Wednesday, November 5, 2008

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.

முதலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள்.

உலகின் முக்கிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் மக்கள் இன்றைக்கு அமெரிக்காவின் பலம் அதன் ஜனநாயகத்தில் உள்ளது என்பதை நிரூபித்த மாபெரும் நாள்.


அமெரிக்காவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் ஜனநாயக சட்ட விதிகளின் படி அதிபராகலாம் , இதன் படி இந்த நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஒரு இனத்தை சார்ந்தவரை அதிபராக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி.

ஜான் மெக்கேய்ன் போன்ற நேர்மையாளர், 2000 மாவது ஆண்டிலேயே அதிபர் ஆகியிருக்க வேண்டியவர்.ஆனாலும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை மனமார பாராட்டிய இவரை மனமார பாராட்டுகிறேன்.

ஒபாமா சொன்னது போல் இந்நாட்டின் பலம் ஆயுதங்களில் இல்லை,அதை விட மிகப்பெரிய ஆயுதம் அமெரிக்காவின் ஜனநாயகம். சட்டமாக இருந்த இந்த ஆயுதம் மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வந்து இன்றைக்கு அடிமையாக வரப்பட்ட ஒரு இனத்தை சார்ந்தவரை அதிபராக தேர்ந்தெடுத்து அமெரிக்க மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும்,மக்களுக்கும் சொல்லும் செய்தி இதுதான்.

பிறந்த நாட்டிலேயே ஒரு இனத்தை சேர்ந்த ஒருவன் உயர் பதவி அடைய முடியாது,இரண்டாம் தர குடிமகன் என்று சட்டமாக வைத்துள்ள இலங்கை போன்ற நாடுகள், அமெரிக்காவின் இந்த ஜனநாயக ஆயுதத்தை இலவசமாக பெற்றுக்கொண்டு மக்களை சமமாக பாவிக்கவேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் ஒரு இனத்தை அழிக்க நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.இந்த இன அழிப்பை செய்யும் அரசுகளே உங்கள் மனங்களில் மாற்றம் வரட்டும்.

ஒபாமாவின் உதவியோடு ஈழத் தமிழர் துயர் தீர்க்கப்பட இந்த மக்கள் சக்தியை வேண்டுவோம்.

30 comments:

பழமைபேசி said...

//உலகின் முக்கிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் மக்கள் இன்றைக்கு அமெரிக்காவின் பலம் அதன் ஜனநாயகத்தில் உள்ளது என்பதை நிரூபித்த மாபெரும் நாள்.//

ரொம்பச் சரி!

நசரேயன் said...

/*பிறந்த நாட்டிலேயே ஒரு இனத்தை சேர்ந்த ஒருவன் உயர் பதவி அடைய முடியாது,இரண்டாம் தர குடிமகன் என்று சட்டமாக வைத்துள்ள இலங்கை போன்ற நாடுகள், அமெரிக்காவின் இந்த ஜனநாயக ஆயுதத்தை இலவசமாக பெற்றுக்கொண்டு மக்களை சமமாக பாவிக்கவேண்டும்.
*/
என்ன அருமையான வரிகள் ..
இந்த வரிகளை இலங்கைக்கு எடுத்து செல்லும் உணவு பொருட்களுடன் அனுப்ப வேண்டும்

பழமைபேசி said...

//என்ன அருமையான வரிகள் ..
இந்த வரிகளை இலங்கைக்கு எடுத்து செல்லும் உணவு பொருட்களுடன் அனுப்ப வேண்டும்//

அண்ணனையும் கூட அனுப்பிடலாம்னு சொல்வீங்க போலிருக்கு?!

நசரேயன் said...

/*
//என்ன அருமையான வரிகள் ..
இந்த வரிகளை இலங்கைக்கு எடுத்து செல்லும் உணவு பொருட்களுடன் அனுப்ப வேண்டும்//

அண்ணனையும் கூட அனுப்பிடலாம்னு சொல்வீங்க போலிருக்கு?!

