Monday, March 9, 2009

தருமபுரி @ தகடூர்

முதலில் நண்பர் குடுகுடுப்பையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவரை நீண்ட நாட்களுக்கு காக்க வைத்துவிட்டேன். அவ்வளவாய் நேரம் இல்லாததே காரணம். இங்கு எல்லோரும் மிக சிறபபாக தங்கள் ஊர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். என்னால் அந்த அளவு சிறப்பாக எழுத முடியாது. முடிந்த வரையில் எழுதி இருக்கிறேன். தயவு செய்து படிக்கவும்.. இல்லைனா அழுதுடுவேன்.. என்னையும் மதித்து எழுத சொன்னதுக்கு நன்றி தோழரே.

தர்மபுரி @ தகடூர்
1965ஆம் ஆண்டு (02.10.1965) தனி மாவட்டமாக பிரிக்கும் வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தனி மாவட்டமாக பிரித்தவுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளை பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களையும் கர்நாடகாவின் எல்லையையும் எல்லையாய் கொண்டு அமைதிருக்கிறது எங்கள் தர்மபுரி.

இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது.

எங்கள் தர்மபுரியை பற்றி சில விவரங்கள்
வருவாய் வட்டங்கள்
1.தர்மபுரி 2.அரூர்

தாலுகா ( வட்டாட்சிகள் )
1. தர்மபுரி 2. அரூர் 3. பென்னாகரம் 4.பாப்பிரெட்டிபட்டி 5. பாலக்கோடு

மிகவும் வெப்பமான பகுதி. கோடையில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குளிர்காலங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.மாவட்டம் முழுவதுமே பரவலான கனிம வளமிக்க பகுதிகள் இருக்கின்றன. எங்கள் ஊருக்கு அருகில் மாலிப்டினம் பெருமளவில் கிடைக்கின்றன. பரவலாக கருங்கல் குவாரிகளும் உண்டு,
[அதியமான் கோட்டம் கோவ]
  • எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அந்த அளவுக்கு அந்த மண்ணுக்கு பெருமை மிகு வரலாறுகள் உண்டு. பேரே சொல்லும் மண்ணின் மகிமையை. தர்ம புரி. மன்னராட்சிகள் நடந்த காலத்தில் தர்மபுரிக்கு தகடூர் என்று பெயர். கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. அதியனின் வீரத்திற்கு ஏராளமன வரலாறுகள் உண்டு. ஆனால் அவரை அனைவரும் அறிவது ஒரு முக்கியமான செயலுக்காக. அது, மிக அபூர்வமாக காய்க்கும் ஒருவகை காட்டு நெல்லிக்கனியை உண்டால் மரணம் கிடையாதாம். அந்தக் கனி அதியனுக்கு கிடைத்ததும் தான் உண்ணாமல் ஒளவை பாட்டிக்கு தந்து அவர் மரணம் அடையாமல் தமிழில் மேலும் பல செய்யுள்கள் படைத்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் கனியை அவருக்கு அளித்துவிட்டார்.
  • மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம். ஆனால் சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள். அவ்வளவுதான். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாம்பழக் கூழ்(pulp) தொலிற்சாலைகள் இருக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு,ராஜாஜி அவர்கள் பிறந்தது ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப் பள்ளி கிராமத்தில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டம். அவர் சேலம் மாநகராட்சி சேர்மனாக இருந்ததால் பலரும் அவரை சேலத்துக்காரர் என்றே நினைக்கிறார்கள்.

[விடுதலைப் போராட்ட வீரர் திரு. சுப்ரமனியம் அவர்கள் திரு உருவ சிலை]
[திரு. சுப்ரமணியம் சிவா அவர்களின் மணிமண்டப நுழைவாயில்]
  • இந்திய சுந்தந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. சுப்ரமனியம் சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுப் பயணம் செய்த போது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தன் இன்னுயிரை விட்டார் (1921). அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

