Tuesday, December 2, 2008

தஞ்சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் - பாகம் 2

ஒரு வேண்டுகோள் என்னால் தஞ்சை பற்றிய முழு செய்தியையும் கொண்டுவரமுடியாது, இக்குழுமத்தில் விரும்பினால் தற்காலிகமாக இனைந்து எழுதவேண்டுகிறேன்.
"நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா" பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தன் வயலுக்கு தண்ணீர் விடாத பணக்கார விவசாயியை நினைத்துக்கொண்டு அடுத்த நாள் வயலில் பார்த்த போது வயல் நிரம்பி இருந்தது, காரணம் ஒரு நண்டு வரப்பில் இட்ட ஓட்டையில் மேலே உள்ள பணக்காரர் வயலில் இருந்து தண்ணீர் கவிஞர் வீட்டு வயலில் பாய்ந்தது அப்போது பாடியதாக சொல்லும் பாட்டுதான் "நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா"

மேறகண்ட பாடலை போலியாக உண்மையாக்க மண்வெட்டியின் நீண்ட கைப்பிடியை வைத்து அடுத்தவர் வரப்பில் நண்டு போல் ஓட்டை போட்டு தன் வயலுக்கு திருட்டு தண்ணி பாய்ச்சும் உத்திராபதிகளும் இங்குண்டு, அதிலும் அந்த உத்திராபதி ஓட்டையை போட்டுவிட்டு அந்த வயல்காரர் வயலுக்கு சென்று விடாமல் வீட்டில் வந்து பேச்சும் கொடுத்துக்கொண்டிருப்பார்.

ராகவன் போன பதிவின் பின்னூட்டத்தின் சொன்னது போல் தஞ்சை மண்வெட்டியின் பாகம் இலேசாக இருக்கும்,ஏனெனில் இதன் பயன் வரப்பு வெட்டுவதற்கும், மடை கட்டுவதுமே ஆகும். பெரும்பாலும் மணல் சார்ந்த வயல்களே, பாறைகள் கிடையாது, (ஒருங்கினைந்த தஞ்சையில் மலையே கிடையாது ஆனால் மலைகளால் கட்டப்பட்ட பெரிய கோவில் உண்டு.)

கலை/தமிழ் வளர்ப்பிலும் இவர்கள் ஆர்வம் காட்டியவர்களே என்றால் அது நக்கல் இல்லை. ராசராசன் காலத்தில் இருந்தே சிவ வழிபாட்டுத்தளங்கள் அதை சார்ந்த கோவில்கள் உருவாக்கி சைவத்தமிழ் வளர்த்திருக்கின்றனர்.அரசர்கள் முதல் விவசாயிகள் வரை வெத்திலை மென்று கலை வளர்க்க பொருள் உதவி செய்துள்ளனர்.

திருவையாரு தியாகராஜ கீர்த்தனை இந்த ஊரின் கலையார்வத்தின் ஒரு சான்று மறைந்த மூப்பனார் அவர்கள் பான்பராக் போட்டுக்கோண்டே இதன் கமிட்டி தலைவராக இருந்தார், இப்போ வாசன் வெத்திலை போட்டபடி தலைவரா இருக்கார்னு நெனக்கிரேன்.

இதனை எதிர்த்து மக்கள் கலை இலக்கிய கழகமும் கர்நாடக சங்கீதம் தெருக்கூத்தின் திருட்டே என கலை வளர்ப்பார்கள். மொத்தத்தில் இரண்டும் வளர்ந்தது, உலகம் சுருங்குவதால்,வயிறு சுருங்குவதால் இனி கலையும் வேகமாக சுருங்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரக தலங்கள் அனைத்தும் (காரைக்கால் தவிர) இந்த மாவட்டத்திலே வரும் அனைத்தும் சிவாலயங்கள் நவக்கிரக வழிபாடு சிவ வழிபாட்டை விட அதிகம் இப்போது, சரியான சாலை வசதிகள் செய்து தரப்பட்டால் பக்தர்களுக்கும் வசதி சுற்றுலா வருமானமும் வரும், தேவேகவுடா இங்கே அடிக்கடி வந்து விடுர காவிரி தண்ணிய குடிச்சுட்டு போயி பிரதமர் கனவில பெங்களூர்ரூல தூங்கிரார்.

