பொதுவாக நான் அரசியல் பதிவு எழுதுவதில்லை, இந்தப்பதிவு வைகோ என்ற நல்ல மனிதர் சமீபத்தில் அடிக்கும் கூத்துக்கள் தருவிக்கும் கோபத்தினால் எழுதுகிறேன்.
ஈழ்த்தமிழர் பிரச்சினையில் இன்றைய தேவை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் இல்லை என்ற ஆராய்ச்சியோ, வெடி வைத்து தகர்த்தது விடுதலைப்புலிகள் என்று என்று உரக்கப்பேசி முள் கம்பியின் பின்னால் இருக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தை தேடித்தருவதோ அல்ல.பிரபாகரன் பற்றியே பேச்சு இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு நினைப்பதை சரியாக நீங்கள் செயல் படுத்துகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இன்றைய தேவை உயிர், உணவு அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துதல், சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை காணுதலே தவிர வெற்றுக்கூச்சல் அல்ல. நீங்கள் இடும் கூச்சலினால் என்ன பயன் என்று இரவில் தூங்கும் முன் யோசித்துப்பாருங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்,நீங்கள் நேர்மையானவர்,ஈழத்தமிழர் பால் உங்கள் அக்கறை உண்மையானது என்ற நம்பிக்கை பெரும்பாலனவருக்கு இன்னும் உண்டு.உங்களால் முடிந்தால் அவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை யார் காலில் விழுந்தாவது செய்யுங்கள்.
கிட்டதட்ட 2000 குழந்தைகள் போரில் அநாதையாகி உள்ளனர். அவர்களின் கல்விக்கு எதையாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.இன்றைய உலகம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடிதான் செல்கிறது, செல்லும். வலிமை இல்லாதவன் கத்தினால் அடிதான் விழும். நீங்கள் நெல்லையில் இடும் கூச்சலுக்கு முல்லையில் தமிழன் அடி வாங்கக்கூடாது.
தமிழினம் வலிமையாக கூச்சலற்ற விவேகம் , வீரம்,நட்பு தேவை அதற்கான வழியைப்பாருங்கள் இல்லாவிட்டால் கலிங்கப்பட்டி சென்று வாலிபால் விளையாடுங்கள்.
உங்களுடைய மதிமுகவின் முதல் குடவாசல் கூட்டத்திற்கு சிறுவனாக இருந்தபோது செங்கல் லாரி ஏறி வந்து பார்த்தவன் என்ற உரிமையில் குடுகுடுப்பை.
Friday, June 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
//பொதுவாக நான் அரசியல் பதிவு எழுதுவதில்லை//
நாம பதிவு எழுதுவதே அரசியல் தான்
எப்போது இவர் ஜெயலலிதாவுடன் கூட்டு சேந்தாரோ அன்றே இவரின் ஈழ நிலைப்பாடு கேலிக்குரியதாகிவிட்டது
உடன்பிறப்பு said...
எப்போது இவர் ஜெயலலிதாவுடன் கூட்டு சேந்தாரோ அன்றே இவரின் ஈழ நிலைப்பாடு கேலிக்குரியதாகிவிட்டது
//
கட்சி வித்தியாசம் பார்க்காமல் தமிழர்கள் உதவி செய்யவேண்டிய நேரம் இது.காட்டுக்கூச்சல் போடாமல் செய்யவேண்டியது செய்தால் போதுமானது என்றே கருதுகிறேன்.
ஈழத்தமிழர் மீதும் உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இன்று எமது இனம் மிக மோசமான நிலையில் உள்ளது .நடந்த நிகழ்வுகளில் இருந்து தம்மைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து நின்று அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளபோது ,இனிமேல் ஆக்க பூர்வமான செயல் திட்டங்களில்தான் ஈடுபட வேண்டும் .
பல உயிர்களைப் பலி கொடுத்து மிகக் கசப்பான பாடங்களைப் படித்து விட்டோம்.
உடனடித்தேவை -அங்குள்ள மக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதும்,தமிழரின் நிலங்களையும் ,வளங்களையும் காப்பாற்றுவது.
