Friday, December 12, 2008
சோழமண்டலம் - மனதில் இனிக்கும் எம் மயிலாடுதுறை !
சகபதிவர் குடுகுடுப்பை தஞ்சை மாவட்டம் பற்றிய ஒரு தொடராக எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் பதிவின் இணைபதிவாக எங்கள் ஊரினை பற்றிய சில குறிப்புக்களுடன் நான்...!
சொந்த ஊரைப்பற்றி சொல்வதென்றாலே மனதுக்கு இன்பமான சூழல்தான் எப்பொழுதுமே எவருக்குமே! அதுவும் பிரிந்து சற்று தூரத்தில் இருப்பவர்களுக்கோ சொல்லொண்ணா இன்பமே சூழ்ந்திருக்கும்!
நினைவுகளில் பயணித்த இடங்களும் தெருக்களும் ஒன்றென்பின் ஒன்றாய் வந்து அலையடிக்கும்! (அதுவும் எனக்கு கொஞ்சம் நெறையாவே அடிக்குது பின்னே ஓவராத்தானே திரிஞ்சுருக்கோம்!)
ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த ஊரினை பற்றிய தகவல்களினை தெரிந்து வைத்திருத்தல் கட்டாயம் வேண்டும்! அது செய்திகளாக திரட்டியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியோர்களிடம் கேட்டு பெற்ற விசயங்களாக கூட இருக்கலாம்! அதுவும் அந்த ஊர் ,அதன் தெரிந்த வரலாறு,வாழ்ந்த முன்னோர்கள் என்று பல வாழும் எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையில் நமக்காய் எத்தனையோ நல்ல விசயங்கள் செய்து சென்றிருக்கும் நம்மூர் பெரியோர்களை பற்றியும் நமக்கான வாழ்விடம் தந்து சென்றவர்களையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் நன்று - முயற்சித்து!
தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாய் காவிரி டெல்டாவின் கடைமடையில் ஒரு நகரத்திற்குண்டான் அத்தனை அம்சங்களும் கொண்டது மயிலாடுதுறை!
மாயூரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின் மயிலாடுதுறை ஆனாலும் தேவார திருப்பதிகத்தில் திரு மயிலாடுதுறையாகவே குறிப்பிடப்பட்ட்டுள்ளது!
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஒரு சிறப்பு பெயர் எத்தனை எத்தனையோ ஊர்கள் இருந்தாலும் எத்தனைய் எத்தனையோ சிறப்புக்கள் வாய்த்திருந்தாலும் மாயூரம் தனிச்சிறப்பு மிக்க ஊர் என்ற பதத்தில் இவ்வரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.!
ஆற்றின் கரைகளில்தான் மயிலாடுதுறையின் மகத்துவம். காவிரி ஆறு செல்லும் பகுதியினை சுற்றி உருவாக்கப்பட்ட ஊர். நகரின் மையப்பகுதியில் காவிரி தவழ்ந்து செல்கிறாள் - கரை நிரையும் காலங்களில், ஊர் அழகு நிறையும் காட்சி!
மயிலாடுதுறை இரண்டு சிறிய ஊர்களும் அடக்கம்! திருவிழந்தூர் கூறைநாடு!
திருவிழந்தூர் வைணவ திருத்தலம் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும்!
கூறை நாடு 9 கஜம் கூறை புடவைக்கு பெயர் பெற்ற ஊராக, குடிசைத்தொழிலாக இன்றும் விளங்குகிறது!
கர்நாடக சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாக இருக்கிறது!
முதல் தமிழ் நாவல் எழுதிய பிரதாப முதலியார் வாழ்ந்த இடமாக வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
சோழமண்டலத்தின் சிறப்புக்களை தம் பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு கல்கி அவர்கள் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி கற்றதும் மயிலாடுதுறையில்..!
கோயில் திருவிழாக்களுக்கு ஒரு போதும் குறைவில்லாதபடி ஊர் எங்கும் நிறைந்திருக்கும் சிவன் கோவில்களும், ஊரின் எல்லையில் அமைந்து சைவ சமய வளர்ச்சிக்கு பெரிதும் சேவைகளை மிக மெளனமாய் செய்து வரும் தருமை ஆதீனமடமும் கூட ஊரின் சிறப்பாய் பெருமை பொங்க உலகுக்கு சொல்ல முடியும்!
கடந்த பத்தாண்டுகளில் படு வேகமான வளர்ச்சி கண்டு பல புதிய கல்லூரிகள், பள்ளிகள் என்று நகரின் வேகம் எம்மை வியக்கவைத்துக்கொண்டே இருக்கிறது!
