Thursday, December 4, 2008

தஞ்சை மாவட்டம் அறிமுகம் தமிழும் தஞ்சையும் ---பாகம் 4

தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தமிழை வளர்ப்பதில் முன்னோடியாக இருந்தது தமிழர்களுக்கு புது செய்தியல்ல.

சில பிரபலமான தமிழறிஞர் பெயர்கள் .

தமிழறிஞர் மறைமலை அடிகள்
தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர்.
தமிழறிஞர் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார்.
தமிழறிஞர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்.(இவரது கொள்ளுப்பேரன் என்னோடு படித்தவர்)
வாழும் தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர்.

விடுபட்டவர்கள் நிறைய ------

போன்ற தமிழுக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள் வாழ்ந்த தஞ்சாவூர்க்காரர்கள் இன்னும் தங்களது தமிழ் உணர்வை இழக்கவில்லை என்பதை பாவேந்தன் பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளி, மழலையர் ஆங்கிலப்பள்ளி என்றெல்லாம் தமிழே சொல்லிக்கொடுக்காத பள்ளிக்கு கூட தமிழில் பெயர் வைத்து தங்கள் தமிழ்ப்பற்றை காட்டுவதில் வல்லவர்கள்.என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.

தஞ்சை பற்றி எழுத நிறைய ஆசை நேரமின்மையால் முடியவில்லை. மேலும் நான் ஒன்றும் புதிதாக எழுதப்போவதில்லை, மொக்கையாக ஆரம்பித்து வேறு வடிவில் வந்து நிற்கிறது.அடுத்த பகுதி நண்பர் ஜீவன் அவர்களை எழுத கேட்டிருக்கிறேன் விரைவில் அவரின் பதிவு.

தொடரும் .....


தொடுப்புகள்

தமிழ் பலகலைக்கழகம்/சங்கம்

http://karanthaitamilsangam.com/
http://www.tamiluniversity.ac.in/

உ.வே.சா
http://bsubra.wordpress.com/2007/01/29/tamil-vu-internet-university-digital-library-via-ponvizhi-ocr/
http://rajappa-musings.blogspot.com/2005/03/u-ve-swaminatha-iyer-tribute.html
http://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்

மறைமலை அடிகள்
http://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்

பொது
http://thamizthoughts.blogspot.com/2008/10/blog-post_12.html
http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://www.arusuvai.com/samayal/thanjai.html

22 comments:

நசரேயன் said...

/*
பாவேந்தன் பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளி, மழலையர் ஆங்கிலப்பள்ளி என்றெல்லாம் தமிழே சொல்லிக்கொடுக்காத பள்ளிக்கு கூட தமிழில் பெயர் வைத்து தங்கள் தமிழ்ப்பற்றை காட்டுவதில் வல்லவர்கள்
*/
என்ன கொடுமை சார் இது

நசரேயன் said...

/*
என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.
*/
அப்படி சொன்னாத்தான் நம்ம ஊரிலே எல்லாம் மரியாதை

பழமைபேசி said...

அடடா, அண்ணன் கிளம்பிட்டாரு போல இருக்கே?!

Anonymous said...

//நசரேயன் said...
/*
என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.
*/
அப்படி சொன்னாத்தான் நம்ம ஊரிலே எல்லாம் மரியாதை//

அதானே, தமிழ்நாட்டுல ஆங்கிலப்பள்ளில படிச்சாதான் மருவாதை

துளசி கோபால் said...

என் மகளுக்கும் தமிழ்ப் 'படிக்க'த் தெரியாது(-:

ஆனால் பேசினால் புரிந்து கொள்ளுவாள். அதே சமயம் தமிழில் பேசவும் தெரியும்:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இப்பதான் உங்க பதிவை பார்த்தேன்.

பிரபலங்கள் வரிசையில்,

திருவையாறு தியாகராஜா சுவாமிகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி(கலைஞர் மகன் அழகிரி அல்ல)

நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் இரா.நெடுஞ்செழியன்

கணித மேதை இராமானுஜம்

மக்கள் தலைவர் கருப்பையா மூப்பனார்

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(சுப்பிரமணியன்)

Anonymous said...

C.V.Raman

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பட்டுக்கோட்டை ஆர்.வெங்கட்ராமன் (முன்னாள் இந்திய குடியரசு தலைவர் , இவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்)

கபீஷ் said...

//வாழும் தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர்//
ஏனுங், மறைமலை அடிகள், உ.வே.சா
இவங்கல்லாம் தமிழ் அறிஞர் இல்லீங்களா? திரு மு.க வுக்கு மட்டும் தமிழறிஞர்னு பட்டத்தோட எழுதி சொம்படிச்சிருக்கீங்க, அவ்ளோ பயமா(என்ன மாதிரி)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பிரபலங்கள் வரிசையில்,

மாயூரம் வேதநாயகம் பிள்ளை
உவமைக் கவிஞர் சுரதா
காளமேகப் புலவர்
செம்மங்குடி சீனிவாசன்
மணலி திரு.சி.கந்தசாமி

குடுகுடுப்பை said...