தூரநோக்குத் தேவை -அவர்களின் அரசியல் உரிமைகளையும் தமிழர் என்ற அடையாளத்தையும் காப்பாற்றுவதற்கான அரசியல் தீர்வை நோக்கி உழைப்பது.
இதற்கு தேவை அரசியல் தெளிவும் ,விவேகமும் ,நேர்மையானஅணுகுமுறையும் ,பயன் தரக்கூடிய செயல்பாடுகளும்.
வெறும் வாய்ப்பேச்சுக்கள் பயன் தராமல் போவதோடு ,சில சமயங்களில் ஆபத்தைக் கூடத் தரக்கூடும்.
--வானதி
I agree with mr.vanathy comment, just everyboday together and go positive way..
Greeting
//
அந்த மக்களுக்கு இன்றைய தேவை உயிர், உணவு அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துதல், சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை காணுதலே தவிர வெற்றுக்கூச்சல் அல்ல. நீங்கள் இடும் கூச்சலினால் என்ன பயன் என்று இரவில் தூங்கும் முன் யோசித்துப்பாருங்கள்.
//
அப்படி யோசித்துப் பார்த்தால் மனசாட்சியுள்ள பலருக்கு தூக்கமே வராது. அது சரி, மனசாட்சி என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் தானே இன்று பலரும் இருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யக் கோரி நான் எழுதிய இடுகை. http://joeanand.blogspot.com/2009/05/blog-post_26.html
நான் சிறுவனாக இருந்த போது, வைகோ மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். (அவர் இலங்கை சென்று வந்ததையும், பிரபாகரனை சந்தித்ததையும் பற்றிய வீடியோ பார்த்திருக்கிறேன்). எங்கள் கல்லூரிக்கு வந்த போது, அவரது பேச்சுத்திறனையும், கம்பீரத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.
அவர் இப்படியொரு அரசியல் கோமாளியாகிப் போனது வேதனை.
yes his actions r useless.
He is concerned only in orating.
முற்றிலும் உண்மை...
குடு குடுப்பை நீ பைத்திய நாய் .
குடு குடுப்பை நீ குடவாசல் வந்ததனால் மட்டுமே வைகோ அவர்களை கோமாளி என்று திட்டுவதற்கு உரிமைகள் உள்ளது என்று நினைகிறாயா?
விமர்சனகளை நாகரிகமாய் பேசு . அல்லது இது போல் பதில்தான் வரும் அல்லது இதையும் மீறி கேவலமான் வார்த்தைகளால் உன்னை திட்ட வேண்டி வரும் .
ஈழ விசயத்தில் இப்போது பல்வேறு சமயோசித வேலைகள் நடந்து கொண்டுள்ளது. உன்னைவிட ஈழ விசயத்தில் வைகோ தெளிவானவர் விஷயம் அறிந்தவர் , தமிழர்களுக்கு எது உகந்தது என்று தெரிந்து பேசுபவர்.
அப்படியே எதிர் விமர்சனம் இருந்தாலும் நாகரிகமாக பேச பழகு.
பைத்திய நாய் போல் பொது இடத்தில் உளறாதே !. பேசுவதை அறிந்து பேசு.
-தோழர்
www.mdmkonline.com
சங்கொலி said...
குடு குடுப்பை நீ பைத்திய நாய் .
குடு குடுப்பை நீ குடவாசல் வந்ததனால் மட்டுமே வைகோ அவர்களை கோமாளி என்று திட்டுவதற்கு உரிமைகள் உள்ளது என்று நினைகிறாயா?
விமர்சனகளை நாகரிகமாய் பேசு . அல்லது இது போல் பதில்தான் வரும் அல்லது இதையும் மீறி கேவலமான் வார்த்தைகளால் உன்னை திட்ட வேண்டி வரும் .
ஈழ விசயத்தில் இப்போது பல்வேறு சமயோசித வேலைகள் நடந்து கொண்டுள்ளது. உன்னைவிட ஈழ விசயத்தில் வைகோ தெளிவானவர் விஷயம் அறிந்தவர் , தமிழர்களுக்கு எது உகந்தது என்று தெரிந்து பேசுபவர்.
