Tuesday, December 23, 2008

வணக்கமுங்க

இங்க கூட வேலை செய்யறவங்க நீங்க எந்த ஊர்ல இருந்து வந்தீங்கன்னு கேட்டா

பக்கத்துல தான் போர்ட் வொர்த், அப்படின்னு தான் சொல்லுவேன்.

கேட்டவன் டேய் உன்னை பார்த்தா கொஞ்சம் கருப்பனாட்டமும் தெரியற, கொஞ்சம் கீழ் நாட்டு சாயலும் (மெக்ஸ்சிகான்) தெரியுது
நீ எந்த நாட்டுல இருந்து வந்தைனு தாண்ட கேட்டேன்..
நமக்கு இந்தியா தான் சொந்த ஊரு,

இந்தியாவுல எங்க?
தெனிந்தியா, தமிழ்நாடு மாநிலம். சென்னை இல்லேன்னா மெட்ராஸ் கேள்வி பட்டு இருக்கீங்களா.. அங்க இருந்து தான் வரேன்

இப்போ கூட அங்க தீவிரவாதிங்க எதோ சாப்பட்டு கடையில தின்ன சோத்துக்கு காசு கேட்டதுக்கு சுட்டு புட்டானுகளே அந்த ஊரா?
ஆமாம், அந்த ஊருக்கு கொஞ்சம் பக்கம் தான் எங்க ஊரும்

அப்படின்னு கொஞ்சம் கதைய கட்டிட்டு விட்டா சாமின்னு எடத்த காலி பண்ணிட்டு வந்துடுவேன்..

இங்க எல்லாம் நம்ம ஆளுங்க இருக்கிறதால உண்மைய சொல்றேன்..

நமக்கு கோயமுத்தூரு பக்கமுங்க,
அங்க பக்கத்துல இருக்கிற ஈரோடு, அதுக்கு பக்கத்துல இருக்கிற கோபி, அதாங்க காசில்லாத சினிமாகாரங்க, கிராமத்து படம் புடிக்க வர்ற ஊருங்க நம்முளுது.
இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டா அதுக்கு பக்கத்துல இருக்கிற சொந்த ஊரு பேர சொல்லிடுவேன், அந்த ஊரை ரொம்ப பேருக்கு தெரியதுங்கரதால இதோட நிறுத்திக்கிறேன்.


நம்ம ஊரு கொஞ்சம் முன்னேறிய ஊருங்க..
இந்த குளோபல் வார்மிங், க்லீமிங் அப்படின்னு சொல்றத நாங்க முன்னமே தெரிஞ்சதால எங்க ஊருக்கு பஸ் எல்லாம் வேணாம், நீங்க ரொம்ப பிரியப்பட்டா காலைல பால் பீச்சரப்போ ஒன்னு, பொழுது சாஞ்சு சாணி அள்ளுனதுக்கு அப்புறம் ஒண்ணுனு வந்தா போதும்னு சொல்லிபுட்டோம்

இங்க இருந்து எப்படி நீ வருங்கால முதல்வர் ஆகா முடியும்னு கேக்கறவங்களுக்கு

முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊரு முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊருல இன்னும் திருட்டு கல்லு இறக்கிறாங்க முடியாதுன்னு நெனச்சுருந்தா டாஸ்மார்க் கடையில காச கொடுத்துட்டு ஊட்டுல சம்சாரங்கைல அடி வாங்கிட்டு தான் இருக்க முடியும் என்ன சொல்றீங்க .

முதல்வர் ஆகறதுன்னு அடுத்த பதிவுல சொல்ல்றேனுங்க.

தப்பா எதுனா சொல்லிருந்த மன்னிசுகிடுங்க, இப்போதைக்கு நான் உத்தரவு வாங்கிக்கிறேன் சாமி.

[எப்படியோ ஒரு மொக்க பதிவ போட்டு நானும் என்னோட கணக்க தொடங்கிட்டேன்]

24 comments:

நசரேயன் said...

நானும் கணக்கை தொடங்கிட்டேன்

குடுகுடுப்பை said...

வாங்க இனி பட்டைய கெளப்புங்க

ILA (a) இளா said...

// அங்க பக்கத்துல இருக்கிற ஈரோடு//
நம்மூர் பக்கம்னு சொல்லுங்க. எங்க ஊரு பவானி பக்கம்..

Anonymous said...

முதல்வர் ஆகறதுன்னு அடுத்த பதிவுல சொல்ல்றேனுங்க
தமிழ் நாட்டு சனங்க ரொம்ப பாவமுங்க

ஓட்டு பொறுக்கி said...

நன்றி நசரேயன் அண்ணே..

ILA "எங்க ஊரு பவானி பக்கம்.."
பவானிக்கு தெக்காலயா வடக்காலையா உங்க ஊரு?
நம்ம மாமன் கூட்டமெல்லாம் ஊராச்சி கோட்டைக்கு கிழக்கால இருகாங்க..

கவின், "தமிழ் நாட்டு சனங்க ரொம்ப பாவமுங்க"
தினமும் தாஸ்மார்க்ல இரண்டு ரவுண்டு போடறவன் எல்லாம் முதல்வர்னு சொல்லும் போது நான் வந்தான் தான் பாவம்னு சொல்றீங்களே

கபீஷ் said...

