Friday, May 22, 2009

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.

இந்த தேர்தல் முடிவு காட்டும் செய்தி காங்கிரஸ் கட்சி வடக்கில் மாநிலக் கட்சிகளிடம் இழந்த செல்வாக்கினை ராகுல் காந்தியின் கவர்ச்சியால் மீண்டும்
பெறத்தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக தொடரும், காங்கிரஸின் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய தோல்வி அடையப்போவது முலாயம்சிங், லல்லு , கம்யூனிஸ்ட்கள்,சரத்பவார் மற்றும் மாயாவதியின் கட்சி.

தனிப்பட்ட முறையில் மாயாவதி தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒழியவேண்டும் என நினைப்பவன் நான். அதன் ஓட்டுக்கள் காங்கிரஸிகும், பாரதீய ஜனதாவிற்கும் சென்றடைய வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி ஏன் தோற்கிறது? முதற்காரணம் கிராமப்பகுதிகளில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கை ராமர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி ஓட்டாக ஒரு நாளும் மாற்ற முடியாது.

இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் வாரிசு மன்னரையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.நேரு குடும்பம் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் காணாமல் போயிருக்கும் என்பதும் உண்மை.வாஜ்பாயிக்கு இருந்த செல்வாக்கை வைத்து பாஜக கட்சி வளர்த்திருக்கலாம், ஆனால் பாஜகவின் தலைவராக ஒரு வாரிசு வாஜ்பாய் இருந்திருக்கவேண்டும்.

அத்வானியை ஓரளவிற்கு மக்களுக்கு தெரியும், ராஜ்நாத்சிங்கை யாருக்கு தெரியும், அவர் தனியாக நின்றால் 500 ஓட்டு கூட வாங்கமாட்டார்.மன்மோகனும் வாங்கமாட்டார், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறது.ராஜ்நாத்துக்கு ?

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.

இந்துக்களின் காவலன் என்று சொல்ல நினைத்தால், முதலில் அக்கட்சி செய்யவேண்டியது, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவது.வழிபாட்டு உரிமையை மறுக்கும் உயர்சாதி இந்துக்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைப்பது பாஜக மற்றும் அது சார்ந்த இந்து இயக்கங்களின் கடமை.இதனை தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கங்கள், திருமாவளவன் போன்றவர்கள் கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தியபோது நாத்திகனுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம். இப்போது அந்தக்கடமை ஆத்திகர்களும் இந்து மத இயக்கங்களுக்கும் உண்டு.

மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக முன்னேற்றத்தை கொண்டு வர முனைவது, மாயாவதியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்து அவரை தலைவராக்கலாம்.

இது பெரியார் செய்த வேலை, ஆமாம் இதைத்தான் பாரதீய ஜனதா செய்யவேண்டும். அவர் ஏற்படுத்திய கலகம் விழிப்புணர்வை கொடுத்தது.
பாஜக இது போன்ற சமூகத்தொண்டுகளில் ஈடுபட்டு இந்துக்களுக்குள் இருக்கும் சாதி வெறுப்பு உணர்வை களைந்து அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வாழ்வுரிமையை பெற்றுந்தந்தால் அதுதான் அக்கட்சியின் வெற்றி.இதனை விடுத்து மத அரசியல் செய்தால் அக்கட்டி அழிவுப்பாதைக்கே செல்லும்.மத அரசியலில் செல்லும் அனைத்து நாடுகளும் அழிவுப்பாதைக்கே செல்லும்.

இன்னும் இருபது வருடங்களுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது, மேலே சொன்னமாதிரி சமூகப்பணிகளின் அக்கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால், ராகுல் காந்தி நேருவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

எனக்கு அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக கிடையாது,பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை கூறவும். குறிப்பாக பாஜக , காங்கிரஸ் ஆதரவாளர்கள்.

20 comments:

ILA (a) இளா said...

என்னப் பொறுத்தவரைக்கும் ராமர் கோவில் கட்டினா என்ன? கட்டாட்டி என்ன?

குடுகுடுப்பை said...

ILA said...

என்னப் பொறுத்தவரைக்கும் ராமர் கோவில் கட்டினா என்ன? கட்டாட்டி என்ன?//

அதேதான் என் கெள்வி. இருக்கிற கோவில்லயே எல்லாரும் சாமி கும்பிட முடியல இதுல ராமர் கோவில் கட்டி என்ன பண்ண போறாங்க.

வில்லன் said...

என்ன கேட்டா!!!! ராஜீவ்காந்திய அநியாயமா எழந்து நிக்கும் நமக்கு ராகுல்காந்தி ஒரு வரப்பிரசாதம். கண்டிப்பாக ராகுல் தலைமையில் வருங்கால இந்திய ஒளிரப்போகிறது.....

