Wednesday, October 22, 2008

என்னது கவருமெண்டு பேங்குக்கு பணம் தருதா?

யாத்தே... கவருமெண்டே பேங்குக்கெல்லாம் பணம் தருதாமில்ல தெரியுமா?

என்னது கவருமெண்டு பேங்குக்கு பணம் தருதா?

ஆமா அப்பத்தா... வீட்டுக்கடனு வாங்கி கட்ட முடியலன்னா அதுக்கும் கவருமெண்டே பணம் தருதாம்.

அப்படி போடு. இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சா வீட்டு கடனுன்னு சொல்லி ரெண்டு லோன கீன போட்டு வச்சிருப்பனே. அப்ப நம்மூரு பாண்டியன் பேங்குக்கும் பணம் தருவாகளா?

அது எனக்கு தெரியலியேப்பு. வா நம்ம மேனேசரு மகராசன கேப்போம்.

-----

மவராசா... ஏதோ பேங்குக்கெல்லாம் பணம் தராகளாமுல்ல?

என்னது பேங்குக்கு பணம் தரறாங்களா?

என்ன சாரு.. இத்தினி வருசமா தாயி புள்ளய பழகறோம். என்கிட்டியே ஒண்ணுந் தெரியாத மாதிரி பேசுறீகளே?

நெசமா எனக்கு தெரியலீங்க.

ஆத்தி... பணம் வந்தா ஊருக்குள்ள கொஞ்சம் கொடுங்கப்பு. மாரியாத்தாக்கு பொங்க வச்சி வருசம் ரெண்டாச்சு சாமி. ஏதாச்சும் விவசாய கடன்னு சொல்லி எங்கள மாதிரி ஏழ பாழைகளுக்கு கடனா கொடுங்கப்பு. உங்க பேர சொல்லி கிடா வெட்டி பொங்க வச்சா அந்த மாரியாத்தா அருளுல உங்க குடும்பம் நல்லா இருக்கும்.

என்னங்க சொல்றீங்க யாரு பேங்குக்கு பணம் தரா?

அதாம் கவருமெண்டே எல்லா பேங்குக்கும் பணம் தருதாமுல்ல? வீட்டுக் கடன் வாங்குனவகளுக்கெல்லாம் தள்ளுபடியாம்ல?

ஐயோ அது அமெரிக்காவிலயும் ஐரோப்பாவிலயும் தான். நம்மூருல இல்ல.

அட அப்படியா? நம்மூரு விவசாயக்கடன தள்ளுபடி செஞ்ச மாதிரி அங்கன வீட்டுக் கடன் தள்ளு படி தாராகளா?

அது கடன் தள்ளுபடி எல்லாம் இல்ல. பேங்கு திவாலாகாம இருக்க பேங்குக்கு தான் பணம் தாராக.

பேங்கெல்லாம் அந்த ஊருகள்ள அப்ப வீடு வாங்கி இருக்காப்பு?

இல்ல. பேங்கு வீடு வாங்கல. பேங்குல வீடு வாங்க நம்மள மாதிரி ஆளுக கடன் தான் வாங்கி இருக்காங்க.

அப்ப கடன் வாங்கினவங்களுக்கு தானே தள்ளுபடி தரணும்? பணம் நெறய வச்சிகிட்டு வட்டிக்கு கடன் கொடுத்தவுகளுக்கு எதுக்கு இன்னும் பணம் தரணும்?

இதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது என தெரியாமல் மேனேசர் தலை சுற்றி மயங்கி விழுகிறார்.

9 comments:

விஜய் ஆனந்த் said...

ஆகா...

பரிசல்காரன் said...

இது எத்தனை நாளா நடக்குது?

குடுகுடுப்பை said...

எனக்கு யாராவது கொஞ்சம் கடன் கொடுங்கப்பா

நசரேயன் said...

எனக்கும் கடன் கொடுங்கோ

Anonymous said...

Nice way of expressing the current situation. Please research more on this and explain more in your blog. Not only for the mortgages, Indian government also giving money to banks to increase lending power of banks to common public(of course for credit with interest only).
Also they are planning to bailout some of the companies in India.

Anonymous said...

Thats why still elders in our home keep on insisting about saving money in a small way every month.Lot of R.D SCHEMES are available in nationalised banks and our INDIANS ARE STILL HAVING THE HABBIT OF SAVINGS. IF NOT, WE SHOULD HAVE GONE TO DOCKS BY THIS TIME BECAUSE OF THE MONEY INFLATIONS,SHARE MARKET FALL ETC. STILL INDIAN BANKS ARE SAFE AND GENERAL PUBLIC(BARING VERY FEW)ARE VERY CAUTIOUS NOW A DAYS BEFORE INVESTING OR TAKING ANY LOANS IN BANKS OR IN ANY OF THE PRIVATE SECTORS.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு எனக்கு எனக்கு கடன் எனக்கும்

மங்களூர் சிவா said...

ஆகா...

குடுகுடுப்பை said...

யப்பா நாநா கடன் கேக்கிற கூட்டம் அதிகமாயிருச்சு வந்து எதாவது சொல்லிட்டு போ