[பரிசல் சவாரி]
[ரம்மியமான பரிசல் பயணம்]
[ஐந்தருவி]
  • எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியே. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி தான் ஒகேனக்கல். பெரிய நீர்வீழ்ச்சிகள் ( ஐந்தருவிகள்) , தொங்குபாலம் , பரிசல் பயணம் மற்றும் ஆயில் மசாஜ் இங்கு சிறப்பம்சங்கள். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தொடர்ந்து பேருந்து வசதிகள் இருக்கு.
  • அரூர் அருகில் தீர்த்தமலை என்னும் புன்னியஸ்தலமும் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தான் எங்கள் பகுதி மக்களுக்கு திருப்பதி. சிறுவயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன். புளிசாதம் கட்டிக் கொண்டு தான் போவோம். உடைத்த தேங்காயை கடித்துக் கொண்டு புளிசோறு சாப்பிடும் சுகமே தனிதான். குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. ஆண்டுதோறும் நடைபெரும் தீர்த்தமலை தேர் திருவிழா மிக பிரபலமானது. அங்கே சில நம்பிக்கைகள் உண்டு. அந்த மலையை புகைப் படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது நிஜமல்ல. இன்னும் கூட அந்த தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்விபட்டேன். தீர்த்தம் வரும் துவாரத்தை அவ்வப்போது குரங்குகள் கைவைத்து அடைத்துக் கொள்ளும். அப்படி செய்தால் பெரிய பாவம் செய்தவர்களோ அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்ணோ அந்த கூட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் குற்றம் செய்பவர்களுக்கு தெய்வ குற்றம் பற்றிய பயம் ஏற்படுத்தத்தான். அந்த குரங்குகள் அடிக்கடி தண்ணீரை அடுத்துக் கொள்ளும். சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் ஆதரவால் கட்டப் பட்டது. அரூரில் இருந்து 5 கிமீ தொலைவில் சேலம் சாலையில் விஜயநகரம் என்ற சிறிய ஊர் கூட இருக்கிறது.
  • எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)
  • எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)
படங்கள் : இணையத்திலிருந்து எடுத்தது. எடுத்தவர்களுக்கே சொந்தம். அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.

அன்புடன்
சஞ்சய்காந்தி
http://sanjaigandhi.blogspot.com ( ஹிஹி.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்.. )

50 comments:

*இயற்கை ராஜி* said...

//தயவு செய்து படிக்கவும்.. இல்லைனா அழுதுடுவேன்//

ப‌டிச்சா நாங்க‌ அழுவோமே

*இயற்கை ராஜி* said...

//தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. //
100% True:-)

*இயற்கை ராஜி* said...

//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)//

த‌ர்ம‌புரியைப் ப‌த்தி ந‌ல்ல‌ விச‌ய‌ம் எழுத‌ சொன்னா?!!!!!:-)))))

குடுகுடுப்பை said...

தூங்கிக்கொண்டிருந்த வருங்கால முதல்வரை தட்டி எழுப்பிய சஞ்சய் வாழ்வாங்கு வாழ்க.

குடுகுடுப்பை said...

எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)//

கண்டிப்பா இந்த தள பதிவுகள் பொறுமையாக படிக்கப்படுவதாகத்தான் தோன்றுகிறது.

குசும்பன் said...

//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)//

கடைசி வரிதான் கண்ணில் பட்டுச்சு, இதுக்கு மேல அந்த பதிவை படிக்க மனசு வரவில்லை:))))

இந்த வரியை நீக்கினால் தான் நான் பதிவை படிப்பேன்!

குசும்பன் said...

//அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. //

அப்புறம் ஏன் பேரில் அஞ்சி வெச்சு இருக்கார்????

நெடு= நெடிய
மான்= புள்ளி மான்

அஞ்சி= பயம்

ஆக பெரிய புள்ளி மானை கண்டால் உங்க ஆளுக்கு பயம் சரியா?

குசும்பன் said...

//குரங்குகள் அதிகம் வாழ்கின்றன//

தெரிஞ்ச விசயம்தானே மாம்ஸ்:)

குசும்பன் said...

//அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.//

முதலில் உங்கள் போட்டோவை நீக்கிவிடவும், மிகவும் சங்கடமாக இருக்கிறது!

ஆயில்யன் said...

//அவ்வளவாய் நேரம் இல்லாததே காரணம்.//

எவ்வளவாய்...???

ஒழுங்கா இதுக்குன்னு ஒரு டைம் வைச்சு அப்பப்ப பதிவு வந்து போகணும் ஆமாம் சொல்லிப்புட்டோம் :)

ஆயில்யன் said...

//குசும்பன் said...

//அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.//

முதலில் உங்கள் போட்டோவை நீக்கிவிடவும், மிகவும் சங்கடமாக இருக்கிறது!//

இதுக்கு சின்னதாய் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்! :)

ஆயில்யன் said...

//குசும்பன் said...

//குரங்குகள் அதிகம் வாழ்கின்றன//

தெரிஞ்ச விசயம்தானே மாம்ஸ்:)//


இதற்கு ஓலமிடும் அளவுக்கு மிகப்பெரிதாய் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

Sanjai Gandhi said...