வேகமாய் முன்னேறிச்சென்றுக்கொண்டிருந்தாலும், அந்த வேகத்தில் சில சமயங்கள் சில விசயங்கள் மறைப்பட்டு போகும் அல்லது நம்மால் மறக்கப்பட்டு போகும் அது போன்று சில குறைகளாக இன்றும் கூட முழுமையாக பூர்த்தி அடையாத பேருந்து நிலைய விரிவாக்கமும்,ரயில் நிலைய விரிவாக்கப்பணிகளும் மக்களிடையே கொஞ்சம் சோர்வை தந்திருக்கின்றன. ஆண்டுகள் மாறி அரசியல் மாறினாலும் பிரச்சனைகள் தொடர்கின்றன - முடிவின்றி...!
எங்கள் ஊரின் பெருமைகளும் தொடரும் - முடிவின்றி...!
Labels:
காவிரி,
மயிலாடுதுறை
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
ஓ..அதுதான் கூறை புடவையா..வேணா..நான் என்ன நினைச்சேன்னு சொல்லா காமெடியாகிடும்!!
நல்லாருக்கு உங்க பதிவு! அடுத்த பதிவை எதிர்நோக்கி!
புது கல்லூரியா? பரவாயில்லையே! நான் பார்த்த அனைத்து மாயூரத்துக்காரர்கள் படித்த ஓரே கல்லூரி ஏவிசி. அதைவிட்ட
உங்கூரில் வேற ஏது :-)) கடந்த இருபத்தி ரெண்டு வருடமா பார்க்கிறேன் மாற்றமே இல்லாத ஊர் மாயவரம் மட்டும்தான்.
மாயவரத்துக்காரங்க வருவதற்கு முன்பு ஜூட்டே :-)))
//கடந்த இருபத்தி ரெண்டு வருடமா பார்க்கிறேன் மாற்றமே இல்லாத ஊர் மாயவரம் மட்டும்தான்.//
அதனாலத் தான் 'ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா'ன்னு சொல்றாங்க.
எத்தனை தான் வேகமா முன்னேறினாலும் நாங்க அதுக்காக ஒரேடியா மாறிடமாட்டோம்கிறதுக்கு எங்க ஊரு தாண் உதாரணம்.
இதெப்படி இருக்கு?
மற்றபடி மாயுரத்து மருமகள்கள் எல்லாருமே ஒரே மாதிரியா எங்க (*நம்ம*) ஊரை ஓட்டுறீங்களே, ஏன் இந்த வயத்தெறிச்சல்?!(எதுவும் ஒளறிட்டேனோ?!)
தம்பி... எல்லாம் சரி.. 'மாயுரம் மாபியா' பத்தியெல்லாம் எழுதுலயா?!
//ramachandranusha(உஷா) said...
புது கல்லூரியா? பரவாயில்லையே! நான் பார்த்த அனைத்து மாயூரத்துக்காரர்கள் படித்த ஓரே கல்லூரி ஏவிசி. அதைவிட்ட
உங்கூரில் வேற ஏது :-)) கடந்த இருபத்தி ரெண்டு வருடமா பார்க்கிறேன் மாற்றமே இல்லாத ஊர் மாயவரம் மட்டும்தான்.
மாயவரத்துக்காரங்க வருவதற்கு முன்பு ஜூட்டே :-)))
//
அவ்வ்வ்வ்வ்வ் !
யக்க்கோவ் அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது!
எங்க ஊரூ செம டெவலப்மெண்ட்டு !
:))
//மாயவரத்தான்.... said...
//கடந்த இருபத்தி ரெண்டு வருடமா பார்க்கிறேன் மாற்றமே இல்லாத ஊர் மாயவரம் மட்டும்தான்.//
அதனாலத் தான் 'ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா'ன்னு சொல்றாங்க.
எத்தனை தான் வேகமா முன்னேறினாலும் நாங்க அதுக்காக ஒரேடியா மாறிடமாட்டோம்கிறதுக்கு எங்க ஊரு தாண் உதாரணம்.
இதெப்படி இருக்கு?
//
அண்ணே சூப்பரூ!
:))
//மாயவரத்தான்.... said...
தம்பி... எல்லாம் சரி.. 'மாயுரம் மாபியா' பத்தியெல்லாம் எழுதுலயா?!
