Thursday, February 5, 2009

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இலங்கையில் தற்போது நடைபெறும் போரை, உலக நாடுகள் ,இலங்கை மற்றும் விடுதலைப்புலிகள் நிறுத்துவார்களா என்று தெரியவில்லை, தற்போது நடைபெறும் சண்டை எங்களைப்போன்ற இந்தியத்தமிழர்களின் தூக்கத்தை கெடுக்கிறது,இதயம் வலிக்கிறது, இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை.

2.5 லட்சம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது, ஆனால் சொந்த மக்களை கொள்ளும் இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த போரை நிறுத்த அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் அறிவுப்பூர்வமாக பிரச்சினையை எடுத்துச்செல்லவேண்டும்.நட்புறவை உருவாக்கிகொள்ளவேண்டும்.உலகெங்கிலும் துரத்தப்பட்ட யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைத்துக்கொண்டது அவர்களது அறிவினாலும் வல்லரசுகளின் நட்பினாலும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நடக்கும் போரினால் மொத்தத்தில் அங்கே அழிக்கப்படுவது தமிழினம். கிட்டத்தட்ட 25% சதவீதம் இருந்த தமிழர்கள் இப்போது குறைந்து 15% சதவீதம் ஆகிவிட்டனர்.நான் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் மிகவும் அவசியமானதென்றே கருதுகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

தமிழர் பிரச்சினை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. நடக்கும் இன அழிப்பை தடுக்கத்தான் நம்மால் முடியவில்லை,ஆனால் இனத்தையாவது பெருக்குங்கள்.அவர்களை நல்ல கல்வி கொடுத்து அறிவு சார் சமூகமாக வளருங்கள்.உலகம் ஒருநாள் நல்ல தீர்வு தரும் என நம்புவோம்.

32 comments:

நசரேயன் said...

/*இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் அறிவுப்பூர்வமாக பிரச்சினையை எடுத்துச்செல்லவேண்டும்*/

நம்ம ஊருரையும் சேத்ததுக்கு நன்றி

எல்லாளன் said...

சிறிலங்கா சண்டையை நிறுத்துவதாக இருந்தாலும் இந்தியா நிறுத்த விடாது

வல்லரசுகள் தமது நலன் சார்ந்து தான் தமிழர்களுக்கு எதிராக சிங்களத்துடன் கை கோர்த்து தமிழினத்தை அழிக்கின்றது

ஆனால் இந்தியா சோனியாவின் தனிநபர் பழிதீர்ப்பிற்காகவும் ஒரு சில மேனன்களின் நலனுக்காகவும் வெளியுறவுக்கொள்கை வகுத்து தமிழர்களை அழிக்கின்றது

சொந்த நாட்டுத் தமிழர்களையும் எதிரியாகவே இந்தியா நாடாத்தி வருகிறது

தமிழ் நாட்டு அரசியல் குடும்ப நல அரசியல் இவர்களால் ஒட்டு மொத்த தமிழினமும் அழிகிறது

ஈழத்தமிழினம் இந்தியாவிருந்து எதையும் அடைந்து விடமுடியாது

துரொகத்தை தவிர

தமிழர்கள் இந்தியாவை நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம்

ஈழத்தமிழினம் இந்தியாவுடன் செலவிட்ட காலத்திற்கு பாக்கிஸ்தான் சீனா ஈரான் என்று தமது நட்பை வளர்க்க வேண்டும்

அது தான் எமது விடிவிற்கு உதவும்

குடுகுடுப்பை said...

சொந்த நாட்டுத் தமிழர்களையும் எதிரியாகவே இந்தியா நாடாத்தி வருகிறது

தமிழ் நாட்டு அரசியல் குடும்ப நல அரசியல் இவர்களால் ஒட்டு மொத்த தமிழினமும் அழிகிறது//

இந்தியத்தமிழர்கள் இந்தியாவில் மற்றையவர்களைவிட முன்னேறியவர்களே. யாரும் நசுக்கவில்லை.இந்திய ஜனநாயகத்தில் குறைகள் இருக்கிறது, அது உலகெங்கும் உள்ளதுதான்.

குடுகுடுப்பை said...

ஈழத்தமிழினம் இந்தியாவுடன் செலவிட்ட காலத்திற்கு பாக்கிஸ்தான் சீனா ஈரான் என்று தமது நட்பை வளர்க்க வேண்டும்

அது தான் எமது விடிவிற்கு உதவும்//

ஒரு காலும் உதவாது..

