பிரபல பதிவர் உருப்புடாதது அண்டர்ஸ்கோர் அணிமா அவர்கள் பற்றிய ஒரு முக்கிய செய்தி, கடந்த சில வாரங்களாக தமிழ்மணத்தில் இனைக்க முடியாமல் தடுமாறி, கடைசியாக ஒரு பெண்ணுக்கு உதவும் செயலில் இறங்கியது யாவரும் அறிந்ததே.
அந்த பெண்ணுக்கு உதவியாக பதிவர்கள் கொடுத்த சில கோடிகளை எடுத்துக்க்கொண்டு அந்த பெண்ணிடம் ஒப்படைப்பதற்காக ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமாணப் பயணம் செய்து கொண்டிருந்த போது, பணம் கொண்டு வருவது தெரிந்த கடல் கொள்ளைர்கள் விசைப்படகுகளில் வந்து விமாணத்தை மறித்து அவரை கடத்தி சென்றுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும்.
Monday, November 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
பின்னூட்ட பிதா மகனை விடுவிக்க இந்திய ராணுவமும்,அமெரிக்கா ராணுவமும் ௬ட்டு நடவடிக்கை வேண்டும்
இந்த சர்வதேச பிரச்சினையிலே ஐ.நா தலையிட வேண்டும், அனைத்து கட்சி ௬ட்டம் நடத்த வேண்டும், இதை யாவது யாரும் புறக்கணிக்காமல் கலந்து கொள்ள வேண்டும்
அனைத்து பதிவர்களிடமும் பணம் வசூல் செய்து கொள்ளையர்களிடம் குடுத்து அவரைத் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கையும் வைப்போம்.
( என் பதிவுக்கெல்லாம் வந்து பின்னூட்டம் போட்டுருக்காரு... ஏதோ நம்பலால அவருக்கு முடுஞ்ச நல்ல காரியம் :)
இதை முதலில் பார்த்தது அடியேன். என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுல பாகிஸ்தான் கை இருக்கறதாகப் பேச்சு....
எதோ ஒரு தீவுல தன்னந்தனியா
சுத்திகிட்டு இருக்காராம்!
அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க போகிறேன்னு வேற சொல்லிட்டு இருந்தார், அய்யோ பாவம்!!
ஏதேச்சதிகார வர்க்கத்தின் சதியே இது. தர்மம்தனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். பதிவர்கள் சோர்வடைய வேண்டாம். அவர் திரும்பி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!
வாழ்க அணிமா நாமம்! வெல்க மொக்கையர் முன்னேற்றக் கழகம்!!
:):):)
அம்மணிக்குச் சேர வேண்டிய நிதியை குடுகுடுப்பையிடம் கொடுத்துள்ளதாக அணிமா குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பதிவுலகம் சார்பில் உண்ணும் விரதப் போராட்டமும் குடுகுடுப்பையார் ஸ்பான்சர் செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்பாடா.. நான் தப்பிச்சேன்.. பழைமைபேசி வேறு எங்க, எங்கன்னு என் உயிரை எடுத்துகிட்டு இருந்தார்.. இப்பதானே புரியுது, அவர் பணத்த எடுத்துகிட்டு ஒடின விவரம். கொக்க மக்கா, பக்கத்தில, நான் இருக்கேன்.. எங்கிட்ட கூட சொல்லாம, கொள்ளாம இந்த ஆள் இப்படி பண்ணிட்டாரே..
ஆஹா
கடசில பண்ணிட்டாங்களா????
ஆனா ஒண்ணுமட்டும் புரியல.
விமானத்துல பொனவர எப்படி கடல் கொள்ளைக்காரங்க படகில வந்து பிடிச்சாங்க????
ஹிஹிஹி
இதுல ஏதும் சதி இருக்குமோ?????
Post a Comment