Sunday, November 16, 2008

நான் முதலமைச்சர் ஆயிட்டா?

முதலமைச்சர் கனவுல தமிழ் நாட்டுல
பல பேரு வருச கட்டி நிக்கிறப்போ நமக்கு
அந்த வாய்ப்ப இங்க எனக்கு கொடுத்து
இருக்காங்க!

சரி.. நெஜமாவே முதல் அமைச்சர் ஆயிட்டா ?
என்ன செய்யலாம் அப்படின்னு ராப்பகலா
படு பயங்கரமா யோசனை பண்ணின விளைவுதான்
இது. இத மொக்கையா எடுத்துகிரவங்க மொக்கையா
எடுத்துக்கலாம், சீரியஸா எடுத்துகிரவங்க சீரியஸா
எடுத்துக்கலாம்.

அதாவது!''சிறந்த குடி மக்களை உருவாக்கும் திட்டம்''

பத்தாவது வரை படிச்சவங்களுக்கு 1 புள்ளி

+2 படிச்சவங்களுக்கு 2 புள்ளி

டிகிரி படிச்சவங்களுக்கு 3 புள்ளி

அதுக்கு மேல படிச்சவங்களுக்கு 4 புள்ளி

ரத்த தானம் பண்ணினா ஒரு தடவைக்கு 2 புள்ளி

5 தடவை ரத்த தானம் பண்ணினா போனஸ் 5 புள்ளி

கண் தானம் பண்ணினா 10 புள்ளி

ஓட்டு போட்டா 2 புள்ளி

தொடர்ந்து 3 தடவை ஓட்டு போட்டா போனஸ் 5 புள்ளி

ஒரு குழந்தை பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிரவங்களுக்கு

5 புள்ளி 2 குழந்தை பிறந்த உடன் பண்ணிகிரவங்களுக்கு 2 புள்ளி

அஞ்சு வருஷம் எந்த போலீஸ் கேஸ் ஏதும் இல்லாதவங்களுக்கு 5 புள்ளி

வருமான வரி கட்டினா 5 புள்ளி

புள்ளைங்கள குறைஞ்ச பட்சம் பத்தாவது வரை படிக்க
வைச்சா 5 புள்ளி

சாலை விதிகளை சரியா கடை பிடிச்சா 5 புள்ளி

(
சாலை விதிகளை சரியா கடை பிடிக்கிறத எப்படி
கண்டு பிடிக்கிறது? அது யோசனைல இருக்கு )

இப்படி அதிக புள்ளிகள வாங்குறவங்களுக்கு
சிறந்த குடிமன், குடிமகள் சான்றிதழ் வழங்க
படும். புள்ளிகள் வழங்குதல் அந்தந்த துறைகளில்
பெற்று கொள்ளலாம்.

இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க படும்.

இதனால் என்ன பலன் ,,,

சிறந்த குடி மக்களுக்கு வங்கி கடன் வழங்குதல்
எளிதாக்கப்படும்.

இலவச மருத்துவ காப்பீடு வழங்க படும்.

கல்வி துறையில் இவர்களுக்கென தனி இட
ஒதுக்கீடு வழங்க படும்

ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு
கணிசமான அளவு பென்சன் வழங்க படும்.

பஸ்,ரயில்,விமான கட்டணங்களில் சலுகை
அளிக்கப்படும்

மேலும் ஆலோசனைகள் பொது மக்களிடம்

எதிர்பார்க்க படுகிறது.

37 comments:

குடுகுடுப்பை said...

மொக்கை இல்லங்க, நல்லா எழுதி இருக்கீங்க

நாநா said...

அமரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி பாய்ண்ட் சிஸ்டம், கிரிடிட் ஸ்கோர் சிஸ்டம் ரெண்டும் கலந்து நம்மூரு மசாலா சேர்த்து கொடுப்பேங்கிறீங்க.

GOLD_SANTHU said...

pulliy enga vaikarathu

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா.. கிளம்பிடாங்கலே ..
நானும் ஒன்னு போட்டே ஆகணும் போல??

நசரேயன் said...

