தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.
தஞ்சை மாவட்ட மக்கள் மொக்கை அறிமுகத்தில் தொட்டும் தொடாமல் இந்நகர் பற்றி பார்த்தோம். நகரில் உள்ள சுற்றுலா,வரலாற்றுத்தலங்கள் பற்றி பல பதிவுகள்,விக்கியில் சொல்லப்பட்டிருந்தாலும் நானும் அதை தொட்டுச்செல்கிறேன்.கடந்த சில வாரங்களாக pbs.org மூலம் இந்தியாவைப்பற்றி ஒரு தொடர் சென்றுகொண்டிருக்கிறது, அத்தொடரில் தஞ்சாவூர்,ராஜராஜசோழன் அதிக நேரம் இடம் பெற்ற போது என் பதிவிலும் கொஞ்சமாவது இடம் பெற வேண்டுமே.
பிற்கால சோழர்களின் தலைநகரான தஞ்சையின் அடையாளம் பெரிய கோவில்தான்.பெரிய கோவில் பற்றிய பதிவு ஒன்று இங்கே.
http://enthamizh.blogspot.com/2008/12/blog-post_30.html
பெரிய கோவிலின் கோபுரச்சுவரில் உச்சிவரை ஏறலாம், இரண்டு சுவர் நடுவில் பாதை,இரண்டு சுவரிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும், இந்த பகுதி பொதுமக்கள் பார்வைக்கு அல்ல. NSS ல் இருந்ததால் அறுபது அடி உயரம் வரை ஒருநாள் கோவில் நிர்வாகத்தினர் அழைத்து சென்றனர்.இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. கோவிலில் முக்கியமான விசயம் கோவிலின் அனைத்து சுவரிலும் உள்ள கல்வெட்டுகள்தான்.கோவில் கட்டிய சோழன் சிலையாக வெயிலில் நிற்கிறார் இப்போது, அதில் உள்ள அரசியல் அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.ராஜராஜன் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது, ஆனால் சோழன் சிலையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு சென்ற இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு விழாவுக்கு பிரபலங்கள் யாரும் செல்வதில்லை இதில் ஆரிய திராவிட வேறுபாடெல்லாம் இல்லை.
பெரிய கோவில் பக்கத்தில் சிவகங்கை பூங்கா சோழர்காலத்தில் அந்தப்புரம் போல,குந்தவை குளித்த குளம் இன்னமும் கூட இருக்கிறது, இப்போது நகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா.யூனிபாமுடன் பள்ளி மாணவ மாணவர்களை ஜோடியாகவும்,என்னைப்போன்றவர்களை தனியாகவும் காணலாம்.ஒரு காலத்தில் நிறைய மான் இங்கு இருந்தது.இப்போது சில மான்கள் இருக்கலாம்.பூங்கா அருகே சிலர் வீணை செய்வதை பார்த்திருக்கிறேன் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.தஞ்சாவூர் ஓவியங்கள்,தட்டு,பொம்மையெல்லாம் எங்கே செய்கிறார்கள்?
மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகள் பாதுகப்பாகமாகவும் உள்ளது இவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.சரபோஜி மன்னர் காலத்து அரண்மனை மாட்டுக்கொட்டகையில் ஒரு பள்ளிக்கூடமும் அதன் குதிரை லாயத்தில் இன்னொரு பள்ளிக்கூடமும் இப்போது இருக்கிறது.
நகரம் இப்போது விரிந்து வெளியே சென்றுவிட்டாலும், மன்னர் கால நகரத்தின் அடையாளம் இன்னும் உயிரோடு உள்ளது. நான்கு நேரான வீதிகள் தெற்கு வீதி,வடக்கு வீதி, மேல வீதி, கீழராஜ வீதி அதனை சுற்றி நாலு அலங்கம் திசைகளின் பெயரில்.இந்த வீதிகளுக்கு இடைப்படது தான் பழைய நகரம், அதற்குள் இருக்கும் வீடுகளுக்கு வழி தஞ்சை நகரின் புகழ்பெற்ற சந்துகள் அதன் அருகில் ஓடும் சாக்கடை,சந்துகளின் பெயர்கள் இன்னமும் மராட்டிய பெயர்களை கொண்டே இருக்கும்.. இப்போதைய தஞ்சாவூர் ஊரின் எல்லைகளில் இருக்கும் கீழ,மேல வஸ்தாது சாவடிகளை தாண்டிவிட்டது.
மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் இங்கு உள்ளது,தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் உள்ளது, எத்தனை கல்லூரி வந்தாலும் சரபோஜி மன்னர் கல்லூரியும், குந்தவை மகளிர் கல்லூரியும் தான் சிறப்பு. இவை கல்வியில் சிறப்போ இல்லையோ வீரம் ,காதலில் சிறப்பானவை.
மற்றபடி பெரும்பான்மை விவசாயம் மட்டுமே தொழில் ஆகையால் இந்நகரம் மிக அமைதியாகவே காணப்படும்.மருத்துவக்கல்லூரி இருந்த காரணத்தினால் இன்றைய வரைக்கும் மருத்துவ தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வீதிக்கு 10 டாக்டர்கள் இருப்பார்கள். பாலிகிளினிக்குகள்,மீனா சோனா என்று மருந்துக்கடைகள் நல்ல வளம் கொழிக்கும் தொழில்.திருச்சியை விட மருத்துவ வசதி அதிகம் உள்ள இடம்.
மற்றபடி எந்தவித தொழிலும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி போன்று இந்நகரம் பெரிய அளவில் முன்னேற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கலாச்சார நகரமாக இதனை உயர்த்தலாம்.அதன் மூலம் சுற்றுலா வருமானம் கிடைக்க வழி செய்யலாம்.அதன் முக்கியத்தேவை நகரை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களுக்கு சரியான சாலைகள், தங்கும் விடுதிகள் அமைத்தல், சரியான முறையில் விளம்பரம் தேவை.பக்தி உள்ளவர்களுக்கு புனிதஸ்தலம் மற்றவர்களுக்கு சுற்றுலாஸ்தலம்.நெற்பயிர், மானாவாரிப்பயிரான உளுந்து எள் சார்ந்த தொழில்கள் ஏதேனும் தொடங்கினால் இங்கிருக்கும் விவசாயிகள் பலனடைவார்கள்.
நகரத்தில் ஓடும் கல்லனைக்கால்வாய் இல்லாமல் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடையே ஓடும் ஐந்து ஆறுகளும் நீர் உள்ளபோது அழகு, ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு.கர்நாடக மழையில் விளைந்த 60 நாள் நெற்பயிரின் பசுமையை கொசுக்கடியையும் தாண்டி ரசிக்கமுடியும். அறுவடை நேரத்தில் வெள்ளம் வந்தால் ரசித்த அந்த பசுமை வெள்ள நிவாரணம் வாங்கத்தான் உதவும்.வெள்ள நிவாரணம் ஓட்டு வாங்க உதவும்.
தஞ்சை அருகில் உள்ள வல்லம் கடலை ஆலைகளுக்கு புகழ்பெற்ற ஊர், இப்போது சில கல்விச்சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊராக உள்ளது,அதுவும் பெண்கள் கல்லூரி இப்போது கடலை வருவல் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமிடம்.
திருவையாறு கர்நாடக இசைக்கு புகழ் பெற்ற இடம்.காவிரி ஆறு ஓடுமிடம்.அதோடு அசோகா என்ற இனிப்பிற்கும், இசை விழா அனுபவம்,கோவில்கள் பற்றிய இணைப்புகள் இங்கே
http://jeyamohan.in/?p=1229
http://jeyamohan.in/?p=369
http://www.shivatemples.com/nofct/nct51.html
ஒரத்தநாடு பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி, இந்த ஊரின் பழைய பெயர் முத்தம்மாள் சத்திரம், சத்திரத்துக்கு நடந்து போய் கத்தரிக்காய் வித்த பாட்டிகள் எல்லாம் முத்தம்மாளிடம் சென்று விட்ட காரணத்தினால் பெரும்பாலோனோர் சத்திரம் என்று அழைப்பதில்லை.
