தீவிரவாதம், தேசப்பற்று, ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து ரோஜா வானது.


திரைக்கதை 3 : இந்த படத்தையும் சற்றே மாற்றிய கதையின் மூலம் இந்த template ல் கொண்டு வரலாம். நாயகி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்,பின்னர் பிடிக்காமல் போகிறது, உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். அதற்குள் விபத்தில் சிக்குகிறார்.இங்கே ஒரு மாறுதலாக கணவன், மனைவியை காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு மாற்றம் குண்டர், தீவிரவாதிகளுக்கு பதிலாக குஷ்பு,அரவிந்தசாமி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை பின்னனி , மென்பொருள், மிடில் கிளாஸ், ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து அலைபாயுதே வானது.

கதை 2: ஒரு நல்ல மனசு கொண்ட தாதா, அவர் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் ஒரு அடியாள் நண்பர்.

திரைக்கதை 1 : ஒரு நல்ல மனசு உள்ள தாதா நாலு பேரு நல்லா இருக்க கடத்தல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு அடிதடி மூலம் பதில். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ஜனகராஜ் நிறைவேற்றுகிறார். இந்த தாதாவை கைது செய்ய அவரின் போலிஸ் ஆபிசர் மருமகன் நாசர் மெனக்கடுகிறார். தாதாவின் மகள் தந்தையை நினைத்து கவலைப்படுவார்.

இந்த கதை, கொஞ்சமா வசனம், பம்பாய் குடிசை வாழ்க்கை பின்னனி, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து நாயகன் ஆனது.

திரைக்கதை 2: ஒரு நல்ல மனசு உள்ள தாதா அவரின் அல்லக்கை ஒருவரையே கொண்ற ஒருவரை காப்பாற்ற, அவர் , தாதாவின் தளபதி ஆகிறார். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ரஜினி நிறைவேற்றுகிறார். தாதாவை கைது செய்ய அவரின் கலெக்டர் தம்பி அரவிந்தசாமி மெனக்கடுகிறார். தாதாவின் அம்மா மூத்த மகனை நினைத்து கவலைப்படுவார். கிளைக்கதையாக ஷோபனா, ரஜினி காதல்,ஷோபனா, அரவிந்தசாமி திருமணம் , ஷோபனா கணவன் தன் காதலால் காப்பாற்றப்படுவதை கதை 1 னோடு நீங்கள் ஒப்பிட்டால் அதற்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை வாழ்க்கை பின்னனி, இலவச இணைப்பாக மகாபாரத உணர்வு, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து தளபதி ஆனது.

காமெடி, டூயட்,இருட்டு,வெளிச்சம் எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள், பதிவில் எல்லாம் என்னால் அதை கொண்டு வர முடியாது.

இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் எப்படி தான் படம் எடுக்கிறது அப்படினு எல்லாம் எங்கிட்ட கேக்கக்கூடாது.

முடியாது,கமெண்ட் போட முடியாதுஅப்படியெல்லாம் சொல்லப்படாது
டிஸ்கி1 : முதல் இரண்டு திரைக்கதையும் நான் , ஜாம்பஜாரில் வாடை பிடித்துகொண்டிருந்தபோது கிடைத்த வாடை.

டிஸ்கி2 : 5 படங்களும் எனக்கு பிடித்து இருந்தது.

Thursday, October 23, 2008

வருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க

நவரச நாயகன் கார்த்திக்கை நான் தமிழகத்தின் வருங்கால முதல்வராக வழி மொழிகிறேன்.

அவருக்கு இருக்கும் தகுதிகள்.

1) வருசம் 16, கிழக்கு வாசல், நாடோடித் தென்றல், பொன்னுமணி மற்றும் பூவரசன் போன்ற படங்களில் கிராமிய வேடங்களில் நடித்தன் மூலம் அவருக்கு கிராமப்புற மக்களின் கஷ்ட நஷ்டங்கள், குறிப்பாக விவசாயிகள் படும் பாடு எல்லாம் தெரியும்.

1) நினைவெல்லாம் நித்யா, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் மாணவராக நடித்திருப்பதால் கல்வித்துறை அனுபவம்.

