Monday, November 24, 2008

2030 தில் வருங்கால முதல்வரின் வேட்ப்பாளர் தேர்வு

வ.முதல்வர் :(அறைக்குள் வந்தவுடன், ஆச்சரியமாக) அரச கவி என்ன இவ்வளவு ௬ட்டம், என்னைய பாக்க இம்ம்புட்டு ஆர்வம்மா!!! புல்லரிக்குதுப்பா !!


அரச கவி : ஐயா,குமரியிலே கள்ளு கடையிலே ஆரமிச்ச நம்ம கட்சி, உள்ளூர் டாஸ்மாக் ஆக மாறி,வெளிநாட்டு சரக்கு மாதிரி வளர்ந்து அரபிய குதிரை யாட்டம் நிக்குது


வ.முதல்வர் : நேத்து அடிச்ச கொள்ளு சரக்கு இன்னும் இறங்கலையா?


அரச கவி : நம்ம கட்சியோட வளர்ச்சி அகில உலகத்தையே குடுமியை பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டி விட்டது, நம்ம வளர்ச்சியை பார்த்து வேட்பாளர் தேர்வுக்கு அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் ல இருந்து எல்லாம் கழகத்திலே போட்டியிட விண்ணப்பம் வந்திருக்கு

வா.முதல்வர் : ஆகா, ஒரு மனுஷன் எத்தனி ஊருக்கு தான் தலைவர் ஆக முடியும்,என் புகழ் நமிதாவை விட வேகமா பரவுதே,எல்லோருடைய கோரிக்கையும் நிறைவேத்தி விடலாம்.

அரச கவி : வேட்ப்பாளர் பட்டியல் தயாரா இருக்கு, நீங்க ஒரு தடவை பாத்துட்டு கை நாட்டு போட்டா அறிவிப்பை வெளியிடலாம்

வ.முதல்வர் : கை நாட்டு கேட்டு என் தலையிலே துண்டை போடணுமுன்னு ஒரு ௬ட்டம்மா அலையுரீங்கன்னு தெரியுது, முதல்ல வேட்ப்பாளர்களை பாக்கலாம்

அரச கவி : வருங்கால இந்தியாவின் தூண்களே எல்லோரும் உங்க முகர கட்டையை தலைவரிடம் காட்டுங்க

(மக்கள் ௬ட்டம் வழக்கம் போல, வா.மு வை கண்டுக்காம எல்லோரும் வாசலை பாத்து இருகாங்க)

வ.முதல்வர் : என்ன அரச கவி, எல்லோருக்கும் மாலை கண் நோயா, திண்ணையை பாக்கிறமாதிரி விட்டத்தை பார்க்கிறார்கள். ஆமா எல்லோரும் எதுக்கு வாசலை பாத்து இருக்காங்க

அரச கவி :உங்க அனல் மின் நிலக்கரி பேச்சை ஆரமிங்க தலைவரே எல்லோரும் சரி ஆகிடுவாங்க.

வ.முதல்வர் : இங்கு அலை கடலென திரண்டு வந்திருக்கும் கழக கண்மணிகளே, கடல் அலை ஓய்ந்தாலும் உங்கள் அன்பு அலை ஓயாது என்பதை நிருபித்து விட்டீர்கள்.

(இதற்குள் ௬ட்டத்தில் இருந்த அனைவரும் நாற்காலியில் இருந்து எழுந்து, விழுந்தடித்து ஓடுகிறார்கள், "என்னை விட்டு விடு.." "என்னை விட்டு விடு.." என்று கதறி கொண்டு,எப்படி இந்த பதிவை படிச்சு புட்டு ஓடுவாங்களே அதே மாதிரி )

வ.முதல்வர் : அரச கவி என்ன நடக்குது, வழக்கம் போல நீர் ஏதும் சதி பண்ணிவிட்டீரா, ஏன் எல்லோரும் தெறிச்சு ஓடுறாங்க?

(அரச கவி தலை சொரிகிறார்)

வ.முதல்வர் : இல்லாத இடத்திலே என்னத்தை தேடுறீங்க

அரச கவி :தலைவரே, மக்களை ௬ட்டத்துக்கு வரவழைக்க கவர்ச்சி நடிகை "பல்க்" பமிலா நம்ம கட்சியிலே சேருதாங்கன்னு ஒரு ரகசிய அறிவிப்பை நாடு முழுவதும் வெளியிட்டேன், அது நல்லா வேலை செஞ்சு இருக்கு

வா.முதல்வர் :மொக்கை பிரச்சனைக்கே கட்டு சோறு கட்டிக்கிட்டு முனு நாளைக்கு முன்னாடி வருவீங்க, இந்த மாதிரி சர்வதேச பிரச்சனையை மருந்துக்கு ௬ட கேட்கிறது கிடையாது.இப்ப "பல்க்" பமிலாவை எங்கேன்னு போய் தேடுவேன்?