அமெரிக்காவின் தாக்கம் இருந்தாலும் நல்லத்தான் இருக்கு

கபீஷ் said...

// குடுகுடுப்பை said...
மொக்கை இல்லங்க, நல்லா எழுதி இருக்கீங்க
//
அதே..
இதுக்கு அடுத்த பகுதி எழுதுங்க முடிஞ்சால், முதலமைச்சர் ஆனா எவ்ளோ வேலை இருக்கும்!

தமிழ் அமுதன் said...

Blogger குடுகுடுப்பை said...

மொக்கை இல்லங்க, நல்லா எழுதி இருக்கீங்க

நன்றி குடுகுடுப்பையாரே!

தமிழ் அமுதன் said...

Blogger நாநா said...

அமரிக்காவின் சோசியல் செக்யூரிட்டி பாய்ண்ட் சிஸ்டம், கிரிடிட் ஸ்கோர் சிஸ்டம் ரெண்டும் கலந்து நம்மூரு மசாலா சேர்த்து கொடுப்பேங்கிறீங்க.

ஆக்சுவலா எனக்கு அமெரிக்கா பத்தி
தெரியாதுங்க! ஆனா அமெரிக்கா ரேஞ்சுக்கு
யோசிச்சத நெனைச்சா எனக்கே கொஞ்சம்
பெருமையாதான் இருக்கு!

நன்றி!நன்றி !

தமிழ் அமுதன் said...

Blogger GOLD_SANTHU said...

pulliy enga vaikarathu

எங்கயாச்சும் கோலம் போடுற எடத்துல
வைக்கவேண்டியதுதான் புள்ளி!

நன்றி !

தமிழ் அமுதன் said...

உருப்புடாதது_அணிமா said...

ஆஹா.. கிளம்பிடாங்கலே ..
நானும் ஒன்னு போட்டே ஆகணும் போல??

போடுங்கன்னா சீக்கிரம்!

தமிழ் அமுதன் said...

Blogger நசரேயன் said...

அமெரிக்காவின் தாக்கம் இருந்தாலும் நல்லத்தான் இருக்கு

நன்றி! கடசீல நம்ம கதை தெலுங்கு டப்பிங் போல
இங்கிலீஷ் டப்பிங் ஆயிடும் போல ?

தமிழ் அமுதன் said...

கபீஷ் said...

// குடுகுடுப்பை said...
மொக்கை இல்லங்க, நல்லா எழுதி இருக்கீங்க
//
அதே..
இதுக்கு அடுத்த பகுதி எழுதுங்க முடிஞ்சால், முதலமைச்சர் ஆனா எவ்ளோ வேலை இருக்கும்!

எழுதிட்டா போச்சு !

நன்றி கபிஷ்!

சிம்பா said...

புல்லு அறிக்கிதே....

எல்லா இடத்திலையும் சலுக குடுக்கறீங்க.. டாஸ்மாக் பக்கம் போனா எதுனா சலுக கிடைக்குமா முதல்வரே ;))

நட்புடன் ஜமால் said...

//மொக்கை இல்லங்க, நல்லா எழுதி இருக்கீங்க//

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நட்புடன் ஜமால் said...

நம்மகிட்ட ஒரு சரக்கு இருக்குங்க, சீக்கிரமே பதிவோடு சந்திப்போம்.

தமிழ் அமுதன் said...

Blogger சிம்பா said...

புல்லு அறிக்கிதே....

எல்லா இடத்திலையும் சலுக குடுக்கறீங்க.. டாஸ்மாக் பக்கம் போனா எதுனா சலுக கிடைக்குமா முதல்வரே ;))

டாஸ் மார்க் இல்லாம எப்படி சிம்பா
சிறந்த குடி மகன் விருது கொடுக்குறது?

ஒன்னு செய்யலாம் ஓவரா தண்ணி அடிச்சு
மட்டை ஆயிட்டா அவங்கள பத்திரமா
வீட்டுக்கு கொண்டுவந்து சேர்க்கப்படும்
அப்படின்னு ஒரு விசயத்தையும்
சேர்த்துக்கலாம்.