எல்லாளன் said...

இந்திய ஜனநாயகத்தில் குறைகள் இருக்கிறது, அது உலகெங்கும் உள்ளதுதான்.///

இந்தியாவில் ஜனநாயகம் அப்படி ஒன்று இருக்கிறதா ?????

குடுகுடுப்பை said...

இந்திய ஜனநாயகத்தில் குறைகள் இருக்கிறது, அது உலகெங்கும் உள்ளதுதான்.///

இந்தியாவில் ஜனநாயகம் அப்படி ஒன்று இருக்கிறதா ?????

கண்டிப்பாக, இவ்வளவு வேறுபாட்டுடன் ஒரு நாடு எப்படி முன்னேறமுடியும் ஜனநாயகம் மட்டுமே காரணம்.ஈழத்தமிழர் பிரச்சினையில் வேறு கட்சி வேறு நிலை எடுக்கலாம் அல்லவா?

tamil24.blogspot.com said...

மகிந்தவிடம் சொல்ல வேண்டிய விடயத்தை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சொல்லியுள்ளீர்கள்.

போர்நிறுத்தம் என்று சொல்லிவிட்டே பொதுமக்களை கொன்றொழிக்கும் அரசதலைவனல்லவா மகிந்த.

சாந்தி

பழமைபேசி said...

Welcome back!

குடுகுடுப்பை said...

tamil24.blogspot.com said...

மகிந்தவிடம் சொல்ல வேண்டிய விடயத்தை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சொல்லியுள்ளீர்கள்.

போர்நிறுத்தம் என்று சொல்லிவிட்டே பொதுமக்களை கொன்றொழிக்கும் அரசதலைவனல்லவா மகிந்த.

சாந்தி
//

நான் உங்களை அதிகம் குழந்தை பெற்றுக்கொள்ள சொல்கிறேன். அதுதான் இந்த சாமனிய தமிழ நல விரும்பியின், இந்த பதிவின் அடிநாதம்.

எல்லாளன் said...

ஒரு காலும் உதவாது...////

தமிழன் எப்போது இந்தியாவின் காலை நக்கிப் பிழைப்பவனாக இருக்க வேண்டு ம் என்றா சொல்ல வருகிறீர்கள் குடு குடுப்பை

இந்தியாவின் எதிரிகளிடம் தமிழர்கள் கைகோர்ப்பது என்றவுடனே

ஒரு காலும் உதவாது..///

என்று உங்களை யார் என்று இனம் காட்டி விட்டீர்கள்

ஆனால் அது தான் உண்மை

சிங்களம் அதன் மூலம் தான் தன்னை வளர்த்து வருகிறது

அது மட்டுமல்லாமல் இந்தியாவை வெருட்டியும் வருகிற மட்டுமல்லாமல்

இந்தியாவின் எதிரிகளுடன் மிகவும் நட்பாகவும் இருக்கிறது

ஆகவே தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளுடன் கை கோர்ப்பது தான்

ஈழத்தமிழினத்திற்கு விடிவைத் தரும்

எதிரிக்கு எதிரி நண்பன் என்று எல்லோரும் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள்

ஏன் சிங்களவனே சிலவேளைகளில் பிரித்து தந்து விடுவான் ஈழத்தை

எல்லாளன் said...

மற்றக்கட்சிகள் நேரடியாகவே படை அனுப்பி தமிழினத்தை அழிக்க மாட்டார்கள்

மறை முகமாகத்தான் செயற்படுவார்கள்

குடுகுடுப்பை said...

ஒரு காலும் உதவாது...////

தமிழன் எப்போது இந்தியாவின் காலை நக்கிப் பிழைப்பவனாக இருக்க வேண்டு ம் என்றா சொல்ல வருகிறீர்கள் குடு குடுப்பை//


இந்தியாவின் எதிரிகளிடம் தமிழர்கள் கைகோர்ப்பது என்றவுடனே

ஒரு காலும் உதவாது..///

நான் ஈழத்தமிழர்கள் சுய மரியாதையோடு முழு வாழ்வுரிமையோடு வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நல விரும்பி.
இந்தியா உங்களுக்கு உதவவேண்டும் ஆசைப்படும் சாமனியன். இந்தப்பதிவை வேண்டுமானால் நீக்கிவிடலாம் அதுதான் நல்லதென நினைக்கிறேன்.

