Wednesday, November 12, 2008

2030 தில் காவிரி பிரச்சனை

கர்நாடக முதல்வர் : வணக்கம் ..வணக்கம் அண்ணாச்சி, உன்கேளை பாத்ததிலே எனக்கு ரெம்ப சந்தோசம்

தமிழக நீர்ப்பாசன அமைச்சர் : பத்திங்களா. இவரு குசும்பை, தமிழ்ல பேசுனா நாம ஏதும் கேள்வி கேட்க மாட்டமுன்னு

தமிழக முதல்வர் : இரும், எல்லாம் நான் பார்த்து கொள்கிறான்.(க.முதல்வரை பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு) ஐயா தமிழகத்திலே விவசாயம் வரலாறு ஆகி 10 வருஷம் ஆச்சு, மறுபடியும் தமிழ் நாட்டுல விவசாயம் பண்ண முயற்சி எடுக்கிறோம்.

க.முதல்வர் : (கையை தட்டி கொண்டு) அருமை..அருமை, அப்ப நிறைய வரலாற்று ஆராச்சியாளர்கள் உருவாகிட்டாங்கனு சொல்லுங்க

நீ.அமைச்சர் : ஐயா நீங்க எங்களை புகழுறீங்களா? நக்கல் பண்ணுரீங்கலானு தெரியலையே?

த.முதல்வர் : முதல்வர் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்?

க.முதல்வர் : ஐயா காவிரி எங்களுக்கே சொந்தம்,அங்கேயிருந்து ஒரு சொட்டு தண்ணி ௬ட கிடைக்காது யாருக்கும், எதோ பிரதம மந்திரி சொன்னாருன்னு வந்தேன் அவ்வளவு தான்.

நீ.அமைச்சர் : ஐயா ஒரு தாய் வயத்து புள்ளை யில் ஒரு புள்ள பசியிலே செத்து மடியுறதுதான் தர்மமா?

(க.முதல்வர் விசில் அடித்து கொண்டு, கை தட்டுகிறார்)

நீ.அமைச்சர் : பாத்திங்களா, நான் போட்ட போடு எப்படி வேலை செய்யுது

க.முதல்வர் : நீங்க, நல்லா வசனம் பேசுறீங்க, தமிழ் சினிமாவிலே நல்ல எதிர் காலம் இருக்கு, கை தட்டு விசில் எல்லாம் அதுக்கு தான்

நீ.அமைச்சர் :அட பாவி,நான் வயது எரிச்சலில் பேசிகிட்டு இருக்கேன், நீ வகை தெரியாம பேசுற

க.முதல்வர் : இன்னைக்கு என்ன பேசனுமுன்னு நான் எல்லாம் நேத்தே அனைத்து கட்சி ௬ட்டத்துல முடிவு பண்ணியாச்சு, நீங்க அனைத்து கட்சி ௬ட்டம்னுனா எல்லோரும் தெறிச்சு ஓடி போறீங்க.

நீ.அமைச்சர் : இவருக்கு நாக்குல சனி நின்னு தலைய விரிச்சு ஆடுது முதல்வரே

த.முதல்வர் : நீங்க ஒரு மக்கள் தலைவர் மாதிரி பேசாம, வாட்லாறு நாகராஜ் புள்ள மாதிரி பேசுறீங்க, எல்லா மாநிலத்திலேயும் மக்கள் தான் இருக்காங்க,நதி,காற்று,வானம், பூமி இதெல்லாம் சொந்தம் கொண்டாட ௬டாது. ஐயா நாங்க உங்க உரிமையை பறிக்க வரலை,உங்க உரிமையிலே எங்களுக்கு வேண்டிய பங்கை கேட்கிறோம்

(உடனே கர்நாடக நீர் பாசன அமைச்சர், கை தட்டி,விசில் அடி, சட்ட பையிலே வச்ச பேப்பர் எல்லாம் அள்ளி வீசி எறியுராறு)

நீ.அமைச்சர் : ஒரு முடிவோட தான் இருக்காங்க போல தெரியுது, என்ன மாதிரி குத்தாட்டம் போடுறான் பாருங்க, நீங்க சூப்பர் ஸ்டார் ஆகிடுவீங்கனு சொல்லுவான் போல

கர்நாடக நீர் பாசன அமைச்சர் : இந்த வசனத்தை எந்த படத்திலே வேணுமுனாலும் வைக்கல்லாம்

த.முதல்வர் : ஐயா நாம எல்லாரும் இந்தியாவுக்கு கிழே தானே இருக்கிறோம், பகுந்து கொடுத்து நாம எல்லாரும் நல்ல வாழனுமுனு நான் நினைக்கிறேன் .