///
அவுங்களை பத்தி சொல்றதை விட அவுங்க சொன்னதையெல்லாம் பத்தி சொன்னா ரொம்ப பெருமையா இருக்கும்ல - கண்டிப்பா உண்டு! :)))
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம்
நல்லா இருக்குங்க, தொடர்ந்து எழுதுங்க! எனக்கு மாயவரம்ன்னா நினைவுக்கு வர்றது T.இராஜேந்தரும், இடைத்தேர்தலும்தான், மாயவரம் கிட்டப்பா!!
ரெம்ப நல்ல இருக்கு, அடுத்த பாகத்திற்கு காத்து இருக்கிறேன்
அ.தி.மு.க. ஆட்சியின் போது சட்டமன்ற இடைத் தேர்தல்... மயிலாடுதுறை தொகுதியில் தி.மு.க. சார்பில் (இப்போது காணாமல் போய்விட்ட அரசியலில் பிழைக்கத் தெரியாத) சத்தியசீலன். அ.தி.மு.க. சார்பில் தம்பி பால. வேலாயுதம். ஜங்ஷன் அருகில் தி.மு.க. பொதுக்கூட்டம். ராஜேந்தர் பேசுகிறார். "நம்மை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளார் யார் தெரியுமா? பல வேல் ஆயுதம்" .
நானும் கொஞ்ச நாள் மயிலாடுதுறையில் பணி நிமித்தம் இருந்திருக்கிறேன்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளையை விட்டு விடாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கூறை நாடு:- கொர்நாடு என்று வட்டார வழக்கில் விளிப்பது உண்டு.
துர்கா பவனில் அடிக்கடி சாப்பிடுவது உண்டு. ஹோட்டல் காளியாகுடி,இன்னொன்று மயூரா என்று நினைக்கிறேன் இங்கெல்லாம் போய் சாப்பிட்டிருக்கிறேன். மாயூரம் சுந்தரத்தில் இருந்து பியர்லஸ் வரைக்கும் படம் பார்த்திருக்கிறோம். அங்கே ஒரு மெஸ் இருக்கிறது அதை மறக்க முடியாது. மெஸ்சுக்கு எதிரே மீன் வறுத்துக்கொண்டு இருப்பார்கள்(மெஸ் பெயர் தெரியவில்லை) சாப்பாடு சுவையாக இருக்கும். எனது மதிய உணவு பெரும்பாலும் இங்குதான். மயாவரத்து மக்கள் மிகவும் அன்பானவர்கள். நான் அங்கு இருக்கும் போதுதான் அங்கு மிகப்பெரிய விஷச் சாராயச் சாவுகள் கோரமாக நிகழ்ந்தேறியது. இது மறக்கமுடியாத வடுவாக உள்ளது(நீங்க போலீசா இருந்தீங்களா என்று கேட்கத் தோன்றினால், இல்லை காவல் நிலையத்துக்கு அருகாமையில் தங்கி இருந்தேன்) அதிராம்பட்டினம் எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் அவர்களின் மண்டி ஒன்று அங்கு உள்ளது. இவர் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மயிலாடுதுறை தமிழகத்திலேயே சிறிய நாடாளுமன்ற தொகுதி. இதை துபாய் ஆக்குவேன் என்று இங்கு வந்து எம்.பி ஆனார். அதேபோல் துபாய் ஆக்கிவிட்டு மந்திரியாகி இருக்கிறார் (காவிரிப் பிரச்சனை பாராளுமன்றத்தில் கர்நாடக எம்.பி.களால் கிளப்பப் பட்ட போது ஓடி ஒழிந்து போனவர்) துபாய் ஆக்குவதற்கு எதற்கு தண்ணீர்? அப்படின்னா அவர் செய்தது சரிதான்!
//குடுகுடுப்பை said...
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம்
//
நன்றி!
தகவல்கள் சேகரித்து பின் தொடர்கிறேனே கண்டிப்பாய்....!
// பழமைபேசி said...
நல்லா இருக்குங்க, தொடர்ந்து எழுதுங்க! எனக்கு மாயவரம்ன்னா நினைவுக்கு வர்றது T.இராஜேந்தரும், இடைத்தேர்தலும்தான், மாயவரம் கிட்டப்பா!!
//
கண்டிப்பா டி.ஆர் நினைவுக்கு வரணும் அந்தளவுக்கு சாதிச்சிருக்காரே :)
//நசரேயன் said...
ரெம்ப நல்ல இருக்கு, அடுத்த பாகத்திற்கு காத்து இருக்கிறேன்
///
நன்றி நசரேயன்!
//மாயவரத்தான்.... said...