குடுகுடுப்பை said...

அது மட்டுமல்லாமல் இந்தியாவை வெருட்டியும் வருகிற மட்டுமல்லாமல்

இந்தியாவின் எதிரிகளுடன் மிகவும் நட்பாகவும் இருக்கிறது

ஆகவே தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளுடன் கை கோர்ப்பது தான்

ஈழத்தமிழினத்திற்கு விடிவைத் தரும்

எதிரிக்கு எதிரி நண்பன் என்று எல்லோரும் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் //

ஒருகாலும் அவர்கள் தமிழர்களுக்கு உதவமாட்டார்கள்.நன்றாக யோசித்து நண்பர்களை உருவாக்குங்கள், உங்களுக்கு தேவை நண்பர்கள் எதிரிகள் அல்ல.

செந்தழல் ரவி said...

No Tension. Relax. you are posting your views. thats all.

நந்தவனத்தான் said...

நல்ல பதிவு. சாமான்ய தமிழக தமிழனுக்கு பிற நாட்டுத் தமிழனின் நலவாழ்வு முக்கியம். அதே நேரத்தில் அவன் தேசம் இந்தியா, அதனை கைவிடமாட்டன் என்று ஈழத்தவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

நன்று உரைத்துள்ளீர்கள் குடுகுடுப்பை..

வருங்கால முதல்வர் said...

சில பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இந்தப்பதிவி ஈழ்த்தமிழினம் அழியாமல் பாதுக்காக்க இருக்க வேண்டிய ஆதங்கமே இதில் மற்றவை வேண்டாமே.

எல்லாளன் said...

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது 05/02/2009 by வினவு

இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தங்களால் இயன்ற அளவு போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. தேசிய ஊடகங்களும் ஈழத்திற்கான செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதில்லை.

சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். அதனால்தான் வீரர்களையும், ஆயுதங்களையும், அதிகாரிகளையும் இறக்கி இந்தப் போரில் இந்தியா பங்கேற்கிறது. தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை. அதன் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் ஈழ மக்களை பூண்டோடு அழிக்கும் இலங்கையின் போரை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். ஊடகங்களுக்கும் அப்படித்தான் பேட்டி கொடுக்கின்றனர்.

எனவே ஈழத்தின் அப்பாவி தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சி என்பது இந்தியாவை உலக நாடுகளில் அம்பலப்படுத்துவதன் மூலமே செய்யமுடியும். ஏதோ மனிதாபிமான பிரச்சினைக்காக ஈழத்தின் மக்களுக்கு குரல் கொடுப்பதை விட அரசியல் ரீதியான இந்த கோரிக்கைக்குத்தான் வலு அதிகம். புலம்பெயர்ந்த தமிழர்களும், வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களும், இந்தப் பிரச்சினையை அறிந்த பல்தேசிய இன மக்களும் இலங்கையில் மறைமுகப்போரில் ஈடுபடும் இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் கண்டித்து வெளியேறுமாறு முழக்கமிடவேண்டும். இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும். இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்தை நேபாளின் மாவோயிஸ்ட்டுகள் புரிந்து கொண்டே அரசியல் பாதையை அமைத்தனர். அதனால்தான் கடைசி நேரத்தில்கூட மன்னராட்சிக்கு முட்டுக்கொடுத்து வந்த இந்திய அரசு பின்னர் வேறு வழியின்றி நேபாள் மக்களின் போராட்டத்தால் தனது நிலையை மாற்றிக் கொண்டது.

ஈழம் தொடர்பாக நாம் செய்யவேண்டியதும் இதுதான். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் உலகநாடுகளிலும் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்திய அரசை நாம் பணியவைக்க முடியும். இதன் மூலமே ஈழத்து மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும். குறைந்த பட்சம் முல்லைத்தீவில் கொல்லப்படும் அப்பாவி மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற முடியும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இருக்கும் உலக ஆதரவு அல்லது கவனத்தை நாம் ஈழத்திற்காகவும் பெறவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய கோரிக்கையுடன் இந்தியாவை அம்பலப்படுத்தி நடந்த லண்டன் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். முத்துக்குமாருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு இணையாக இந்திய அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம். அப்படி நடத்தப்படும் போராட்டங்களின் செய்திகள், புகைப்படங்களை அனுப்பித் தந்தால் வினவில் வெளியிடுகிறோம்.