இதுவும் நேராக சாலைகள் உள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரில் ஒரு உயரின கால்நடைப்பண்ணை உள்ளது,இதன் கிளையான ஈச்சங்கோட்டையில் கலப்பின மாடுகளின் விந்து உற்பத்தி செய்கிறார்கள், இதுவே பொதுவாக அனைத்து தமிழக கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கை கருவூட்டலுக்கு பயன்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கலப்பின மாடுகளுக்கு அப்பா வீடு இது.
வடுவூரில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது, அது பறவைகள் சரணாலயமும் கூட.இதுவும் விவசாயம் மட்டுமே சார்ந்த நிலம்.சில விளையாட்டு வீரர்களை இந்த ஊர் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://en.wikipedia.org/wiki/Tanjore
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37
ஒரு வேண்டுகோள்:
கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.
kudukuduppai@gmail.com
Wednesday, January 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
மொக்கையா ஆரம்பிச்சது சூடு புடிச்சுடுச்சே... நானும் எழுதணும் (அதுக்குள்ள வெண்பா அது இதுன்னு திசை மாறிடுச்சு... சீக்கிரமே எழுதறேன்)
உள்ளேன் போட்டுகிறேன். முழுக்கா படிச்சிட்டு அப்புறம் வந்து கமெண்ட் போடுகின்றேன்.
இவ்வளவு தூரம் எழுதிவிட்டு என்னோட பேட்டை கரந்தை பகுதியை விட்டு விட்டீர்களே.
கலைஞர் நாடகத்தில் நடித்த காலத்தில் எம்.ஆர். ராதாவுடன் இந்த ஏரியாவில் தான் தங்கி இருந்தாரம்.
பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது பேட்டிகளில் எல்லாம் எனது பூர்விகம் தஞ்சாவூர் பகுதி கரந்தை என்று தான் சொல்லிவருகிறார்.
சென்னையில் இருந்து வருவதுன்னா என்னோட பேட்டையை
தாண்டி யாரவது போய்விட முடியுமா.
//இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. //
பெரிய பதவிகளில் உள்ளவர்கள் இந்தக்கோயிலுக்கு வந்து கும்பிட்டால்
பதவி போவது/ மரணம் சம்பவிப்பது ஏற்படும் என்கின்ற மூடநம்பிக்கையே இதற்கு காரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது உண்மையா?
சுவாரசியமான தகவல்கள்..சுற்றுலாவிற்கு பயன்படும்! பகிர்ந்தமைக்கு நன்றி
நல்லா இருக்கு, ஊருக்கு வந்தா ஓசியிலே சுத்தி காட்டுவீங்களா?
Mahesh said...
மொக்கையா ஆரம்பிச்சது சூடு புடிச்சுடுச்சே... நானும் எழுதணும் (அதுக்குள்ள வெண்பா அது இதுன்னு திசை மாறிடுச்சு... சீக்கிரமே எழுதறேன்)//
பட்டைய கெளப்புங்க.
//நசரேயன் said...
நல்லா இருக்கு, ஊருக்கு வந்தா ஓசியிலே சுத்தி காட்டுவீங்களா?
//
அண்ணே, பேசாம இங்கனயே ரெண்டு சுத்தி வாங்கி FedExல அனுப்பி விடுங்க... நேர்ல ஊருக்கு வந்தப்புறம் காமிச்சா என்ன? அனுப்பி வெச்சா என்ன? எல்லாம் ஒன்னுதான்!
ullen ayya????!!!!
இராகவன் நைஜிரியா said...
உள்ளேன் போட்டுகிறேன். முழுக்கா படிச்சிட்டு அப்புறம் வந்து கமெண்ட் போடுகின்றேன்//
வந்து படிச்சிட்டு கருத்த சொல்லுங்க
Thanjavurkaran said...
இவ்வளவு தூரம் எழுதிவிட்டு என்னோட பேட்டை கரந்தை பகுதியை விட்டு விட்டீர்களே.