வில்லன் said...

பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்."

ராமர் கோவில் பல்லவி மற்றும் ரத யாத்திரை போன்ற மத உணர்வை தூண்டும் செயல்களை விட்டு விட்டு நாட்டு முன்னேற்றத்துக்காக உருப்படியான அறிவுரைகளை வழங்கி அதை செயல் படுத்த பாடு பட வேண்டும். ராமர் கோவில் பல்லவி மற்றும் ரத யாத்திரை போன்றவற்றை தேர்தல் நேரங்களில் மட்டும் கையில் எடுப்பதை முதலி நிறுத்தவேண்டும். ஓட்டளிக்கும் மக்கள் ஒன்னும் மாக்கள் அல்ல.

வில்லன் said...

இப்பவும் காங்கிரஸ் தனிப்பட்ட மனிதனின் திறமைகளை அறிஞ்சு அதற்கேற்ப பதவிகள் வழங்க வேண்டும். நல்ல உண்மையான திறமைசாலிகள் தோழமை கச்சிகளில் இருந்தால் அவர்கள் திறமையை பாராட்டி கண்டிப்பாக பதவி கொடுக்க வேண்டும். உதாரனமாக லாலுவுக்கு மீண்டும் ரயில்வே அமைச்சர் பதவி கொடுத்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அழகிரிக்கு ரயில்வே அமைச்சர் வழங்கின என்ன நடக்கும். ரயில் என்ஜின்ல போயி கொள்ளை நடக்கும்

அது காங்கிரஸ் கச்சியை ஒரு நல்ல நிலைமைக்கு எடுத்து செல்லும். கண்டிப்பாக ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

.

குடுகுடுப்பை said...

வில்லன் said...

என்ன கேட்டா!!!! ராஜீவ்காந்திய அநியாயமா எழந்து நிக்கும் நமக்கு ராகுல்காந்தி ஒரு வரப்பிரசாதம். கண்டிப்பாக ராகுல் தலைமையில் வருங்கால இந்திய ஒளிரப்போகிறது.....
//

கருத்துக்கு நன்றி, வலிமையான ஆரோக்கியமான எதிர்க்கட்சி இல்லையென்றால் அது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸிற்கு மாற்றாக பாஜகதான் இருக்க முடியும் ஆனால் அதனிடம் நிறைய கொள்கை மாற்றங்கள் தேவை.

தினேஷ் said...

// கண்டிப்பாக ராகுல் தலைமையில் வருங்கால இந்திய ஒளிரப்போகிறது.....//

அட போங்கப்பா இந்தியா ஒளிர்கிறது மிளிர்கிறதுனு சொல்லி ரொம்ப நாளாச்சு , ஆனா பாதி நேரம் மின்சாரம் இல்லாமல் இருள்கிறது...

இந்தியா ஒளிருதோ இல்லையோ ஆனால் பிரியங்கா பிள்ளையோ அல்ல ராகுல் பிள்ள்ளையோ அடுத்து வந்து என் தலைமையில் வருங்கால இந்தியா ஒளிரும் என்று பிரச்சாரம் செய்வார்கள்...

அப்பவும் நாம பே தான்...

நசரேயன் said...

மீண்டும் பதிவுக்கு வந்ததுக்கும், பதிவுக்கும் ஒரு கையை தட்டிகிறேன்

ராஜ நடராஜன் said...

கருத்தெல்லாம் சரிதான்.ஆனா போகாத ஊருக்கு......

பழமைபேசி said...

//பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல//

ஆகவே அண்ணன் ஒத்த கொள்கைகள்(?) உள்ள கட்சிகளை இன்றிணைத்து, தேசியக் கட்சி துவங்க வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் தலைமையில் எங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

குடுகுடுப்பை said...

சூரியன் said...

// கண்டிப்பாக ராகுல் தலைமையில் வருங்கால இந்திய ஒளிரப்போகிறது.....//

அட போங்கப்பா இந்தியா ஒளிர்கிறது மிளிர்கிறதுனு சொல்லி ரொம்ப நாளாச்சு , ஆனா பாதி நேரம் மின்சாரம் இல்லாமல் இருள்கிறது...
//

இந்தியா ஒளிருதோ இல்லையோ ஆனால் பிரியங்கா பிள்ளையோ அல்ல ராகுல் பிள்ள்ளையோ அடுத்து வந்து என் தலைமையில் வருங்கால இந்தியா ஒளிரும் என்று பிரச்சாரம் செய்வார்கள்...

அப்பவும் நாம பே தான்...

//

சூரியன் வந்தாச்சு கை, தாமரையெல்லாம் காணோம்

நசரேயன் said...