Blogger கபீஷ் said...

//வாழும் தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர்//
ஏனுங், மறைமலை அடிகள், உ.வே.சா
இவங்கல்லாம் தமிழ் அறிஞர் இல்லீங்களா? திரு மு.க வுக்கு மட்டும் தமிழறிஞர்னு பட்டத்தோட எழுதி சொம்படிச்சிருக்கீங்க, அவ்ளோ பயமா(என்ன மாதிரி)//

நம் காலத்திலும் இருப்பவர். தமிழரிஞர் சொம்படிக்கவெல்லாம் போடவில்லை என்னையறியாமல் ஒட்டிக்கொண்டது.உங்கள் பின்னூட்டத்தையடுத்து அனைவருக்கும் சேர்த்துவிடுகிறேன்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நசரேயன்,பழமைபேசி

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

//நசரேயன் said...
/*
என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.
*/
அப்படி சொன்னாத்தான் நம்ம ஊரிலே எல்லாம் மரியாதை//

அதானே, தமிழ்நாட்டுல ஆங்கிலப்பள்ளில படிச்சாதான் மருவாதை//

தமிழையும் படிக்கட்டும்,அதுதான் நம் ஆசை.

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

என் மகளுக்கும் தமிழ்ப் 'படிக்க'த் தெரியாது(-:

ஆனால் பேசினால் புரிந்து கொள்ளுவாள். அதே சமயம் தமிழில் பேசவும் தெரியும்:-)

//
வாங்க துளசி டீச்சர்
நீங்கள் வசிப்பது நியூசிலாந்தில்,மகளுக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என வருத்தப்படுகிறீர்கள்,நானும் அதே நிலைமை,தமிழ் கற்றுக்கொடுக்க ஒரு இடம் இப்போது கண்டுபிடித்துவிட்டேன்.

ஆனால் வத்தலக்குண்டில் வளர்த்து தமிழ் தெரியாது என்று பெருமைப்பட்டால்.(::

குடுகுடுப்பை said...

வாங்க ஜோதிபாரதி

நான் தமிழரிஞர்களை மட்டுமே சேர்த்தேன், பிரபலங்கள் என்று ஒரு பதிவாக போட்டுவிடலாமா?

பழமைபேசி said...

"தாட் பூட் தஞ்சாவூர்" அப்பிடீன்னா என்ன? விளக்கங் குடுங்க!

CA Venkatesh Krishnan said...

ஏங்க கலைஞர் மட்டும் தான் தமிழறிஞரா, மத்தவங்க எல்லாம் தமிழரிஞரா. ஓ அவங்க எல்லாம் தமிழை அரிந்து அதாவது தமிழை ஆபரேஷன் பண்ணினவங்களா?

ஏங்க இப்படி பண்றீங்க. எல்லாருக்கும் வல்லின 'றி' போடுங்க..

குடுகுடுப்பை said...

இளைய பல்லவன் said...

ஏங்க கலைஞர் மட்டும் தான் தமிழறிஞரா, மத்தவங்க எல்லாம் தமிழரிஞரா. ஓ அவங்க எல்லாம் தமிழை அரிந்து அதாவது தமிழை ஆபரேஷன் பண்ணினவங்களா?

ஏங்க இப்படி பண்றீங்க. எல்லாருக்கும் வல்லின 'றி' போடுங்க..//

திருந்(த்)திட்டேன் பல்லவரே

CA Venkatesh Krishnan said...

//திருந்(த்)திட்டேன் பல்லவரே//

நன்றி குடுகுடுப்பையாரே !

Anonymous said...

Other famous writers:
Kalki Krishnamurthy
Balakumaran
KarichanKunju(Nanu Iyer character in Irumbu Kuthitiraigal by Balakumran was based on him)
M.V.Venkatram

FILM PERSONALITIES:
DIRECTOR K.BALACHANDER
DIRECTOR SANKAR
NADIGAR THILAGAM SIVAJI GANESAN(I believe that he hailed from Soorakkottai near PAttukottai)
ACTOR MOHINI
T.RAJENDAR
COMEDIAN THIYAGU
DIALOGUE WRITER;PRASANNAKUMAR
ANd many more......

K.G.Subbramanian

ரவி said...

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட செந்தழல் ரவி என்ற தமிழறிஞரை விட்டுவீட்டீர்களே ?

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட செந்தழல் ரவி என்ற தமிழறிஞரை விட்டுவீட்டீர்களே //

நீங்க தஞ்சாவூரா??