*/
அவர்க்கு பதிலா அவரு மேய்க்கிற மாடுகளை அனுப்பலாம் :)

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//
அவர்க்கு பதிலா அவரு மேய்க்கிற மாடுகளை அனுப்பலாம் :)
//
வருங்கால அமெரிக்க அதிபரோட அப்பாவை இப்படிச் சொல்லுறது கொஞ்சங்கூட நல்லா இல்ல.

அது சரி, இதக் கொஞ்சம் பாருங்க....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
rapp said...

நல்ல கருத்து. அங்கு மட்டுமன்றி நம் நாடும் இவ்விஷயத்தில் பாடம் கற்க வேண்டும்:):):)

மோகன் கந்தசாமி said...

ஜனநாயகத்தை வெறுக்கின்ற நாடுகளுக்கெல்லாம் வலிந்து ஜனநாயத்தை ஏற்றுமதி செய்யும் அமேரிக்கா, இந்த முறை இலங்கையை பரிட்ச்சித்து பார்க்கலாம்!(யோசிக்காம எதாச்சும் சொல்லிட்டேனா...ஒருவேள,,)

குடுகுடுப்பை said...

//மோகன் கந்தசாமி said...

ஜனநாயகத்தை வெறுக்கின்ற நாடுகளுக்கெல்லாம் வலிந்து ஜனநாயத்தை ஏற்றுமதி செய்யும் அமேரிக்கா, இந்த முறை இலங்கையை பரிட்ச்சித்து பார்க்கலாம்!(யோசிக்காம எதாச்சும் சொல்லிட்டேனா...ஒருவேள,,)//

உங்கள் பார்வை அமெரிக்கா அரசின் மேல், எனது பார்வை மற்ற அரசுகள் மேல் நல்ல விசயம் இலவசமாக கிடைக்கிறது அமெரிக்காவின் தலையீடே இல்லாமல் இவர்கள் பயன்படுத்தலாமே என்ற ஆதங்கம் தான். அதாவது புகுத்தமாலே பயன்படுத்தக்கூடிய விசயம் தானே ஜனநாயகம்.

நசரேயன் said...

/*
உங்கள் பார்வை அமெரிக்கா அரசின் மேல், எனது பார்வை மற்ற அரசுகள் மேல் நல்ல விசயம் இலவசமாக கிடைக்கிறது அமெரிக்காவின் தலையீடே இல்லாமல் இவர்கள் பயன்படுத்தலாமே என்ற ஆதங்கம் தான். அதாவது புகுத்தமாலே பயன்படுத்தக்கூடிய விசயம் தானே ஜனநாயகம்.

*/
முழுவது ஏற்று கொள்ள பட வேண்டிய விஷயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

aahaa

ஆட்காட்டி said...

இவர் வந்து மட்டும் என்ன வெட்டியா சாய்க்கப் போறார்? அதுதான் குத்துறத எங்க குத்தினாலும் ஒண்ணு தான் என்று பார்த்து குத்தியிருக்கிறார்கள்.

குடுகுடுப்பை said...

என்ன பழமை பேசியும்,நசரேயனும் ஏதோ சதி பண்ற மாதிரி தெரியுது

குடுகுடுப்பை said...

வாங்க rapp

//நல்ல கருத்து. அங்கு மட்டுமன்றி நம் நாடும் இவ்விஷயத்தில் பாடம் கற்க வேண்டும்:):):)//

நிறைய நாடுகள் கற்கவேண்டும்.

குடுகுடுப்பை said...

நன்றி T.V.Radhakrishnan

குடுகுடுப்பை said...

வாங்க ஆட்காட்டி said...

// இவர் வந்து மட்டும் என்ன வெட்டியா சாய்க்கப் போறார்? அதுதான் குத்துறத எங்க குத்தினாலும் ஒண்ணு தான் என்று பார்த்து குத்தியிருக்கிறார்கள்.//

நாம என்ன பண்ண போறோம்.

தமிழன் said...

இதையும் பாருங்கள்

http://dilipan-orupuratchi.blogspot.com/2008/11/blog-post_05.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆம் வேண்டுவோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமா அமெரிக்கவாழ் இந்தியமக்கள் ஒபாமாவுக்கு விஷ் பண்ணதா டிவியில ஒரு ந்யூஸ் வந்ததே.
நீங்களும் அதுல இருந்தீங்கதானே.