//ஆகவே அண்ணன் ஒத்த கொள்கைகள்(?) உள்ள கட்சிகளை இன்றிணைத்து, தேசியக் கட்சி துவங்க வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் தலைமையில் எங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!//

என் இந்த கொலைவெறி...

Sanjai Gandhi said...

அண்ணாச்சி மீண்டும் வந்ததுக்கும் வரவேற்றதுக்கு நன்றிகள்.


முதலில் மாயாவதி பற்றி,

உபி மாதிரி தலித் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் ஒரு பெரிய மாநிலத்தில் சாதி/மத சாற்பற்ற தலைவர் இருக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக இந்த 2 பிரிவினரின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள தலவர் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் அதற்கு மாயாவதி தகுதியானவர் இல்லை. அவர் இதை நிரூபித்து விட்டார். லஞ்சம் , ஊழல், சிலகள் எல்லாம் கூட விடுவோம். ஆட்சியைப் பிடிப்பதே நோக்கமாக கொண்டு பார்ப்பனர்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து அவர்கள் தயவில் ஆட்ச்சியைப் பிடித்த போதே அவர் தலித் தலைவி என்ற பட்டத்திற்கு தகுதி இல்லாதவராகி விட்டார். பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் தலித் மற்றும் முச்லிம் வேட்பாளர்களை அதிக அளவில் நிறுத்தவில்லை. அதை எல்லாம் ராகுல் செய்து வென்றும் காட்டிவிட்டார்.

உபியில் காங்கிரஸ் சார்பில் அதிக அளவில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழக்கப் பட்டது.

2 நாட்களுக்கு முன் இளம் எம்பிக்களுக்கு ராகுல் விருந்தளித்தார். அப்போது தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட காஞ்சிபுரம் தனித் தொகுதி எம்பி விஸ்வநாதன் தனக்கு பிறந்தநாள் என்று ராகுலிடம் சொல்லி இருக்கிறார். ராகுல் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்து இருந்திருக்கிறார். சில நிமிடங்களில் ராகுலின் உதவியாளார்கள் கேக்குடன் உள்ளே வந்திருக்கிறார்கள். விஸ்வநாதனின் பிறந்தநாள் அங்கே கொண்டாடப் பட்டது.

இதெல்லாம் வேறு கட்சிகளில் கற்பனைக் கூட செய்ய இயலாது.

பிரதமர் பதவியே தயாராய் இருந்தும் ஒரு இணை அமைச்சர் பதவி கூட தேவை இல்லை, கட்சிக்கு அதிக இளைஞர்களை கொண்டுவரும் பணி தான் முக்கியம் என்று இளைஞர்களுக்கு முக்கியத் துவம் தரும் தலைவர் காங்கிரஸில் தான் இருக்கிறார்.

உபியில் காங்கிரஸ் வளர்ந்து மாயவதியில் தலைமை ஒழிய வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஏன் பாஸ்வானை உங்களால் தலித் தலைவராக ஏற்ற்க் கொள்ளமுடியவில்லை. மாயாவதிக்கு அவர் சிறந்தவர்.


பிஜேபி என்ற கட்சி விரைவில் அழிந்துவிடும். அதவாணிக்குப் பிறகு நாடு முழுதும் அறியப் பட்ட தலைவர்கள் அங்கு இல்லை.

குடுகுடுப்பை said...

பிஜேபி என்ற கட்சி விரைவில் அழிந்துவிடும். அதவாணிக்குப் பிறகு நாடு முழுதும் அறியப் பட்ட தலைவர்கள் அங்கு இல்லை.//

இது என் மனதிலும் உள்ள ஒன்றுதான். அப்போ தனிக்கட்சி ஆட்சிதானா? 450 சீட்டு காங்கிரஸுக்குதானா?

Sanjai Gandhi said...

பிஜேபி மட்டுமில்லை குடுகுடுப்பை. வாரிசு அரசியலை நொட்ட சொல்லிக் கொண்டிருந்த பல கட்சிகளின் நிலை அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான் சொல்லும் வாரிசு என்பது தலைமை தங்கள் பிள்ளைகளை வாரிசாக வளர்ப்பதை அல்ல. தனக்கு அடுத்து இரண்டாம் மட்டத்தில் சக்தி மிக்க வாரிசை வளர்க்காமல் விடுவதை சொல்கிறேன். அந்த வாரிசு தலைவரின் ரத்த சொந்தமாக இருந்தால் தொண்டர்களுக்கு அவர் மேல் பாசம் அதிகம் இருக்கும். அந்தக் கட்சியும் வளரும். ஓரளவு கட்டுக்கோப்பாகவும் இருக்கும்.

உதாரணம், ராகுல், ஸ்டாலின், அழகிரி, அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா, குமாரசாமி. இவர்கள் ரத்த சொந்த வாரிசுகள்.