அ.தி.மு.க. ஆட்சியின் போது சட்டமன்ற இடைத் தேர்தல்... மயிலாடுதுறை தொகுதியில் தி.மு.க. சார்பில் (இப்போது காணாமல் போய்விட்ட அரசியலில் பிழைக்கத் தெரியாத) சத்தியசீலன். அ.தி.மு.க. சார்பில் தம்பி பால. வேலாயுதம். ஜங்ஷன் அருகில் தி.மு.க. பொதுக்கூட்டம். ராஜேந்தர் பேசுகிறார். "நம்மை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளார் யார் தெரியுமா? பல வேல் ஆயுதம்" .
//
ஆஹா அண்ணாச்சி ஏகப்பட்ட டீடெயில்ஸ் இருக்கே!
எனக்கு தெரிஞ்சு பாலவேலயுதமும் சரி சத்திய சீலனும் சரி இப்ப மார்கெட் டல்லான பார்ட்டீகள் தான் :(
அது என்ன அப்படி ஒரு ஸ்பெஷல் இடைத்தேர்தல் கொஞ்சம் சொல்லுங்களேன்!
//ஜோதிபாரதி said...
நானும் கொஞ்ச நாள் மயிலாடுதுறையில் பணி நிமித்தம் இருந்திருக்கிறேன்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளையை விட்டு விடாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கூறை நாடு:- கொர்நாடு என்று வட்டார வழக்கில் விளிப்பது உண்டு.
துர்கா பவனில் அடிக்கடி சாப்பிடுவது உண்டு. ஹோட்டல் காளியாகுடி,இன்னொன்று மயூரா என்று நினைக்கிறேன் இங்கெல்லாம் போய் சாப்பிட்டிருக்கிறேன். மாயூரம் சுந்தரத்தில் இருந்து பியர்லஸ் வரைக்கும் படம் பார்த்திருக்கிறோம். அங்கே ஒரு மெஸ் இருக்கிறது அதை மறக்க முடியாது. மெஸ்சுக்கு எதிரே மீன் வறுத்துக்கொண்டு இருப்பார்கள்(மெஸ் பெயர் தெரியவில்லை) சாப்பாடு சுவையாக இருக்கும். எனது மதிய உணவு பெரும்பாலும் இங்குதான். மயாவரத்து மக்கள் மிகவும் அன்பானவர்கள். நான் அங்கு இருக்கும் போதுதான் அங்கு மிகப்பெரிய விஷச் சாராயச் சாவுகள் கோரமாக நிகழ்ந்தேறியது. இது மறக்கமுடியாத வடுவாக உள்ளது(நீங்க போலீசா இருந்தீங்களா என்று கேட்கத் தோன்றினால், இல்லை காவல் நிலையத்துக்கு அருகாமையில் தங்கி இருந்தேன்) அதிராம்பட்டினம் எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் அவர்களின் மண்டி ஒன்று அங்கு உள்ளது. இவர் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மயிலாடுதுறை தமிழகத்திலேயே சிறிய நாடாளுமன்ற தொகுதி. இதை துபாய் ஆக்குவேன் என்று இங்கு வந்து எம்.பி ஆனார். அதேபோல் துபாய் ஆக்கிவிட்டு மந்திரியாகி இருக்கிறார் (காவிரிப் பிரச்சனை பாராளுமன்றத்தில் கர்நாடக எம்.பி.களால் கிளப்பப் பட்ட போது ஓடி ஒழிந்து போனவர்) துபாய் ஆக்குவதற்கு எதற்கு தண்ணீர்? அப்படின்னா அவர் செய்தது சரிதான்!
///
யேயப்ப்பாடியோவ் ஊரைப்பத்தி மொத்தமா சொல்லிட்டீங்க !
அந்த மெஸ் பேரு தட்டி மெஸ் அதை பத்தி அபி அப்பா அழகா ஒரு பதிவு போட்டிருந்தாரு :)
மணி சங்கரய்யர் எப்படித்தான் அவர் மேல நம்பிக்கை வைச்சோமோ தெரியல ஆளு தேர்தல் அப்ப இருப்பாரு இல்லாட்டி,மழை வெள்ளம் சமயத்தில் பேப்பர் போட்டோவுல விசாரிக்கிறது தெரியும்!
