ஈழச்சகோதரி தூயா வலை உலகத்தமிழர்களுக்கு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வர தமிழ்ப்பதிவர்களை ஒரு பதிவு எழுத சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-----------------------------
உலக சமுதாயமே இலங்கையில் நடக்கும் தமிழினப் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகள் தேவை,அதனால் இலங்கை அரசிடம் கெஞ்சிக்கூத்தாடி வெளிநாட்டு ஊடகங்களை போர் நடக்கும் இடத்திற்கு அனுமதிக்க செய்யுங்கள்.நீங்கள் போரை நிறுத்தி எஞ்சியிருக்கும் மக்களை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இழந்து விட்டதால், இனப்படுகொலையை உலக ஊடகம் காட்சிப்படுத்தினால் பின்னோரு நாளில் நீங்கள் மியூசியத்தில் வைத்து இப்படியெல்லாம் ஒரு இனம் கொலை செய்யப்பட்டது என்று காட்ட வசதியாக இருக்கும்.
---------------------------------
ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அங்கே நடக்கும் அனைத்தையும் புலம் பெயர் தமிழர்களாக இருப்பினும் ஓரளவிற்கு நீங்கள் அறிவீர்கள்,நாங்கள் தெரிந்து கொள்வது ஊடகங்கள் மூலமே. உங்கள் கருத்துக்களை தமிழ்ப்பதிவுகளாக எழுதுவதினால் அது அனைவரையும் அடையப்போவதில்லை. ஆங்கிலத்தில் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் , இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்.மேலே நான் என் ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். அது 200 பேருக்கு மேல் சென்றடையப்போவதில்லை.
சரியான அனுகுமுறையை கையாண்டு அப்பாவிகளின் உயிர்களை காத்திடுங்கள்.
தொடர்புடைய முந்தைய பதிவு
இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம். ~ வருங்கால முதல்வர்
Wednesday, April 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது.
// குடுகுடுப்பை said...
இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது.//
சத்தியமா நான் இல்லை
நிச்சயமாக...மற்றைய மொழிகளில் எழுதுவதும் அவசியமே..நன்றி
//இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது.//
கிகிகி என் ஈழப்பதிவுகளுக்கு கிடைக்காதத எதிர் ஓட்டுக்களா :P இதெல்லாம் சகஜமப்பா
//
உங்கள் கருத்துக்களை தமிழ்ப்பதிவுகளாக எழுதுவதினால் அது அனைவரையும் அடையப்போவதில்லை. ஆங்கிலத்தில் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் , இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்.
//
சரியான ஆலோசனை...எழுதுவதை எத்தனைப் பேர் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது...தூயா செய்தது போன்று இலங்கை பொருட்களை அலுவலகங்களில் புறக்கணிக்கலாம்...ஏன் என்று கேள்வி வரும்போது அங்கு நடக்கும் படுகொலைகளை வெளிக் கொண்டு வரலாம்..
இது உடனடிப் பலன் தராது...ஆனால் நம்மால் முடிந்தது...
அரசுப் பதவிகளில், உயர் மட்டத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் இந்த பிரச்சினை குறித்து அந்தந்த அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கலாம்...
இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சிலர் சொல்லக்கூடும்...ஆனால், ஐரிஷ் பிரச்சினையில் புலம் பெயர்ந்த மக்கள் பெரும்பங்கு ஆற்றினர் என்பது வரலாறு..
//
குடுகுடுப்பை said...
இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது.
//
மனித உணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே இலங்கைப் பிரச்சினை புரியும் என்பதால் உணர்வு இல்லாத ஒருவராக இருக்கக்கூடும்...
சரியான ஆலோசனை...எழுதுவதை எத்தனைப் பேர் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது...தூயா செய்தது போன்று இலங்கை பொருட்களை அலுவலகங்களில் புறக்கணிக்கலாம்...ஏன் என்று கேள்வி வரும்போது அங்கு நடக்கும் படுகொலைகளை வெளிக் கொண்டு வரலாம்..
//
போன வாரம் நல்லா இருந்தும் இலங்கைச்சட்டையை புறக்கணித்தேன்.
//
இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்//
அப்படியே எனக்கும் இந்தி சொல்லி குடுங்க
//போன வாரம் நல்லா இருந்தும் இலங்கைச்சட்டையை புறக்கணித்தேன்.//
நன்றி சொல்லி கொள்கின்றேன்...
//போன வாரம் நல்லா இருந்தும் இலங்கைச்சட்டையை புறக்கணித்தேன்.//
நான் இதுக்கு தான் சட்டயே போடுறது இல்லை
//
குடுகுடுப்பை said...
போன வாரம் நல்லா இருந்தும் இலங்கைச்சட்டையை புறக்கணித்தேன்.
