Wednesday, April 1, 2009

வேட்பாளர்கள் தேவை.- அவசரம்.

இந்திய ஜனநாயகத்தின் தூண்களே, நான் ஆரம்பித்திருக்கும் புதுக்கட்சியான குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு 40 தொகுதியில் நிறுத்துமளவிற்கு என்னுடைய குடும்பத்தில் ஆட்கள் இல்லாத காரணத்தினால், வெளியாட்களையும் வேட்பாளர்களாக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் என் கட்சி தள்ளப்பட்டுள்ளது. என் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் இல்லாத காரணத்தினால் 40 தொகுதிகளில் என் கட்சி சார்பாக நீங்களே வேட்புமனுக்களை தாக்கல் செய்து கட்சியை வளப்படுத்த வேண்டுகிறேன்.

இதற்காக கட்சிக்கு நீங்கள் காசோலையெல்லாம் அனுப்பவேண்டாம்.ஆனால் சுயேச்சை சின்னமாக உடுக்கையை தேர்ந்தெடுக்கும்படி ஜனநாயகத்தின் முதல் தூண்களை கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் ஆட்சியை பிடிப்போம். கட்சி வளரும்.நம்பிக்கையை தொலைத்துவிடாதீர்கள்.

இப்படிக்கு எங்கேயும் ஓட்டுப்போட வக்கில்லாத

குடுகுடுப்பை.

தலைவர்

குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.

31 comments:

ராஜ நடராஜன் said...

கட்சிப் பெயர் குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்

சின்னம்- உடுக்கை

பெயர்ப் பொருத்தம் பொருந்தி வருது.ஜெயிச்சா எவ்வளவு வெட்டுவீங்க? (ஆடுல்ல!துட்டு)

இராகவன் நைஜிரியா said...

குடுகுடுப்பை - ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு, என்னோட முதல் ஓட்டு தமிழ் மணத்தில் போடப்பட்டுவிட்டது.

வெளியில் இருந்து இந்த கழகத்திற்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டு என்பதை மிக்க பணிவண்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

கட்சிப் பெயர் குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்

சின்னம்- உடுக்கை

பெயர்ப் பொருத்தம் பொருந்தி வருது.ஜெயிச்சா எவ்வளவு வெட்டுவீங்க? (ஆடுல்ல!துட்டு)//

ஜெயிச்ச நீங்கதான் வெட்டனும், கட்சி பேர்ராசி அப்படி

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

குடுகுடுப்பை - ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு, என்னோட முதல் ஓட்டு தமிழ் மணத்தில் போடப்பட்டுவிட்டது.

வெளியில் இருந்து இந்த கழகத்திற்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டு என்பதை மிக்க பணிவண்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.//

ரொம்ப நன்றி ராகவன்.
குஜமுக

T.V.Radhakrishnan said...

ம.தி.மு.க., கார்த்திக் ஆகியோர் உங்க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயார்

SUREஷ் said...

//ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு//இன்றைய தேதியில் ஆந்திர, தமிழ்நாடு மக்களில் அதிகம் மனம்கவர்ந்தவர் ஜக்கம்மாதான்........


ஜக்கம்மா.. எங்கள் ஜக்கம்மா பாட்டு எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டு இருக்கீறது,

இளைஞர்கள் பொம்மாயி, பொம்மாயி என்று கூவிக் கொண்டே இருக்கிறார்கள்.

பின்னூட்டமாக ஆரம்பித்து தனி இடுகையாகவே போட்டுவிட்டேன்

Mahesh said...

கு ஜ முன்னேற்றத்துக்கு வாழ்த்துகள் !!

நாங்க முன்னேற ????

வருங்கால முதல்வர் said...

Mahesh said...

கு ஜ முன்னேற்றத்துக்கு வாழ்த்துகள் !!

நாங்க முன்னேற ????//

எங்க முன்னேற்றத்த வாழ்க வாழ்கன்னு சொல்லுங்க

வருங்கால முதல்வர் said...