அப்படியே எதிர் விமர்சனம் இருந்தாலும் நாகரிகமாக பேச பழகு.
பைத்திய நாய் போல் பொது இடத்தில் உளறாதே !. பேசுவதை அறிந்து பேசு.
-தோழர்
www.mdmkonline.com
//
கண்டிப்பாக தலைப்பு தவறுதான் , மன்னித்துக்கொள்ளுங்கள்.உங்களின் வருகையும் கருத்தும் நான் எதிர்பார்த்தேன்.மற்றபடி வைகோ மேல் நான் மட்டுமல்ல இங்கு வோட்டளித்திருக்கிறவர்களும் மிகவும் மரியாதை வைத்திருப்பவர்களே.உணர்ச்சிவசப்படாத நல்ல தெளிவான முடிவுகளை வைகோ எடுக்கவேண்டும்.எல்லோரையும் விட ஈழ விசயத்தில் வைகோவின் அக்கறை பெரிது என்பதும் தெரிந்ததே அதனால்தான் இந்த வேண்டுகோள்.
குடு குடுப்பை நீ குடவாசல் வந்ததனால் மட்டுமே வைகோ அவர்களை கோமாளி என்று திட்டுவதற்கு உரிமைகள் உள்ளது என்று நினைகிறாயா? //
இல்லை, ஆனால் வைகோ போன்ற நல்ல மனிதர், உணர்ச்சிகளை அடக்கினால் இன்னும் பெரிய அளவில் தமிழகத்திற்கு பயன்படுவார் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு.
///சங்கொலி said...
குடு குடுப்பை நீ பைத்திய நாய் .
குடு குடுப்பை நீ குடவாசல் வந்ததனால் மட்டுமே வைகோ அவர்களை கோமாளி என்று திட்டுவதற்கு உரிமைகள் உள்ளது என்று நினைகிறாயா?
விமர்சனகளை நாகரிகமாய் பேசு . அல்லது இது போல் பதில்தான் வரும் அல்லது இதையும் மீறி கேவலமான் வார்த்தைகளால் உன்னை திட்ட வேண்டி வரும் .
ஈழ விசயத்தில் இப்போது பல்வேறு சமயோசித வேலைகள் நடந்து கொண்டுள்ளது. உன்னைவிட ஈழ விசயத்தில் வைகோ தெளிவானவர் விஷயம் அறிந்தவர் , தமிழர்களுக்கு எது உகந்தது என்று தெரிந்து பேசுபவர்.
அப்படியே எதிர் விமர்சனம் இருந்தாலும் நாகரிகமாக பேச பழகு.
பைத்திய நாய் போல் பொது இடத்தில் உளறாதே !. பேசுவதை அறிந்து பேசு.
-தோழர்
www.mdmkonline.com////
தோழருக்கு வணக்கம், இங்கே இந்த பதிவு மதிப்பிற்குரிய ''வைகோ'' அவர்களை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு தோன்ற வில்லை. ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகதான் தோன்றுகிறது! ஒரு விஷயத்தை விளக்குங்கள் எங்கள் வைகோவின் வோட்டு வங்கி மெல்ல மெல்ல குறைந்து வருகிறதே அதற்க்கு என்ன காரணம் ? இதோ இன்று தமிழின எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசிடம் அடுத்த தமிழின தலைவராக எதிர் பார்க்கப்பட்ட, எதிர் பார்க்கப்படும் எங்கள் வைகோ தோற்று நிற்கிறார்! அவர் கூட இருந்து தோள் கொடுக்கும் தொண்டர்களுக்கு முறையான விளக்கம் கொடுங்கள்! அவர் கூட இருக்கும் சக தலைவர்களை நம்ப முடியவில்லை !!
ஆனால்? அவர் தொண்டர்கள் நிரந்தரமானவர்கள்!
தோழர் ஜீவன் மற்றும் குடுகுடுப்பை அவர்களுக்கு :-
தோழருக்கு வணக்கம், இங்கே இந்த பதிவு மதிப்பிற்குரிய ''வைகோ'' அவர்களை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு தோன்ற வில்லை. ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகதான் தோன்றுகிறது!
