Monday, November 10, 2008

வருங்கால முதல்வர் நடிகை நமீதாவுடன் பேட்டி

வருங்கால முதல்வர் நடிகை நமீதாவுடன் பேட்டி

ரசிகப்பெருமக்களே சும்மா நகைச்சுவைக்காக எடுத்த ஒரு கற்பனை பேட்டி, அப்படியே சிரிச்சிட்டு விட்டுருங்க. ஆட்டோவெல்லாம் அனுப்பிச்சிராதீங்க கைப்புள்ள பாணில சொன்னா அந்த அளவுக்கு நான் வொர்த் இல்ல.

வருங்கால முதல்வர் : வணக்கம் நடிகை நமீதா அவர்களே, வருங்கால முதல்வர் வலைத்தளத்திற்கு நேரம் ஒதுக்கி பேட்டி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.

நமீதா: பொதுவா நான் காசு வாங்காம எந்த காரியமும் செய்யரதில்லை, உங்ககிட்ட ஒன்னும் பேராதுனு என்கு தெர்யும்.ஆனாலும் மக்களுக்கு செய்தி என்னோட சேதி போய் சேர்ரதில என்க்கி சந்தோசம்.

வருங்கால முதல்வர் : முதல்ல சினிமா சம்பந்தபட்ட ஒரு கேள்வி, நடிகையின் தொப்புள்ள பம்பரம் விடுறத நீங்க ஆதரிக்கறீங்களா?

நமீதா: நடிகை தொப்புள்ள பம்பரம் விட்டாதான் மக்கள் ரசிக்கிரான், நான் விஜயகாந்த் தொப்புள்ள பம்பரம் விட்டா நீங்க பாப்பீங்களா? இல்ல பம்பரந்தான் சுத்துமா?

வருங்கால முதல்வர் : சரிங்க பம்பரம் விட முடியாது இந்த ஆம்லெட், கோலி குண்டு இதெல்லாம் விஜயகாந்த் தொப்பிள்ள விடலாம்ல?

நமீதா: அந்த ஆம்லெட்ட எடுக்க முடியாது காரணம் உங்களுக்கே தெரியும், ரசிக்கனும் விரும்பமாட்டான். ஆனா கோலி குண்டு விடலாம் அப்போ விஜயகாந்த் சார் ரொம்ப வெட்கப்படுவார் அத தாங்கிங்க மக்கள் தயாரா?

வருங்கால முதல்வர் : சரி இப்போ அரசியல் சம்பந்தமான கேள்வி ரஜினிகாந்த், விஜயகாந்த்,கார்த்திக்,சரத்குமார் போன்ற நடிகர்களின் அரசியல் பிரவேசம் பத்தி என்ன நினைக்கறீங்க?

நமீதா : இந்த கேள்விக்கு நான் கடிசியா பதில் சொல்ரேன்.

வருங்கால முதல்வர் : சரி நீங்கள் குஜராத்தியா? குஜராத்தி மொழி படங்களில் நடித்திருக்கிறீர்களா?

நமீதா : இல்லங்க அங்கெல்லாம் ஹிந்திப்படம் தான் இருக்கே அதுனால குஜராத்தி படமெல்லாம் அவ்லோ கெடயாது.தாண்டியா ஆட்டமெல்லாம் ஆடி ஹிந்தி படத்தில எங்க கலாச்சாரத்த தான் சொல்ராங்க. என்க்கு தமில் கலாச்சார குத்தாட்டம் நல்ல வரும்னு தான் என்ன இங்க அதிகமா விருப்புராங்க.

வருங்கால முதல்வர் : உங்கள விரும்புறதுக்கு வேற காரணமும் இருக்குங்க.

நமீதா: என்ன அது?

வருங்கால முதல்வர் : உங்க நடிப்புதாங்க அது. சரி நீங்கள் நல்லா தமிழ் பேசுகிறீர்களே எப்படி?

நமீதா: தமிழ் திரைப்படத்தில வாய்ப்பு கெடச்சது, கதை புரிஞ்சுக் நான் தமிழ் கத்துக்கிட்டேன், உங்க நடிகை சிரிதேவி ஹிந்தி கத்துக்க்கிட்டாங்கள்ள அது மாதிரி.

வருங்கால முதல்வர் : நீங்க ஏன் தமிழ் திரைப்படத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?

நமீதா: ஹிந்தில என்னோட திறமைய யாரும் கண்டுக்கல, அதான், மொத்த்தில நான் அந்தக்கால திராவிட கட்சியின் ஹிந்தி திணிப்பு எதிர்பிற்கு கடன்பட்டிருக்கேன், இல்லாட்டி தமிழ் சினிமான்னு ஒன்னி இருந்திருக்காது எனக்கும் நடிகையாகும் வாய்ப்பு கம்மிதான்.

வருங்கால முதல்வர் : ரொம்ப நேர்மையா பேசறீங்க , உங்களோட வருங்கால திட்டம் என்ன?

நமீதா: இப்போ சொல்றேன், ரஜினிகாந்த அவரோட அரசியல் பத்தி தெளிவா சொல்லிட்டாரு அதனால நான் ஒன்னும் சொல்ல விரும்பல், மத்தவங்கள பத்தியும் கருத்து சொல்ல விரும்பல, ஏன்னா நானும் வருங்கால முதல்வர் ஆகலாமேன்னு ஒரு எண்ணம் இருக்கு.

வருங்கால முதல்வர் : மன்னிக்கனும் நமீதா, நீங்க நல்லா தமிழ் பேசறீங்க, வருங்கால முதல்வர் ஆகனும்னா அதுக்கு நாங்க தமிழ் எழுதத்தெரியனும் ஒரே ஒரு தகுதி வெச்சுருக்கோம், அதுனால இப்ப உங்கள நாங்க சேத்துக்க முடியாது.

21 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

நமிதாவின் தமிழ் என்னை விட ரெம்ப அருமையா நல்ல இருக்கு, இருந்தாலும்
நமிதாவை கழக உறுப்பினர்களுக்கு தெரியாமல் பெட்டி கண்ட வருங்கால முதல்வருக்கு எனது கடும் கண்டனம்

ஜீவன் said...

பேட்டி எனக்கு திருப்தியா இல்ல
நமீதாகிட்ட கேக்கவேண்டிய
கேள்வியெல்லாம் விட்டுபுட்டு ,
என்னனென்னமோ கேட்டு
டென்சன் பண்ணிட்டிங்க
போங்கண்ணே.....

ஜீவன் said...

பிரம்மாண்டம் அப்படின்னா என்ன?
அப்படின்னு ஒரு கேள்வி கேட்டு
இருக்கலாம் ,,,

A Blog for Short Films said...

http://sfintamil.blogspot.com/2008/11/hi-namitha-interview.html

ஹாய்!.. நமீதா...... நம்ம்ம்மீமீமீ தாதாதா.. பேட்டி

முரளிகண்ணன் said...

:-))))))))))

T.V.Radhakrishnan said...

//ஜீவன் said...
பிரம்மாண்டம் அப்படின்னா என்ன?
அப்படின்னு ஒரு கேள்வி கேட்டு
இருக்கலாம் ,,,//

send this to baarathiraajaa...he will give the answer

Raghavan, Nigeria said...

நடிகை நமீதாவுடன், வருங்கால முதல்வர் பேட்டி அப்படின்னு போடக்கூடாதா...( நான் வேற ஏடாகூடமா வ.மு.ந.ந. சேர்த்து படிச்சுப்புட்டேன்) ரெண்டு நிமிஷத்திலே பயப்பட வைச்சுட்டங்களே.. இனிமே இது மாதிரி எல்லாம் பதற அடிக்கதாதீங்கப்பா. இராகவன், நைஜிரியா

அது சரி said...

//
வருங்கால முதல்வர் : சரிங்க பம்பரம் விட முடியாது இந்த ஆம்லெட், கோலி குண்டு இதெல்லாம் விஜயகாந்த் தொப்பிள்ள விடலாம்ல?
//

என்ன கொடுமை குடுகுடுப்பை இது? அந்த ஆம்லெட்டு, ஆஃப்பாயில் எல்லாம் நீங்களே வச்சிக்கங்க...