தஞ்சை நகரம் முதல் மாயூரம் வரை ஒரு காலத்தில் பெரும்பாண்மையாக இருந்த ஐயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து அமெரிக்கா வரை சென்று வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள். இவர்களின் அறிவை சரியான படி உபயோகித்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்படும் படி ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஏன் முடியவில்லை?.இதில் இழப்பு அவர்களுக்கல்ல.

இந்த இடப்பெயர்ச்சி தஞ்சை விவசாயியையும் , விவசாய தொழிலாளார்களையும் இப்போது தாக்க ஆரம்பித்து இருக்கிறது, கடைசியில் அங்கே மிஞ்சப்போவது சிதிலமடைந்த சிவன் கோவில்கள் மட்டுமா?

கல்வி என்று எடுத்துக்கொண்டால் இந்த பகுதியில் நிறைய பேரு பட்டப்படிப்பு படிச்சதுக்கு பூண்டி கல்லூரிதான் காரணம்.இந்த கல்லூரி இது வரை கல்வியை வியாபாரம் ஆக்காத கல்லூரி எனச்சொல்லலாம்.கல்விக்காவலர் துளசி அய்யா வாண்டையார்(இவரைப்பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் உள்ளது) என்றால் அதில் கொஞ்சமும் தவறில்லை. இவர்கள் இந்த கல்லூரியை இன்னும் நல்ல முறையில் வளர்த்திருக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

இவர்களின் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் உள்ளது, பெரும்பாலும் இங்கே பத்தாவதில் இரண்டுக்கு மேற்பட்ட மார்க் சீட்டு வாங்கியவனுக்கு தான் இடம் கொடுப்பார்கள், 400க்கு மேல் மார்க் வாங்கியவனை நன்கொடை வாங்கி சேர்த்து 100% ரிசல்ட் (3 பாடத்துக்கு கட்டாய டியூசன் வைத்து )கொடுப்பவர்கள் நல்ல பள்ளியா? யாரும் சேர்த்துக்க்கொள்ளாதவனை சேர்த்து 50% ரிசல்ட் வாங்க வைப்பவர்கள் நல்ல பள்ளியா பார்வையாளர்களின் கருத்துக்கு விடுகிறேன்.

மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திராவும் கல்விச்சேவையை நன்றாகவே அளிக்கிறது.மாயவரம் ஏ.வி.சி கல்லூரி,கும்பகோணம் மற்றும் திருவையாறு கலை/ஒவியக் கல்லூரிகளும் அடக்கம்.

வீரம் என்றால், வாய்ப்பேச்சு வீரர்கள், இம்மாவட்டத்தில் சாதிச்சண்டை குறைவின் காரணமும் இதுவே, சாளுக்கிய சோழ வம்சம் வந்ததன் பின் ஒரு வகையான கலப்பின் சோழர்கள் ஆனதால் கொஞ்சம் சகிப்பு தன்மை கூடுதலோ? சண்டை என்றால் முதலில் ஓட்டம் பிடிப்பவர்கள் இவர்களாத்தான் இருக்கும்.ஆனாலும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு, இன்னொன்று பல்லவப்பேரரசு பாண்டிய நாடு பேரரசே அல்ல என்று நக்கல் பேசுவோம்.என்னை யாரவது பின்னூட்டத்தில் அடிப்பேன் என்று சொன்னால் கூட நான் ஒடி விடுவேன், பெரிய ஓட்டப்பந்தய வீரனாக்கும்.

