Monday, August 31, 2009

பதிவுலகில் மெளனப்புரட்சி!

வருங்கால முதல்வர் நாற்காலிக்கு யாரோ பேர் அடிபடுதாமே? அதான், நாமும் வந்து வருங்கால முதல்வர் நாற்காலியில உட்கார்ந்து பாக்குற நினைவு வந்துச்சு; வந்தேன். சரி, வந்ததும் வந்தோம், ஒரு தகவலைச் சொல்லிட்டுப் போலாமுன்னு.... இஃகிஃகி!

நாம கோயம்பத்தூர் CIT, Coimbatore Institute of Technologyலதான குப்பை கொட்டிட்டு இருந்தோம். அங்க பாருங்க, கைலாசு விடுதி, கைலாசு விடுதின்னு ஒன்னு இருக்கு. அங்கதான் புளிச்ச மோரை சக்கரை போட்டுக் குடிச்சுப்பிட்டு, அவுத்து விட்ட கழுதைகளாட்டம் மேலுக்கும் கீழுக்கும் திரிஞ்சுட்டு இருப்போம்.

திடீல்னு நெனைச்சா, லுங்கிய லேசா மேல எடுத்து தொங்கட்டானுட்டுக் கட்டிகிட்டு, பின்னாடி வழியா அப்பிடியே ரெயில் ரோட்டைத் தாண்டி, மணீசு தியேட்டர் முன்னாடி இருக்குற சிவசாமி அண்ணனோட பேக்கரிக்கு போவோம். போயி, அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு அலப்பறை செய்யுறது.

அப்புறம் North District Vs South Districtனு சண்டையப் போட வேண்டியது; அது ரொம்ப out of fashion ஆயிப் போச்சுன்னா, Kapil Vs Gawaskar, Kamal Vs Rajini, இப்படி எதனா ஒன்னை வெச்சிகிட்டு இரகளையப் பண்ண வேண்டியது.... காசு, கீசு எதுவுந்தராம எடத்தைக் காலி பண்ணிட்டு வர வேண்டியது.... இப்படி அப்பப்ப வெகு சகசமா நடக்கும்.

அப்ப அந்த சிவசாமி அண்ணங் கேக்குறது, டேய் நாசமாப் போன வாலுகளா, நீங்க எந்த குரூப்புடா? இப்பிடி, குரூஊப் குரூஊப்பா வந்து அழிச்சாட்டியம் பண்ணுறீங்களேடான்னு.

அந்த மாதிரி, இப்ப ஒரு குரூஊப்பு வந்து எறங்கி இருக்குது. வேற எங்க, நம்ம பதிவுலகத்துலதான்.... சும்மா, கவிதை என்ன? கட்டுரை என்ன?? வெச்சு, வெளுத்து வாங்கறாங்கப்பா... கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுல வெச்சி, ஒரு அம்மணியப் பாத்ததீமு அந்த நடிகர் சொன்னாராம், ‘hey, she looks very fresh man...'னு...

அய்ய... அது யாரு எதுக்குங்ற கர்மமெல்லாம் நமக்கெதுக்கு? நான் என்ன சொல்ல வந்தன்னா, இவுகளும் அந்த மாதர ஒரு புது பொலிவோட வந்திருக்காங்க... அவங்க ஆக்கங்களையும் சித்த போயிப் பாருங்க....
கூடவே அவங்க அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சொல்லிகிடுறேன்!

க.பாலாஜி
கதிர் - ஈரோடு
ஆரூரன் விசுவநாதன்
செல்வனூரான்
seemangani
தியாவின் பேனா பேசுகிறது...
sakthi
கபிலன்
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார்
ரிஷபன்
ரவிபிரகாஷ்

மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க... வலைச்சரத்துல எழுத வேண்டியது.... கொஞ்சம் தவறிப்போச்சு... இஃகிஃகி!!

15 comments:

SK said...

அண்ணே வணக்கம்...

CIT எந்த வருடம் அண்ணே.

SK said...

இம்புட்டு பேரா இருக்காக :-)

அண்ணே பழனி, திருமலை எல்லாம் விட்டுபோட்டீங்களே :-)

சின்ன அம்மிணி said...