அவுரு செண்ட்ரல் மினிஸ்டர்ங்கற போர்வையிலதான் இத்தினி நாளா எஸ்ஸாகிக்கிட்டிருக்காரு :)))
//அது என்ன அப்படி ஒரு ஸ்பெஷல் இடைத்தேர்தல் கொஞ்சம் சொல்லுங்களேன்//
அது எம்.ஜி. ஆர். ஆட்சிக்காலம். மயிலாடுதுறையிலும் இன்னொரு தொகுதியிலும் (திண்டுக்கல்?!) இடைத்தேர்தல். வீதி வீதியாக எம்.ஜி.ஆரே வந்து வாக்கு கேட்டார். அப்படியும் மயிலாடுதுறையில் தி.மு.க. தான் வென்றது. அதற்கு முன்பு கிட்டப்பா - தி.மு.க.விலிருந்து தனது கடைசி கால கட்டத்தில் அ.தி.மு.க.விற்கு ஏன் தாவினார் என்று யாருக்காவது தெரியுமா?! அ.தி.மு.க.வில் ஐக்கியமாகியிருந்த கிட்டப்பா மறைந்த அன்று முதல் ஆளாக ஓடோடி வந்து மலர் வளையம் வைத்தது கருணாநிதி!
**ட்யூப் லைட்** என்று அழைக்கப்பட்ட/படும் அரசியல்வாதி யாரு தெரியுமா? பெயர்க்காரணம்?!
//மற்றபடி மாயுரத்து மருமகள்கள் எல்லாருமே ஒரே மாதிரியா எங்க (*நம்ம*) ஊரை ஓட்டுறீங்களே, ஏன் இந்த வயத்தெறிச்சல்?!(எதுவும் ஒளறிட்டேனோ?!)//
அதானே? :-)
பைதபபை நான் உளறவில்லை. :-)
ராம்கி
வருங்கால முதல்வர் (அணிமா ) ப்ரெசென்ட் சார்
ஆயில்யன் அவர்களை வ.மு சார்பாக வரவேற்கிறேன்..
நானும் அங்கிட்டு பக்கத்துல சிதம்பரத்துல தான் படிச்சேனாக்கும்.. அப்போ அப்போ நம்ம ( என்னோட ) ஆள கூட்டிகிட்டு அங்க தான் படம் பார்க்க வருவேன் ..
உம்ம்
அது எல்லாம் ஒரு காலம்..
மாயவரத்திருக்கும் நம்மளுக்கும் ஒரு ஸ்ட்ராங் கனிக்ஸண் இருக்குது..
( போன பின்னூட்டதுலேயே ஒளரிட்டேனா??)
சரி சரி விடுங்க..
நான் தான் 25
நல்லா எழுதி இருக்கீங்க ஆயில்! கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் எல்லாம் சுத்தி இருக்கேன். ஆடுதுறையில் கூட ஒரு வாரம் இருந்து இருக்கேன்... ஆனா மாயவரம் வந்ததில்லை..:)
அடுத்த பாகம் ஒன்னு சீக்கிரம் போடுங்க!
என்னோட ரூம்ல உங்க ஊரு ஆளு ஒருத்தரு இருக்காருங்க
//சோழமண்டலத்தின் சிறப்புக்களை தம் பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு கல்கி அவர்கள் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி கற்றதும் மயிலாடுதுறையில்..!//
மயிலாடுதுரை அருகில் மணல்மேடு அருகில் கொள்ளிட கரை ஒரம் ஒரு கிராமம்.அந்த கிராமத்தின் பெயர் நினைவில்லை.
Puthamangalam is the village where Kalki was born.It is also the Native Village of Director K. Balachander.
K.G.Subbramanian
\\ சந்தனமுல்லை said...
ஓ..அதுதான் கூறை புடவையா..வேணா..நான் என்ன நினைச்சேன்னு சொல்லா காமெடியாகிடும்!!
நல்லாருக்கு உங்க பதிவு! அடுத்த பதிவை எதிர்நோக்கி!\\
கூறைநாடு என்பது மயிலாடுதுறை நகராட்சியின் மேற்கு எல்லை. கூறை பட்டு என்பது மிக பிரபலம். அதன் காரனமாகவே முகூர்த்தா புடவைக்கு கூறைப்புடவை என பெயர் வந்தது, ஆனால் அப்போது அங்கிருந்த சௌராஷ்ட்டிர மக்கள் பின்பு திருபுவனம் (30 கிமீ தள்ளி குடந்தை அருகே) சென்றுவிட்டதால் இப்போது காஞ்சிக்கு அடுத்து திரூபுவனம் பேமஸ் ஆகிவிட்டது! ஆக நாங்க தான் ஆர்ஜின் அந்த கூறைபுடவைக்கு!
சந்தனமுல்லை இப்போது சந்தேகம் தீர்ந்ததா?

\\ ramachandranusha(உஷா) said...
புது கல்லூரியா? பரவாயில்லையே! நான் பார்த்த அனைத்து மாயூரத்துக்காரர்கள் படித்த ஓரே கல்லூரி ஏவிசி. அதைவிட்ட
உங்கூரில் வேற ஏது :-)) கடந்த இருபத்தி ரெண்டு வருடமா பார்க்கிறேன் மாற்றமே இல்லாத ஊர் மாயவரம் மட்டும்தான்.