குடுகுடுப்பை said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

//ஆமா அமெரிக்கவாழ் இந்தியமக்கள் ஒபாமாவுக்கு விஷ் பண்ணதா டிவியில ஒரு ந்யூஸ் வந்ததே.
நீங்களும் அதுல இருந்தீங்கதானே.//
ரொம்ப குசும்பு அதிகமாயிடுச்சு உங்களுக்கு

நசரேயன் said...

/*
என்ன பழமை பேசியும்,நசரேயனும் ஏதோ சதி பண்ற மாதிரி தெரியுது
*/
சதி கிதி எல்லாம் ஒன்னும் இல்லங்கோ நாங்க எல்லாம் பச்ச புள்ளைங்க

குடுகுடுப்பை said...

வாங்க தீலிபன்

இதையும் பாருங்கள்

http://dilipan-orupuratchi.blogspot.com/2008/11/blog-post_05.html

கண்டிப்பா பாக்கிறேன்

S.R.Rajasekaran said...

இனவெறி கொண்ட நாட்டில் இப்படி ஒரு அதிசயமா அமெரிக்க மக்களுக்கு நன்றி!!!.

சொந்த மண்ணில் சுவாசிக்க கூட உரிமை மறுக்கப்படும் எம் மக்களுக்கு
இதன் மூலம் ஒரு விடிவு கிடைத்தால்
உங்களின் சிந்தனைகளுக்கு நன்றி

குடுகுடுப்பை said...

வாங்க S.R.ராஜசேகரன்

// இனவெறி கொண்ட நாட்டில் இப்படி ஒரு அதிசயமா அமெரிக்க மக்களுக்கு நன்றி!!!.
//

இதை நான் மறுக்கிறேன்.200 ஆண்டு சரித்திரத்தில், இனவெறி சட்டம் மூலமாகவும்,மனித மனங்களின் மூலமும் மாற்றம் கண்டுள்ளது.ஆனால் ஆசிய நாடுகள் மதம்,சாதி,இனம் என்ற பெயரில் 2000 த்து மேற்பட்ட வருடங்களாக தொடர்கிறது. அடுத்தவரை குறை சொல்லும் முன் நம் குறையை கலைவோம்.

சொந்த மண்ணில் சுவாசிக்க கூட உரிமை மறுக்கப்படும் எம் மக்களுக்கு
இதன் மூலம் ஒரு விடிவு கிடைத்தால்
உங்களின் சிந்தனைகளுக்கு நன்றி

/
நன்றி அது என் கடமை
/

கானா பிரபா said...

பதிவுக்கு நன்றி நண்பரே, ஒபாமாவாவது மாற்றத்தைக் கொடுக்க வேண்டும்

ராஜ நடராஜன் said...

//பிறந்த நாட்டிலேயே ஒரு இனத்தை சேர்ந்த ஒருவன் உயர் பதவி அடைய முடியாது,இரண்டாம் தர குடிமகன் என்று சட்டமாக வைத்துள்ள இலங்கை போன்ற நாடுகள், அமெரிக்காவின் இந்த ஜனநாயக ஆயுதத்தை இலவசமாக பெற்றுக்கொண்டு மக்களை சமமாக பாவிக்கவேண்டும்.//

அழகாகச் சொல்லியிருக்கீங்கன்னு சொல்ல வந்தா அதுக்கு முன்னாலேயே முந்திட்டாங்க.அதனால பழமையோட //அண்ணனையும் கூட அனுப்பலாமுன்னு சொல்லுவீங்க போல இருக்குதே// வை ரசித்து சிரித்து விட்டுப் போகிறேன்:)

Mahesh said...

என்னாதிது... மொக்கைன்னு சொல்லீட்டு சீரீசா எழுதறது ???

S.R.Rajasekaran said...

அடுத்தவரை குறை சொல்லும் முன் நம் குறையை கலைவோம்


உண்மை ,உண்மை ,உண்மை.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கானா பிரபா, ராஜ நடராஜன் மகேஷ்.