Wednesday, November 5, 2008

2030 தில் மின் வெட்டு

மின்துறை அமைச்சர் : முதல்வரே.. என்ன அறையிலே ஒரே கும் இருட்டு

முதல்வர் :ஹும்.. தமிழகத்தின் மின் வெட்டு தலைமை செயலகத்தையும் தாக்கி விட்டது, ஆமா நான் உம்மை அழைத்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது, இது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்?

மின்துறை அமைச்சர் : இந்த சூழ்நிலைக்கு நம்ம கவிஞ்சரிடம் எதாவது கவிதை எழுத முடியுமா என்று விவாதித்து கொண்டிருந்தேன்

முதல்வர்: கதை,கவிதை, கட்டுரை என்ற பெயரில் கும்மி அடிப்பதை நீர் இன்னும் நிறுத்த வில்லையா?

மின்துறை அமைச்சர் : என்ன முதல்வரே இப்படி சொல்லுறீங்க, எழுத்தை வச்சு தானே நீங்கள் இன்று முதல்வராகவும், நான் மின் துறை அமைச்சர் ஆகவும் இருக்கிறோம்

முதல்வர்: நான் எதிர் காட்சிகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன், நீர் என்ன வென்றல் கதை, கட்டுரை என்று காமெடி அடித்துக்கொண்டு இருக்கீர்

மின்துறை அமைச்சர் : மன்னிக்கவும் முதல்வரே, நீங்க வழக்கம் போல மொக்கை போட ௬ப்பிடுரீங்கலோனு நினைச்சேன்.நீங்கள் தான் புள்ளி விவரம் வைத்து அறிக்கைகளை விட்டு சமாளிக்கிறீர்களே.

முதல்வர்: அதனாலே தான் நமக்கு தொல்லை நமக்கு, இப்போதெல்லாம் பத்திரிக்கை சந்திப்புக்கு அழைப்பு விட்டால் யாரும் வருவதில்லை, எப்படியும் நீங்கள் கொடுக்கும் தகவல் எங்களிடம் இருக்கு,நீங்களும் ஒன்னும் புதிதாக சொல்லுவதில்லை , அதை நாங்களே போட்டு கொள்கிறோம் என்று சொல்லி விடுகிறார்கள்.

மின்துறை அமைச்சர்: நாம் சிக்கனம் என்று தானே சொன்னோம், இது கஞ்சத்தனமா அல்லவா இருக்கிறது

முதல்வர்: அதுமட்டுமில்லை நம் புள்ளி விவர அறிக்கைகளை, இது புள்ளி விவரமா? புள்ளி ராஜாவா ? இதுக்கு எய்ட்ஸ் வருமான்னு மொக்கை பதிவுகள் நிறைய வருகிறது

மின்துறை அமைச்சர் : அணுசக்தி ஒப்பந்தத்தின் மேல பழி போட முடியாதா?

முதல்வர் : அது ஒரு அண்ட புளுகு ஒப்பந்தம், யுரேனியம் தாரேன் ன்னு சொல்லி யூரியா ௬ட வரலை

அரசவை கவி : முதல்வரே மின்சாரம் தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு இருக்கிறது, நமக்குத்தான் அதை முறையாக பயன்படுத்த முடியவில்லை.

மின்துறை அமைச்சர்: கட்டையில போற கவி, உன் கற்பனைக்கு வேற இடம் இன்னிக்கு கெடைக்கலையா?

முதல்வர் : இரும் அமைச்சரே, அரச கவி சொல்வதை பார்த்தல், நாம் பேசியதை ஒட்டு கேட்டுள்ளார் என தெரிகிறது, இருந்தாலும் அவரின் கருத்தையும் கேட்போம்

அரச கவி : முதல்வர் ஐயா தமிழகத்திற்கு தேவையானது 1000000 மெகா வாட் மின்சாரம் தான், ஆனா நாம இப்ப செலவழிகிறது 1200000

விவசாய செலவு - 10000

தொழிற்சாலை செலவு - 200000

வீடுகளுக்கு செலவு - 300000

மின் திருட்டு செலவு மிச்ச எல்லா மின்சாரமும் போகுது

மின்துறை அமைச்சர் : யோவ், நீரே திருட்டு தனமா இங்க வந்து திருட்டு மின்சாரம், திருவோட்டு மின்சாரமுன்னு கதை விடுறீர்

முதல்வர் : மின் வெட்டு மன்னிக்கணும் மின்துறை அமைச்சர், உம் வாய் வேட்டை நிறுத்தும், அரச கவி ௬றியது முற்றிலும் உண்மை, நாம் நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கிறது, அதை திருட்டு தனமாக எடுப்பவர்களே மின் தடைக்கு காரணம்