மாயவரத்துக்காரங்க வருவதற்கு முன்பு ஜூட்டே :-)))\\
என்ன உஷா அன்ணியாரே! ஊர்பக்கம் போய் ரொம்ப நாள் ஆச்சா? அது அந்த காலம்.
1. ஏவிசி காலேஜ்
2.ஏவிசி பாலிடெக்னிக்
3.ஏவிசி இஞ்ஜினியரிங் காலேஜ்
4. தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் கல்லூரி
5.தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி(இருபாலார்)
6. ஏஆர்சி காலேஜ்
7. பெஸ்ட் காலேஜ் ஆஃப் கேட்டரிங்
8. பெஸ்ட் சமூக கல்லூரி
இது தவிர ஆசிரியர் பயிச்சி, நர்சிங் காலேஜ் மூன்று
ஐடிஐ தொழில் பயிற்சி கல்லூரி 9 இருக்கு
மேலும் பல கல்லூரி இருக்கு அண்ணியாரே, ஆனால் எனக்கு டைம் குடூங்க தனி மெயிலாவே மீதி விபரம் அனுப்பறேன். மெடீகல் காலேஜ் மட்டும் இன்னும் வரவில்லை.
\\ மாயவரத்தான்.... said...
//கடந்த இருபத்தி ரெண்டு வருடமா பார்க்கிறேன் மாற்றமே இல்லாத ஊர் மாயவரம் மட்டும்தான்.//
அதனாலத் தான் 'ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா'ன்னு சொல்றாங்க.
எத்தனை தான் வேகமா முன்னேறினாலும் நாங்க அதுக்காக ஒரேடியா மாறிடமாட்டோம்கிறதுக்கு எங்க ஊரு தாண் உதாரணம்.
இதெப்படி இருக்கு?
மற்றபடி மாயுரத்து மருமகள்கள் எல்லாருமே ஒரே மாதிரியா எங்க (*நம்ம*) ஊரை ஓட்டுறீங்களே, ஏன் இந்த வயத்தெறிச்சல்?!(எதுவும் ஒளறிட்டேனோ?!)\\
மாயவரத்தான் கருத்தை ஒத்து போகிறேன். எப்பவும் மாற்றம் (தேவையானதை தவிர்த்து)என்பதே எங்களிடம் இருந்ததில்லை. ஆனால் அதே நேரம் எங்களைப்போல் முன்னோடிகளும் யாரும் இல்லை!
\\ மாயவரத்தான்.... said...
தம்பி... எல்லாம் சரி.. 'மாயுரம் மாபியா' பத்தியெல்லாம் எழுதுலயா?!\\
இப்பவும் மாயவரம் மாஃபியா என்று வரும் போது ஆரியம், திராவிடம் என்று எந்த எழவும் எங்களை பிரிக்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரியுமே!!
\\ பழமைபேசி said...
நல்லா இருக்குங்க, தொடர்ந்து எழுதுங்க! எனக்கு மாயவரம்ன்னா நினைவுக்கு வர்றது T.இராஜேந்தரும், இடைத்தேர்தலும்தான், மாயவரம் கிட்டப்பா\\
இருங்க பழமைபேசி!!
மாயவரம்ன்னு சொன்னா இது இரண்டு மட்டும் தான் நியாபகம் வந்தா நீங்க 1965-70 மாடல்ன்னு நினைக்கிறேன். ஆனா அதை எல்லாம் விட 1000க்கு மேல விஷயங்கள் எங்க ஊரை பத்தி இருக்கு! பின் வரும் பின்னூட்டங்களிள் சொல்கிரேன்!
ஹய்ய்ய்ய் அபி அப்பா!
சிங்கிளா நின்னு அடிச்சு ஆடறீங்க சூப்பர்!
எனக்கு நிறைய விசயம் தெரியல நீங்க சொல்றது வைச்சு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் :)))
\\ மாயவரத்தான்.... said...