தமிழ் அமுதன் said...

Blogger அதிரை ஜமால் said...

//மொக்கை இல்லங்க, நல்லா எழுதி இருக்கீங்க//

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்
நன்றி ! ஜமால்!

நம்மகிட்ட ஒரு சரக்கு இருக்குங்க, சீக்கிரமே பதிவோடு சந்திப்போம்.

சீக்கிரம் போடுங்க ஜமால்!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

வருங்கால முதல்வர் வாழ்க‌

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல யோசனை.
புள்ளி கொடுப்பது - நல்ல முயற்சி

நீங்கள் முதல்வராக எனது வாழ்த்துக்கள்.

எனது ஓட்டு உங்களுக்கே.

அமுதா said...

புள்ளி நல்லா வச்சிருக்கீங்க.. கோலம் எப்ப போடுவீங்க?

தமிழ் அமுதன் said...

மங்கலத்தார் said...

வருங்கால முதல்வர் வாழ்க‌

வந்து வாழ்த்துனதுக்கு
நன்றி மங்கலத்தாரே!

தமிழ் அமுதன் said...

Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல யோசனை.
புள்ளி கொடுப்பது - நல்ல முயற்சி

நீங்கள் முதல்வராக எனது வாழ்த்துக்கள்.

எனது ஓட்டு உங்களுக்கே.

வாங்க அமிர்தவஷினி அம்மா!
நன்றி! நீங்கல்லாம் எனக்கு
ஓட்டு போடாட்டி வேறயார்
போடுவாங்க?

நன்றி !

தமிழ் அமுதன் said...

Blogger அமுதா said...

புள்ளி நல்லா வச்சிருக்கீங்க.. கோலம் எப்ப போடுவீங்க?

வாங்க அமுதா! கோலமெல்லாம் நீங்க தான்
போடணும்.

தமிழ் தோழி said...

ஜீவன் அண்ணா உங்களுடைய பாய்ண்ட் சிஸ்டம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் நீங்க முக்கியமானவொன்ன மரந்திட்டீங்க.
நம்ம நாட்டு முதுகெலும்பான கிராமத்தையும் ,விவசாயத்தையும்.
இதுக்கு முதலில் ஏதாவது திட்டம் கண்டுபிடிங்க.
அதனால விவசாயத்துல இருக்கிரவனுக்கு தான் நாம் முதல் சலுகை கொடுக்கனும். நமக்கு சாப்பாடு போடுரவங்க. மத்தவங்க மாதிரி நீங்களும் மரந்திடாதீங்க.

S.R.Rajasekaran said...

உங்க சிஸ்டம் ரெம்ப கடுமையா இருக்கே .அண்ணே நானும் புள்ளி வாங்க எதுனாச்சி பிட்டு இருந்தா குடுன்னே

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வருங்கால முதல்வர் வாழ்க! வாழ்க !!
நீங்கள் முதல்வராக எனது வாழ்த்துக்கள்.

எனது ஓட்டு உங்களுக்கே.
எதிர்பார்த்து காத்திருகிறோம் தலைவா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த புள்ளிகளை கையூட்டுக் கொடுத்து
வாங்காமல் இருக்க எப்படி மக்களை
திருத்தப் போகிறீர்கள்...

மோகன் கந்தசாமி said...

ஷங்கர் போன்றவர்களை போட்டுத்தள்னா எத்தனை புள்ளிகள்? அவர் தானே தப்பு பண்றவங்கள போட்டுத்தள்ற யோசனை சொன்னார்!

தமிழ் அமுதன் said...

தமிழ் தோழி said...

ஜீவன் அண்ணா உங்களுடைய பாய்ண்ட் சிஸ்டம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் நீங்க முக்கியமானவொன்ன மரந்திட்டீங்க.
நம்ம நாட்டு முதுகெலும்பான கிராமத்தையும் ,விவசாயத்தையும்.
இதுக்கு முதலில் ஏதாவது திட்டம் கண்டுபிடிங்க.
அதனால விவசாயத்துல இருக்கிரவனுக்கு தான் நாம் முதல் சலுகை கொடுக்கனும். நமக்கு சாப்பாடு போடுரவங்க. மத்தவங்க மாதிரி நீங்களும் மரந்திடாதீங்க.