அரச கவி : அவங்க புது காதலரோட இன்ப சுற்றுலா போய் இருகாங்க.

வா.முதல்வர் : நீர் குசு..குசு படிக்கிறதை இன்னும் விடலையா?

அரச கவி : பழக்க தோஷம் தலைவரே.. மாத்த முடியலை, ஏதாவது யோசனை பண்ணி ௬ட்டத்தை நம்ம பக்கம் திருப்புங்க, உங்களை நம்பி தானே எங்க பொழைப்பு ஓடுது.

வா.முதல்வர் : உனக்கு மட்டுமா, அந்த இடி விழுந்த இருளான்டிக்கும் என்னை வச்சு தானே பொழப்பு ஓடுது.

அரச கவி : யோசிக்க நேரமில்லை, சீக்கிரம் ராணி தேனியை ௬ட்டிவிட்டு வாங்க, இல்லை வேட்ப்பாளர்களையும் நாம வழக்கம் போல கடன் வாங்க வேண்டிய வரும்.

வா.முதல்வர் : என் ரத்த நரம்பின் ரத்தங்களே, "பலக்" பமிலா எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறார்கள் .

(உடனே ௬ட்டம் எப்போதோ வார காவிரி வெள்ளம் மாதிரி திபு..திபு ன்னு உள்ளே ஓடி வாராங்க)

அரச கவி : ஐயா நீங்க உங்க பேரை நீங்க இனிமேல முக்கால முதல்வர் ன்னு மாத்தி விடலாம் .

வா.முதல்வர் : எப்படி? ( இல்லாத மிசையை தடவி விடுறாரு).விஷயம் என்னனா, நடிகை யோட நாய்க்கு தும்மல் வந்து ஒரே இருமலாம், அதனாலே "பலக்" பமிலா அதை மருத்துவ மனைக்கு ௬ட்டிட்டு போய் இருகாங்க, மக்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி இருகாங்க.

(முதல் பாதி பேசின முடிஞ்ச உடனே, ஹிந்தி படம் பாக்க பால் தாக்கரே ஓசியிலே ௬ப்பிடுற மாதிரி தலை தெறிக்க ஓடிட்டாங்க)

அரச கவி : வருங்கால முதல்வர் மீண்டும் வெத்து முதல்வர் ஆக்கி புட்டாங்களே (ஒப்பாரி வைக்க ஆரமிச்சு புட்டாரு அரச கவி,என்ன செய்வதுன்னு தெரியாம திருவிழாவிலே காணாம போன கை புள்ள மாதிரி வா.மு முழிக்கிறாரு)

வா.முதல்வர் : மக்கள் எல்லோரும் எங்கே போய்டாங்க?

அரச கவி : அதை கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு உண்டு, யாரவது இதை படிச்சா போட்டியிலே கலந்து கோங்க, உங்க பதிலும், இடி விழுந்த இருளாண்டி பதிலும் ஒன்னா இருந்தா உங்களுக்கு தான் பரிசு, வா.மு அவருடைய சொந்த பணத்திலே இருந்து கொடுப்பார்.(சொல்லி விட்டு வா.மு வின் தலையில் துண்டை போடுகிறார்)

16 comments:

பழமைபேசி said...

கதை வசனம் எழுதி எப்படியும் ஆட்சியப் புடிச்சரலாம்னு கங்கணம் கட்டிகிட்டுத்தான் அலையுறாங்க நொம்பப் பேரு....

பழமைபேசி said...

நல்லாத்தான் இருக்கு, அதையும் சொல்லணுமல்லோ...

Mahesh said...

நசரேயன்.... சிரிச்சு சிரிச்சு வவுரு புண்ணாகிப்போச்சு... நல்லா எழுதறாங்கையா டீட்டெய்லா....

கோவி.கண்ணன் said...