சமுதாய சீர்திருத்தம் பெரியாருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்த மாவட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இந்தக்கால சீர்திருத்த திருமணம் அவன் ஒழிக இவன் ஒழிக என்று கூறி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற நிலையில் உள்ளது சாபக்கேடு.சாதியக்கட்டுமானங்கள் இன்னும் உயிரோடு இருப்பினும் அதன் வீரியம் குறைவே, பெரியாரும் இதற்கு ஒரு காரணம்.

இதன் தொடர்ச்சியை மூன்றாவது பாகத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

35 comments:

Anonymous said...

FEELING NOSTALGIC.
Would you also touch upon
THE INFLUENCE OF MARATHA RULERS(Some road/ area names in Tanjore- ABJANNA VATTARAM!!)
THE GREAT KUMBAKONAM DEGREE COFFEE( COPPY!!)
THIRUVAIYARU ASOKA HALWA
MAYAVARAM KALIAKUDI HOTEL

K.G.SUBBRAMANIAN

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு..மொக்கை பதிவு அல்ல..

மறுபடியும் வர்ர்றேன்

siva gnanamji(#18100882083107547329) said...

தம்புடு, உ.வே.சா மறந்திடப் போறீங்க

siva gnanamji(#18100882083107547329) said...

ராஜகிரி வெற்றிலை....
கும்பகோணம் கொளுந்து வெற்றிலை..

Anonymous said...

மிக அருமையான பதிப்பு.

கும்பகோணம் மகாமகம், பித்தளை, ஈயப்பாத்திரத்தை பற்றி எழுத மறந்து விடாதீர்கள்.

திருவாரூர் தேர், கமலாலயம் பற்றியும் சொல்லுங்கள்.

சரஸ்வதிக்கு கோயில் உள்ளதும் தஞ்சை மாவட்டம் தான்.

நாடோடி இலக்கியன் said...

நீங்களும் பூண்டியில்தான் படித்தீர்களா?

Anonymous said...

கரந்தை தமிழ்ச்சங்கம் தஞ்சையின் சிறப்புகளில் ஒன்று. விபரங்களுக்கு

http://karanthaitamilsangam.com/varalaru.htm

கோவி.கண்ணன் said...

//தஞ்சை நகரம் முதல் மாயூரம் வரை ஒரு காலத்தில் பெரும்பாண்மையாக இருந்த ஐயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து அமெரிக்கா வரை சென்று வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள். இவர்களின் அறிவை சரியான படி உபயோகித்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்படும் படி ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஏன் முடியவில்லை?.இதில் இழப்பு அவர்களுக்கல்ல.//

தஞ்சாவூர் (மாவட்ட) பார்பனர் வீட்டில் மற்ற பார்பனர்கள் சம்பந்தம் வச்சிக்க மாட்டாங்க, 'அவால்லாம் ஆச்சாரம் அனுஸ்டானும் னு ரொம்ப கராராக நடந்துப்பா' ன்னு சொல்லுவா சாரி சொல்லுவாங்க

//நல்ல வேலை கீழத்தஞ்சையினர் தமிழ் வளர்க்கவில்லை, இல்லையெனில் எம்பளது(80) அப்படியெல்லாம் நாம் படிக்கவேண்டியிருக்கும்.தொம்ளது(90) இல்லன்னு நெனக்கிரேன்.//

கிழத்தஞ்சை என்பது சொல்வழக்கு மட்டுமே, தஞ்சை என்றால் நாகை, காவேரி பூம்பட்டினம், வேதாரண்யம் உள்ளடக்கிய பகுதிகளே. இராஜக்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்கள் இங்கு உண்டு. நாகை டவுனில் மட்டுமே பெரிய அளவு 2 சிவன் கோவில்களும் 5 சிரிய அளவில் 5 சிவன் கோவில்களும் உள்ளன. நாகையும், பூம்புகாரும் சோழர்களின் துறைமுகமாகா இருந்தன. நாகைக்கு, திருவாரூருக்கு ஒரத்த நாட்டிற்கு என தனித்தனியாக தமிழ் வளர்ப்பவர்கள் வேண்டுமா ?