அரசியல் வாரிசுகளுக்கு உதாரணம்,
ஜெயலலிதா , மாயாவதி.

இது போன்ற எந்த வகை வாரிசுமே இல்லாமல் இருந்த ஜனதா தளம் இன்று எத்தனையாக சிதறி இருக்கிறதென்று பாருங்கள். அடுத்து கம்யூனிஸ்டுகள், பிஜேபி. இவர்கள் பொத்தாம் பொதுவாக வாரிசு அரசியலை எதிர்த்தார்கள். சுயநலனைத் தாண்டி ஒரு அரசியல் வாரிசை உருவாக்காமல் விட்டுவிட்டார்கள். இன்றைய இந்திய அரசியலில், கட்சியின் தலைமை என்பது தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தால் வேலைக்கு ஆகாது. உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். மேலே சொன்ன வாரிசுகள் போல.

ஓசை செல்லாவின் கணிணியிலிருந்து
சஞ்சய்காந்தி. :-)

Sanjai Gandhi said...

//வளர்ப்பதை அல்ல//

வளர்ப்பதை மட்டுமே அல்ல என வந்திருக்கனும்.

Sanjai Gandhi said...

//இப்பவும் காங்கிரஸ் தனிப்பட்ட மனிதனின் திறமைகளை அறிஞ்சு அதற்கேற்ப பதவிகள் வழங்க வேண்டும். நல்ல உண்மையான திறமைசாலிகள் தோழமை கச்சிகளில் இருந்தால் அவர்கள் திறமையை பாராட்டி கண்டிப்பாக பதவி கொடுக்க வேண்டும்.//
நண்பர் வில்லன்,

சரியான கருத்து. இதனால் தான் திமுக வேண்டாம் என்று சொல்லியும் பிரதமர், தயாநிதி மாறனுக்கு மந்திரி சபையில் இடம் அளித்தே ஆக வேண்டும் என விரும்பினார். நல்லவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் தான் பாலு, ராசாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடியாது என்று காங்கிரஸ் சொல்லியது. ஆனால் நடக்கும் விஷயங்களைப் பார்க்கிறிர்கள் அல்லவா? பாலுவுக்கும் ராசாவுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பது தான் கருணாநிதியின் நெருக்குதல்.

//உதாரனமாக லாலுவுக்கு மீண்டும் ரயில்வே அமைச்சர் பதவி கொடுத்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அழகிரிக்கு ரயில்வே அமைச்சர் வழங்கின என்ன நடக்கும். ரயில் என்ஜின்ல போயி கொள்ளை நடக்கும்//

ரயில்வே மம்தாபானர்ஜிக்கு ஒதுக்கப் பட்டுவிட்டது. லாலுவை விட மம்தா திறமைசாலி. மம்தாவும் நிதிஷ் குமாரும் திறமையாக செயல்பட்டதால் தான் லாலு அதை பின்பற்றி பழம் பறித்தார். உரமிட்டவர்கள் நிதிஷும் மம்தாவும் தான்.

மம்தா பதவி ஏற்கும் முன், செயிலில் உற்பத்தியாகும் இரும்பை ஏற்றுமதி செய்யப் பட்டு ரயில்வேக்குத் தேவையான இரும்பு இறக்குமதி செய்யப் பட்டது. மம்தா பொறுப்பேற்றவுடன் இதை மாற்றினார். செயில் இருப்பையே ரயிவேக்கு வாங்கினார். அதன் முன் 175 ரூபாய்க்கு வாங்கிய எஃகு 35 ரூபாய்க்கு கிடைத்தது. செயிலின் பங்கு விலையும் உயர்ந்தது. இவை எல்லாம் தான் லாலுவின் வெற்றியாக சித்தறிக்கப் பட்டது. ஆனால் லாலுவும் பல புதுமைகளை செய்தார். மறுக்க முடியாது.

காங்கிரஸ் ஆட்சிகளில் தயாரிக்கப் பட்ட அணு குண்டை பிஜேபி ஆட்சியில் வெடித்து Pஈற்றிக் கொண்டார்களே. அது போல் லாலுவுக்கும் கொஞ்சம் நடந்தது. :))

ரயில்வேக்கு மம்தா தான் சரியான தேர்வு. அழகிரியைவிட.

Jackiesekar said...

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.//


கோவில் உயிர்சாதிதனம் இரண்டையும் விட்டு வெளி வரச் சொல்லுங்கள் நிச்சயம் கட்சி வளர்ச்சி அடையும்

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல அலசல்... கொஞ்சம் வன்மையா ..இதையே தான் இங்கு சொல்லிருந்தேன்.

http://trichisundar.blogspot.com/2009/05/blog-post.html

தலைப்பு கொஞ்சம் காட்டமா இருக்கும் ...

இவன் said...

:-|