உங்களுக்கு ஒரு அழைப்பு வைத்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//வா.முதல்வர் : ஆகா, ஒரு மனுஷன் எத்தனி ஊருக்கு தான் தலைவர் ஆக முடியும்,என் புகழ் நமிதாவை விட வேகமா பரவுதே,எல்லோருடைய கோரிக்கையும் நிறைவேத்தி விடலாம். //

2030லும் நமீதா உதாரணமா ? எங்கேயோ இடிக்குதே, ஜூனியர் நமீதாவாக இருக்குமோ ?

SUREஷ் said...

இது ஒரு உண்மை நிகழ்ச்சி.அதுக்கு மேல எது சொன்னாலும் வம்புதான்

குடுகுடுப்பை said...

ஆறு வ.மு இருக்காங்க நிம்மல் யார சொல்ரான்.

நசரேயன் said...

/*கதை வசனம் எழுதி எப்படியும் ஆட்சியப் புடிச்சரலாம்னு கங்கணம் கட்டிகிட்டுத்தான் அலையுறாங்க நொம்பப் பேரு....

*/
என்ன செய்ய இப்படி ஏதாவது பண்ண வேண்டிய இருக்கு

/*
நல்லாத்தான் இருக்கு, அதையும் சொல்லணுமல்லோ...
*/
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

நசரேயன் said...

/*
நசரேயன்.... சிரிச்சு சிரிச்சு வவுரு புண்ணாகிப்போச்சு... நல்லா எழுதறாங்கையா டீட்டெய்லா....
*/
வாங்க மகேஷ்..
எதோ என்னால முடிஞ்சது

நசரேயன் said...

/*
//வா.முதல்வர் : ஆகா, ஒரு மனுஷன் எத்தனி ஊருக்கு தான் தலைவர் ஆக முடியும்,என் புகழ் நமிதாவை விட வேகமா பரவுதே,எல்லோருடைய கோரிக்கையும் நிறைவேத்தி விடலாம். //

2030லும் நமீதா உதாரணமா ? எங்கேயோ இடிக்குதே, ஜூனியர் நமீதாவாக இருக்குமோ ?
*/
அவசரத்துல மறந்து புட்டேன், அது நிச்சயமா ஜூனியர் தான்

நசரேயன் said...

/*
இது ஒரு உண்மை நிகழ்ச்சி.அதுக்கு மேல எது சொன்னாலும் வம்புதான்
*/
நீங்க நம்பின மாதிரி தெரியலையே

நசரேயன் said...

/*
ஆறு வ.மு இருக்காங்க நிம்மல் யார சொல்ரான்.
*/

2030 தில் தெரியும்

S.R.ராஜசேகரன் said...

இதன் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால் அரசியலில் நன்கு தேர்ச்சிபெற்ற மாப்பிளை இடி விழுந்த இருளாண்டி-யை நமது கட்சி தேசிய போலப்பதவங்க முற்ப்போக்கு முன்னணி கழகத்தின் சார்பாக முதல்வர் பதவிக்கு முன்மொழிகிறேன்

மாப்பிள நீ சொன்ன அறிக்கை கொடுத்திட்டேன் ஆயிரம் பொற்காசுகள் என்னகே கொடுத்திரனும் ,அந்த "பலக்" பமிலாவையும்......
முதல்வர் வாழ்க!!!!
முதல்வர் வாழ்க!!!
முதல்வர் வாழ்க!!

நசரேயன் said...

/*
இதன் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால் அரசியலில் நன்கு தேர்ச்சிபெற்ற மாப்பிளை இடி விழுந்த இருளாண்டி-யை நமது கட்சி தேசிய போலப்பதவங்க முற்ப்போக்கு முன்னணி கழகத்தின் சார்பாக முதல்வர் பதவிக்கு முன்மொழிகிறேன்

மாப்பிள நீ சொன்ன அறிக்கை கொடுத்திட்டேன் ஆயிரம் பொற்காசுகள் என்னகே கொடுத்திரனும் ,அந்த "பலக்" பமிலாவையும்......
முதல்வர் வாழ்க!!!!
முதல்வர் வாழ்க!!!
முதல்வர் வாழ்க!!
*/
"பலக்" பமிலா கால் சீட் காலி இல்லை 2035 வரைக்கும்

ஜீவன் said...

2030லும் நமீதா உதாரணமா ? எங்கேயோ இடிக்குதே, ஜூனியர் நமீதாவாக இருக்குமோ ?அதானே?

நசரேயன் said...

/*
2030லும் நமீதா உதாரணமா ? எங்கேயோ இடிக்குதே, ஜூனியர் நமீதாவாக இருக்குமோ ?அதானே?
*/
அது நமிதா பேத்தி