Saturday, November 1, 2008

வாங்கிக் கட்டுனது...


"தங்கமணி, பாடுற‌த‌க் கொஞ்ச‌ம் நிறுத்துறியா?"

"அர்த்த‌ இராத்திரின்னு கூட‌ப் பாக்காம‌க் கூப்ட்டு பாட‌ச் சொல்வீங்க‌ளே, இப்ப‌ என்னவாம்?"

"வேலையா இருக்கேன்... சீக்கிர‌ம் முடிச்சுட்டு, க‌ஸ்ட‌ம‌ருக்குக் கூப்ப்ட்டு சொல்ல‌ணும், அதான்!"

"அப்ப‌ நான் உங்க‌ளுக்கு முக்கிய‌மாப் ப‌ட‌லை?"

"ப்ளீஸ், தொந்த‌ர‌வு ப‌ண்ணாத‌, நான் ரொம்ப‌ பிஸி இப்ப‌!"

"கேள்விக்கு ப‌தில் சொல்ல துப்பில்லை... பிஸியாமா, பிஸி!"

"?!?!?!"


------------------------------------------------------------------------------------------

(குடும்ப‌த்தோட‌ Barnes & Nobles புஸ்தகக் க‌டையில‌....)

"க‌டையில் எவ்வ‌ள‌வு புக்ஸ் இருக்கு, அதென்ன‌ இங்க‌யே இருக்கிங்க‌? வேறெதுவும் க‌ண்ணுக்குத் தெரிய‌லையா??"

"என்ன‌ தங்கமணி? இங்க‌தான‌ I.T புக்ஸ் இருக்கு, அதான்!"

"ச‌ரி, ச‌ரி, சீக்கிர‌ம் பாத்துட்டு வாங்க‌ போலாம்!"

"ச‌ரி, போலாம் வா!"

"க்ஹும், அவ‌ போற‌ வ‌ரைக்கும் இருந்துட்டு இப்ப போலாங்றீங்க‌?!"

"எவ‌? நான் யாரையுமே பாக்க‌லையே, எங்க‌ அவ‌, பாக்க‌லாம் ஒருக்க‌??"

"ஹ்ம்! பேசாம‌ வாங்க‌!!"



"?!?!?!"

------------------------------------------------------------------------------------------

"அண்ணே, ஒன்னை வெச்சிகினே எனக்கு அந்தலை, சந்தலையெல்லாம் கழண்டு போகுது, நீங்க எப்படிண்ணே ரெண்ட வெச்சிகினு அசராம போய்கினே இருக்கீங்க?"

"யார்றா இவன்? கொசுவைச் சுடறதுக்கு பீரங்கியக் கேக்குறான்.... அது ரொம்பச் சொலபம்டா.... ரெண்டு இருந்தா அவளோட இவளும், இவளடோ அவளும் மல்லுக்கட்டையிலே உன்னோட சிண்டு மிஞ்சும்டா....."

"அப்ப‌டியாண்ணே?... அதான் என் சிண்டு காணாம‌ப் போச்சா??"


13 comments:

Sanjai Gandhi said...

ஆஹா..
(பிடிச்சிருக்குன்னு அர்த்தம் :)) )

பழமைபேசி said...

//பொடியன்-|-SanJai said...
ஆஹா..
(பிடிச்சிருக்குன்னு அர்த்தம் :)) )
//

வாங்க சஞ்சய், நன்றி! :-o)

குடுகுடுப்பை said...

நான் என்னத்த சொல்றது

விஜய் ஆனந்த் said...

ஆஹா...ஹாஹாஹா!!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நான் என்னத்த சொல்றது
//

சொல்லக் கூடாததை சொல்லாதீங்க....மத்ததச் சொல்லுங்க...

பழமைபேசி said...

//விஜய் ஆனந்த் said...
ஆஹா...ஹாஹாஹா!!!
//

:-))

ராஜ நடராஜன் said...

பழம! வந்துட்டோமில்ல:)

இனி பதிவுக்குப் போறேன்

ராஜ நடராஜன் said...

பழம!

எனக்கும் ஒன்னை வெச்சிகினே //அந்தலை, சந்தலையெல்லாம் கழண்டு போகுது//

அதென்ன அடைப்பானுக்குள்ள அந்தலை சந்தலை விளக்கமுன்னு சொல்றது

பழமைபேசி said...

//
ராஜ நடராஜன் said...
பழம!

எனக்கும் ஒன்னை வெச்சிகினே //அந்தலை, சந்தலையெல்லாம் கழண்டு போகுது//

அதென்ன அடைப்பானுக்குள்ள அந்தலை சந்தலை விளக்கமுன்னு சொல்றது
//
ஆகா, அடுத்த பதிவுக்கு பொருள் கிடைச்சுருச்சு

நசரேயன் said...

ஒ.. என்னை மாதிரி நிறைய பேரு இருக்காங்களா?

குடுகுடுப்பை said...

//ஒ.. என்னை மாதிரி நிறைய பேரு இருக்காங்களா?//

அந்த ஏரெடுத்து பாக்கிறதுதானே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

"கேள்விக்கு ப‌தில் சொல்ல துப்பில்லை... பிஸியாமா, பிஸி!"

எல்லாம் தங்கமணியும் இப்படித்தான இருப்பாங்க சொல்லி வெச்ச மாதிரி.

"எவ‌? நான் யாரையுமே பாக்க‌லையே, எங்க‌ அவ‌, பாக்க‌லாம் ஒருக்க‌??"

அட அட நடிப்புல பின்றீங்களே.,

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
"கேள்விக்கு ப‌தில் சொல்ல துப்பில்லை... பிஸியாமா, பிஸி!"

எல்லாம் தங்கமணியும் இப்படித்தான இருப்பாங்க சொல்லி வெச்ச மாதிரி.//

ஒப்புதலுக்கு நன்றி! :-o)

//"எவ‌? நான் யாரையுமே பாக்க‌லையே, எங்க‌ அவ‌, பாக்க‌லாம் ஒருக்க‌??"

அட அட நடிப்புல பின்றீங்களே.,
//

நெசமாத்தான் சொன்னேன், நம்புங்க... முன்னாடியே சொல்லியிருந்த்தா, பாத்து இருப்பம்ல‌?