1) சின்ன ஜமீன் படத்தில் ஜமீனாக நடித்து அதனால் எப்படி நாட்டை ஆள முடியும் என்ற ஆளுமை அனுபவம்.


(விஜயகாந்துக்கும் மேற்கூறிய அனுபவங்கள் எல்லாமே இருந்தாலும் தலைவர் கார்த்திக் கீழ்கண்ட தனித் தகுதி பெற்றுள்ளார்.)


1) நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை எதிர்த்து நடித்ததன் மூலம் பெரிய எதிப்புகளை சமாளிக்கும் திறன்.

2) அகில இந்திய பார்வர்ட் பிளாக் என்னும் கட்சியை தலைமை தாங்கி நடத்திய (ஒழித்த) அனுபவம்.

3) தனக்கு முதல்வராகத் தகுதி இருந்தும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாதிருப்பதாக பணிவன்புடன் பேட்டி அளித்திருப்பது.

4) ஜாதி ஓட்டுக்கள் பிரிக்க வாய்ப்பு


ஆக ... வருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க.

துள்ளாதடா டேய்....

Wednesday, October 22, 2008

என்னது கவருமெண்டு பேங்குக்கு பணம் தருதா?

யாத்தே... கவருமெண்டே பேங்குக்கெல்லாம் பணம் தருதாமில்ல தெரியுமா?

என்னது கவருமெண்டு பேங்குக்கு பணம் தருதா?

ஆமா அப்பத்தா... வீட்டுக்கடனு வாங்கி கட்ட முடியலன்னா அதுக்கும் கவருமெண்டே பணம் தருதாம்.

அப்படி போடு. இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சா வீட்டு கடனுன்னு சொல்லி ரெண்டு லோன கீன போட்டு வச்சிருப்பனே. அப்ப நம்மூரு பாண்டியன் பேங்குக்கும் பணம் தருவாகளா?

அது எனக்கு தெரியலியேப்பு. வா நம்ம மேனேசரு மகராசன கேப்போம்.

-----

மவராசா... ஏதோ பேங்குக்கெல்லாம் பணம் தராகளாமுல்ல?

என்னது பேங்குக்கு பணம் தரறாங்களா?

என்ன சாரு.. இத்தினி வருசமா தாயி புள்ளய பழகறோம். என்கிட்டியே ஒண்ணுந் தெரியாத மாதிரி பேசுறீகளே?

நெசமா எனக்கு தெரியலீங்க.

ஆத்தி... பணம் வந்தா ஊருக்குள்ள கொஞ்சம் கொடுங்கப்பு. மாரியாத்தாக்கு பொங்க வச்சி வருசம் ரெண்டாச்சு சாமி. ஏதாச்சும் விவசாய கடன்னு சொல்லி எங்கள மாதிரி ஏழ பாழைகளுக்கு கடனா கொடுங்கப்பு. உங்க பேர சொல்லி கிடா வெட்டி பொங்க வச்சா அந்த மாரியாத்தா அருளுல உங்க குடும்பம் நல்லா இருக்கும்.

என்னங்க சொல்றீங்க யாரு பேங்குக்கு பணம் தரா?

அதாம் கவருமெண்டே எல்லா பேங்குக்கும் பணம் தருதாமுல்ல? வீட்டுக் கடன் வாங்குனவகளுக்கெல்லாம் தள்ளுபடியாம்ல?

ஐயோ அது அமெரிக்காவிலயும் ஐரோப்பாவிலயும் தான். நம்மூருல இல்ல.

அட அப்படியா? நம்மூரு விவசாயக்கடன தள்ளுபடி செஞ்ச மாதிரி அங்கன வீட்டுக் கடன் தள்ளு படி தாராகளா?

அது கடன் தள்ளுபடி எல்லாம் இல்ல. பேங்கு திவாலாகாம இருக்க பேங்குக்கு தான் பணம் தாராக.

பேங்கெல்லாம் அந்த ஊருகள்ள அப்ப வீடு வாங்கி இருக்காப்பு?

