Monday, October 20, 2008

வருங்கால முதல்வர்கள்-அறிமுகம்

வருங்கால முதல்வர்கள் ஒரு குழுவாக நிறைய வாக்குறுதிகளை அள்ளித்தள்ள இருக்கிறோம். இந்த குழுமத்தில் முடிந்த அளவு நகைச்சுவை பதிவுகளை எழுதலாம் என்ற எண்ணம். இந்த முயற்சி எப்படி வெற்றி பெறுகிறது என்று பார்ப்போம்.

இப்போ வருங்கால முதல்வர்களிம் அறிமுகப் படலம்.

வருங்கால முதல்வர் உருப்புடாதது அணிமா பத்தி தமிழ்மணம் படிக்கிற எல்லாருக்குமே தெரியும். இவரோட கொள்கையே மேடு,பள்ளம் இல்லாத சமுதாயம் காண்பதுதான். இவரோட வள்ளல் தன்மை இவர் இடும் பின்னூட்டங்களிலேயே தெரியும். இவரின பின்னூட்டங்களில் உள்ள நகைச்சுவை தமிழ்மணம் அறிந்ததே.

வருங்கால முதல்வர் பழமை பேசி இவரு அவரோட வலைப்பூல நல்ல பல பழந்தமிழ் செய்திகள் /அறிவை எழுதுகிறார். பெண்கள் என்றால் இவருக்கு கொஞ்சம் பாசம்.இவர் ஒரு நவீன காளமேகம் ,இவருக்கு தோன்றும் மொக்கைகளை வருங்கால முதல்வரில் தொடர்வார்.

வருங்கால முதல்வர் துக்ளக் மகேசு பல நல்ல புத்தகங்கள், நிகழ்காலச்செய்தி அலசல் போன்றவற்றை துக்ளக் வலைப்பூவில் தருகிறார். இவருக்கு தோன்றும் மொக்கை எண்ணங்கள் வாக்குறுதிகளை வருங்கால முதல்வரில் தொடர்வார்.

வருங்கால முதல்வர் நாநா என்னுடைய கல்லூரி நண்பர், நல்ல தமிழ் பற்றாளர், கவிஞர் இன்னும் பல வெளியில் சொல்ல முடியாத திறமைகளை உள்ளடக்கியவர் இவரும் வருங்கால முதல்வரில் பகுதி நேர மொக்கையாற்றுவார்.

வருங்கால முதல்வர் அது சரி இந்தக்குழுவில் சேருகிறேன்னு வாக்குறுதி கொடுத்தார் ஆனா இன்னும் மின்னஞ்சல் அனுப்பவே இல்லை. இதிலேர்ந்து தெரியுது இவருதான் வருங்கால முதல்வர் நம்பர் 1. இவரின் நவீன விக்கிரமாதித்தன் கதைகள் உலக பிரசித்தம், நேரம் கிடைக்கும்போது இவரும் வருங்கால முதல்வராக மொக்கை போடுவார்.

வருங்கால முதல்வர் குடுகுடுப்பைக்கு தெரிஞ்சது மொக்கை போடமட்டும்தான் இவரும் பகுதி நேர வருங்கால முதல்வராக மொக்கை போடுவார்.

வருங்கால முதல்வரின் எண்ணிக்கை மேலும் கூடும் என்ற நம்பிக்கையில்

வருங்கால முதல்வர்கள்.

5 comments:

AMIRDHAVARSHINI AMMA said...

வருங்கால முதல்வர்கள் அனைவரும் வாழ்க வாழ்க

வருஙால ப்ரிட்டன் ப்ரதமர் (நம்ம குடுகுடுப்பையார்) வாழ்வாங்கு வாழ்க

அது சரி said...

//
வருங்கால முதல்வர் அது சரி இந்தக்குழுவில் சேருகிறேன்னு வாக்குறுதி கொடுத்தார் ஆனா இன்னும் மின்னஞ்சல் அனுப்பவே இல்லை. இதிலேர்ந்து தெரியுது இவருதான் வருங்கால முதல்வர் நம்பர் 1.

//

ஒரு மொதல்வருக்கு முக்கிய தகுதியே வாக்குறுதி கொடுக்குறதும் அப்புறம் அதை அப்படியே மறந்து போறதும் தான்..
இந்த தகுதி பொறக்குறதுக்கு முன்னாடியே எனக்கு இருக்கு :0)

(ரொம்ப டிப்ரஸ்டா இருக்கேன்..ஆனா, சிரிக்க வச்சிட்டீங்க..தேங்க்ஸ்!)

அது சரி said...

//
AMIRDHAVARSHINI AMMA said...
வருங்கால முதல்வர்கள் அனைவரும் வாழ்க வாழ்க

வருஙால ப்ரிட்டன் ப்ரதமர் (நம்ம குடுகுடுப்பையார்) வாழ்வாங்கு வாழ்க

//

அமிர்த வர்ஷினி அம்மா,

இதெல்லாம் பொதுக்குழுவுல எடுக்க வேண்டிய முடிவு. அதெப்படி நீங்க இப்பிடி அறிக்கை விடலாம்? :0)

தவிர, பிரிட்டன் பிரதமராக, இங்கிலன்டின் மண்ணின் மைந்தனான எனக்கே முழு உரிமை..குடுகுடுப்பைக்காரரு வேணும்னா அமெரிக்கன் பிரசிடன்ட் ஆகட்டும்!

(இதை பொதுக்குழுவில் ஏற்றுக் கொள்ளாவிட்டால், மக்களின் நலனுக்காக நான் தனிக்கட்சி ஆரம்பிக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்!

நசரேயன் said...

ஐந்து மொக்கைகளின் அட்டகாசம் தாங்க முடியலை

Anonymous said...

ஒரு நடிகையின் காதலன் நான்...
நிறத்தைப் பார்க்காதீங்க என் ரெத்தம்
நாடோடி மன்னனின் நிறந்தான்...
அழகாய் இருந்தேன் அவமானப் பட்டேன்,
அழகு போனால் என்ன அவமான்ப் பட்டாலென்ன அந்த நாற்காலி எனக்குத்தான் சொந்தம்...
மரத்திலிருந்துதான் மனிதன் வந்தான்,அந்தப் பதவி எனக்கே தான்..

நாற்காலி: சே. பேசாமல் கடலிலே போய் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.