Wednesday, December 31, 2008

காங்கிரஸ் காரரை காதலிக்கும் யாழ்பாணத்து தமிழ்ப்பெண்

தமிழகத்தில் அகதியாக வந்துள்ள ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பெண்,தமிழகத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரரை தீவிரமாக காதலிக்கிறார்.அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்.


யாழ் பெண் : நீங்கள் ரொம்ப அமைதியானவராய் இருக்கிறீர்கள், உங்கள் வடிவுடைய முகத்தில் உள்ள அமைதிதான் உங்கள் மேல் என்னை காதல் கொள்ள வைத்தது, நீங்கள் எப்படி என் மேல் காதல் கொண்டீர்கள்

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : ஏன் பயப்படுகிறீர்கள், நான் அங்கட கருவாகி இங்கட எங்கம்மா ஷெல்லடிக்கு பயந்து அகதியா வந்து உங்கள் மண்ணில் பிறந்தவள்,என்னை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்.?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : எனக்கும் புலிக்கும் எந்த தொடர்பும் இல்லை,நான் இப்போது சமையலில் கூட புளி சேர்ப்பதில்லை, சாம்பார் கூட வட நாட்டுக்காரர்களுக்கு பிடித்த மாதிரி புளி போடாமல் வெக்கிறேன், நீங்கள் என்ன நம்பலாம், நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைத்துப்பார்க்க முடியவில்லை.பதில் சொல்லுங்கள்?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : இங்கட தமிழ்நாட்டில் அகதியா பொறந்து,வெட்டவெளியில் எங்கட வாழ்க்கையை கழிச்சு,எப்படியோ அடிச்சு பிடிச்சி நல்ல கல்வியும் கற்றேன், உங்களுக்கு கற்றவர்களை மிகவும் பிடிக்கும்தானே, உங்களுக்கு ஏத்த மாதிரி என்ன மாத்திக்கறேன்,என்ன ஏற்றுக்கொள்வீர்களா?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : உங்களுக்கு என் மேல் அன்பு உண்டு எதுவோ உங்களை தடுக்கிறது, உங்களின் மனது மாறி நீங்களும் என்றாவது மேலிடத்தில் பேசி என்னை ஏற்றுக்கொள்வீர்கள் எண்டு நம்புகிறேன்.அந்த கதிர்காமம் முருகன் நம்மட காதலை சேத்துவைப்பான்.

மேலிடம்: யப்பா யாரோ ஒரு யாழ் பொண்ணு உன்ன காதலிக்குதாமே அத கல்யாணம் பண்ணிக்கோ.ஆனா அந்த பொண்ணும் காங்கிரஸ்ல சேர சொல்லுப்பா சரியா.

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன். மன்னிக்கவும் மேலிடம் சொல்லுக்கு கட்டுப்படறேன்

ஒரு வழியா திருமணம் முடிந்தது.

காங்கிரஸ் பெண் :மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

17 comments:

பழமைபேசி said...

மேலிடத்தில கேட்டு சொல்றேன்!

நசரேயன் said...

உண்மையை தானே சொல்லுறீங்க

சி தயாளன் said...

மேலிடத்தில் போட்டுக் கொடுக்கிறன்..

Mahesh said...

மேலிடத்துல கேட்டுட்டு பின்னூட்டம் போடறேன்...

Anonymous said...

எல்லார் மாதிரி நானும் மேலிடத்தில கேட்டு/போட்டு குடுக்கறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அதிருது பாஸ்

அத்திரி said...

ஹைய்யோஹைய்யோஹைய்யோஹைய்யோ...............

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

sathiri said...

திருமணம் முடிந்ததன் பின்னரும் மேலிடத்திலை கேட்டுத்தான் செய்வாங்களா? கிகிகி

அது சரி(18185106603874041862) said...

அது மேலிடமா இல்ல மேடமா??

அதெல்லாம் சரி, நீங்க மேலிடத்து அனுமதி வாங்கினீங்களா? :))

ரவி said...

என்னாது இது ? சட்டுப்புட்டுன்னு ஒரு அரசியல் பதிவு...

:)))))))))))

நறுக் சுருக் சூப்பர் மேலிட பதிவு

http://urupudaathathu.blogspot.com/ said...

நானும் மற்றவர்கள் மாதிரியே







மேலிடத்தில கேட்டு சொல்றேன்!

http://urupudaathathu.blogspot.com/ said...

மேலிடத்தில் கேட்டு பின்னூட்டம் இடுவேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

நெத்தி அடி...
நச்சென்று ஒரு பதிவு

S.R.Rajasekaran said...

நல்ல வேளை A.D.M.K காரரை காதலிக்கவில்லை

குடுகுடுப்பை said...

வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி.

புல்லட் said...

எனக்கு இந்திய அரசியல் பெரிசா தெரியாது. ஆனா வேட்டி சட்டை விழுந்து கும்பிடல் எண்டு கன ஜோரா ஏதோ நடக்குதெண்டு மட்டும் தெரியும். உதை வாசிக்க செம காமேடியா இருக்கு. ஏன்தான் அரசியலில மேலிடத்தக்கு இப்பிடி பயப்புடுறாங்களோ எனக்குப்புரியலை.