தமிழ்நாடு அரசு கடந்த சில வருடங்கலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து வருகிறது, இலவச மின்சாரத்தை பற்றி நடுத்தர வர்க்க நகர்புறம் சார்ந்த மக்களிடம் கேட்டால் எங்களின் வரிப்பணத்தை வாங்கி பணக்கார விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தவறு என்பர், ஏழை விவசாயக் கூலியிடம் கேட்டாலும் அரசாங்கம் எங்களுக்கு என்ன செய்தது ஆனால் பம்பு செட் வைத்திருக்கும் முதலாளிகளுக்குதான் சலுகையெல்லாம் என்பர்.
பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோரும் இலவசமாக மின்சாரம் வழங்கினால் மின்சாரத்துறை முன்னேறாது,நாடும் முன்னேறாது என்கின்றனர்.
இதே மின்சாரத்தை ஒரு தொழில் முனைவோருக்கு பாதி மானிய விலையில் தந்தால், இது ஏன் என்று கேட்டால் அவர்கள் வேலை வாய்ப்பு உருவாக்குகிறார்கள் அதனால்தான்.(அப்படி நிஜமாவே மானிய மின்சாரம் உண்டா என தெரியவில்லை)
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், இங்கே பெரும்பான்மை வருடங்களுக்கு கம்பெனிகளுக்கு வரி கிடையாது, காரணம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள், அவர்களின் வருமான வரி அரசுக்கு கிடைக்கிறது, வேலை இல்லாத்திண்டாட்டம் குறைகிறது.
மேலே அரசு சொல்லும் காரணம் நியாயமானதே. இதே நியாயம் விவசாயிக்கு இலவச மின்சாரம் கொடுப்பதிலும் இருப்பதை அரசும் சரி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும் அறிவு ஜீவிகளும் எதிர்ப்பார்கள்.
ஏன் ஒரு நடுத்தர விவசாயிக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்தால் குறைந்த பட்சம் வருடம் 200 பேருக்காவது வேலை வாய்ப்பு கொடுக்கிறான் அது வேலை இல்லையா?.இல்லை விவசாயம் ஒரு தொழிலே இல்லையா ?
சிறப்பு பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதும் இலவச மின்சாரத்தை எதிர்ப்பதுவும் எனக்கு ஒன்றாகவே படுகிறது.ஒன்றை ஆதரித்து மற்றொண்டை எதிர்ப்பதும் ஒருவிதத்தில் சுயநலமே.
மேலை நாடுகள் 90 சதவீதம் மானியம் கொடுத்துமே விவாசாயத்தை காப்பாற்ற முடியாத நிலை உள்ள போது இலவச மின்சாரம் ஒன்றும் பெரிய தவறல்ல என்றே தோன்றுகிறது.
இலவச மின்சாரம் கொடுத்து ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வேண்டுமென்றே மின் தடை ஏற்படுத்திவிடுவார்கள். 24 மணி நேரமும் மின்சாரம் கொடுத்து அதை மானிய விலையில் கொடுத்தால் அனைத்து விவசாயியும் பணம் கட்டுவதோடு கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்துவார்கள்.
எதுவுமே இலவசம் தவறுதான், 24 மணி நேரமும் மின்சாரம் கண்டிப்பாக கொடுத்தால் இலவச மின்சாரம் தேவைபடாது என்றே எனக்கு தோன்றுகிறது.
இல்லாத மின்சாரத்தை இலவசமாக கொடுத்தாலும், காசுக்கு கொடுத்தாலும் கூட்டி கழிச்சி பாத்தா கணக்கு சரியாதான் வரும்.
Tuesday, October 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//எதுவுமே இலவசம் தவறுதான்,
இதெல்லாம் எப்பதான் எல்லார்க்கும் புரிய போகுதோ??
நல்து. எங்க ஊர்ல ஒரு ட்ரன்ச்பார்மர் முழுவதும் ஒரு குடும்பத்துக்கு என்று உள்ளது.
இது சரரியா? அவர் பெரிய பணக்கார். இதற்கு 5 ஏக்கர்ருக்கும்மெல் உள்ளவக்கு பனம்
வாங்கலாமெ.
நிச்சயமாக இலவச மின்சாரம் தொடர வேண்டும்.
உங்கள் கருத்துகளைப் பெரும்பாலும் ஆதரிக்கிறேன்.
இலவச மின்சாரத்தால் பயனடைவது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளே. வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க.
மற்ற தொழில் எப்படியோ அதே போல் விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவு தான். விவசாயம் செய்யும் எவரும் எனக்கு தெரிந்து வருமான வரி கட்டி நான் பார்த்ததே இல்லை. அரசாங்கமும் அவர்களை கண்டுகிட்டது மாதிரி தெரியவில்லை.
வெங்காயம் கிலோ அறுபது ருபாய்க்கு விற்கும் போது பல்ல இளிச்சிட்டு வியாபரம் பண்றவங்க, மழை காலங்களில் விலை குறைந்தால் அரசு மானியம் தரனும்னு குய்யோ முய்யோனு குதிப்பாங்க.