கலைஞர் மறைமலையடிகளாரெல்லாம் எங்க பகுதி தான் சாரே.

அபி அப்பா said...

//நல்ல வேலை கீழத்தஞ்சையினர் தமிழ் வளர்க்கவில்லை, இல்லையெனில் எம்பளது(80) அப்படியெல்லாம் நாம் படிக்கவேண்டியிருக்கும்.தொம்ளது(90) இல்லன்னு நெனக்கிரேன்.//

if you dont know the histry of kezha thanjai district just leave it.

abiappaa

அமிர்தவர்ஷினி அம்மா said...

தஞ்சை பெரிய கோவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களுமே புதியது.

நன்றி மொக்கை பதிவிடாததற்கு.

புதுப்பாலம் said...

ரொம்ப பழமை வாய்ந்த குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி (South indian cambridge), குடந்தை ஒவிய கல்லூரி, பட்டு நெசவுத் தொழில் இதுவும் தஞ்சை மாவட்டத்தின் சிறப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா, சவ்தி அரேபியா

மன்மதக்குஞ்சு said...

//நல்ல வேலை கீழத்தஞ்சையினர் தமிழ் வளர்க்கவில்லை, இல்லையெனில் எம்பளது(80) அப்படியெல்லாம் நாம் படிக்கவேண்டியிருக்கும்.தொம்ளது(90) இல்லன்னு நெனக்கிரேன்//...//சண்டை என்றால் முதலில் ஓட்டம் பிடிப்பவர்கள் இவர்களாத்தான் இருக்கும்.ஆனாலும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு, இன்னொன்று பல்லவப்பேரரசு பாண்டிய நாடு பேரரசே அல்ல என்று நக்கல் பேசுவோம்.என்னை யாரவது பின்னூட்டத்தில் அடிப்பேன் என்று சொன்னால் கூட நான் ஒடி விடுவேன், பெரிய ஓட்டப்பந்தய வீரனாக்கும்//...// இந்தக்கால சீர்திருத்த திருமணம் அவன் ஒழிக இவன் ஒழிக என்று கூறி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற நிலையில் உள்ளது// ஆஹா.. ஆஹா.. பேஷ் .. பேஷ்... (வாயில் வெத்திலை செல்லத்தை அடக்கிக்கொண்டே உசிலைமணி மாதிரி சொல்லவும்). எதைச்சொல்ல எதைவிட. தஞ்சாவூர் காஃபி, கும்பகோணம் கொசு & வெற்றிலை & மகாமகம் & பித்தளை எல்லாம் வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஊர்ல உள்ள எல்லா தெருவுக்கும் எல்லா பஸ்ஸும் வரனும்னு ரோடல்லாம் நல்லா வளைஞ்சு நெளிஞ்சு போகும்.

பழமைபேசி said...

அண்ணே, நான் இன்னும் படிக்கலை! மறுபடியும் வந்து படிக்கிறேன்!!

பழமைபேசி said...

அண்ணே, தஞ்சாவூர் எந்தப் பக்கம் இருக்குதுன்னு கூடத் தெரியாத எனக்கு, பதிவு பயனுள்ளதாக இருந்தது.

குடுகுடுப்பை said...

அபி அப்பா said...

//நல்ல வேலை கீழத்தஞ்சையினர் தமிழ் வளர்க்கவில்லை, இல்லையெனில் எம்பளது(80) அப்படியெல்லாம் நாம் படிக்கவேண்டியிருக்கும்.தொம்ளது(90) இல்லன்னு நெனக்கிரேன்.//

if you dont know the histry of kezha thanjai district just leave it.

abiappaa

//
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
நீக்கிவிட்டேன் அந்த பகுதியை.எனக்கு தெரிந்த சிலர் பேசும் பேச்சுத்தமிழை வைத்து நகைச்சுவையாக எழுதியது.மற்றபடி எனக்கு வரலாறு தெரியாது.