வாங்க தமிழ் தோழி!
நல்ல ஆலோசனை!

நான் முதல்வராயிட்டா
நீங்கதான்
''விவசாய துறை அமைச்சர்''

நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்!

தமிழ் அமுதன் said...

Blogger S.R.ராஜசேகரன் said...

உங்க சிஸ்டம் ரெம்ப கடுமையா இருக்கே .அண்ணே நானும் புள்ளி வாங்க எதுனாச்சி பிட்டு இருந்தா குடுன்னே

வாங்க ராஜ சேகரன்! சிஸ்டம் கடுமையாவா இருக்கு?
அப்போ நீங்களும் ஏதாவது ஐடியா கொடுங்க!

நன்றி! வருகைக்கு!

தமிழ் அமுதன் said...

வைகரைதென்றல் said...

வருங்கால முதல்வர் வாழ்க! வாழ்க !!
நீங்கள் முதல்வராக எனது வாழ்த்துக்கள்.

எனது ஓட்டு உங்களுக்கே.
எதிர்பார்த்து காத்திருகிறோம் தலைவா

வாங்க! முருகன்!
கட்சி ஆரம்பிச்சுடலாமா ?

நன்றி!வருகைக்கும் ஆதரவிற்கும்!

தமிழ் அமுதன் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த புள்ளிகளை கையூட்டுக் கொடுத்து
வாங்காமல் இருக்க எப்படி மக்களை
திருத்தப் போகிறீர்கள்...

வாங்க! யோகன்!
நானே எல்லாத்தையும் எப்படி
யோசிக்கிறது? நீங்கதான் ஏதாவது
ஐடியா சொல்லணும்
நன்றி!வருகைக்கு!

தமிழ் அமுதன் said...

மோகன் கந்தசாமி said...

//ஷங்கர் போன்றவர்களை போட்டுத்தள்னா எத்தனை புள்ளிகள்? அவர் தானே தப்பு பண்றவங்கள போட்டுத்தள்ற யோசனை சொன்னார்!//

வாங்க மோகன் கந்தசாமி!

தப்பு பண்ணுறவங்கள போட்டு தள்ள சங்கர் சொன்னார்
சங்கர எதுக்கு போட்டு தள்ளனும் ?

வருகைக்கு நன்றி!

coolzkarthi said...

நல்ல யோசனைகள்....

தமிழ் அமுதன் said...

Blogger coolzkarthi said...

//நல்ல யோசனைகள்.//.

நன்றி! coolzkarthi!

தமிழ் தோழி said...

////ஜீவன் said...
தமிழ் தோழி said...

ஜீவன் அண்ணா உங்களுடைய பாய்ண்ட் சிஸ்டம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் நீங்க முக்கியமானவொன்ன மரந்திட்டீங்க.
நம்ம நாட்டு முதுகெலும்பான கிராமத்தையும் ,விவசாயத்தையும்.
இதுக்கு முதலில் ஏதாவது திட்டம் கண்டுபிடிங்க.
அதனால விவசாயத்துல இருக்கிரவனுக்கு தான் நாம் முதல் சலுகை கொடுக்கனும். நமக்கு சாப்பாடு போடுரவங்க. மத்தவங்க மாதிரி நீங்களும் மரந்திடாதீங்க.

வாங்க தமிழ் தோழி!
நல்ல ஆலோசனை!

நான் முதல்வராயிட்டா
நீங்கதான்
''விவசாய துறை அமைச்சர்''

நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்!///

மிக்க நன்றி உங்க அழைப்புக்கு, அம்புட்டு நல்லவரா நீங்க.
என்ன மாட்டிவிடுரதுல உங்களுக்கு
அவ்வளவு சந்தோஷ்மா.

நாநா said...

இப்படியே புள்ளி வாங்கி எல்லோரும் புள்ளி ராசா ஆயிட்டா?