:))

குசும்பன் & பாரின் ரிடர்ன்( இந்தியா உங்களுக்கு பாரின் தான?:) ) ஆயில்யனை மைண்ட்ல வச்சிக்கிறேன். :)

இராகவன் நைஜிரியா said...

// எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். //

ஒக்கேனக்கல் மிக அற்புதமான சுற்றுலாத்தலம். இன்னும் அழகாக பராமரிக்க வேண்டும்.

சாப்பாடு வேண்டும் என்றால், தமிழ்நாடு ஹோட்டல் மட்டும்தான் சற்று சுமாரக இருக்கின்றது.

இராகவன் நைஜிரியா said...

// இன்றும் அதியமான் கோட்டை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. //

கோட்டை இன்று அழகாக இருக்கின்றது.

இராகவன் நைஜிரியா said...

பால் உற்பத்தியும், பால் கோவா உற்பத்திய்ம் அதிகம் உள்ள ஊர் தருமபுரி.

தருமபுரி - சென்னை வரும் போது, பால்கோவா உற்பத்தி செய்து சென்னைக்கு அனுப்புவதைப் பார்க்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

தர்மபுரி பெரிய ஊராக இருந்தும், அங்கிருந்து கிருஷ்ணகிரி, ஹோசூருக்கு இன்னமும் ரயில் போக்குவரத்து கிடையாது. அனைவரும் நம்ப வேண்டியது பேருந்துகளை மட்டும்தான்.

தருமபுரி - பெங்களூருக்கு - ராயக்கோட்டை, பாலக்கோடு வழியாக ரயில் உண்டு.

இராகவன் நைஜிரியா said...

மாவட்ட தலை நகரமாக இருந்தும், தருமபுரியில் இருந்து சென்னை செல்ல வேண்டும் என்றால் ரயில் போக்குவரத்து கிடையாது. அரூர் வந்துதான் ரயில் பிடிக்க வேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

தருமபுரியில் உள்ள கோயில் மிக அழகாக இருக்கின்றது.

தருமபுரியில் உள்ள ஹோட்டலில் சாப்பாடும் நன்றாக இருக்கின்றது.

குடுகுடுப்பை said...

ஒகேனெக்கல் ஒருமுறை குடிளிச்சிருக்கேன், மீன் சாப்பிட்டேன்,சுத்தமா சுவை இல்லை

Anonymous said...

:)
அழகு

Sanjai Gandhi said...

ராகவன்,

தர்மபுரியிலிருந்து ஓசூருக்கு ரயில் வசதி இருக்கு. பெங்களூர் செல்லும் ரயில்கள் அனைத்தும் ஒசூர் வழியாகத் தான் செல்லும். கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை இல்லை. ஆனால் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து செல்லும்.

தர்மபுரியில் பால் உற்பத்தி மட்டுமில்லை பட்டுக் கூடு உற்பத்தியும் அதிகம். பால்கோவா தர்மபுரியில் தயாராவதில்லை. கிருஷ்ணகிரியில் உள்ள டெய்ரியில் தான் தயாரிக்கப்பட்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வினியோகிக்கப் படுகிறது.

Sanjai Gandhi said...

சென்னை செல்லும் ரயிலுக்கு அரூர் போக வேண்டியதில்லை ராகவன். அரூருக்கு 13 கிமீ முன்னதாகவே இருக்கும் மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். சேலம் மற்றும் ஜோலார்பேட்டைக்கு இடையில் இருக்கு மொரப்பூர். கோவையிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் மொரப்பூரைக் கடந்தே செல்லும். எங்கள் கிராமத்திலிருந்து 2.5 கிமீ தொலைவில் இருப்பதால் ஊருக்கு செல்ல எனக்கு மிகவும் சவுகரியமாக இருக்கிறது.

Sanjai Gandhi said...

//ஒகேனெக்கல் ஒருமுறை குடிளிச்சிருக்கேன், மீன் சாப்பிட்டேன்,சுத்தமா சுவை இல்லை //

குடுகுடுப்பை.. அங்கு மீன் சமைத்து தருவதர்கு ஏராளமான மீன் சமையல் வல்லுநர்கள் :) இருக்கிறார்கள். அவர்களிடம் சமைத்து தர சொல்லி சாப்பிடனும். மிக நன்றாக இருக்கும்.

Unknown said...

தகடூரைப் பத்தி சில தகவல்கள் (மாம்பழம், குரங்கு, சுப்ரமணிய சிவா) புதியவை எனக்கு!! நன்றி.

//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)//

இது என்ன சந்தடி சாக்குல வெளம்பரம்?? :)

Sanjai Gandhi said...