பழமைபேசி said...

இலக்கியங்கள்ல படிச்ச வரைக்கும், சோழ நாட்டை மிஞ்ச யாரும் இல்லை.
எல்லா விதத்திலும்!

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

//தஞ்சை நகரம் முதல் மாயூரம் வரை ஒரு காலத்தில் பெரும்பாண்மையாக இருந்த ஐயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து அமெரிக்கா வரை சென்று வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள். இவர்களின் அறிவை சரியான படி உபயோகித்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்படும் படி ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஏன் முடியவில்லை?.இதில் இழப்பு அவர்களுக்கல்ல.//

தஞ்சாவூர் (மாவட்ட) பார்பனர் வீட்டில் மற்ற பார்பனர்கள் சம்பந்தம் வச்சிக்க மாட்டாங்க, 'அவால்லாம் ஆச்சாரம் அனுஸ்டானும் னு ரொம்ப கராராக நடந்துப்பா' ன்னு சொல்லுவா சாரி சொல்லுவாங்க

//நல்ல வேலை கீழத்தஞ்சையினர் தமிழ் வளர்க்கவில்லை, இல்லையெனில் எம்பளது(80) அப்படியெல்லாம் நாம் படிக்கவேண்டியிருக்கும்.தொம்ளது(90) இல்லன்னு நெனக்கிரேன்.//

கிழத்தஞ்சை என்பது சொல்வழக்கு மட்டுமே, தஞ்சை என்றால் நாகை, காவேரி பூம்பட்டினம், வேதாரண்யம் உள்ளடக்கிய பகுதிகளே. இராஜக்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்கள் இங்கு உண்டு. நாகை டவுனில் மட்டுமே பெரிய அளவு 2 சிவன் கோவில்களும் 5 சிரிய அளவில் 5 சிவன் கோவில்களும் உள்ளன. நாகையும், பூம்புகாரும் சோழர்களின் துறைமுகமாகா இருந்தன. நாகைக்கு, திருவாரூருக்கு ஒரத்த நாட்டிற்கு என தனித்தனியாக தமிழ் வளர்ப்பவர்கள் வேண்டுமா ?

கலைஞர் மறைமலையடிகளாரெல்லாம் எங்க பகுதி தான் சாரே.//

கலைஞர் இல்லாத தஞ்சையா, கண்டிப்பாக அடுத்த பகுதியில். மற்றபடி சாதிய அடையாளத்தையும் நான் தவிர்திருக்கலாம் என நினைக்கிறேன்.அந்தப்பகிதியை நீக்கிவிட்டேன், அது நகைச்ச்சுவை அல்ல என புரிந்துகொண்டேன்

நசரேயன் said...

தலைப்பிலே உள்ள மொக்கையை எடுத்தால் நல்லது

நசரேயன் said...

இவ்வளவு விஷயம் இருக்கா தஞ்சாவூர்ல, இன்னும் நிறைய சொல்லுங்க

நசரேயன் said...

/*
தன் வயலுக்கு திருட்டு தண்ணி பாய்ச்சும் உத்திராபதிகளும் இங்குண்டு, அதிலும் அந்த உத்திராபதி ஓட்டையை போட்டுவிட்டு அந்த வயல்காரர் வயலுக்கு சென்று விடாமல் வீட்டில் வந்து பேச்சும் கொடுத்துக்கொண்டிருப்பார்.
*/
அதை நீங்க சொல்லி தெரியணும்ன்னு அவசியம் இல்லை,உங்க பதிவை பார்த்தாலே தெரியுது

புதுகை.அப்துல்லா said...

