நவரச நாயகன் கார்த்திக்கை நான் தமிழகத்தின் வருங்கால முதல்வராக வழி மொழிகிறேன்.
அவருக்கு இருக்கும் தகுதிகள்.
1) வருசம் 16, கிழக்கு வாசல், நாடோடித் தென்றல், பொன்னுமணி மற்றும் பூவரசன் போன்ற படங்களில் கிராமிய வேடங்களில் நடித்தன் மூலம் அவருக்கு கிராமப்புற மக்களின் கஷ்ட நஷ்டங்கள், குறிப்பாக விவசாயிகள் படும் பாடு எல்லாம் தெரியும்.
1) நினைவெல்லாம் நித்யா, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் மாணவராக நடித்திருப்பதால் கல்வித்துறை அனுபவம்.
1) சின்ன ஜமீன் படத்தில் ஜமீனாக நடித்து அதனால் எப்படி நாட்டை ஆள முடியும் என்ற ஆளுமை அனுபவம்.
(விஜயகாந்துக்கும் மேற்கூறிய அனுபவங்கள் எல்லாமே இருந்தாலும் தலைவர் கார்த்திக் கீழ்கண்ட தனித் தகுதி பெற்றுள்ளார்.)
1) நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை எதிர்த்து நடித்ததன் மூலம் பெரிய எதிப்புகளை சமாளிக்கும் திறன்.
2) அகில இந்திய பார்வர்ட் பிளாக் என்னும் கட்சியை தலைமை தாங்கி நடத்திய (ஒழித்த) அனுபவம்.
3) தனக்கு முதல்வராகத் தகுதி இருந்தும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாதிருப்பதாக பணிவன்புடன் பேட்டி அளித்திருப்பது.
4) ஜாதி ஓட்டுக்கள் பிரிக்க வாய்ப்பு
ஆக ... வருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க.
Thursday, October 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நாநா நமக்கு போட்டியா யாரு இந்த கார்த்திக்.
போற போக்கில் வருங்கால முதல்வர்களின் எண்ணிக்கை இந்திய ஜனத்தொகையை விட அதிகம் ஆகிவிடும் போல தெரியுது
மச்சினியை மயக்கும் கலை பாடப் புத்தகங்களில் இடப் பெற அண்ண்ன் கார்த்திக் வழி செய்வார் என்பதால், எமது முழு ஆதரவும் அவருக்கே!
//மச்சினியை மயக்கும் கலை பாடப் புத்தகங்களில் இடப் பெற அண்ண்ன் கார்த்திக் வழி செய்வார் என்பதால், எமது முழு ஆதரவும் அவருக்கே!//
ம்ஹூம் என்னமோ நடக்குது
அட வருங்கால முதல்வர் நீங்கதானா:) அங்கே கொள்கை பரப்புச் செயலாளர் ராப்,பொருளாளர் புதுகை அப்துல்லா,வருங்கால முதல்மந்திரி ச்ச்சின்னப்பையன் ன்னு விளம்பரப் படுத்தி கட்சி சும்மா ஜோரா நடந்துகிட்டு இருக்கும்போது நீங்க என்ன விஜயகாந்த் கணக்கா இடையில புகுந்து புதுக்கட்சி துவங்குறீங்க?
நான் எதுக்கும் கட்சி மேலிடத்துக்கு சொல்லிட்டு வாறேன்:)
//அட வருங்கால முதல்வர் நீங்கதானா:) அங்கே கொள்கை பரப்புச் செயலாளர் ராப்,பொருளாளர் புதுகை அப்துல்லா,வருங்கால முதல்மந்திரி ச்ச்சின்னப்பையன் ன்னு விளம்பரப் படுத்தி கட்சி சும்மா ஜோரா நடந்துகிட்டு இருக்கும்போது நீங்க என்ன விஜயகாந்த் கணக்கா இடையில புகுந்து புதுக்கட்சி துவங்குறீங்க?//
அவங்க நடத்துறது ஜெகேஆர் ரசிகர் மன்றம். நாங்க நடத்துறது வருங்கால முதல்வர் பயிற்சி பள்ளி.:)
ரெண்டு பேரோட கொள்கையும் வேற:-)
Post a Comment