Wednesday, November 25, 2009

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும். நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.

இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.

இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..

இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.

நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).

ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.

நடைவண்டியின் பார்வையில் தஞ்சை நாடு

தொடரும்.....

23 comments:

நசரேயன் said...

/*தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண*/
அந்த காலத்திலேயே இருந்து இந்த நடைமுறை இருக்கா?

நசரேயன் said...

/*
பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை
*/
ரெம்ப பரிதாப படவேண்டிய விஷயம்

வில்லன் said...

நான்தான் 2வது

வில்லன் said...

/*தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண*/

தஞ்சை மாவட்ட இளைஞர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர்களே (உலக அளவில) அப்படித்தான்.

நசரேயன் எல்லாம் சர்ச்சுக்கு போறதே அதுக்குதான். என்ன தலைவா சரிதானா

கபீஷ் said...

//ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன்.//

சீக்கிரம் எழுதுங்க, (நோ உள்குத்து :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண*/
அந்த காலத்திலேயே இருந்து இந்த நடைமுறை இருக்கா?//

எனக்கு தெரிஞ்ச காலத்தில இருந்து இருக்கு.

குடுகுடுப்பை said...

வில்லன் said...

/*தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண*/

தஞ்சை மாவட்ட இளைஞர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர்களே (உலக அளவில) அப்படித்தான்.

நசரேயன் எல்லாம் சர்ச்சுக்கு போறதே அதுக்குதான். என்ன தலைவா சரிதானா//

இப்பயும் சர்ச்சுக்கு போறாராமே?

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன்.//

சீக்கிரம் எழுதுங்க, (நோ உள்குத்து :-)//

கொஞ்சம் நாளாகும் கபீஷ்.

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

நல்ல பதிவு//

நன்றி டிவீயார்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் .உங்கள் பக்கத்தை இன்று தான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி .தஞ்சை பகுதியைப் பற்றிய செய்திகளைப் பார்த்து நிறைவாக இருந்து.நானும் தஞ்சை பகுதியைச் சார்ந்தவள் தான் எங்கள் ஊர் ஒக்கநாடு கீழையூர்.

எம்.எம்.அப்துல்லா said...

காசாநாட்டுக்காரர்கள் அறுத்துக் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்தான். இந்த பெரும்பான்மை சமூகத்தில் பிறநாட்டுக்காரர்கள் போருக்குச் செல்ல இந்த உட்பிரிவு மட்டும் போரில் பங்கு கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகம்,உள்ளூர்காவல் போன்ற பணிகளை மட்டுமே செய்திருப்பார்கள். எனவே இளம் வயதில் மரணம் என்பது இந்த நாட்டுக்காரர்களிடையே இல்லாமல் இருந்திருக்கும்.அதுகூட அறுத்துக்கட்டும் பழக்கம் ஏற்படாததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கணிப்பும்,கருத்தும்.

எம்.எம்.அப்துல்லா said...

காசாநாட்டுக்காரர்கள் அறுத்துக் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்தான். இந்த பெரும்பான்மை சமூகத்தில் பிறநாட்டுக்காரர்கள் போருக்குச் செல்ல இந்த உட்பிரிவு மட்டும் போரில் பங்கு கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகம்,உள்ளூர்காவல் போன்ற பணிகளை மட்டுமே செய்திருப்பார்கள். எனவே இளம் வயதில் மரணம் என்பது இந்த நாட்டுக்காரர்களிடையே இல்லாமல் இருந்திருக்கும்.அதுகூட அறுத்துக்கட்டும் பழக்கம் ஏற்படாததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கணிப்பும்,கருத்தும்.

Ravichandran Somu said...

நல்ல பதிவு குடுகுடுப்பையாரே!

//இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.//

எங்கள் ஊரில் ஒரே நாட்டாமைதான். பத்து உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாயத்து குழு. நாட்டாமை பஞ்சாயத்து குழுவின் தலைவர்.நாட்டாமை பஞ்சாயத்து குழு உறுப்பினர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பார்.

//எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.//

சரியாகச் சொன்னீர்கள். எங்கள் பெரியப்பா நாட்டாமையாக பதவி வகித்த 41 ஆண்டுகளில் ஒரு முறை கூட போலிஸ் எங்கள் ஊருக்கு பிரச்சணைகளுக்காக வந்தது கிடையாது. இப்போது காலம் மாறிவிட்டது!!

//இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..
//
நான் வடுவூர் நாட்டுக்காரன்.

//நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண//

ஹி..ஹி நான் சாமி கும்பிட மட்டும்தான் கோவிலுக்கு போவேன்.

//ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.//

நிதர்சனமான உண்மை.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

mvalarpirai said...

anna..nattau apthi soneenga.. kottai pathi sollunga next pathivula.. enga ooru pattukkottaiyakkum :)

சந்தனமுல்லை said...

மிகவும் சுவாரசியமான தகவல்கள்! /எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்/

இது ஆச்சரியமா இருக்கு!

அப்புறம் நசரேயன் அடங்க மாட்டார் போலிருக்கே! :-)))

குடுகுடுப்பை said...

முனைவர் சே.கல்பனா
வணக்கம் .உங்கள் பக்கத்தை இன்று தான் கண்டேன் மிக்க மகிழ்ச்சி .தஞ்சை பகுதியைப் பற்றிய செய்திகளைப் பார்த்து நிறைவாக இருந்து.நானும் தஞ்சை பகுதியைச் சார்ந்தவள் தான் எங்கள் ஊர் ஒக்கநாடு கீழையூர்//

நானும் உங்க ஊர் பக்கமெல்லாம் வந்திருக்கேன், நீங்களும் ஒரு நாட்டுக்காரர்தானா?

குடுகுடுப்பை said...

எம்.எம்.அப்துல்லா said...
காசாநாட்டுக்காரர்கள் அறுத்துக் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்தான். இந்த பெரும்பான்மை சமூகத்தில் பிறநாட்டுக்காரர்கள் போருக்குச் செல்ல இந்த உட்பிரிவு மட்டும் போரில் பங்கு கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகம்,உள்ளூர்காவல் போன்ற பணிகளை மட்டுமே செய்திருப்பார்கள். எனவே இளம் வயதில் மரணம் என்பது இந்த நாட்டுக்காரர்களிடையே இல்லாமல் இருந்திருக்கும்.அதுகூட அறுத்துக்கட்டும் பழக்கம் ஏற்படாததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கணிப்பும்,கருத்தும்.//

இவங்க யாரும் சண்டைக்கு போயிருக்க வாய்ப்பில்லை, ஒருவேளை பாண்டியனிடம் தோற்ற வெண்ணிப்பறந்தலைப்போரில் பங்கேற்றிருப்பாகள், எல்லாரும் வாய்ச்சொல் வீரர்களே? தேன் எடுக்கும் மரத்திலேர்ந்து விழுந்து செத்திருக்கன்னா வாய்ப்பு உண்டு. மற்றபடி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மாதிரு ஒரு உயர்ந்த மனப்பான்மையே இதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

குடுகுடுப்பை said...

நன்றி ரவி

குடுகுடுப்பை said...

வள்ர்பிறை அவர்களே பட்டுக்கோட்டை பற்றி முன்னமே எழுதியாச்சு.

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...
மிகவும் சுவாரசியமான தகவல்கள்! /எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்/

இது ஆச்சரியமா இருக்கு!

அப்புறம் நசரேயன் அடங்க மாட்டார் போலிருக்கே! :-)))

//

நன்றி மேடம்

குடுகுடுப்பை said...

நன்றி முல்லை.

Unknown said...

இன்றைக்குதான் படித்தேன்... நல்ல விவரமா எழுதி இருக்கீங்க ..