அ.தி.மு.க. ஆட்சியின் போது சட்டமன்ற இடைத் தேர்தல்... மயிலாடுதுறை தொகுதியில் தி.மு.க. சார்பில் (இப்போது காணாமல் போய்விட்ட அரசியலில் பிழைக்கத் தெரியாத) சத்தியசீலன். அ.தி.மு.க. சார்பில் தம்பி பால. வேலாயுதம். ஜங்ஷன் அருகில் தி.மு.க. பொதுக்கூட்டம். ராஜேந்தர் பேசுகிறார். "நம்மை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளார் யார் தெரியுமா? பல வேல் ஆயுதம்" .\\
ஆமாம் மாயவரத்தான். அது வருஷம் 1981. கிட்டப்பா இறந்து போனதால் நடந்த இடைதேர்தல். அப்போது கிட்டப்பாவை எதிர்த்து 3 முறை தோற்று போன பட்டமங்கல தெருவை சேர்ந்த தம்பி.பாலவேலாயுதமும், திமுக ஒன்றிய செயலர் சத்தியசீலனும் நின்றார்கள். மாயவரத்தான் சொல்வது போல எம்ஜியாரும், அதிமுக பார்டர் போட்ட வெள்ளை சேலை கட்டி கொண்டு ஜெயலலிதாவும் வீதி வீதியாக பிரசாரம் செய்தும் சத்திய சீலன் ஜெயித்தார்.
அப்போது ராஜேந்தர் திமுகவில் சேர்ந்த புதிது. முதல் கூட்டம் அன்று மாலை மேலவீதியில் நடந்தது. தேர்தல் நாள் 20.05.1981. அதன் பிறகு இரவு 11 மணிக்கு ரயிலடியில் பிள்ளையார் கோவில் வாசலில் நடந்தது. அதிலே தான் ராஜேந்தர் அப்போது மறைந்த அசோகன் அவர்கள் எம்ஜியாரால் கொடுமை படுத்தப்பட்டு இறந்ததாகவும், பின் "எம்ஜியார் நிறுத்தியிருப்பது பாலவேலாயுதம் இல்லை பல வேல் ஆயுதங்களை" என பேசினார். ஆனால் பாலவேலாயுதம் ஒரு பிள்ளை பூச்சி.
அப்போது அண்ணாநகர் தொகுதிக்கும், உப்பிலியாபுரம் (தனி)தொகுதிக்கும் கூட இடை தேர்தல் நடந்தது.
அண்ணாநகரில் என்.வி.என்.சோமு நின்னார்ன்னு நினைக்கிரேன்(அல்லது சோ.மா.ராமசந்திரனா?)திமுக ஜெயித்தது.
அது போல அதிமுக உப்பிலியாபுரம் சரோஜா ஜெயித்தார்கள்!
\\அதற்கு முன்பு கிட்டப்பா - தி.மு.க.விலிருந்து தனது கடைசி கால கட்டத்தில் அ.தி.மு.க.விற்கு ஏன் தாவினார் என்று யாருக்காவது தெரியுமா?! அ.தி.மு.க.வில் ஐக்கியமாகியிருந்த கிட்டப்பா மறைந்த அன்று முதல் ஆளாக ஓடோடி வந்து மலர் வளையம் வைத்தது கருணாநிதி!
**ட்யூப் லைட்** என்று அழைக்கப்பட்ட/படும் அரசியல்வாதி யாரு தெரியுமா? பெயர்க்காரணம்?!\\
மாயவரத்தான்! கிட்டப்பா அதிமுகவில் சேர்ந்ததுக்கு "தண்ணி"தான் காரணம். அப்போது திமுக கொரடாவாக இருந்தும் தன் தண்ணி பழக்கத்தால் தான் என்ன செய்கிறோம் என தெரியாமலே சேர்ந்தார்..
மாயவரத்தான் புதிருக்கு விடை "செங்குட்டுவன்" பின்னால் எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர், எல்லாம்!
\\ ஜோதிபாரதி said...
நானும் கொஞ்ச நாள் மயிலாடுதுறையில் பணி நிமித்தம் இருந்திருக்கிறேன்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளையை விட்டு விடாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கூறை நாடு:- கொர்நாடு என்று வட்டார வழக்கில் விளிப்பது உண்டு.