கோவி.கண்ணன் said...
தஞ்சாவூர் (மாவட்ட) பார்பனர் வீட்டில் மற்ற பார்பனர்கள் சம்பந்தம் வச்சிக்க மாட்டாங்க, 'அவால்லாம் ஆச்சாரம் அனுஸ்டானும் னு ரொம்ப கராராக நடந்துப்பா' ன்னு சொல்லுவா சாரி சொல்லுவாங்க
//

அண்ணே அது இல்ல காரணம். மற்ற பகுதி பிராமணர்களைவிட தஞ்சை மாவட்ட பிராமணர்களுக்கு சற்று கோபம் அதிகமாக இருக்கும். காரணம் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக விளங்கியது கள்ளர்களும், பிராமணர்களும் தான். இருவரும் ஒன்றேடு ஒன்று கலந்து பழகியதில் அவர்களின் கள்ளர்களின் கோப குணத்தில் கொஞ்சம் பிராமன சமுதாயத்தினரிடம் ஒட்டிக்கொண்டு விட்டது.மிகவும் அமைதியான பிற மாவட்ட பிராமனர்கள் கோபக்கார தஞ்சை பிராமணர்களிடம் சம்மந்தம் வைக்க சிறிது தயங்குவர் :)

//வீரம் என்றால், வாய்ப்பேச்சு வீரர்கள், இம்மாவட்டத்தில் சாதிச்சண்டை குறைவின் காரணமும் இதுவே, சாளுக்கிய சோழ வம்சம் வந்ததன் பின் ஒரு வகையான கலப்பின் சோழர்கள் ஆனதால் கொஞ்சம் சகிப்பு தன்மை கூடுதலோ?
//

இதற்கும் அதுதான் காரனம்... பிராமணர்களோடு பழகிபழகி தஞ்சை மாவட்ட முக்குலத்து சமுதாயத்திற்கும்,பிற சமுதாயத்திற்கும் அவர்களின் நிதானம் ஒட்டிகொண்டு விட்டது. தென்மாவட்ட முக்குலத்தோர் ஏதேனும் பிரச்சனை எனறால் முதலில் அருவாளை தூக்குவார்கள். ஆனால் தஞ்சை மாவட்ட முக்குலத்தோர் ஏதேனும் பிரச்சனை என்றால் பேனா தூக்குவார்கள்...பெட்டிஷன் போட :)

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
அ.வீரைய்யா வண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (பூண்டி கல்லூரி)யிலத்தான் நானும் படிச்சேன்.
உண்மையிலயே கல்விய இன்னைய வரைக்கும் வியாபாரமாக்காத கல்லூரி அது.
நான் 1996 - 1999 வரைக்கும் பி.எஸ்.சி இயற்பியல் படிக்க மொத்தமா மூணு வருசத்துக்கும் சேர்த்து கல்லூரிக்கு கட்டுண கட்டணம் 3500 ரூபா தான். கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கு கூட குறைந்த கட்டணம் தான். நானும் உங்களைப் போலவே இன்னும் இந்த கல்லூரிய நல்ல நடத்தலாம்னு நினைச்சிருக்கேன்.
இப்ப கல்லூரியில நிறைய மாற்றங்கள் வந்துருச்சு. ரொம்ப கடுமையான விதிமுறைகள், மாணவர்கள் அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாது. நல்ல பல முன்னேற்றங்கள் இப்ப நடந்துகிட்டு இருக்கு.

என் கல்லூரியப் பத்தி குறிப்பிட்டமைக்கு ரொம்ப நன்றிங்ணா.

ஜோசப் பால்ராஜ் said...

நம்ம கல்லூரியப் பத்தி ஒரு பதிவு கட்டாயம் எழுதுறேன். எழுதிட்டு உங்களுக்கு லிங்க் அனுப்புறேன்.

குடுகுடுப்பை said...

வாங்க K.G.SUBBRAMANIAN
முடிஞ்ச அளவுக்கு எழுதறேன்.

வாங்க ஜீவன் கருத்த சொல்லுங்க.
வாங்க siva gnanamji.
கொஞ்சம் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்க, பதிவுல சேத்துருவோம்

குடுகுடுப்பை said...