க.முதல்வர் : நான் கர்நாடகத்திற்கு கிழே வரேன், நீங்க இந்தியாவுக்கு கிழே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?

நீ.அமைச்சர் : அடி.. உன் மூஞ்சுல என் வலக்கைய வைக்க (அப்படி சொல்லிட்டு க.முதல்வர் சட்டைய பிடிச்சு விட்டார்)

த.முதல்வர் : அமைச்சர் அவரு சட்டைய பிடிக்காதேய்.. சட்டைய பிடிக்காதேய்..

நீ.அமைச்சர் : மன்னிச்சுருங்க, ஆத்திரத்தை அடக்க முடியலை

த.முதல்வர் : அமைச்சரே, நான் சொன்ன அர்த்தம் வேற, அவரு சட்டையை பிடிச்சா, செவுட்டுல அடிக்கமுடியாது

நீ.அமைச்சர் : ஒ.. அப்படி வாறியளா, இப்ப பாருங்க

(பாளர்..பாளர்.. ன்னு க.முதல்வருக்கு அடி, த.முதல்வர் கை சும்மா இருக்குன்னு கர்நாடக நீர் பாசன அமைச்சரை ஒரு வாங்கு வாங்கிட்டாரு)

க.முதல்வர் : அண்ணா என்னை விட்டுடுங்க, நாமே எல்லாம் ஒரு தாய் புள்ளை, நான் உங்க தம்பி

நீ.அமைச்சர் : இவ்வளவு நேரமா நாங்க இதை தானே சொன்னோம், வாயை கொடுத்து உடம்பை புண்ணாகிட்டீங்களே

த.முதல்வர் : மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டாச்சு, அம்மா தாயே ன்னு கேட்டாச்சு, எதுக்கும் வசத்துக்கு வராத உனக்கு
நீ.அமைச்சர் : இந்தா பத்திரம், தமிழகத்துக்கு பாதி அளவு தண்ணீர் திறந்து விடுவேன்னு எழுதி இருக்கு, கை எழுத்து போடு

த.முதல்வர் : கை எழுத்து போடலை, உன் குடலை உருவிடுவேன் ( மறைத்து வச்சு இருந்த திருப்பாச்சி அருவாளை எடுத்து காட்டுறாரு). எவனாவது தடுக்க வந்தால், உங்களுக்கும் இதேதான்

க.முதல்வர் : கை எழுத்து போட்டு விடுறேன் அண்ணா, கொடுங்க ( பத்திரத்தில் கை எழுது போட்டு, அதை த.முதல்வரிடம் கொடுக்கிறார்)

த.முதல்வர் : வெளியே போய், பிரச்சனையை பேசி தீத்திடோம்னு பேட்டி கொடுக்கணும், ஓடிப்போ ..

க.முதல்வர் : (சட்டை, வேஷ்டி எல்லாம் சட்ட சபையிலே சண்டை போட்ட மாதிரி கிழிச்சு போட்டுட்டு) என்னை என்ன கேணயன்னு நினைச்சீங்களா?இங்க நடந்த எல்லாத்தையும் திரட்டு தனமா வீடியோ எடுத்தாச்சு, அது லைவ் ஓடிகிட்டு இருக்கு, உங்களுக்கு சங்கு தான்
(பின்னாடி நின்னு கிட்டு இருந்த க.தலைமை செயலர் கை கட்டி, விசில் அடித்து)

க.தலைமை செயலர் : இது தான் நெத்தி அடி ..

