Friday, January 16, 2009

கொங்கு நாடு - 3

அன்பு அண்ணன் முனைவர் நா.கணேசன் அவிங்க அறியக் கொடுத்த மடல் இது. அண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதிலும், சுவையான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

பழமைபேசியின் பதிவு பார்த்தேன்: (பின்னூட்டு: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று, ஆனால் பொருள் வேறுபாடில்லை.

கொங்கில், ஒற்றை விட்டும் பெயர்கள் குறுகும். அண்ணன் அணன் என்றாகும். ஐயணன், ரங்கணன், ராமணன், மயிலணன், குயிலணன், வேலணன், தொட்டணன், பெரியணன், ... இது கர்நாடகத்திலும் உள்ள மரபுதான்.

இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000 வருஷம் இருந்தது. முதலில் எழுதிய கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை, முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன் நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும் அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும் கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் - மாயணர் வழிவந்த சாயணர்-மாதவர் இல்லையாயின் இந்து சமயம் தென்னாட்டில் இல்லாதொழிந்து சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.)

கோவைகிழார் சி. எம். ராமச்சந்திரஞ்செட்டியார் அவர்களின் "எங்கள் நாட்டுப்புறம்" அவசியம் மணி படிக்கணும். பேரூர் ஆதீனத்தில் விற்பாங்க. ஒரு 10 படி வாங்கி ஆர்வம் இருக்கிறவர்களுக்குக் கொடுங்க. சிஎம்ஆர், இந்த புத்தகம் உருவானது, நூல் கேட்டோர் பற்றி எல்லாம் பின்னர் பழமை பேசலாம்.

வண்டி ஓட்டப்பந்தயம் சிந்து நாகரிகத்திலும் இருந்திருக்கிறது. Daimadabad bronze ரேக்ளா ரேஸ் தான். படம் கொடுத்துப் பதிவு போடணும். ஆக்களுக்கும், எருமைகளுக்கும் கலையியலில் உள்ள வேறுபாடுகளை எழுதியுள்ளேன்:

http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html

http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html


நம்ம ஊரு ரேக்ளா ரேசு பற்றி:
கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் 'ரேக்ளா'

உடுமலை வட்டாரத்தில் "ரேக் ளா' பந்தயங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது.தங்கத்தை அள்ளிக் கொடுக்கும் இப்பந்தயத்தில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்ட வில் வண்டி, மாடுகளுடன் விவசாயிகள் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.


கொங்கு மண்டலத்திற்கே உரித்தான இந்த ரேக்ளா பந்தயத்தில், மாடுகள் தேர்வு முதல் பந்தய வெற்றி வரை சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன.வேகமாக ஓடுவதில் காங்கயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல் லை. தற்போது காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே. இந்த இன காளைகள் உள்ளன. காங்கயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் "லம்பாடி' இன காளைகளும் களத்தில் இறக்கப்படுகின்றன. ஆனால், காங்கயம் காளைகளுக்கு இணையாக இவை பரிசு பெறுவதில்லை.


பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.தற்போது பசு, எருமை இனங் கள் மட்டுமே பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இனப் பெருக்கத்திற்கும் மட்டுமே காளைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதையும், உழவுக்கு இயந்திரம், இனப் பெருக்கத்திற்கு "உறை விந்து' என அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.

இதனால் காளை இனங்கள் கொஞ் சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இந்நிலையில் ரேக்ளா பந்தயத்தால், மீண்டும் காங் கயம் இன காளைகளுக்கு தனி மரியாதை கிடைத்து வருகிறது.இதிலும் நெட்டை, குட்டை என இரு வகைகள் உள்ளன. ரேக்ளாவிற்கு நெட்டை காளைகளே பயன்படுகின்றன. வறண்ட, மானாவரி நிலங்களில் வளரும் இந்த காளைகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.

பந்தயத்திற்கு தேவையான காங்கயம் காளைகளை கண்டுபிடிப்பதே தனி கலை. இதற்காக சித்திரையில் கண்ணபுரம் மாட்டுதாவணிக்கும், ஆனியில் ஒட்டன் சத்திரம் அத்திக் கொம்பை சந்தைக்கும், ஆடியில் பழனி, தொப்பம்பட்டி, கோபி, அந்தியூர் சந்தைகளுக்கும் வர்த்தகர்கள் செல்கின்றனர்.ரேக்ளாவிற்கு தேர்வு செய்யப் படும் ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைக்கும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக் காடு, கம்பரசல்லா, சித்தூர் பகுதிகளிலிருந்தும், உடுமலை, வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, தாராபுரம், அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், காங்கயம், ஒட்டன்சத் திரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்கின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப் படுகின்றன.பொழுதுபோக்கு அம்சமாகவும், விவசாயிகளின் கவுரவத்தைக் காட்டவும் நடத்தப்படும் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாயும் காளைகளைக் காண மக்கள் கூட் டமும் அலை மோதும். ரேக்ளா பந்தயம் தென் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.

