Wednesday, October 15, 2008

வருங்கால‌ முதல்வராகத் தேவை இது!

வருங்கால முதல்வர்களே,

தாங்கள் முதல்வர் ஆக வேண்டும் என்றால், ஒன்று வசனம் எழுத வேண்டும். அல்லது நடிப்புத் திறமை இருக்க வேண்டும் என்பது உமக்குத் தெரியும். இல்லாவிடில், இவை பற்றித் தெரிந்து கொண்டு, பின் உங்கள் முயற்ச்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்! இதோ சில பயனூட்டுத் தகவல்கள், உங்கள் வசதிக்காக!!

வசனம்

"புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர்நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அறநெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால் தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால் ஓடிவிடு. புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்.. ஓடும்.. ஓலமிட்டு ஓடும்.. ஓலமிட்டு ஓடும்.. ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும். ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷ’த்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜவிக்ரமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில். அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்."


1 comment:

குடுகுடுப்பை said...

நீங்க வீவேக்தான் வருங்கால முதல்வருன்னு சொல்றீங்களா