ஆமா.. ஏன் இந்த விபரீத வேலை?
நல்லாதானே போய்கிட்டு இருக்கு
ஒரு பம்பு செட்டு வைத்துள்ள நடுத்தர விவசாயிக்கு இலவசமாக மின்சாரம் வழங்கலாம். பத்து பம்பு செட்டு வைத்து இருப்பவர்களுக்கு இலவசமாக கொடுப்பது வீண். கொஞ்சம் மானியத்தில் கொடுக்கலாம். இலவசமாக கொடுக்கும் போது அவர்கள் தவறாகப் பயன் படுத்துவதை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தத் திட்டத்தால் ஏழை விவசாயிகளுக்கு(பம்பு செட்டு இல்லாத விவசாயிகளுக்கு) எந்தப் பயனும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
அனைவரின் வருகைக்கும் நன்றி
இரண்டாம் பாகமாக என் விளக்கத்தை விரைவில் கொடுக்கிறேன்.
ஜோதிபாரதி said...
ஒரு பம்பு செட்டு வைத்துள்ள நடுத்தர விவசாயிக்கு இலவசமாக மின்சாரம் வழங்கலாம். பத்து பம்பு செட்டு வைத்து இருப்பவர்களுக்கு இலவசமாக கொடுப்பது வீண். கொஞ்சம் மானியத்தில் கொடுக்கலாம். இலவசமாக கொடுக்கும் போது அவர்கள் தவறாகப் பயன் படுத்துவதை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தத் திட்டத்தால் ஏழை விவசாயிகளுக்கு(பம்பு செட்டு இல்லாத விவசாயிகளுக்கு) எந்தப் பயனும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
//
சரியே. ஆனால் என்னுடைய விவாதம்,மற்ற துறைகளுக்கு கொடுக்கப்படும் மானியம்/சலுகை வெளியில் தெரிவதில்லை.ஆனால் கிராமப்புற வேலை வாய்ப்பை உருவாக்கும் இலவச மின்சாரம் மட்டும் எப்படி தவறாகும் என்பதே.
//
இப்போல்லாம் பம்ப் செட் 5 hp'க்கு மேல இருந்தா இலவச மின்சாரம் கிடையாதுன்னு நினைக்கறேன். தெரிஞ்சவங்க சொல்லலாம்.
மேலும் விவசாயத்தை பண்ணி பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம். ஒரு தொழில் செஞ்சி அதுல நஷ்டம்ன்னா அதுக்கு நாம தான் கராணம். ஆனா விவசாயத்துல மட்டும் தான் நாம எல்லாத்தையும் கரெக்டா செய்ஞ்சாலும் மழை பெய்தோ பெய்யாமலோ நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு. இப்போ இருக்குற தண்ணி கஷ்டத்துல வருஷத்துக்கு 2 போகம் செயஞ்சாலே பெருசு. முதல் போட்டு மூணு மாசம் செலவு செய்ஞ்சி மழை ஏமாத்தாம இருந்தா கடைசியில கொஞ்சம் லாபம் பார்க்கலாம். average'ஆ 5 போகம் பண்ணினா, 3 லாபம் 2 நஷ்டம் என்பது அனுபவ உண்மை. விவசாய பின்புலம் இல்லாத Direct deposit salary, white collar jobs ஆளுங்களுக்கு இது புரிவது கொஞ்ச கஷ்டம். ஜமீன்தார் மிராசுதார் இவங்க மொத்த விவசாயிகள்ள 10% கூட இருக்கமாட்டாங்க. இவங்களை மனசுல வெச்சி இலவச மின்சாரம் வேண்டுமான்னு வேணமான்னு decide பண்ணக்கூடாது.
இலவச மின்சாரத்துனால விவசாயிங்க லாபம் அடைந்திட மாட்டாங்க. ஆனா இலவச மின்சாரம் குடுக்கலைன்னா நஷ்டம் தவிர்க்கமுடியாதது. ஒரு போகதுக்கு 30k இன்வெஸ்ட் பண்ணின, 40k return கிடைக்கும். 10k பிராபிட். இதை வெச்சி புது செல் போனோ, பிரிட்ஜோ வாங்கமாட்டாங்க. அடுத்த விளைச்சலுக்கு முதலீடாத்தான் இதை போடுவாங்க.
கடந்த 20 வருஷத்துல எத்தனையோ விவசாயிங்க ஊரை விட்டு போய் டவுன்லையோ சிட்டிலையோ கிடைச்ச வேலையை பார்க்கறாங்களே ஏன்? விவசாயத்துல கட்டு கட்டா சம்பாதிச்சது போதாதுங்கற பேராசையா இல்ல விவசாயம் பண்ணினா இனிமே புள்ள குட்டிய காப்பாத்த முடியாதுங்கற உண்மையா? விவசாயிங்க தற்கொலைன்னு தானே செய்தி வருது, மாதச்சம்பளக்காரங்க தற்கொலைன்னு இதுவரைக்கும் செய்தி வந்ததில்லையே ஏன்? யோசிங்க...
//விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா?"//
தவறு அல்ல.
Post a Comment