நீங்க நல்லா எழுதறீங்க! பேரு தான் ஒரு மாதிரியா இருக்கு!!!:-)
( சுருக்கி கூப்பிட்டா) ஓட்டுன்னும் கூப்பிட முடியாது. நீங்க உ-அ மாதிரி ஒரு அழகான பேரு வச்சிருக்கலாம்

கபீஷ் said...

நீங்க நல்லா எழுதறீங்க! பேரு தான் ஒரு மாதிரியா இருக்கு!!!:-)
( சுருக்கி கூப்பிட்டா) ஓட்டுன்னும் கூப்பிட முடியாது. நீங்க உ-அ மாதிரி ஒரு அழகான பேரு வச்சிருக்கலாம்

அது சரி(18185106603874041862) said...

கொங்கு மண்டலத்திலிருந்து இன்னொரு முதல்வரா? அப்ப அங்க போட்டி பலமாருக்கும் போலருக்கே....பேசாம தொகுதி மாறிடுங்க :))

கோபின்னா...அங்க எந்த எடம்? அங்க பஸ் ஸ்டாண்டு பக்கத்தில ஒரு சைவ ஹோட்டல் இருக்கு....காலைல பொங்கல் நல்லாருக்கும்....அப்புறம் பேரு ஞாபகம் இல்ல..வள்ளி ஒயின்ஸ்னு நினைக்கிறேன்...அது பக்கத்துல பீஃப் ஃபிரை நல்லாருக்கும்...:0))

ஓட்டு பொறுக்கி said...

கபீஷ் அண்ணே நீங்க என்னை பொறுக்கி வேணாலும் கூப்பிடலாம், ஆனா உ-அ ஒரு டீ வாங்கி கொடுத்ததுக்கு அந்த பேரு அழகா இருக்குன்னு எல்லாம் சொல்லாதீங்க

ஓட்டு பொறுக்கி said...

அது சரி, கோபினா.. அதுக்கு பக்கத்துல ஒரு பத்து கிமீ தூரத்துல நம்ம ஊரு இருக்குதுங்க.
நீங்க சொல்ற இடத்துல ஒரு மூணு ஓயன் ஷாப் இருந்துச்சு.. நீங்க எத சொல்றீங்கன்னு தெரியல.. ஆனா அந்த சைவ கடை பேரு அன்பு பவன்.
வேற யாருங்கன்ன நமக்கு போட்டியா கொங்கு நாட்டுல இருந்து முதல்வர் பதவிக்கு போட்டி போடறது

கடைக்குட்டி said...

டைம் பாஸ் பதிவு...

நல்லா இருக்கு...

நீங்க சும்மா இருக்குற நெரத்துல நம்ம பதிவுக்கும் கொஞ்சம் வாங்க...

கடைக்குட்டியோட கடை காத்தாடுது..:-)

Mahesh said...

வந்துட்டீங்களா... வாங்க... கட்டங் கட்டீருவோம்!!

Poornima Saravana kumar said...

நம்ம ஊருகாரவுகளா நீக !!!!!!!!!!!

Poornima Saravana kumar said...

நான் கோவையைச் சொன்னேன்

Poornima Saravana kumar said...

ஓ!! நீக தான் உங்க ஊரு முதலாளியா ( முதல்வர்ன்னா உங்க ஊர்ல அப்படி தான் சொல்லி கிட்டு திரிவாங்கன்னு கேள்வி பட்டேன் )

Poornima Saravana kumar said...

முதலாளினா இன்னானு கேட்கவரங்களுக்கு அவரே பதில் சொல்லுவார்..

Poornima Saravana kumar said...

என்ன முதல்வரே நீங்க சொல்லறிங்களா இல்லை அதையும் நானே சொல்லவே ( பிட்டு பிட்டு வச்சிருவேனாக்க )

இராகவன் நைஜிரியா said...

முதல்வரே.. நம் வலைப்பூவையும் வந்து பாக்கறது..

அப்படியே ஒரு பின்னூட்டமும் போடறது..


http://www.raghavannigeria.blogspot.com/

ஓட்டு பொறுக்கி said...

என்னங்க பூர்ணிமா.. நம்மனால தான் முதல்வர் ஆகா முடியாது .. குறைஞ்ச பட்சம் இங்க பதிவுளையாவது சொல்லிக்கலாம்னு பார்த்தா.. நீங்க முதலாளி, தொளிலாளினு கவுத்துபுட்டின்களே ...

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா, நான் தான் லேட் ஆ ??

Unknown said...

வணக்கம்..
அடியேனும் கோபியிலிருந்து தான்..!!
இப்போ தன் வலைபதிவுக்குள்ள அடியெடுத்து வச்சு இருக்கேன்..!

நீங்க எந்த ஊர்னு சொல்லவே இல்லையே.. ?

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...
This comment has been removed by the author.
மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//காலைல பால் பீச்சரப்போ ஒன்னு, பொழுது சாஞ்சு சாணி அள்ளுனதுக்கு அப்புறம்//

இந்த டயலாக் என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியிருச்சு. சுப்பரு..

நீங்க சாயங்காலம்தான் சாணி அள்ளுவீங்களோ. எங்க ஊர்ல காலையிலதான் அள்ளுவோம்.

கண்ணகி said...

அடன் நானும் அந்தப்பக்கம்தான். சொல்லுங்க எந்த ஊரு