///
குடுகுடுப்பையின் தலைப்பு எற்றுக்கொள்ளக்கூடியதல்ல அதன் காரணமாகத்தான் நானும் அவரை திட்ட வேண்டி வந்தது.
திட்டியதற்காக வும் அப்படி எழுதும் சூழ்நிலையை குடுகுடுப்பை அவர்கள் உண்டாகியதர்காகவும் வருந்துகிறேன்.
///
ஒரு விஷயத்தை விளக்குங்கள் எங்கள் வைகோவின் வோட்டு வங்கி மெல்ல மெல்ல குறைந்து வருகிறதே அதற்க்கு என்ன காரணம் ?
//
வாக்கு வங்கி குறைந்தது என்பதில் மாறுபட்ட கருத்து வுள்ள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பெற்ற வாக்குக்கள் vetrஇ பெற்ற திமுக வின் வாக்குகளை விட பதின்மூன்று லச்சங்கலே வித்தியாசம் . பெற்ற வாக்குகள் அனைத்தும் அதிமுகவினுடையது என்று சொல்ல முடியாதே.
அது போக வாகு வங்கிகளை எப்படி கணிக்கிடுகிறோம் என்பதும் ஒன்று. இந்த தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் மட்டுமே நின்றது . அந்த தொகுதிகளில் வாங்கிய வாக்குகளை மட்டுமே நாம் நாற்பது தொகுதிகளுக்கும் சேர்ந்து வகுத்து பார்க்க இயலாது .
\\\\
இதோ இன்று தமிழின எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசிடம் அடுத்த தமிழின தலைவராக எதிர் பார்க்கப்பட்ட, எதிர் பார்க்கப்படும் எங்கள் வைகோ தோற்று நிற்கிறார்! அவர் கூட இருந்து தோள் கொடுக்கும் தொண்டர்களுக்கு முறையான விளக்கம் கொடுங்கள்! அவர் கூட இருக்கும் சக தலைவர்களை நம்ப முடியவில்லை !!ஆனால்? அவர் தொண்டர்கள் நிரந்தரமானவர்கள்!
\\\ வைகோ உடைய தோல்விக்கு விருதுநகர் தொகுதி மக்களின் வறுமையும் அறியாமையுமே காரணம்.
தேர்தலுக்கு முந்திய நாள் குறைந்த பட்சம் இரு நூறு ரூபாவிலிருந்து அதிக பட்சம் ஐந்நூறு ரூபாய் காங்கிரஸ் இன் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த காசுக்கெல்லாம் மயங்கி வாக்காளர்கள் விலை போக மாட்டார்கள் என்று நினைத்தோம் . ஆனால் தோல்வி அடைந்தோம் . அதையும் மீறி நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும் அதில் எங்கள் நிர்வாகிகள் முக்கியமாக கோட்டை விட்டது தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே வைகோ விற்கு விழவேண்டிய வாக்குகளில் கிட்டத்தட்ட ஒரு லச்சம் வாக்காளர் பட்டியலில் இல்லை. அரசாங்க அதிகாரிகளின் துணையுடன் நடந்த மிகப்பெரும் அவலம் இது.
வைகோவின் வெற்றி இந்த காலகட்டத்தில் மிக முக்கியமாய் இருந்ததது.
ஆனால் தமிழுணர்வு இல்லா துரோகிகளால் அது இப்போதைக்கு தள்ளிபபோயுல்லது.
\\\\\
-தோழர்
www.mdmkonline.com
கோமாளி???
கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அயோக்கியன்கள் வெற்றிக் களிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்...
ஆனால், தமிழ்நாடு, தமிழர்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ளாத வைகோ, கோமாளி என்று பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது..
ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி....மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, மு.க.கனிமொழி, முரசொலி மாறன், தயாநிதி மாறன்...வாரிசுகளை வளர்த்து ஜனநாயகத்தை காத்தவர்கள் எல்லாம் விவேகியாகி விட்டார்கள்....தன் எம்.பி சீட்டை கூட மகனுக்கு தராமல் கட்சிக்காரனுக்கு கொடுத்த வைகோவை கோமாளியாக்கி விட்டீர்கள்...
ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்ததற்காகவே பொடா சிறையில் இருந்த வைகோவை கோமாளி என்கிறீர்கள்...மகனுக்கு பதவி என்றால் விமானம்...பத்தாயிரம் பேரை புல்டோசர் ஏற்றி மண்ணோடு மண்ணாக புதைத்தால் அது தூவானம் என்று சொன்னவர்கள் எல்லாம், படுத்துக் கொண்டே ஜெயித்த வெற்றி வீரனாகி விட்டார்கள்...
வெந்த புண்ணில்...துக்கமாய் இருக்கிறது...
//
ஜீவன் said...
தோழருக்கு வணக்கம், இங்கே இந்த பதிவு மதிப்பிற்குரிய ''வைகோ'' அவர்களை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு தோன்ற வில்லை. ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகதான் தோன்றுகிறது!
//
ஜீவன்,
இந்த இடுகையின் தலைப்பு குறித்து குடுகுடுப்பை முன்பே சொல்லி விட்டார்...ஆனாலும், கோமாளி என்று அழைப்பது வருத்தத்தையே தருகிறது..
//
ஒரு விஷயத்தை விளக்குங்கள் எங்கள் வைகோவின் வோட்டு வங்கி மெல்ல மெல்ல குறைந்து வருகிறதே அதற்க்கு என்ன காரணம் ? இதோ இன்று தமிழின எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசிடம் அடுத்த தமிழின தலைவராக எதிர் பார்க்கப்பட்ட, எதிர் பார்க்கப்படும் எங்கள் வைகோ தோற்று நிற்கிறார்!
//
தோற்றாரா இல்லை தோற்கடிக்கப்பட்டாரா?? செய்திகளை மட்டுமே படித்தால் அவர் தோற்றார்....ஆனால் உண்மை ஜெயிக்க வைக்கப்பட்டவர்களுக்கு தெரியும்!
//
அவர் கூட இருந்து தோள் கொடுக்கும் தொண்டர்களுக்கு முறையான விளக்கம் கொடுங்கள்! அவர் கூட இருக்கும் சக தலைவர்களை நம்ப முடியவில்லை !!
ஆனால்? அவர் தொண்டர்கள் நிரந்தரமானவர்கள்!
June 13, 2009 10:09 AM
//
ஓடுகாலிகள் ஓடிக் கொண்டு தான் இருக்கும்...அதற்கு என்ன செய்ய??
//
உடன்பிறப்பு said...
எப்போது இவர் ஜெயலலிதாவுடன் கூட்டு சேந்தாரோ அன்றே இவரின் ஈழ நிலைப்பாடு கேலிக்குரியதாகிவிட்டது
June 12, 2009 12:27 PM
//
மிசாவில் சிறையில் அடைத்து ஸ்டாலினுக்கு அடி உதை...தடுக்க வந்த சிட்டிபாபுவுக்கு கிட்னியில் மிதி..
ராஜீவ் கொலையில் திமுகவுக்கு உடந்தை..ராஜீவ் கொலை விவகாரத்தில் தி.மு.க தீக்குளிக்க வேண்டும்...என்று சொல்லி திமுக ஆட்சியை கலைத்த அதே காங்கிரசுடன் கருணாநிதி கூட்டு வைத்தது எந்த அளவு கேலிக்குரியதோ அதே அளவு கேலிக்குரியதே இதுவும்...
நண்பர் அதுசரிக்கு,
ஜீவன், மற்றும் வானதியின் பின்னூட்டம்தான் என் பதில்.
தோற்றாரா இல்லை தோற்கடிக்கப்பட்டாரா?? செய்திகளை மட்டுமே படித்தால் அவர் தோற்றார்....ஆனால் உண்மை ஜெயிக்க வைக்கப்பட்டவர்களுக்கு தெரியும்!
//
தோற்கடிக்க முடியாத தலைவனாவ உருவாகி இருக்க வேண்டியவர், சுயபரிசோதனை பார்க்கவேண்டிய நேரம் இது.
தலைப்பு வைத்தமைக்காக மீண்டும் வருந்துகிறேன்
//
குடுகுடுப்பை said...