T.V.Radhakrishnan said...

ம.தி.மு.க., கார்த்திக் ஆகியோர் உங்க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயார்//

ஆனா குஜமுக தான் கூட்டனித்தலைமை.

பழமைபேசி said...

நடக்கட்டு நடக்கட்டு

செந்தழல் ரவி said...

குஜமுக ? ஒரு குஜாலா இருக்கும் பேரு...

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

குஜமுக ? ஒரு குஜாலா இருக்கும் பேரு...//

ஜகுமுகன்னு மாத்தலாம்னு ஒரு யோசனை இருக்கு குடும்பத்தலைவர்களிடம் மன்னிக்கனும் கட்சித்தலைவர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கனும்

நசரேயன் said...

நானும் ரெண்டுலயும் ஓட்டு போட்டுட்டேன்

குடுகுடுப்பை said...

நன்றி நசரேயன்

Anonymous said...

முன்ன நாட்டுக்கு ஒரு கட்சியா இருந்தது, அப்புறம் ஊருக்கு ஒன்னுன்னு இருந்தது, இப்ப தான் தெருவுக்கு ஒன்னுன்னு வந்திருச்சே, ம் நீங்களும் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க, கண்டிப்பா நான் ஓட்டு போடுறேன்...

வாழ்க வளமுடன்....

நையாண்டி நைனா said...

நான் ரெடி.

எனது தேவைகள்:
சீட்டு : எல்லாமே ஜோக்கரா இருக்கிற ஒரு கட்டு.
பணம் : வச்சு ஆடும் அளவிற்கு.
(தெளிவா படிக்கவும்) பிரச்சாரத்திற்கு : நமீதா

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா சாமி.. இருக்கறது போறாதுன்னு நீங்க வேற களத்துல குதிச்சாச்சா.. நண்டு தாங்காதுப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

சாரி.. போன பின்னூட்டத்துல ஒரு தப்பு.. அது நாடு.. நண்டாகி போச்சு.. நீங்க கட்சி ஆரம்பிக்குறேன்னு சொன்ன பயத்துல.. ஹி ஹி ஹி..

வருங்கால முதல்வர் said...

sundar said...

முன்ன நாட்டுக்கு ஒரு கட்சியா இருந்தது, அப்புறம் ஊருக்கு ஒன்னுன்னு இருந்தது, இப்ப தான் தெருவுக்கு ஒன்னுன்னு வந்திருச்சே, ம் நீங்களும் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க, கண்டிப்பா நான் ஓட்டு போடுறேன்...

வாழ்க வளமுடன்....//

ஓட்டு போட்டா பத்தாது , வேட்பாளர்கள் தேவை

வில்லன் said...

நான் ரெடி குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகத்துல சேர. தூத்துக்குடி தொகுதில நிக்க. எவளவோ கட்சி நிதி கெடைக்கும் தலைவருட்ட இருந்து!!!!!!!!!!! ஒரு நூறு ஆயிரம் டாலர்ஸ்...................உடனே ரெடி வேலைய உட்டுட்டு ஊருக்கு போக........ கஷ் (cash/check) வாங்கப்படும்.

வில்லன் said...

நான் ரெடி குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகத்துல சேர. தூத்துக்குடி தொகுதில நிக்க. எவளவோ கட்சி நிதி கெடைக்கும் தலைவருட்ட இருந்து!!!!!!!!!!! ஒரு நூறு ஆயிரம் டாலர்ஸ்...................உடனே ரெடி வேலைய உட்டுட்டு ஊருக்கு போக........ கஷ் (cash/check) வாங்கப்படும்.

வில்லன் said...

கட்சி நிதி கெடைக்கும்ணா நாப்பது தொகுதிஇலும் நான் நிற்க ரெடி.

வில்லன் said...