வாங்க இராகவன், நைஜிரியா
மிக அருமையான பதிப்பு.

//கும்பகோணம் மகாமகம், பித்தளை, ஈயப்பாத்திரத்தை பற்றி எழுத மறந்து விடாதீர்கள்.

திருவாரூர் தேர், கமலாலயம் பற்றியும் சொல்லுங்கள்.

சரஸ்வதிக்கு கோயில் உள்ளதும் தஞ்சை மாவட்டம் தான்.//

முடிந்தவரை உங்கள் பின்னூட்ட்ங்களை பதிவாக்குகிறேன்

குடுகுடுப்பை said...

வாங்க நாடோடி இலக்கியன்

// நீங்களும் பூண்டியில்தான் படித்தீர்களா?//

இல்லை.

குடுகுடுப்பை said...

வாங்க கமலா

கரந்தை தமிழ்ச்சங்கம் தஞ்சையின் சிறப்புகளில் ஒன்று. விபரங்களுக்கு

http://karanthaitamilsangam.com/varalaru.htm

//

தொடுப்புக்கு நன்றி

குடுகுடுப்பை said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா

// தஞ்சை பெரிய கோவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களுமே புதியது.

நன்றி மொக்கை பதிவிடாததற்கு.//

எழுத வேண்டாங்கறீங்க

குடுகுடுப்பை said...

வாங்க துப்பாலம்

ரொம்ப பழமை வாய்ந்த குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி (South indian cambridge), குடந்தை ஒவிய கல்லூரி, பட்டு நெசவுத் தொழில் இதுவும் தஞ்சை மாவட்டத்தின் சிறப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா, சவ்தி அரேபியா//

முடிந்தவரை சேர்க்கபார்க்கிறேன்.

குடுகுடுப்பை said...

வாங்க
மன்மதக்குஞ்சு
பழமைபேசி

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
அப்துல்லா
மற்றும் பால்ராஜ்

நம்ம கல்லூரியப் பத்தி ஒரு பதிவு கட்டாயம் எழுதுறேன். எழுதிட்டு உங்களுக்கு லிங்க் அனுப்புறேன்.//

கண்டிப்பா எழுதுங்க, ஆனா பூண்டி கல்லூரி மாணவன் இல்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பலரை தமிழ் புலவராக ஆக்கிய தமிழ்க்கல்லூரி (மஹாராஜா'ஸ் காலேஜ்) திருவையாறில் உள்ளது.ஔவை நடராஜன் போன்றோர் தலைமைப்பொறுப்பை எற்றவர்கள்.

மாயவரத்தான் said...

Wherez the world famous A.V.C. college?!

குடுகுடுப்பை said...

மாயவரத்தான்.... said...

Wherez the world famous A.V.C. college?!//

நிறைய நான் சேர்க்கவில்லை.பூண்டி கல்லூரி எனக்கு அதிகம் தெரிந்ததால் சேர்த்தேன். கருத்துக்கு நன்றி.

Unknown said...

உக்கும்.... நானும்தான் தஞ்சாவூரான்னு பேர வச்சுகிட்டு தஞ்சாவூரப் பத்தி எதுவுமே எழுதல :(

நல்ல எழுத்து நடை உங்களுக்கு.

//தன் வயலுக்கு திருட்டு தண்ணி பாய்ச்சும் உத்திராபதிகளும் இங்குண்டு, அதிலும் அந்த உத்திராபதி ஓட்டையை போட்டுவிட்டு அந்த வயல்காரர் வயலுக்கு சென்று விடாமல் வீட்டில் வந்து பேச்சும் கொடுத்துக்கொண்டிருப்பார்.//

அட, பேரெல்லாம் எப்பிடித் தெரியும் உங்களுக்கு? அந்த உத்திராபதி இது மாதிரி நெறைய விஷயம் செஞ்சுருக்கார். மறைந்து விட்டதால், அவரைப் பத்தி பேசுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. விட்டுடறேன் :)