தோற்கடிக்க முடியாத தலைவனாவ உருவாகி இருக்க வேண்டியவர், சுயபரிசோதனை பார்க்கவேண்டிய நேரம் இது.
தலைப்பு வைத்தமைக்காக மீண்டும் வருந்துகிறேன்
June 13, 2009 3:41 PM
//
குடுகுடுப்பை,
வருத்தம் உங்கள் மீது (மட்டும்) அல்ல..உண்மையான உணர்வாளரும், பொது வாழ்வில் இது வரை எந்த களங்கமும் அடையாதவருமான வைகோ இன்று இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்க வேண்டியதாக உள்ளதே என்பதே என் வருத்தம்...
காமராஜரை தோற்கடித்து "மாபெரும் மக்கள் தொண்டன்" சீனிவாசனை தேர்ந்தெடுத்த "பெருமை"க்குரிய தொகுதி விருதுநகர்... இப்பொழுதும் அப்படியே!
உண்மையில் நீங்கள் சொல்வது போல் வைகோ சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது...ரவுடிகளையும், பொறுக்கிகளையும், கொலை காரர்களையும் எம்.பி, எம்.எல்.ஏ, முதல்வராக தேர்ந்தெடுக்கும் "இந்தி"யாவில் இன்னமும் "தனி வாழ்வில் தூய்மை, பொது வாழ்வில் நேர்மை" என்று அரசியல் செய்ய முடியுமா என்று வைகோ சீர்தூக்கி பார்க்க வேண்டும்!
மற்றபடி, தவறாக எழுதியிருந்தால் நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
Our source of information is magazines. These magazines seldom publish Vaiko's speech. Even while publishing, they only publish the section of Vaiko's speech on LTTE. You can watch his speech in Theni, where he very clearly articulated the Spectrum scam and several other development issues. But, the biased media don't publish those major and important section of Vaiko's speech. Few years ago, Vaiko carried out a campaign (he started the walk from Thirunelveli to chennai) to educate the farmers about the importance of holding their lands. During the full stretch of his walk, he emphasized the significance of farming and alerted the farmers not to sell their lands. Recently, I had visited my home town and saw many SIKHs. I asked my dad, what do these guys do here? My dad's response was, they have bought land and doing farming here using the approach they developed in Punjab. The guys who owned the land has become a worker of the same land. This is one example of vaiko's efficiency and his love for his people. One can write so much about him. Vaiko is the only politician who spoke about crucial issues that are related to the problems of the people. Unfortunately, people have started voting for Rs. 500. God save my land!
// சங்கொலி said...
கண்ணா... பின்னா.... டாம் ..... டூம்... டுஸ்..........
//
உங்களுக்கு மட்டும்தான் பேச்சுரிமை இருக்குதா.... மதவிங்களுக்கு இல்லையா....!!! மொதல்ல நீங்க அடுத்தவங்கள புண்படுத்தாம பேசி பழகுங்க.... அப்புறம் அடுத்தவங்களுக்கு புத்திமதி சொல்லலாம்.....!!!! உங்களுக்கு என் கண்டனம்....!!!
இந்த வை.கொ போன்ற வாய்ச்சொல் வீரர்களை நம்பித் தமிழகம் தனிமைப்படுவது போதாமல் ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் இவர்கள் செய்யும் பொய்ப்பேச்சுகள் என்னத்தைச் சாதிக்கப்போகிறது ?
ஒரு நேர உணவு நல்ல குடிதண்ணீர் எதுவுமின்றி அல்லல்படும் ஆயிரமாயிரம் பேரின் அவலங்கள் இந்த அரசியல் கூத்தாடிகளுக்கு பேசக்கிடைத்த பேசுபோருளாகிவிட்டதுதான் ஈழத்தான் சாபம்.
சாந்தி
இடுகையின் சாரத்தை சங்கொலி திசை மாற்றி விட்டதாகவே தோன்றுகிறது.வை.கோவின் அரசியல் செயல்பாடுகள் ஒரு நல்ல அரசியல்வாதி எப்படியெல்லாம் ஓட்டு அரசியலில் தவறான முடிவுகள் எடுக்கக்கூடும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.தமிழக அரசியல் நிகழ்வுகள் பெருமூச்சை மட்டுமே வரவழைக்கின்றது.