அரச கவி : அதற்கான ஆதாரங்களை இதோ பாருங்கள்

மின்துறை அமைச்சர் : ஆதாரமா, இந்த கும் இருட்டிலே உம் குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது

அரச கவி : அமைச்சரே நீர் அடங்கும் எல்லாம் முதல்வர் பார்த்து கொள்வார் முதல்வர் : இனிமேல் பார்க்க என்ன இருக்கு எல்லாம் தெள்ள தெளிவாக தெரியுது, இனிமேல் அரசகவி தான் மின்துறை அமைச்சர்,இப்போதே உம்மை அமைச்சர் பதவியில் இருந்து எடுத்து விடுகிறேன் .

அரச கவி : அதற்கான கோப்பு இதோ, இதில் உங்கள் கையொப்பம் இடுங்கள்

(கையொப்பம் இட்டவுடன் ..)

மின் துறை அமைச்சர் : அப்ப என் கதி இனிமேல்!!!

முதல்வர் : நீர் மறுபடியும் மொக்கை பதிவு எழுத போகலாம், வாரும் அரச கவி நாம் மின் வேட்டை பற்றி ஆலோசனை செய்வோம்.

அரச கவி : அவர் மட்டுமா, நீருமல்லவா உம் பழைய தொழிலாகிய மாடு மேய்க்கவோ இல்லை மொக்கை பதிவு எழுதவோ போகலாம்

முதல்வர் : என்ன விளையாட்டு இது அரச கவி ?

அரச கவி : இதுவே நிஜம், நீர் கை எழுத்து இட்ட கோப்பு, எனக்கு முதல்வர் பதவி தருவதாகவும், நீர் அரசியலை வெட்டு விலகவும் எழுதிய பதிவு பத்திரம்

முதல்வர் : அமைச்சரே பார்த்தீரா, இருவரையும் இந்த நய வஞ்சக கவி ஏமாற்றி விட்டார்

மின்துறை அமைச்சர்: ஹா..ஹா..ஹா..இந்த ஆப்பு உமக்குத்தான், எனக்கு இல்லை.இதற்க்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதியதே நான்தானே

(மின்சாரமும் வருகிறது)

23 comments:

பழமைபேசி said...

உங்களுக்கும் வருங்கால மொதல்வர் ஆவுற தகுதி இருக்குன்னு காமிக்கிறீங்களாக்கும்?! மவனே, இருங்க நாங்களும் வாரோம் சீக்கிரமே!

நசரேயன் said...

/*
உங்களுக்கும் வருங்கால மொதல்வர் ஆவுற தகுதி இருக்குன்னு காமிக்கிறீங்களாக்கும்?! மவனே, இருங்க நாங்களும் வாரோம் சீக்கிரமே!


*/
நீங்க தான் அந்த அரச கவி

குடுகுடுப்பை said...

மொத்த்தில என்கிட்ட லெட்டர வாங்கிட்டீங்க.பொழச்சு போங்க

rapp said...

:):):)

பழமைபேசி said...

//நீங்க தான் அந்த அரச கவி
//

அப்ப அந்த முதல்வர்? மாடு கீடுன்னெல்லாம்.... ஓ புரிஞ்சு போச்சு!!!

சின்னப் பையன் said...

ஹாஹா...

போட்டுத் தாக்குங்க...

அந்த காண்ட்ராக்ட் எனக்கே கொடுக்கணும். பாத்து செய்ங்க.....

நசரேயன் said...

/*மொத்த்தில என்கிட்ட லெட்டர வாங்கிட்டீங்க.பொழச்சு போங்க
*/
அது மஞ்ச கடிதாசிங்க, அசல் எப்போதும் நீங்கதான்

நசரேயன் said...

/*
:):):)
*/
வாங்க rapp

நசரேயன் said...

/*
//நீங்க தான் அந்த அரச கவி
//

அப்ப அந்த முதல்வர்? மாடு கீடுன்னெல்லாம்.... ஓ புரிஞ்சு போச்சு!!!
*/
இது உள்நாட்டு சதி, இதை எல்லாம் நீங்க நம்ப வேண்டாமுன்னு கேட்டுகிறேன் முதல்வரே

நசரேயன் said...

/*
ஹாஹா...

போட்டுத் தாக்குங்க...

அந்த காண்ட்ராக்ட் எனக்கே கொடுக்கணும். பாத்து செய்ங்க.....
*/
கண்டிப்பா உங்களுக்கு தான், ஆட்சிக்கு வந்த உடனே சொல்லி அனுப்புறோம்

விஜய் ஆனந்த் said...