கலைஞர் நாடகத்தில் நடித்த காலத்தில் எம்.ஆர். ராதாவுடன் இந்த ஏரியாவில் தான் தங்கி இருந்தாரம்.
பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது பேட்டிகளில் எல்லாம் எனது பூர்விகம் தஞ்சாவூர் பகுதி கரந்தை என்று தான் சொல்லிவருகிறார்.
சென்னையில் இருந்து வருவதுன்னா என்னோட பேட்டையை
தாண்டி யாரவது போய்விட முடியுமா.//
ஆமாம்ல கரந்தைன்னா எனக்கு ஒத்தைத்தெருதான் ஞாபகம் வருது.அது ஏன் ஒரு வாசப்படி வீடுகள்?
ஆதித்தன் said...
//இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. //
பெரிய பதவிகளில் உள்ளவர்கள் இந்தக்கோயிலுக்கு வந்து கும்பிட்டால்
பதவி போவது/ மரணம் சம்பவிப்பது ஏற்படும் என்கின்ற மூடநம்பிக்கையே இதற்கு காரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது உண்மையா?//
ஆமாங்க,
சந்தனமுல்லை said...
சுவாரசியமான தகவல்கள்..சுற்றுலாவிற்கு பயன்படும்! பகிர்ந்தமைக்கு நன்றி//
கண்டிப்பா ஒருமுறை போய் பாருங்க
//ஒரு வேண்டுகோள்:
கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.//
அப்படியே வேளாங்கண்ணி, நாகூர், வேதாரண்யம் & தஞ்சாவூர் பத்தி ஒரு பதிவ போட்டுருங்க. சுற்றுலா தளங்கள பத்தி தெரிஞ்ச மாதிரி ஆயிரும்.
// குடுகுடுப்பை said...
ஆதித்தன் said...
//இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. //
பெரிய பதவிகளில் உள்ளவர்கள் இந்தக்கோயிலுக்கு வந்து கும்பிட்டால்
பதவி போவது/ மரணம் சம்பவிப்பது ஏற்படும் என்கின்ற மூடநம்பிக்கையே இதற்கு காரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது உண்மையா?//
ஆமாங்க,//
அப்ப மோதல் நம்ம ஊரு அரசியல்வாதிங்க எல்லாரையும் கொண்டு போயி கட்டாய சாமி கும்பிட வசுர வேண்டியதுதான்.
மொத்தமா கூண்டோட கைலாசம் அனுபிரலாம்>>>>>>>>>>>>>>>>
// Thanjavurkaran said...
இவ்வளவு தூரம் எழுதிவிட்டு என்னோட பேட்டை கரந்தை பகுதியை விட்டு விட்டீர்களே.
கலைஞர் நாடகத்தில் நடித்த காலத்தில் எம்.ஆர். ராதாவுடன் இந்த ஏரியாவில் தான் தங்கி இருந்தாரம்.
பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது பேட்டிகளில் எல்லாம் எனது பூர்விகம் தஞ்சாவூர் பகுதி கரந்தை என்று தான் சொல்லிவருகிறார்.
சென்னையில் இருந்து வருவதுன்னா என்னோட பேட்டையை
தாண்டி யாரவது போய்விட முடியுமா.//
என்ன பேட்டை வண்ணார பேட்டையா??????????/ தண்டையார் பேட்டையா??????? இல்ல ஆழ்வார் பேட்டையா?????. ஒண்ணுமே புரியலையே தலைவா
தஞ்சை பெரிய கோயில் நினைவுகளை கிளறி விட்டீர்கள்.என்ன ஒரு கலையுணர்வு!!கட்டிடக்கலை!
யோசித்துப் பார்த்தா தமிழன் பெருமைகள் எத்தனை!எத்தனை!நிகழ்காலத்துடன் ஒப்பிடும்போது எங்கிருந்து எங்கே வந்துள்ளோம் என்ற எண்ணங்களும் கூடவே ஏக்கப் பெருமூச்சுகளும்.
Thanjavur.... no words to say.its a heritage of home..
Post a Comment