யாரு கொள்கை பரப்பு செயலாளரு....... அஞ்சரகுள்ள வண்டி, மலையத்தி பெண் பட கதாநாயகிய (சகிலாவ) போட்டா கட்சி நல்ல வளரும்......நல்ல கொள்கை பரவும்

வில்லன் said...

போடுங்கம்மா ஓட்டு உடுக்கைய பாத்து....................

உங்கள் ஓட்டு குஜமுகக்கே.......................

உங்கள் ஓட்டு டாக்டர் ஐசக்குக்கே (எல்லா தொகுதியும்)

வள்ளல் (இளிச்சவாயன்) குடுகுடுப்பை வாழ்க வாழ்க.....


சரி கோசம் போட்டாச்சு காசு குடு தண்ணி அடிக்க பிரியாணி சாப்பிட!!!!!!!!!!!!

கமல் said...

அண்ணே இந்த எலக்ஸனிலை ஈழப் பிரச்சினை பற்றி உங்கடை கருத்து என்ன:))

அப்புறம் கண்டிப்பாக ஜெயிச்சிடுவீங்களா???

ஜோதிபாரதி said...

எனக்கு ஒரு சீட்டு கொடுங்க சாமியோவ்!

-கொள்ளிமலை குப்பு
கு.ஜ.மு.க
பதவி - உறுப்பினர்

நவநீதன் said...

//ஜக்கம்மா முன்னேற்ற கழகத்திற்கு///

என்ன அம்மா பேருல கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க. கீகோ(பெயர் மாற்றப்பட்டுள்ளதுன்னு வேற போடுனுமா?) மாதிரி பொட்டி வாங்கீட்டிங்களா?(ஊருக்குள்ள அப்படிதான் பேசிக்கிறாங்க)

ஆ.ஞானசேகரன் said...

//என்னுடைய குடும்பத்தில் ஆட்கள் இல்லாத காரணத்தினால், வெளியாட்களையும் வேட்பாளர்களாக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் என் கட்சி தள்ளப்பட்டுள்ளது.//

நையாண்டியுடன் சாட்டையடியும் உண்டு போல...

ஆ.ஞானசேகரன் said...

//குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.//

குடுகுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொருப்பு இருந்தா சொல்லி அனுப்புங்கள் சார்...

லவ்டேல் மேடி said...

ஐ.. ஐ...ஐ...!!!!
வருங்கால முதல்வர்......!!

காவியத் தலைவனே........!!


சிங்கார சிரிப்பழகா......!!!!ஒய்யார நடையழகா.........!!!

பார் ( bar இல்ல பார் (உலகம்) போற்றும் பரந்தாமனே.......!!!!தங்கத் தலைவனே...........!!!நாளைய முதல்வரே.......!!!
நீர் நீடூடி வாழ்க .....!!! உன் புகழ் வாழ்க.....!!!


இங்ஙனம் உங்கள் ஆருயிர் தொண்டன் கையாலாகாத கம்முனாட்டி லவ்டேல் மேடி ஆகிய நான் ஈரோடு தொகுதியில் உங்கள் குடுகுடுப்பை சின்னத்தில் வேட்பாளராக நிற்க முடிவு செய்துள்ளேன்....!!! தாங்கள் அனுமதியளிக்க வேண்டும்.....!!!வாழ்க குடுகுடுப்பை ......!!! வாழ்க தலைவர்........!!!!!

முகிலன் said...

தன் மானமிக்க தன்னிகரில்லா தலைவரே! தமிழின காப்பாளரே! நிரந்தர பிரதமரே! நமது கழகத்தின் சார்பில் தேர்தல் களத்தை நிமிர்ந்த நெஞ்சுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் சந்திக்க இந்த தொண்டன் தயாராக உள்ளான். இவனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு இருபது லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து தருவான். அப்படி வாய்ப்பு வழங்கப்படாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று சுற்றுப்பயணம் செய்து நமது கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவான் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறான்.