:-)))...

நசரேயன் said...

வாங்க விஜய் ஆனந்த், அடிக்கடி வாங்க

நசரேயன் said...

/*:):):)*/

வாங்க rapp
அடிக்கடி வாங்க

S.R.Rajasekaran said...

அடடா ரெம்ப கஷ்டப்பட்டு பிளான் பண்ணி முதல்வர் பதவிய வாங்கி இருப்ப போலிருக்க.என்கிட்டே சொன்னா ரெம்ப சுலபமா வாங்கி கொடுப்பேன் மாப்ள.

கவுன்சிலர்,சேர்மேன்,மேயெர்,மத்தியமாநில அமைச்சர்,முதல்வர்,பிரதமர், ஜனாதிபதி -பதவிகள் வாங்க ,விற்க அணுகவும் "www.postingworld.com"

(குறிப்பு :ஒபாமா அவர்களுடன் எங்களது கம்பெனி வரும் 25 தேதி ஒப்பந்தம் போட உள்ளது விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்)

நாங்க ரெடி நீங்க ரெடியா

நசரேயன் said...

/*
அடடா ரெம்ப கஷ்டப்பட்டு பிளான் பண்ணி முதல்வர் பதவிய வாங்கி இருப்ப போலிருக்க.என்கிட்டே சொன்னா ரெம்ப சுலபமா வாங்கி கொடுப்பேன் மாப்ள.

கவுன்சிலர்,சேர்மேன்,மேயெர்,மத்தியமாநில அமைச்சர்,முதல்வர்,பிரதமர், ஜனாதிபதி -பதவிகள் வாங்க ,விற்க அணுகவும் "www.postingworld.com"

(குறிப்பு :ஒபாமா அவர்களுடன் எங்களது கம்பெனி வரும் 25 தேதி ஒப்பந்தம் போட உள்ளது விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்)

நாங்க ரெடி நீங்க ரெடியா
*/
எல்லோரும் நல்ல விவரமாத்தான் இருக்கீங்க.
எனக்கு தானே ஒரு மண்ணுமே தெரியலை

அது சரி said...

நசரேயன்,

உங்களுடைய அபார நம்பிக்கை வியக்க வைக்கிறது..

இருக்கிற சூழ்நிலையில், 2030ல் மின்வெட்டு கண்டிப்பாக இருக்காது..2009க்குள் தமிழ்நாட்டில் மின்சாரம் என்பதே இருக்காது..அடுத்து வரும் தலைமுறைகள் மின்சாரம் என்று ஒன்று இருந்தது என்பதை புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும்..

அப்புற‌ம் எப்ப‌டி முத‌ல்வ‌ர் மின்வெட்டு குறித்து விவாதிக்க‌ வேண்டியிருக்கும்? லாஜிக் உதைக்குதே?

நசரேயன் said...

/*
நசரேயன்,

உங்களுடைய அபார நம்பிக்கை வியக்க வைக்கிறது..

இருக்கிற சூழ்நிலையில், 2030ல் மின்வெட்டு கண்டிப்பாக இருக்காது..2009க்குள் தமிழ்நாட்டில் மின்சாரம் என்பதே இருக்காது..அடுத்து வரும் தலைமுறைகள் மின்சாரம் என்று ஒன்று இருந்தது என்பதை புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும்..

அப்புற‌ம் எப்ப‌டி முத‌ல்வ‌ர் மின்வெட்டு குறித்து விவாதிக்க‌ வேண்டியிருக்கும்? லாஜிக் உதைக்குதே?
*/
வாங்க அது சரி.
நீங்க சொல்வது எல்லாம் நடந்தாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை

நட்புடன் ஜமால் said...

ஒன்றல்ல பல ஆஹா சொல்லலாம்.

நசரேயன் said...

/*
ஒன்றல்ல பல ஆஹா சொல்லலாம்.
*/

வாங்க அதிரை ஜமால்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கிரி said...

:-)))

ஆட்டோ வரபோகுதாம் உங்களை தூக்க உஷார் :-)

நசரேயன் said...

/*
:-)))

ஆட்டோ வரபோகுதாம் உங்களை தூக்க உஷார் :-)
*/

ஷேர் ஆட்டோ அனுப்பி விட சொல்லுங்க, என்னோட சேத்து ஒரு நாலு ஐந்து பேரை தூக்க வேண்டிய வரும் :)

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))

நசரேயன் said...

/*:-))))))))))))))))))*/
வாங்க முரளிகண்ணன்