//மாவட்ட தலை நகரமாக இருந்தும், தருமபுரியில் இருந்து சென்னை செல்ல வேண்டும் என்றால் ரயில் போக்குவரத்து கிடையாது. அரூர் வந்துதான் ரயில் பிடிக்க வேண்டும்.

//

விரைவில் மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதன் பின் தர்மபுரி - சென்னை ரயில் பயணம் சாத்தியமே. :)

என்ன ராகவன், எங்க ஊர் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க? எபப்டி? :)

http://urupudaathathu.blogspot.com/ said...

மேலதிக தகவல்::::

அண்டனங்களை காக்க பிற்ந்த திரு மாண்புமிகு அறிஞர் அணிமா பிறந்த இடம், மொரப்பூர்- தருமபுரி மாவட்டம்...

இராகவன் நைஜிரியா said...

// SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

என்ன ராகவன், எங்க ஊர் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க? எபப்டி? :) //

1985 - 1990 வரை 6 வருஷம் ஹோசூரில் தான் வேலை.

இங்கு வருவதற்கு முன் தருமபுரி மாவட்டத்தில் ஒரு என்.ஜி.வோக்கு இண்டெர்னல் ஆடிட்டிங்க்காக எல்லா மாதமும் வருவேன். அதற்காக மாவட்டம் முழுவதும் போக வேண்டியிருக்கும். அதனால் தெரியும்.

நசரேயன் said...

நல்ல பயனுள்ள தகவல்

Senthil said...

Sanjay,
I think Adiyamaan manimandapam
is newly built by TN Govt.
It is in Adhiyamaan kottai village on NH7.
Only Adhiyamaan temple is still
present.The photo in the blog is not the palace, it si the temple.Even the ruins of Adhiyamaan kottai is not there now.

But Kottai kovil(Is it built by Adhiyaamaan??) is still there in Dharmapuri..People say there is an underground path between Kottai kovil and Adhiyamaan palace.I think that underground secret way is still there..

And more importantly, there are
two palaces called Vadakarai and Thenkarai kottai near Arur(I forgot the exact name of the village).Thenkarai kottai is still there.I have been there some 2 years before..It is a nice place to visit.You can see the huge big walls of the palace,agazhi and a temple inside it.It is sad that no one maintains it.I do have photos of that.


--Senthil

Senthil said...

Forgot to add...!!
Very good blog on our great city dharmapuri..:-)

--Senthil

Sanjai Gandhi said...

செந்தில், நீங்கள் சொல்லி இருக்கும் நைத்துமே மிகச் சரியானது தான். கோட்டைக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுரங்கப் பாதை இருப்பதும் உண்மையே. அது பல மைல்களுக்கு அப்பால் எங்கோ ஒரு இடத்தில் முடிவதாக சொல்வார்கள். அதை அறிந்து சொல்கிறேன்.

தெங்கரைக் கோட்டை ஒருகாலத்தில் பசுமையான கிராமம். இப்போது நீர்ப்பாசனம் குறைந்து கொஞ்சம் வறட்சியாகத் தான் இருக்கிறது. தெங்கரைக் கோட்டை, ராமியம்பட்டி ஆகிய கிராமங்கள் பாக்கு தோட்டம் நிறைந்தவை. பாக்கு மட்டைகள் சார்ந்த உப தொழில்களும் அதிகம். இப்போது தெரிவில்லை. நான் பாப்பிரெட்டிப்பட்டியில் படிக்கும் போது ஒரு வருடம் மட்டும் அந்த வழியில் சென்றிருக்கிறேன்.

அதியமான் கோட்டை படம் இல்லாததால் இணையத்தில் இருந்து கோயில் படத்தை போட்டிருக்கிறேன் செந்தில்.

உங்களிடம் இருக்கும் படங்களையும் அனுப்பிவையுங்கள். sanjaigandhi@msn.com

பின்னாளில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நீங்கள் தர்மபுரியா? எந்த ஏரியா?

கபீஷ் said...

உலகத்துலேயே எனக்கு ரொம்மம்ம்ம்ம்ம்மம்ம்ப பிடிச்ச இடம் தருமபுரி மாவட்டம்
இந்த பதிவுக்கு நன்றி!!

கபீஷ் said...

மேல சொன்ன ஒரே காரணத்துக்காக சஞ்சய் எழுதறத படிப்பேன் :-) (ரொம்ப முக்கியம் இந்த தகவல் நாட்டுக்கு :-):-)

மங்களூர் சிவா said...