இல்ல. பேங்கு வீடு வாங்கல. பேங்குல வீடு வாங்க நம்மள மாதிரி ஆளுக கடன் தான் வாங்கி இருக்காங்க.

அப்ப கடன் வாங்கினவங்களுக்கு தானே தள்ளுபடி தரணும்? பணம் நெறய வச்சிகிட்டு வட்டிக்கு கடன் கொடுத்தவுகளுக்கு எதுக்கு இன்னும் பணம் தரணும்?

இதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது என தெரியாமல் மேனேசர் தலை சுற்றி மயங்கி விழுகிறார்.

Tuesday, October 21, 2008

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில்...

தமிழ் கூறும் நல்லுலகத்தில், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பொதுவாக மண்ணின் மைந்தர்களை விட அன்னிய மக்களுக்கு ஆதரவு அதிகம் இருக்கும் ஒரே அடிப்படையில் நான் தான் வருங்கால முதல்வர்.

தெலுங்கு பேசும் குடும்பத்தில் இருந்து வந்தவனாகையால் (அதாங்க கொல்ட்டி) எனக்கு முதலுரிமை உள்ளது. நாயுடு, நாயக்கர், ரெட்டி, ரெட்டியார், தெலுங்கு செட்டியார்னு கொஞ்சம் ஜாதீய வோட்டுக்களையும், மொழி உணர்வு ஓட்டுக்களையும் பிரிக்க முடியும்.

ஆனா என் தகுதி சரி வருமான்னு தான் தெரியல. இந்தியால இன்சினியர் படிப்பு அப்பறமா அக்கரச் சீமை அமெரிக்கால (மணவாடு பூமி) வியாபார மேலாண்மை படித்திருப்பதாலேயே நான் தகுதி இழக்க வாய்ப்புள்ளது.

அடுத்து என் மேல கொலை கேஸ், கஞ்சா கேஸ், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மாதிரி எல்லாம் ஏதும் கேஸ் இல்லை. அப்படி பார்த்தா நம்ம விசய காந்துக்கும் இந்த குவாலிபிகேசன் ஏதும் இல்லை தான். வருங்கால அரசியல் வாழ்க்கை பிரகாசமா தெரிஞ்சா இது மாதிரி ஏதாவது ரெண்டு மூணு கேஸ்ல பேரு வர்ற மாதிரி ஏதாச்சும் பண்ணிக்கலாம்.

அடுத்து பணம் இல்லை. இருக்கிற பணமெல்லாம் அமெரிக்கால வீடு வாங்கியே வீணா போச்சு. அதனால ஆரம்பமே உண்டியல் குலுக்கித் தான் ஆரம்பிக்கணும். சூட்கேஸ் வந்தாலும் பரவாயில்லை.

எது எப்படியோ என் பேரையும் நாமினேசன்ல போட்டு வைக்கிறேன். மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள். உங்கள் ஓட்டு நாநாவுக்கே.

வலைப்பதிவாளார் உலகத்தில் தான் சீனியர் என்பதால் மட்டுமே தனக்கு வருங்கால முதல்வராக தகுதி உள்ளதாய் நினைக்கும் குள்ள நரி குடுகுடுப்பையின் வாக்குச் சாதுர்யத்தில் ஏமாறாதீர்கள். நாமினேசன் செய்யும் போதே தன் குடும்பத்தை முன்னிறுத்தும் இவர் இப்போதே வாரிசு அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அடி கோலுகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதல்வராகும் ஆசையில் கொக்கரிக்கும் குடுகுடுப்பையே நீ கடந்து வந்த பாதையை எண்ணிப் பார். உனது கடந்த கால வாழ்வினை பற்றி ஆராய உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, October 20, 2008

வருங்கால முதல்வர்கள்-அறிமுகம்

வருங்கால முதல்வர்கள் ஒரு குழுவாக நிறைய வாக்குறுதிகளை அள்ளித்தள்ள இருக்கிறோம். இந்த குழுமத்தில் முடிந்த அளவு நகைச்சுவை பதிவுகளை எழுதலாம் என்ற எண்ணம். இந்த முயற்சி எப்படி வெற்றி பெறுகிறது என்று பார்ப்போம்.