இலங்கை மக்களை மிக மோசமான அவல நிலைக்கு தள்ளிய யுத்தத்தை ஆதரிக்கும் பெரும்பான்மையான தமிழ் பதிவுகள் மத்தியில் உங்கள் இந்த பதிவு இலங்கை தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்டதாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 28 இடங்கள் கிடைத்ததாமே!
இங்கே பல பதிவுகளை பார்க்கும் பொழுது உண்மையில் மனம் மிகவும் வேதனைப்படுகிறது .
பதிவர் லோவ்டேல் அவர்களுக்கு :-
பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு ஆனால் நாங்கள் இங்கே கோபப்பட்டது சில பல அநாகரீகமான வார்த்தைகளுக்காகத்தான். மற்றபடி எங்களின் வார்த்தைகளுக்கு நானும் வருத்தம் கோரி விட்டேன்.
சாந்தி அம்மாவிற்கு :-
வைகோ வின் வாய்ச்சொல்லால்தான் வாஜ்பேயின் அரசில் ஈழத்திற்கான மிகச்சரியான நிலைப்பாடை எடுக்க முடிந்தது. வாஜ்பேய் அரசு இருந்தவரை iலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒரு ஆயுதமெனும் கொடுக்கவில்லை . அதை செய்ததில் வைகோ வின் வாய் பேச்சுதான் உதவியது. அதோடு மட்டுமில்லாமல் சீனா மற்றும் பாகிஸ்தான் பக்கமே இலங்கையை போகவிடாமல் நார்வே இன மத்தியஸ்தத்தை முன்னிறுத்தியது இந்தியா.
உங்களுக்கு நார்வே மற்றும் இங்கலாந்தில் அரசாங்க அளவில் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டுபாருங்கள் மேற்கண்ட எல்லாவற்றிற்கும் வைகோவின் பனி எப்படிபட்டத்தை என்று.
இப்போது பதவியில் இருக்கும் கருணாநிதி மற்றும் சோனியா-வை வசதியாய் மறந்து விட்டு எந்த பதவியில் இல்லாவிட்டாலும் ஈழ எண்ணங்கள் தமிழ்நாட்டில் நீர்த்துபோகவிடது செய்ய முனையும் வைகோ அவர்களை பழி சொல்வதின் உள் நோக்கம் என்ன ?
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்று ஆரம்பித்து இதுநாள்வரை அதற்கான செலவுகளை முழுவதும் எஅற்றது மதிமுகதான் . அந்த செலவுக்கான காசை மதிமுக காரன் வைகோவின் பேச்சை(வாய்ச்சொல்) நம்பித்தான் கொடுத்தான்.
இப்போதைய தமிழர்களின் நிலைமை , அதன் பொருட்டு இந்திய அல்லது தமிழக அரசில் தாக்கம் கொடுப்பது என்பது விழலுக்கு இழைத்த நீர் எனென்றால் விடயம் நான் சொலித்தான் இங்கே தெரிய வேண்டும் என்பதில்லை .
கிட்டத்தட்ட இரண்டு லக்ஷம் பேரிடம் அமெரிக்கா அரசிற்கான கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ராஜா நடராசன் அவர்களுக்கு :
இயக்க அரசியல் வாக்கு அரசியல் பற்றி பின் விரிவாக இங்கு பதிகிறேன் .
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு :
ஆமாம் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள் !.
www.mdmkonline.com
சாந்தி அவர்கள் ஈழத்தை சேர்ந்தவர் நேரடியாக பாதிக்கப்பட்டவர், அவரின் வேதனையை பொருத்தருளவும் சங்கொலி.
வைகோவின் ஈழத்தமிழர் அக்கறை பற்றி மாற்றுக்கருத்து இல்லை.அவர் ராஜ தந்திர செயல்பாடுகளில் ஈடுபட்டு நல்லது செய்யவேண்டும் என்பதே நமது ஆவல்.
செத்த பாம்பை எவ்ளோ வாட்டியா அடிப்பிங்க? :(
Post a Comment