Monday, November 30, 2009

அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.

இல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.

அமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.

அ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.

ஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.

அ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.

ஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.

அ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.

அ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.

அ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்

அ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.

ஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.

அ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.? you know what ,i dont know

அ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.

ஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.

அ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா?

அ.அதிகாரி2 : வெண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.

அனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.

அ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க?

மா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

25 comments:

CA Venkatesh Krishnan said...

சூஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

என்ன குடுகுடுப்பை, நீங்கதான் ஃபர்ஸ்டா?

டெக்னிகலி, மீ தி செகண்டு

கபீஷ் said...

நெஜம்மா நல்லாருக்கு, எப்படி என்னய மாதிரியே யோசிக்கறீங்க?

பழமைபேசி said...

சிங்கப்பூர் பெரியவரை அனுப்பி வையுங்க....

நசரேயன் said...

இப்படித்தான் நம்ம ஊருல கோவணம் எல்லாம் காணாம போச்சா?

அமர பாரதி said...

அமெரிக்காவிலேயே வாழ்ந்து கொண்டு டாலரில் சம்பாதித்து சோறு சாப்பிட்டாலும், அமெரிக்காவின் கோமனம் கிழிந்தால் மகிழ்ச்சி தான். அதென்னவோ அமெரிக்காவுக்கு அப்படி ஒரு சாபம் போலிருக்கிறது.

அமெரிக்காவைத் தவிர மத்தவனுக்கு கோமணம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அதனால் அவன் கோமணம் கிழியாது. அதை கடைசி பாராவில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

குடுகுடுப்பை said...

//அமர பாரதி said...

அமெரிக்காவிலேயே வாழ்ந்து கொண்டு டாலரில் சம்பாதித்து சோறு சாப்பிட்டாலும், அமெரிக்காவின் கோமனம் கிழிந்தால் மகிழ்ச்சி தான். அதென்னவோ அமெரிக்காவுக்கு அப்படி ஒரு சாபம் போலிருக்கிறது. //

நான் அந்த வகை அல்ல.:)

அமர பாரதி said...

//நான் அந்த வகை அல்ல.:)//

பதிவையும் தலைப்பையும் படித்தவுடன் எழுந்த எண்ணத்தையே எழுதினேன். அவ்வாறில்லையென்பது கடைசி பாராவை படித்தவுடன் உணர்ந்தேன். அதையும் சொல்லியிருக்கிறேன்.

குடுகுடுப்பை said...

//நான் அந்த வகை அல்ல.:)//

பதிவையும் தலைப்பையும் படித்தவுடன் எழுந்த எண்ணத்தையே எழுதினேன். அவ்வாறில்லையென்பது கடைசி பாராவை படித்தவுடன் உணர்ந்தேன். அதையும் சொல்லியிருக்கிறேன்.

ஆமாம் மேலே சொன்னது, தலைப்பு எல்லாம் விமர்சிப்பவர்கள் சுய விமர்சனம் செய்ய வேண்டுமேன்றே.ஆனால் கடைசி வரி வரை செல்லாமல் முன்னமேயெ சொல்லிருக்கலாமோ.

குடுகுடுப்பை said...

//நசரேயன் said...

இப்படித்தான் நம்ம ஊருல கோவணம் எல்லாம் காணாம போச்சா?
//

கோமணமே கட்ட வழி சொல்லாம மத்தவங்கள குறை சொல்றது தப்பில்லையா? இதுல நம்மூரு பரவாயில்லங்க.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
இளையபல்லவன்
கபீஷ்
பழமைபேசி
நசரேயன்
அமரபாரதி

துளசி கோபால் said...

//பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம்,//


இது:-)

நாநா said...

ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்குடா. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்டா. இருக்குற வரைக்கும் எல்லோரும் சந்தோசமா பிச்சி பிச்சி தின்னுட்டு இப்ப இல்லேங்கவும் ஆளாளுக்கு என்னமோ அமெரிக்கா மட்டும் தான் தப்பு செஞ்சா மாதிரியும் மத்தவங்க எல்லோரும் ஒழுக்கப் புலிகள் மாதிரியும் பேசுறாங்க. சூப்பர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்./////



ரூம் போட்டு யோசிப்பீங்களா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம்//////////




mmmmmmmmmmmmmmmmmmmm

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம்,//




கொள்கைன்னு ஒன்னு இருக்கே.......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ///////////////////////




கடைசில.........

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
துளசி டீச்ச்ர்
நாநா,
SUREஷ்

dondu(#11168674346665545885) said...

டோண்டு ராகவனை இம்மாதிரி ஏற்கனவே பிரிட்டனில் இழுத்து விட்டனர்.
“மார்கரெட் தாட்சர் பற்றி இப்போது கூறுவேன். அதற்கு முன்னால் சிறு டைவர்ஷன். "Yes Minister" "Yes Prime Minister" ஆகிய ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின் உள்ளர்த்ததோடு:

"It is quite a novel idea, Mr. Minister" (ஏன் சார் இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க!)

"It is quite a courageous step, Mr. Minister" (உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம், டோமரு!)

"That was really brave of you Mr. Minister" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான் எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா?)

அதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர் சிரிப்பை விளைவிப்பவை//.

இவ்வாறு அவனை வம்புக்கிழுத்ததை கூறியது டோண்டு ராகவனே.

பார்க்க: http://dondu.blogspot.com/2008/07/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாநா said...

அம்மணப்பய ஊருல கோமணங் கட்டினவன் பைத்தியாரன்னு சொல்ல வாரீகளா?

GOLD_SANTHU said...

இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
this is correct answer

வால்பையன் said...

நல்லாவே கிழிச்சிருக்கிங்க

கோமணத்த

குடுகுடுப்பை said...

வாங்க வால்பையன்
//
நல்லாவே கிழிச்சிருக்கிங்க

கோமணத்த

//

இருக்கிர கோமணம் கிழியத்தான் செய்யும், இல்லாத கோமணம் எப்பயுமே கிழிக்கமுடியாதே:)

சந்தனமுல்லை said...

:))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

க.பாலாசி said...

kalakkal....thalaiva....