Tuesday, October 21, 2008

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில்...

தமிழ் கூறும் நல்லுலகத்தில், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பொதுவாக மண்ணின் மைந்தர்களை விட அன்னிய மக்களுக்கு ஆதரவு அதிகம் இருக்கும் ஒரே அடிப்படையில் நான் தான் வருங்கால முதல்வர்.

தெலுங்கு பேசும் குடும்பத்தில் இருந்து வந்தவனாகையால் (அதாங்க கொல்ட்டி) எனக்கு முதலுரிமை உள்ளது. நாயுடு, நாயக்கர், ரெட்டி, ரெட்டியார், தெலுங்கு செட்டியார்னு கொஞ்சம் ஜாதீய வோட்டுக்களையும், மொழி உணர்வு ஓட்டுக்களையும் பிரிக்க முடியும்.

ஆனா என் தகுதி சரி வருமான்னு தான் தெரியல. இந்தியால இன்சினியர் படிப்பு அப்பறமா அக்கரச் சீமை அமெரிக்கால (மணவாடு பூமி) வியாபார மேலாண்மை படித்திருப்பதாலேயே நான் தகுதி இழக்க வாய்ப்புள்ளது.

அடுத்து என் மேல கொலை கேஸ், கஞ்சா கேஸ், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மாதிரி எல்லாம் ஏதும் கேஸ் இல்லை. அப்படி பார்த்தா நம்ம விசய காந்துக்கும் இந்த குவாலிபிகேசன் ஏதும் இல்லை தான். வருங்கால அரசியல் வாழ்க்கை பிரகாசமா தெரிஞ்சா இது மாதிரி ஏதாவது ரெண்டு மூணு கேஸ்ல பேரு வர்ற மாதிரி ஏதாச்சும் பண்ணிக்கலாம்.

அடுத்து பணம் இல்லை. இருக்கிற பணமெல்லாம் அமெரிக்கால வீடு வாங்கியே வீணா போச்சு. அதனால ஆரம்பமே உண்டியல் குலுக்கித் தான் ஆரம்பிக்கணும். சூட்கேஸ் வந்தாலும் பரவாயில்லை.

எது எப்படியோ என் பேரையும் நாமினேசன்ல போட்டு வைக்கிறேன். மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள். உங்கள் ஓட்டு நாநாவுக்கே.

வலைப்பதிவாளார் உலகத்தில் தான் சீனியர் என்பதால் மட்டுமே தனக்கு வருங்கால முதல்வராக தகுதி உள்ளதாய் நினைக்கும் குள்ள நரி குடுகுடுப்பையின் வாக்குச் சாதுர்யத்தில் ஏமாறாதீர்கள். நாமினேசன் செய்யும் போதே தன் குடும்பத்தை முன்னிறுத்தும் இவர் இப்போதே வாரிசு அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அடி கோலுகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதல்வராகும் ஆசையில் கொக்கரிக்கும் குடுகுடுப்பையே நீ கடந்து வந்த பாதையை எண்ணிப் பார். உனது கடந்த கால வாழ்வினை பற்றி ஆராய உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன்.

7 comments:

குடுகுடுப்பை said...

/தனக்கு வருங்கால முதல்வராக தகுதி உள்ளதாய் நினைக்கும் குள்ள நரி குடுகுடுப்பையின் வாக்குச் சாதுர்யத்தில் ஏமாறாதீர்கள். /

எனக்கு வாக்கு சாதுர்யம் உள்ளதாக நீங்கள் சொன்னதை பார்த்து படிப்பவர்கள்
அதாலும் சிரிக்க நேரிடலாம் நாநா.

நசரேயன் said...

நீங்க வருங்கால அமெரிக்கா ஜனாதிபதியாவும் ஆகலாம், இதும் வந்தாரை வாழவைக்கும் பூமிதான்

நாநா said...

அது நடக்க வாய்ப்பே இல்லை நசரேயன். இந்த ஊர் ஜனாதிபதி ஆக குறைந்த பட்ச தகுதிகள் பிறப்பால் அமெரிக்கர், குறைந்தது 35 வயது.

குடுகுடுப்பை said...

//முதல்வராகும் ஆசையில் கொக்கரிக்கும் குடுகுடுப்பையே நீ கடந்து வந்த பாதையை எண்ணிப் பார். உனது கடந்த கால வாழ்வினை பற்றி ஆராய உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன். //

கைப்புள்ள எதோ ஒரு படத்தில சொல்ற மாதிரி அதுக்கு நான் வொர்த் இல்லீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

குடுகுடுப்பை அண்ணா

நான் ஏற்கனவே கேட்டேனே. கொ.ப. செ. நமீதா அக்காவான்னு

நீங்க பதிலே சொல்லலை.

பழமைபேசி said...

//அடுத்து என் மேல கொலை கேஸ், கஞ்சா கேஸ், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மாதிரி எல்லாம் ஏதும் கேஸ் இல்லை. அப்படி பார்த்தா நம்ம விசய காந்துக்கும் இந்த குவாலிபிகேசன் ஏதும் இல்லை தான்.//

இது உள்நாட்டுச் சதி! நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அண்ணன் நடிகர் சங்கத்தில் செய்யாத கட்டைப் பைசல் உண்டா? ஆள் அனுப்பித் தூக்கி வராதது உண்டா? கல்லூரிகளில் குலுக்காத உண்டியல் உண்டா??

தகுதிகள் அனைத்தையும் இருட்டடிப்புச் செய்வதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறேன்.

குடுகுடுப்பை said...

AMIRDHAVARSHINI AMMA said...

//குடுகுடுப்பை அண்ணா

நான் ஏற்கனவே கேட்டேனே. கொ.ப. செ. நமீதா அக்காவான்னு

நீங்க பதிலே சொல்லலை.//

இளைஞிகளுக்கு தகுந்த வாய்ப்பளிக்கப்படும்.