த.முதல்வர் : அரச கவி, உன் விக்கை எடுத்து போட்டு மேக் அப் கலைச்சு போடு ( இருவரும் தங்களது மேக் அப் யை கலைத்து போடு கிறார்கள்)

க.முதல்வர் : யார் நீங்க, எப்படி இங்க வந்தீங்க..(த.முதல்வர் வேடத்தில் இருந்த வருங்கால முதல்வர்)

வருங்கால முதல்வர் : நான் வருங்கால முதல்வர், இது எங்க அரச கவி

அரச கவி : ஐயா, எவ்வளவோ யோசிக்கோம், இதையும் யோசிக்க மாட்டோமா? கிராபிக்ஸ் ல நாங்க அடிச்சதை எல்லாம் நீங்க அடிச்சதா மாத்தி லைவ் ஓடிகிட்டு இருக்கு, வெளியே போனால் உனக்கு தான் சங்கு

(ஊஊஊஉ..ஊஊஊஊஉ)

க.முதல்வர் : நல்ல திட்டம் போட்டு என்னை எமாத்திடீன்களே.

அரச கவி : இந்த மாதிரி இத்துப்போன திட்டம் எல்லாம் போடுறதுக்குனே, ஒரு இடி விழுந்த இருளாண்டி இருக்கான், அவன் தான் இதுக்கு கதை,திரை கதை,வசனம் எழுதினது

(மறு நாள், 356 வது பிரிவை பயன் படுத்தி க.சட்டசபை கலைக்க பட்டது, காவிரியிலே தண்ணி திறந்து விடப்பட்டது, தமிழகம் எங்கும் முதல்வர் வாழ்க ..காவிரி கண்ட நாயகன் வாழ்க என வாழ்த்து கோஷங்கள்)

13 comments:

பழமைபேசி said...

ஆகா! ஆகா!!

சின்னப் பையன் said...

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

விலெகா said...

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

:-)))))))))))))))))))))))))))

குடுகுடுப்பை said...

//( மறைத்து வச்சு இருந்த திருப்பாச்சி அருவாளை எடுத்து காட்டுறாரு)//

2030 தமிழக முதல்வர். பேரரசா,இல்ல டாக்டர் விஜய் அவர்களா, வன்முறை நெறயா இருக்கே.

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))

S.R.Rajasekaran said...

மாப்பிள இடி விழுந்த இருளாண்டி
திட்டம் எல்லாம் சரிதான்,
2031 காவிரியிலே தண்ணி வந்ததா?.

இங்கும் வரப்புபிரச்சனை ,கட்டசொவர் பிரச்சனை ,நடை பாதை பிரச்சனை...
எதாவது நல்ல திட்டம்

Anonymous said...

இப்படி ஏதாவது விவகாரம் செய்தாதான் கர் நாடக காவிரியில் தண்ணீர் விடும் என் நினைக்கின்றேன். கஷ்டமடா சாமி.. இராகவன், நைஜிரியா

Natty said...

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!
ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

:)

ண்ணா, அத மாதிரி நம்ம பதிவர்கள் யார் கையெழுத்து வாங்கினாலும், 2030 இல் என்னோட ஓட்டு உங்களுக்குத்தான். ;)

நசரேயன் said...

/*ஆகா! ஆகா!!*/
ரெண்டு ஆகா போட்ட பழமைபேசி ஐயாவுக்கு ரெண்டு ஐயோ

நசரேயன் said...

/*ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!! */
வாங்க ச்சின்னப்பையன்

நசரேயன் said...

/*
ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

ஆகா! ஆகா!! ஆகா! ஆகா!!

:-)))))))))))))))))))))))))))
*/
நெறைய ஆகா போட்ட விலேகா விற்கு நிறைய நன்றி

நசரேயன் said...

/*
//( மறைத்து வச்சு இருந்த திருப்பாச்சி அருவாளை எடுத்து காட்டுறாரு)//

2030 தமிழக முதல்வர். பேரரசா,இல்ல டாக்டர் விஜய் அவர்களா, வன்முறை நெறயா இருக்கே.
*/
யாரு முதல்வர் என்பது பரம ரகசியம்.
என்ன செய்ய வன்முறை தான் கை கொடுக்குது

நசரேயன் said...

S.R.ராஜசேகரன்
Natty
இராகவன், நைஜிரியா
முரளிகண்ணன்

உங்களுடைய வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி