நெல்லை மாவட்டத்தைப் பத்திய போன பதிவிலே ஒரு முன்னுரையா பார்த்தேம், இந்த தடவை மாவட்டத்திலே இருக்கிற முக்கிய நகரங்கள் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டத்திலே, திருநெல்வேலி,தென்காசி, ஆலங்குளம், பாவூர் சத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை,கடையநல்லூர்,புளியங்குடி,பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் ,குற்றாலம்,பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம்,மணப்பாடு,நாங்குநேரி,சாத்தான்குளம்,,இதை தவிர நிறைய சின்ன நகரங்கள், கிராமங்கள் இருக்கிறது.
நான் ஊரு மேய்ந்த இடங்கள் எல்லாம் நெல்லை மாவட்டத்தின் வட பகுதிகளில் தான், அதனால அந்த இடங்களை முதல்ல சொல்லிகிறேன். நெல்லைக்கு சிறப்பு சேர்ப்பது காந்திமதி - நெல்லையப்பர் கோவில், இந்த கோவிலை பதிமூன்றாம் நூற்றண்டிலே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது,சிவன், பார்வதி கோவில் இது.தென்னகத்திலே மதுரைக்கு அடுத்த படியாக பழமையான நகரம், சில காலம் பாண்டியர்களின் தலை நகராகவும் இருந்ததாக கேள்வி(??).
இந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி??) .
இந்தியாவிலே கட்டப்பட்ட முதல் இரண்டு அடுக்கு பாலம்(?) நெல்லை சந்திப்பிலே உள்ளது.
தென் இந்தியாவில் உள்ள சிறந்த அறிவியல் அருங்காட்சியகங்களில் நெல்லையில் இருப்பதும் ஒன்று, நான் பள்ளியில் படிக்கும் போது கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஒரு முறை சொன்றுள்ளேன், அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.
பாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.
பாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு தொல் பொருள் துறையிடம் கேட்டாலும் விடை கிடைப்பது சந்தேகமே, அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.முருகன் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயம் சுமார் 16 ம் நூற்றாண்டிலே கட்டப்பட்டது.சாராள் டக்கேர், ஜான்ஸ், சேவியர் கல்லூரிகள் எல்லாம் 100 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
என்னதான் மாணவர் நகரம், ஆக்ஸ்போர்ட் ன்னு சொன்னாலும் பாளையம் கோட்டையை மேலும் அழகு சேர்ப்பது இங்கு உள்ள மத்திய சிறை, பல வரலாற்று தலைவர்களையும், வாலாட்டுற தலைவர்களுக்கும் மாமியார் வீடாக திகழ்ந்து இருக்கிறது, திகழ்கிறது,திகழும்.
வரலாற்று தலைவர்கள் - பாரதியார், கலைஞர்(??)
வாலாட்டுற தலைவர்கள் - என்னை மாதிரி நிறைய பேரு
விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனை நிலங்களாக மாறிக்கொண்டு வருகிறது, ஆனால் இன்னும் விவசாயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மழை பெஞ்சா நெல்லு
பெய்யலைன்னா எள்ளு
தகவலை சுட்டு
சொல்லிபுட்டேன் இட்டு
தொட்டதை சொன்னேன்
விட்டதை சொல்லுங்க
இப்போதைக்கு இடைவேளை
சந்திப்போம் அடுத்த கடைவேளை
20 comments:
வணக்கம்! நான் மறுபடியும் வர்றேன்!!
//மழை பெஞ்சா நெல்லு
பெய்யலைன்னா எள்ளு//
தண்ணி வந்தா நெல்லு , இல்லாட்டி எள்ளு தஞ்சையில்.
//
பாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.//
உண்மை இவ்வளவு இருந்தும் வேலைக்கு சென்னை வரவேண்டும் இந்த அவலம் ஏன்?
//இந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி??) .//
யாகத்துல பணிஞ்சு, வாடகையக் கட்டிட்டாங்ளா? அட ச்சே, என்னோட பேருக்கே களங்கம்யா....
கொத்சு, சீக்கிரம் வாங்க, நிறைய எழுத்துப் பிழை வியாபாரத்துக்கு வந்திருக்கு இங்க!
/*
கொத்சு, சீக்கிரம் வாங்க, நிறைய எழுத்துப் பிழை வியாபாரத்துக்கு வந்திருக்கு இங்க!
*/
ரெண்டு கண்டு பிடிச்சி திருத்தி புட்டேன்
//அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.
//
நீங்க நியாயஸ்தங்க, உண்மைய ஒத்துக்கறீங்க :-)
//அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.//
இது பாயிண்ட் :-):-)
சாகித்ய அகடமி விருது பெற்ற தி.க.சி., அவரது மகன் வண்ணதாசன் (கல்யாண்ஜி) வசிப்பது நெல்லையில்..
ஆமாம்..எந்த கலைஞர்?
//நாணயஸ்தர்கள் (பழமைபேசி??) .//
இதென்ன சிலேடையா? என்னைக் கலாய்க்குறீங்களா, இல்ல நெசமாவே அதுக்கு விளக்கங் கேக்குறீங்களா?? ஒன்னும் புரியலை!
இதுக்குத்தான் பாலத்துக்கடியில ஒக்காந்து தண்ணி அடிக்கிறதும், பீடி குடிக்கிறதையும் விட்டுடுங்கன்னு சொல்லுறது.
நாணயஸ்தர்கள் -- நாணயத்தைப் போல மதிப்புள்ளவங்க
நறுக்னு... நச்சுனு.... சூப்பர்.
வாங்க குடுகுடுப்பை, பழமைபேசி
/*
//அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.
//
நீங்க நியாயஸ்தங்க, உண்மைய ஒத்துக்கறீங்க :-)
*/
உங்களுக்கு தெரியுது ஊருக்கு தெரியலையே
/*
சாகித்ய அகடமி விருது பெற்ற தி.க.சி., அவரது மகன் வண்ணதாசன் (கல்யாண்ஜி) வசிப்பது நெல்லையில்..
ஆமாம்..எந்த கலைஞர்?
*/
ஐயா நம்ம கலைஞர் கருணாநிதி தான்
/*
நறுக்னு... நச்சுனு.... சூப்பர்.
*/
வாங்க மகேஷ்
\\\பாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு\\\
அதை தான் சிறைச்சாலை யாக மாத்திட்டாங்கன்னு நினைக்கிறேன்
\\\உண்மை இவ்வளவு இருந்தும் வேலைக்கு சென்னை வரவேண்டும் இந்த அவலம் ஏன்?\\\
இன்னைக்கு சென்னைல இருக்க அநேக தொழில் அதிபர்கள் நெல்லை ,தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவங்கதான் அவங்களால சென்னைக்கு பெருமைதான்
S.R.ராஜசேகரன் said...
\\\உண்மை இவ்வளவு இருந்தும் வேலைக்கு சென்னை வரவேண்டும் இந்த அவலம் ஏன்?\\\
இன்னைக்கு சென்னைல இருக்க அநேக தொழில் அதிபர்கள் நெல்லை ,தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவங்கதான் அவங்களால சென்னைக்கு பெருமைதான்
//
இது பத்தி நானே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன், நாநா முடிக்கட்டும்னு இருக்கேன்
வன்மையா கண்டிகறேன். ஏன்னா புளியங்குடிய யேசுவடியான் (நசரேயன் ஒரிஜினல்) நகர்னு மாத்தி ரொம்ப நாள் ஆச்சு.
காரணம் நசறேயனை அணுகவும்
புரட்சிப்புயல் வைகோவும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவரை விட்டு விட்டீர்களே!!!
Post a Comment