கொய்யால
"தருமபுரி தந்த சிங்கம்
எங்கள் தங்கம்
மங்களூர் சிவா
அப்படின்னு"
என்னைய பத்தியும் ஒரு வார்த்தை பதிவுல கோத்து விட்டிருக்கலாம்ல!?!?

மங்களூர் சிவா said...

பதிவை புறக்கணிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

அதியமான் கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். எந்த கோட்டையும் அங்க இல்ல :((

Anonymous said...

belissimas imagens!!!parabens!!!

Senthil said...

Hi Sanjay,
Will send you the fotos of
Thenkarai kottai to your mail id..
Naanum dharmapuri-thaan..

---Senthil

Sanjai Gandhi said...

Thanks Senthil.. Where r u in Dpi?

மேவி... said...

unga urai pathi therinthu kondenunga...
nalla irukkuppa

அசோசியேட் said...

//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)//

இதுதான் அரசியல்.

"தருமபுரி தந்த சிங்கம்
எங்கள் தங்கம்
மங்களூர் சிவா
அப்படின்னு"
என்னைய பத்தியும் ஒரு வார்த்தை பதிவுல கோத்து விட்டிருக்கலாம்ல!?!?

பாருங்க உங்க ஊர்காரக கோவிச்சிகிறாங்க.

யசோதா.பத்மநாதன் said...

(பிரசுரத்திற்குரியவை அல்ல)

அன்பு மகன்,

என் வீட்டில் உங்கள் பின்னூட்டம் இன்று தான் கண்டேன்.மிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது இந்தத் தமிழ் குழந்தையின் வரவு.எப்போதெல்லாம் மனம் நொந்து போகிறதோ அப்போதெல்லாம் அங்கு வந்து போ மகனே!உனக்காகவே அதில் நான் கூடுதல் கவனம் இனிச் செலுத்துகிறேன்.

இன்னொரு முக்கிய விடயம்,பழமை பேசிக்குள் போக முடியாமல் இருக்கிறது.உடனடியாக அது உறைந்து போகிறது.ஏனென்று ஒருமுறை பார்த்துக் கொள் ஐயா!சில வாரங்களாக அப்படி இருக்கிறது.நான் அதனை மிகவும் miss பண்ணுகிறேன்.

செல்வமுரளி said...

அட நம்ம பாட்டிவீடு பற்றி புட்டு புட்டு வச்சிருக்கிங்க நண்பரே!!
அருமை....
அதென்ன பாட்டி வீடுன்னு கேட்காதிங்க.

முன்னாடி தர்மபுரி மாவட்டத்துல இருந்தேன். ஆனா இப்ப கிருஷ்ணகிரி மாவட்டத்துல எங்க ஊர் வந்துட்டத்தால . அதான் தாய் வீடு கிருஷ்ணகிரி, பாட்டி வீடு தர்மபுரி, கொள்ளுபாட்டிவீடு சேலம்...னு சொன்னேன்....

இந்த தகவல்கள் அனைத்தையும் அப்படியே வீக்கிபீடியாவில் சேர்த்துவிடுங்கள்.

அனைவருக்கும் உதவும்
என்றும் அன்புடன்
செல்வமுரளி
http://tamilvanigam.in

வில்லன் said...

//எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.//

நடத்துங்க ராசா அடிச்சி பட்டய கெளப்புங்க.

படிக்க நாங்க ரெடி. எழுத நேங்க ரெடியா.

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

//குரங்குகள் அதிகம் வாழ்கின்றன//
என்ன இது சின்ன புள்ளதனமா . நம்மல்லாம் இருக்குற எடத்துல தான நம்ம இனம் இருக்கும்.

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

பின் குறிப்பு
===========
தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் தான் குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. எனென்றால் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள் இங்கதான் பிறந்தார்.

வில்லன் விமர்சன குழு

பித்தனின் வாக்கு said...

ayya intha mavattathula perantha engal uriyium molana oppu illa thalavan thamil thai magan rajani ganthai vitutingala

jayveni said...

சஞ்சை நண்பரே தெங்கரை கோட்டை என்ற புகழ் பெற்ற கோட்டை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபபட்டி வட்டத்தில் உள்ளது.அங்கே கல்யாண ராமசாமி கோயயில் உள்ளது.மிகவும் வரலாறு புகழ் பெற்றது

jayveni said...

சஞ்சை நண்பரே தெங்கரை கோட்டை என்ற புகழ் பெற்ற கோட்டை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபபட்டி வட்டத்தில் உள்ளது.அங்கே கல்யாண ராமசாமி கோயயில் உள்ளது.மிகவும் வரலாறு புகழ் பெற்றது