//
வருங்கால முதல்வர் ஆகனும்னா அதுக்கு நாங்க தமிழ் எழுதத்தெரியனும் ஒரே ஒரு தகுதி வெச்சுருக்கோம்
//

என்னது..தமிழ் எழுத தெரியணுமா? ஜனநாயக விரோதி குடுகுடுப்பை..ஒழிக.

இப்ப‌டிக்கு,
ம‌க்க‌ள் தொண்ட‌ன் அது ச‌ரி,
உத‌வி துணை பொதுச் செயலாளர் (பொறுப்பு)
பொர்ச்சி பேரழகி நமீதா முன்னேற்ற கழகம்,
ட‌மிள் நாட்

குடுகுடுப்பை said...

நசரேயன்
/நமிதாவின் தமிழ் என்னை விட ரெம்ப அருமையா நல்ல இருக்கு, இருந்தாலும்
நமிதாவை கழக உறுப்பினர்களுக்கு தெரியாமல் பெட்டி கண்ட வருங்கால முதல்வருக்கு எனது கடும் கண்டனம்//

தெரிஞ்சே செஞ்சா அப்புறம் என்ன வ.மு

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

// பேட்டி எனக்கு திருப்தியா இல்ல
நமீதாகிட்ட கேக்கவேண்டிய
கேள்வியெல்லாம் விட்டுபுட்டு ,
என்னனென்னமோ கேட்டு
டென்சன் பண்ணிட்டிங்க
போங்கண்ணே...../

அவசரமா எடுத்த பேட்டி அதுனால அப்படி இருக்கும்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி

A Blog for Short Films
முரளிகண்ணன்
T.V.Radhakrishnan

உருப்புடாதது_அணிமா said...

என்னது நமீதா முதல்வர் ஆக முடியாதா??

( ஆனா எனக்கு அந்தரங்க உதவியாளராக ஆகலாமுல்ல??? - வருங்கால முதல்வர் அணிமா )

குடுகுடுப்பை said...

வாங்க Raghavan, Nigeria

//நடிகை நமீதாவுடன், வருங்கால முதல்வர் பேட்டி அப்படின்னு போடக்கூடாதா...( நான் வேற ஏடாகூடமா வ.மு.ந.ந. சேர்த்து படிச்சுப்புட்டேன்) ரெண்டு நிமிஷத்திலே பயப்பட வைச்சுட்டங்களே.. இனிமே இது மாதிரி எல்லாம் பதற அடிக்கதாதீங்கப்பா. இராகவன், நைஜிரியா//

வருங்கால முதல்வர் : நடிகை நமீதா பேட்டின்னு இருக்கனும், தெரிஞ்சே : போடாம விட்டுட்டேன்.

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

//
இப்ப‌டிக்கு,
ம‌க்க‌ள் தொண்ட‌ன் அது ச‌ரி,
உத‌வி துணை பொதுச் செயலாளர் (பொறுப்பு)
பொர்ச்சி பேரழகி நமீதா முன்னேற்ற கழகம்,
ட‌மிள் நாட்//

முதல்ல வ.மு சேந்து எதுனா எழுதுங்க

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது_அணிமா

//என்னது நமீதா முதல்வர் ஆக முடியாதா??//

( ஆனா எனக்கு அந்தரங்க உதவியாளராக ஆகலாமுல்ல??? - வருங்கால முதல்வர் அணிமா )

நீங்களுன் உங்க அந்தரங்க உதவியாளர் கிட்ட எதயாச்சும் எழுதுங்க சாமி

விலெகா said...

:-))))))))))))

விலெகா said...

குடுகுடுப்பையின் குரும்பை த‌ங்க‌முடிய‌லப்பு:-))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி விலேகா

S.R.ராஜசேகரன் said...

திறமை உள்ளவங்களுக்கு பிரதமர் வாய்ப்பு இல்ல இல்ல முதல்வர் வாய்ப்பு இல்ல இல்ல அமைசர் வாய்ப்பு இல்ல இல்ல -அட எதாவது ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா
(நான் சொன்னது நடிப்பு திறமை )

Suresh said...

அருமை :-0 மச்சான்
வோட்டும் போட்டாச்சு நம்ம கடை பக்கம் வந்து படித்து போடுங்க வோட்ட