April 8, 2009 5:05 PM
//
நல்ல விஷயம்..
நான் பல வருடங்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை உபயோகிப்பதில்லை...டிக்கட் ரேட் குறைவாக இருந்தாலும்....அதை பயன்படுத்தும் நண்பர்களிடமும் பெரும்பாலும் பேசி வேறு ஏர்லைனை உபயோகிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறேன்...ஏதோ நம்மால் முடிந்தது...
//இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது.//
ithukkum maatuma nalla nalla karuthu ulla pala vishiyangal pathivugalaukku sila vishamigal -ve poduranga mokkaiya eluthuna nane than solran +ve poduranga, i have wrote about muthukumar and govt schools goyyala orae ethir vottu but mokkaiya kunudu kavithai nalla vottu
nada ithu
nalla muyarchi nanba
குடுகுடுப்பை said...
இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது//
+ve பதிலா -ve குத்திட்டாருன்னு நினைக்கிறேன்
//உங்கள் கருத்துக்களை தமிழ்ப்பதிவுகளாக எழுதுவதினால் அது அனைவரையும் அடையப்போவதில்லை. ஆங்கிலத்தில் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் , இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்.மேலே நான் என் ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். அது 200 பேருக்கு மேல் சென்றடையப்போவதில்லை.//
நல்ல எண்ணம்தான்.. எங்களுக்கும் எழுத ரொம்ப ஆசை தான்.... ஆனா.................. எங்களுக்கு தமிழ தவிர வேற மொழி ஒன்னும் தெரியாதே?????? என்ன பண்ண சொல்லுங்க.
// குடுகுடுப்பை said...
இதுக்கு யாருப்பா எதிர் வோட்டு போடுறது.//
நான் போடுறேன்..... கண்டிப்பா.....
ஏன்னா எனக்கு தமிழ தவிர வேற மொழி ஒன்னும் சரியாய் தெரியாதே?????? (எல்லாமே அரகொற) என்ன பண்ண சொல்லுங்க.
???? நசரேயன் said...
//போன வாரம் நல்லா இருந்தும் இலங்கைச்சட்டையை புறக்கணித்தேன்.//
நான் இதுக்கு தான் சட்டயே போடுறது இல்லை????
ஆமா இவரு பிங்க் ஜட்டி பனியன் தவிர எதுவுமே போடுறது இல்ல. அதுவும் நம்ம பம்பாய் காரங்க இலவசமா கொடுத்தது.
நசரேயன் said...
//
இந்தி தெரிந்தால் இந்தியில் பதிவெழுதுங்கள்//
அப்படியே எனக்கும் இந்தி சொல்லி குடுங்க
உமக்கு இந்தி சொல்லிகுடுகுரதுக்கு பதிலா ஒரு கழுதய பேச வசிரலாமே.....
//குடுகுடுப்பை said...
போன வாரம் நல்லா இருந்தும் இலங்கைச்சட்டையை புறக்கணித்தேன்.
April 8, 2009 5:05 PM//
அத அப்படியே எனக்கு அனுபிருக்க்கலாம்ள. சும்மா கொடுத்தா வேண்டாம்னா சொல்லபோரம்.............. என்ன்ன புள்ள நீங்க போங்க.....
என்னால் முடிஞ்ச அளவு நெறைய பின்னுட்டம் போட்டுட்டேன்..... அது மட்டும் தான் என்னால முடியும். மத்தபடி கத கித எல்லாம் எழுத தெரியாது.... ஒன்லி நையாண்டி......
நான் நல்ல ஓட்டு போட்டுட்டேன்பா...... இங்கயாவது ஓட்டுபோட முடிஞ்சுதே..... அந்தமட்டும் பெருமை.
பின் குறிப்பு: ஊர்ல இல்லன்னாலும் ஓட்டு போட ஏற்பாடு செய்தாகிவிட்டது..... கள்ள ஓட்டுதான்... நான் ஏற்பாடு செய்யலன்ன வேற எந்த போரம்போக்காவது என் ஓட்ட போட்டுட்டு போய்டும். அதான் இந்த ஏற்பாடு....
உங்கள் கருத்து சரிதான்.
வலைப்பூ படிப்பவர்கள் மிகக் குறைவுதான்.
ஆனால் எனக்கு தமிழ் மட்டும்தானே தெரியும்
வேற மொழியைப் படிச்சுட்டு அதன் பிறகு பதிவெழுதிட்டாப் போகுது @#$@#$^#$#$%#$%#$%
உங்களுடைய இந்தப் பதிவு இன்றுதான் தெரிந்து வருகிறேன்,குடுகுடுப்பை சார்.உங்கள் கருத்துக்கு 100% உடன்படுகிறேன்.
நல்ல கருத்துங்க.
Post a Comment