இவிங்க அல்லாரும் நம்மூர்க்கார்விகளாட்ட இருக்குது.

பழமைபேசி said...

//SK said...
அண்ணே வணக்கம்...

CIT எந்த வருடம் அண்ணே.
//

நான் 1993ங்க... நீங்களும் அங்கயா இருந்தீங்க?

//SK said...
இம்புட்டு பேரா இருக்காக :-)

அண்ணே பழனி, திருமலை எல்லாம் விட்டுபோட்டீங்களே :-)
//

எனக்கு இப்போதைக்கு இவிகதான் ஞாவகத்துக்கு வந்தாங்க...

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
இவிங்க அல்லாரும் நம்மூர்க்கார்விகளாட்ட இருக்குது.
//

அப்பிடியெல்லாம் இல்லீங்கோ... நாலாபக்கமும் இருந்துதான்...

SK said...

ஆமாங்கோவ் .. :-)

அங்கே தான் நாலு வருஷம் குப்பை கொட்டினோம். :-)

நொண்டிசாமியார் said...

ஏன்? எதற்கு? எப்படி?

தங்கராசு நாகேந்திரன் said...

மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க...

பட்டியல்ல என் பேருமா?
ரொம்ப மகிழ்சின்னே
பாராட்டுக்கு நன்றி

க.பாலாஜி said...

மிக்க நன்றி...அன்பரே....

உங்களின் உந்துதலில் நெகிழ்ச்சி அடைகிறேன்...

கதிர் - ஈரோடு said...

//க.பாலாஜி
கதிர் - ஈரோடு
ஆரூரன் விசுவநாதன்//

அய்..அய்...ஈரோட்டுக்காரங்க நாங்க

மோதிரக் கையால் குட்டுப்படுகிறோம்
மிக்க நன்றி..

//செல்வனூரான்
seemangani
தியாவின் பேனா பேசுகிறது...
sakthi
கபிலன்
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார்
ரிஷபன்
ரவிபிரகாஷ்//

இவர்களுக்கும் வாழ்த்துகள்

நன்றி மாப்பு

கபிலன் said...

ஹையா....நம்ம பேரும் இருக்கு... : )
மிக்க நன்றி நண்பரே !
உங்களைப் போன்றோரின் ஊக்கங்கள் தாங்க நமக்கு பெரிய டானிக் !

ஆரூரன் விசுவநாதன் said...

மெஸ்ஸுக்கும், ரூம்ஸ்க்கும் பின்னாடி போற ட்ராக்கையும், அந்த கள்ளுகுடிச்ச தோப்பையும் வுட்டுடியே தலைவா....
83-84 ல அங்கனதேன் குப்பகொட்ட வந்தேன்......
நமக்கு சொல்லிகொடுக்கறளவு இங்கதாருமில்லைன்னு நம்ம குருசாமி சார் சொல்லோ...
அப்பச்சியும் வாடா கண்ணு, நாம நம்மூர்லே படிச்சிக்கலாம்ன் ட்டாரு.... சரின்னு... வந்துட்டம்ல...
பதிவிற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

@@SK

நீங்களும் ஒரு மோர்ப்பார்ட்டின்னு சொல்லுங்க....

@@நொண்டிசாமியார்

ஏன்?ஏன்??ஏன்???

//தங்கராசு நாகேந்திரன் said...
மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க...

பட்டியல்ல என் பேருமா?
ரொம்ப மகிழ்சின்னே
பாராட்டுக்கு நன்றி
//

கடமைன்னு ஒன்னு இருக்கல்ல? இஃகி!

//க.பாலாஜி said... //

நிறைய எதிர்பாக்குறம்ல?

//கதிர் - ஈரோடு //

_/\_

//கபிலன் said... //

பல இடுகைகள்...இரசித்தேன்...உச்சா...

//ஆரூரன் விசுவநாதன் //

குருவன் இப்ப எங்க இருக்காரு?

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

கலகலப்பா இருக்கு நண்பரே!! //கைலாசு விடுதி, கைலாசு விடுதின்னு ஒன்னு இருக்கு. // ஒன்னா ரெண்டா?..ஹீ..ஹி

ரிஷபன் said...

நன்றி நண்பரே இப்பதான் பார்த்தேன் உடனே நன்றி ரிஷபன்