துர்கா பவனில் அடிக்கடி சாப்பிடுவது உண்டு. ஹோட்டல் காளியாகுடி,இன்னொன்று மயூரா என்று நினைக்கிறேன் இங்கெல்லாம் போய் சாப்பிட்டிருக்கிறேன். மாயூரம் சுந்தரத்தில் இருந்து பியர்லஸ் வரைக்கும் படம் பார்த்திருக்கிறோம். அங்கே ஒரு மெஸ் இருக்கிறது அதை மறக்க முடியாது. மெஸ்சுக்கு எதிரே மீன் வறுத்துக்கொண்டு இருப்பார்கள்(மெஸ் பெயர் தெரியவில்லை) சாப்பாடு சுவையாக இருக்கும். எனது மதிய உணவு பெரும்பாலும் இங்குதான். மயாவரத்து மக்கள் மிகவும் அன்பானவர்கள். நான் அங்கு இருக்கும் போதுதான் அங்கு மிகப்பெரிய விஷச் சாராயச் சாவுகள் கோரமாக நிகழ்ந்தேறியது. இது மறக்கமுடியாத வடுவாக உள்ளது(நீங்க போலீசா இருந்தீங்களா என்று கேட்கத் தோன்றினால், இல்லை காவல் நிலையத்துக்கு அருகாமையில் தங்கி இருந்தேன்) அதிராம்பட்டினம் எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் அவர்களின் மண்டி ஒன்று அங்கு உள்ளது. இவர் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மயிலாடுதுறை தமிழகத்திலேயே சிறிய நாடாளுமன்ற தொகுதி. இதை துபாய் ஆக்குவேன் என்று இங்கு வந்து எம்.பி ஆனார். அதேபோல் துபாய் ஆக்கிவிட்டு மந்திரியாகி இருக்கிறார் (காவிரிப் பிரச்சனை பாராளுமன்றத்தில் கர்நாடக எம்.பி.களால் கிளப்பப் பட்ட போது ஓடி ஒழிந்து போனவர்) துபாய் ஆக்குவதற்கு எதற்கு தண்ணீர்? அப்படின்னா அவர் செய்தது சரிதான்!\\
வணக்கம் ஜோதிபாரதி!! மாயவரம் மக்கள் மிகவும் அன்பானவர்கள் என சொன்னமைக்கு நன்றி!!
நீங்கள் சொன்ன சாராய சாவுகள் நடைபெற்ற வருடம் 1992. கிட்டதட்ட 215பேர். சாவுக்கு காரணமானவர்கள் இப்போதும் சகல சௌபாக்கியத்தோட இருக்காங்க. அதிலே கொத்ததெரு என்னும் தெருவிலே மட்டும் 80 பேர் செத்தாங்க. அதில் பல கார்பெண்டர், மேசன் எல்லாரும் எனக்கு தெரிஞ்சவங்க!
அதிரை எம்.எம்.எஸ் தேங்காய் மண்டி போலீஸ்ஸ்டேஷன் பக்கத்திலே இருந்தது சரிதான்.அவர் மாயவரத்துக்காக தொண்டை கிழிய சட்டமன்றத்திலே .....போங்க சாமீ கடுப்ப கிளப்பாதீங்க...வாயை புடுங்காதீங்க!!
மணிசங்கர் அய்யர் எட்துனா செய்ய நினைக்கிறார். ஆனா முடியலை போல இருக்கு.ஆனா மயிலாடுதுறை பாராளுமன்ன்ற
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதின்னு சோலிகிட்டு குடந்தை ராமலிங்கமும், ஈ.எஸ்.எம். பக்கீர்முகமதுவும், மரகதம் சந்திரசேகரும் மாயவரத்தை எட்டி கூட பார்க்காமல் இருந்ததை விட மணிசங்கர் அய்யர் தேவலை. போட்டோ எடுக்கவாவது மாயவரம் பக்கம் வர்ரார்!
\\ சதுக்க பூதம் said...
//சோழமண்டலத்தின் சிறப்புக்களை தம் பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு கல்கி அவர்கள் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி கற்றதும் மயிலாடுதுறையில்..!//
மயிலாடுதுரை அருகில் மணல்மேடு அருகில் கொள்ளிட கரை ஒரம் ஒரு கிராமம்.அந்த கிராமத்தின் பெயர் நினைவில்லை.\\
ஆமாம் சதுக்கபூதம், அந்த கிராமத்தின் பெயர் மணல்மேடு பஞ்சாயத்தை சேர்ந்த இலுப்பபட்டு என்னும் குக்கிராமத்தின் பக்கத்தில் உள்ள "ராஜன் வாய்க்கால்". அந்த கிராமத்தின் பேரே ராஜன் வாய்க்கால் தான் அதிலே ஒரே ஒரு அக்ரஹாரம் மட்டுமே உண்டு!
\\Puthamangalam is the village where Kalki was born.It is also the Native Village of Director K. Balachander.
K.G.Subbramanian\\
புதமங்களம் இல்லைன்னு நினைக்கிறேன். இலுப்பபட்டு-ராஜாவாய்க்கால் தான். நான் அவர் பிறந்த வீட்டை பார்த்திருக்கேன்.
அடுத்து பாலசந்தர் - முடிகொண்டான்,
விசு - அதன் அருகில் இருக்கும் சேங்காலிபுரம்
Post a Comment