S.R.Rajasekaran said...

\\புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.\\இது ஒரு தீர்வு ஆகாது .தனி நாடு என்பதும் சரியான தேர்வு அல்ல .சமஉரிமை என்பதே சரியான தீர்வு

குடுகுடுப்பை said...

தீர்வாக எழுதவில்லை, 2.5 லட்சம் பேரை அழிக்க நினைப்பதை வேடிக்கை பார்க்கும் உலகின் மேல் உள்ள கோபத்தில் இனத்தை பெருக்குங்கள் என்று சொன்னேன்.

ராஜ நடராஜன் said...

ஊரெல்லாம் சுத்திவிட்டு உங்க வீட்டுக்கு தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.

//புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.//

அருமையான யோசனை.ஈழத்தமிழர்களே!இழந்தவைகளை ஈடு செய்யுங்கள்.

வெத்து வேட்டு said...

if Eelatamils should be saved, ltte should be eliminated fully..and accept Rajiv's Indo-Lanka accord and work from there...otherwise no hope

Ramesh said...

Indiavidam arivuppoorvamaga sonnalum kettukkolla indiavukke arivillai, eelatamilargal mattum alla ulagatamilargal anaivarum tharpothaiya nilaiyil americavin uthaviyei pera vendum,avargalin mulu uthaviyaleyeh ,tamileelathai adaiya mudiyum, india oru thurogi naadu, india tamilnattu tamilargalukku thurogam seikira naadu,

வில்லன் said...

//புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.//

இதை சொல்லும் குடுகுடுப்பையரே நீங்கள் எத்தனை குழந்தை பெற்று உள்ளீர்கள்.

சிவபிரகாசம் said...

அனைவருக்கும் வணக்கம். இது இந்த வலையில் என் முதல் பதிவு. எல்லாளன் சொல்வது சரியே. நிறைய குழந்தைகள் பெரும் யோசனை சரியானதாகவே பார்கிறேன்!

சிவபிரகாசம் said...

வருங்கால முதல்வர் வலையில் உள்ள சில பல பதிவுகளை படித்தேன், அருமையாக இருந்தது. இங்கு பதிவு இடுபவர்கள் பலர் வெளி நாடுகளில் இருப்பதை உணர முடிந்தது.. வெளி நாடுகளில் வாழ்ந்தாலும் தத்தமது ஊர்கள் பற்றி பெருமையாக எழுதுவதை படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது.
எனது ஊர் கோவை அருகே உள்ள திருப்பூர், இயல்பாகவே கொங்கு தமிழ் பேசுபவன் நான். ஒரு வலை தொடங்கி சமீபமாகத்தான் என் சமூகம் பற்றிய கவலைகளை வெளியிட்டு வருகிறேன். இதை ஒரு வடிகாலாக இருக்கும் என்றே நினைத்து தொடங்கினேன், ஆனால், என்னை போல பலர் ஆரோக்கியமாக எழுதுவது எனக்கு பிரம்மிப்பை ஏற்படுத்திவிட்டது!!

தமிழ் ஆர்வம் கொண்ட யாரை சந்தித்தாலும் எனக்கு அந்த நாள் இனிமயனாதாக உணர்வேன், இன்று உங்கள் இத்தனை பேரை சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஒன்று மட்டும் உறுதி. நமக்குள் கருத்துக்கள் பேதம் இருந்தாலும், நம் உணர்வுகள் ஒன்றாக இருக்கிறது...

'திரை கடல் கடந்தும் திரவியம் தேடும் உங்கள் அனைவரயும் வாழ்த்துகிறேன்'!!

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Valaipookkal said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

வண்ணத்துபூச்சியார் said...

அவசியமான பதிவு.

தொடருங்கள்.

NTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

யாழினி said...

pulam peyarntha thamizharkal niraiya pillai petrukkolvathal enna laabam? thamizhch chamuthayam valarum endru nambikkaiya kudukuduppai? pulampeyarntha thamizharkalil palar amerikkanagavum, canadianagavum, airoppiyanagavum mari vittanarae?
Pala nadugalil irukkum Pulam peyarntha Eezhath thamizhargalai nokki vaikkiraen oru kelvi. Thani eezham amaiyum patchathil ungalil ethanai per thai nattukku thirumba thayaar?