Tuesday, January 13, 2009

தூத்துக்குடி அறிமுகம் பாகம் 1

ஒரு சின்ன வெளம்பரம் தூத்துக்குடி பத்தி.

செக்கிழுத்த செம்மல், கட்டபொம்மன் & பாரதியார் பிறந்த பூமி.

பெரிய துறைமுகம் இங்க உள்ளது. தமிழ்நாட்டிலேயே 2வது பெரிய துறைமுகம். இந்தியாவிலேயே 5வது பெரிய துறைமுகம்.

இந்தியாவிலேயே பெரிய அனல் மின் நிலையம் இங்கதான் உள்ளது.

இந்தியாவிலேயே பெரிய ஸ்டேர்லைட் தாமிர தொழிற்சாலை இங்குள்ளது.

ஒரு முக்கியமான தொழிற்சாலை கூடம்.

விமான நிலையம் இருக்கு. அது ஏதோ வெள்ளக்காரன் காலத்துல கட்டினதாம். அத புதுப்பிச்சு இப்ப ஆரம்பிச்சுட்டாங்க. அந்த காலத்து ஓடுதளம் என்கிறதாலே ரொம்ப பெரிய விமானம் எல்லாம் இறங்க முடியாது. குட்டி விமானம் வந்து போறது. இப்ப தினமும் ஒரு ட்ரிப் வரதா கேள்வி.

தென் நாட்டின் கேம்பிரிட்ஜ், ஆதித்தனார் காலேஜ் (ஏன்னா அது நான் படிச்ச காலேஜ்). இந்த மாவட்டம் திருச்செந்தூர் இருக்கு.

முக்கியமான ஊர் பழையகாயல் (அதாங்க என்னோட ஊரு) இந்த மாவட்டத்துல தான் இருக்கு. வெங்கடேச பண்ணையார் (என்கொனடேர்ல போட்டு தள்ளிட்டாங்க) ஊரு கூட.

உடன்குடி கருப்பட்டி தூத்துக்குடி உப்பு உலக புகழ் பெற்றது.

தூத்துக்குடி பனிமய மாத கோவில், புளியம்பட்டி அந்தோனியார் கோயில் உவரி மாத கோயில், குலசேகரன்பட்டினம் ( தசராவுக்கு பேர்போன ஊரு) கோயில் ரொம்ப புகழ் பெற்றது.


மேலும் அதி விரைவில்.
பதிவு என் பெயரில் வந்தாலும், இதற்க்கு சொந்தகாரர் வில்லன்

13 comments:

நசரேயன் said...

அலுவலக பணிகளுக்கு இடையில் எழுதி கொடுத்த வில்லன்னுக்கு நன்றி

சந்தனமுல்லை said...

எனக்கு மிக நல்ல தோழிகள் இங்கிருந்துதான் கிடைத்தார்கள்..அப்படியே நாகர்கோவிலிருந்தும்!!

குடுகுடுப்பை said...

வில்லனாரே முதல் பாகம் வெறும் விளக்கமாக உள்ளது, தூத்துக்குடியை தோய்த்து கொடுங்கள் அடுத்த பாகத்தில்.

அது சரி(18185106603874041862) said...

அதப் பாருலே...தூத்துக்குடி தூத்துக்குடின்ன ஒரு ஊரு இருக்குவே...அங்கன ஒரு தொழிச்சால இருக்கு....எளவு ஒரு வெமான நிலையமும் இருக்கு...அப்புறம் ஒரு தொறமொகம் இருக்கு...நாலஞ்சி காலேசுவுகளும் இருக்குன்னா பாத்துக்கிடும்...

என்னங்ணா இது...தமிழ்நாடு அரசு செய்தி பத்திரிக்கை மாதிரி இருக்கே....எல்லா ஊர பத்தியும் நல்லா எழுதிரீங்க...தூத்துக்குடி மேல மட்டும் அப்படி என்ன கோவம்னேன்??

மாநகராட்சி துண்டு நோட்டீஸ் மாதிரி எழுதாம நசரேயன் ஸ்டைல்ல ஒண்ணு கும்முன்னு எழுதுங்கன்னேன்!

இது நான் எழுதலேன்னு சொல்றீங்களா...உங்க பேரு தான வந்திருக்கு அதனால உங்களைத் தான் கேட்போம் :0))

வில்லன் அண்ணாச்சி, மன்னிச்சிக்குங்க!

Mahesh said...

நறுக்...

நீங்க நசரேயனா 'நச்'ரேயனா? :)))

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

முரளிகண்ணன் said...

need more

ராஜா வாயிஸ் said...

வாழ்த்துக்கள் நசரேயன்

ராஜா வாயிஸ்

மும்பை

நானானி said...

எனக்கு கல்யாணமாகி ஏழு வருடம் தூ.குடியில் இருந்திருக்கிறேன்.
மீன்பிடித்துறைமுகம் கட்டும் போது கடலுக்குள் போகும் பாதையில் அண்ணன் பிள்ளைகளை பிக்னிக் கூட்டிப் போன ஞாபகம் வருது. அதோடு முயல் தீவுக்கும் கூட.
மெக்ரூன்ஸ் பத்தி சொல்லலையே?

பழமைபேசி said...

அலுவலக பணிகளுக்கு இடையில் எழுதி கொடுத்த வில்லனுக்கு நன்றி!

கல்கி said...

மக்ரூன மறந்துடீங்களே.....

என்னண்ணே, கோவில்பட்டிய விட்டுடீங்க. :( நாங்களும் தூத்துகுடி மாவட்டம் தான......

Anonymous said...

enna thalaiva mukkiamana aala solla maranthuteengaley. innum yarunu theriyalaya athu namma VEERA PANDIYA KATTABOMMAN than. evarum namma ooruthan. Varalatru singathiyeh maranthuteenagaley valka kattabomman pugal

படுக்காளி said...

வணக்கம் தூத்துக்குடி காரரே,

நம்ம ஊர பத்தி படிக்கும் போது ரொம்ப நல்லாருக்கு. விவரமா சொல்லுங்க.....

இல்லேன்னு சொல்லாம, லேசா நம்ம ஊர தொட்டு எழுதினது கீழே...

http://padukali.blogspot.com/2010/01/blog-post_25.html

வாழ்த்துக்கள்.

லாரன்ஸ்