இப்போ வருங்கால முதல்வர்களிம் அறிமுகப் படலம்.

வருங்கால முதல்வர் உருப்புடாதது அணிமா பத்தி தமிழ்மணம் படிக்கிற எல்லாருக்குமே தெரியும். இவரோட கொள்கையே மேடு,பள்ளம் இல்லாத சமுதாயம் காண்பதுதான். இவரோட வள்ளல் தன்மை இவர் இடும் பின்னூட்டங்களிலேயே தெரியும். இவரின பின்னூட்டங்களில் உள்ள நகைச்சுவை தமிழ்மணம் அறிந்ததே.

வருங்கால முதல்வர் பழமை பேசி இவரு அவரோட வலைப்பூல நல்ல பல பழந்தமிழ் செய்திகள் /அறிவை எழுதுகிறார். பெண்கள் என்றால் இவருக்கு கொஞ்சம் பாசம்.இவர் ஒரு நவீன காளமேகம் ,இவருக்கு தோன்றும் மொக்கைகளை வருங்கால முதல்வரில் தொடர்வார்.

வருங்கால முதல்வர் துக்ளக் மகேசு பல நல்ல புத்தகங்கள், நிகழ்காலச்செய்தி அலசல் போன்றவற்றை துக்ளக் வலைப்பூவில் தருகிறார். இவருக்கு தோன்றும் மொக்கை எண்ணங்கள் வாக்குறுதிகளை வருங்கால முதல்வரில் தொடர்வார்.

வருங்கால முதல்வர் நாநா என்னுடைய கல்லூரி நண்பர், நல்ல தமிழ் பற்றாளர், கவிஞர் இன்னும் பல வெளியில் சொல்ல முடியாத திறமைகளை உள்ளடக்கியவர் இவரும் வருங்கால முதல்வரில் பகுதி நேர மொக்கையாற்றுவார்.

வருங்கால முதல்வர் அது சரி இந்தக்குழுவில் சேருகிறேன்னு வாக்குறுதி கொடுத்தார் ஆனா இன்னும் மின்னஞ்சல் அனுப்பவே இல்லை. இதிலேர்ந்து தெரியுது இவருதான் வருங்கால முதல்வர் நம்பர் 1. இவரின் நவீன விக்கிரமாதித்தன் கதைகள் உலக பிரசித்தம், நேரம் கிடைக்கும்போது இவரும் வருங்கால முதல்வராக மொக்கை போடுவார்.

வருங்கால முதல்வர் குடுகுடுப்பைக்கு தெரிஞ்சது மொக்கை போடமட்டும்தான் இவரும் பகுதி நேர வருங்கால முதல்வராக மொக்கை போடுவார்.

வருங்கால முதல்வரின் எண்ணிக்கை மேலும் கூடும் என்ற நம்பிக்கையில்

வருங்கால முதல்வர்கள்.

Wednesday, October 15, 2008

வருங்கால‌ முதல்வராகத் தேவை இது!

வருங்கால முதல்வர்களே,

தாங்கள் முதல்வர் ஆக வேண்டும் என்றால், ஒன்று வசனம் எழுத வேண்டும். அல்லது நடிப்புத் திறமை இருக்க வேண்டும் என்பது உமக்குத் தெரியும். இல்லாவிடில், இவை பற்றித் தெரிந்து கொண்டு, பின் உங்கள் முயற்ச்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்! இதோ சில பயனூட்டுத் தகவல்கள், உங்கள் வசதிக்காக!!

வசனம்

"புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர்நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அறநெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால் தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால் ஓடிவிடு. புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்.. ஓடும்.. ஓலமிட்டு ஓடும்.. ஓலமிட்டு ஓடும்.. ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும். ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷ’த்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜவிக்ரமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில். அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்."


Thursday, October 2, 2008

வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர்
வருங்கால முதல்வர்
வருங்கால முதல்வர்
வருங்கால முதல்வர்
வருங்கால முதல்வர்
வருங்கால முதல்வர்