விளையாட்டில் பயன்படுத் தப் படும் கடிகாரத்தின் உதவியுடன், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் மாடுகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது. உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், டிஜிட்டல் முறையில் துல்லியமாக நேரம் கணக்கீடு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது. காளை வயதை காட்டும் பல்: இரண்டு ஆண்டுகள் ஆன காளைகள் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ளும். 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன காளைகளுக்கு ஆறு பல் முதல் எட்டு பல் வரை இருக்கும். இந்த காளைகள் 300 மீட்டர் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25 நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.காளைகளை பருத்திக் கொட்டை, பேரீச் சம்பழம், முட்டை, தேங்காய், பச்சரிசி, பால் ஆகியவை கொடுத்து வளர்க்கின்றனர். பந்தயத்திற்கு முன்தினம் இரவு தீவனம் கொடுக்காமல், ஊட்டச் சத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.

வில் வண்டி உருவாகும் விதம்: ரேக்ளாவிற்கு வில் வண்டி பயன் படுத்தப்படுகிறது. இந்த வண்டிகளைத் தயாரிக்க ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. கரங்களுக்கு உயர்தர "பேரிங்' பயன்படுத்தப்படுகிறது.

வண்டி ஓட்டுகையில் சொகுசாக இருக்க, "கட் ஸ்பிரிங்'கை பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. ரேக்ளாவிற்கு பயன்படும் வண்டிகள், உடுமலை அருகே ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

16 comments:

குடுகுடுப்பை said...

ரேக்ளா ரேசுல நீங்க கலந்துக்குவீங்களா

நசரேயன் said...

என்னையும் சேத்துகோங்க அடுத்ததடவை போகும் போது

பழமைபேசி said...

Thanks Anae & Thalapathi. I was in hurry while posting as I got to drop chinna ammini @ gymnastics class. I will reformat and add pictures soon!

கபீஷ் said...

//பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.//

ஒட்டு மொத்தமா அப்படி சொல்ல முடியாது. இப்போ இயற்கை விவசாயம் பத்தி நம்ம மக்கள் கிட்ட நல்ல விழிப்புணர்வு ஏற்பட துவங்கியிருக்கிறது.

பழமைபேசி said...

//கபீஷ் said...
//பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.//

ஒட்டு மொத்தமா அப்படி சொல்ல முடியாது. இப்போ இயற்கை விவசாயம் பத்தி நம்ம மக்கள் கிட்ட நல்ல விழிப்புணர்வு ஏற்பட துவங்கியிருக்கிறது.
//

அப்பிடீங்ளா? நல்ல விசயம், மிக்க மகிழ்ச்சியும்!

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டுவிட்டேன்..

பழமைபேசி said...

//SUREஷ் said...
ஓட்டுப் போட்டுவிட்டேன்..
//

மை காயுறதுக்கு முன்னாடி அழிச்சிடுங்க, இன்னொரு ஓட்டுப் போடலாம்...

Anonymous said...

ரேஸ் நல்லா இருக்கு, ஆனா மாட்டை இந்த அடி அடிக்கறாங்க. பாவமா இருக்கு

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
ரேஸ் நல்லா இருக்கு, ஆனா மாட்டை இந்த அடி அடிக்கறாங்க. பாவமா இருக்கு
//

வாங்க, வணக்கம்! ஆமுங்க...அது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.

நாடோடிப் பையன் said...

Very nostolgic. Thanks.
Long time ago, I have seen such a race in Pollachi.
I hope they find a better way to race without beating the bullocks.

பழமைபேசி said...

வாங்க, வணக்கம்! ஆமுங்க...

வில்லன் said...

நாங்கல்லாம் ரேக்ளா ரேசுல பரிசு பெற்றவங்களாக்கும். மொதல்ல வந்ததுக்கு பெரிய முண்டாசு கட்டி ரொம்ப மரியாத எல்லாம் செஞ்சாங்க. அங்க மாடு மேச்ச பழக்கம் இங்க, இப்ப, ரொம்ப கைகொடுக்கு. இதைதான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்லுவங்களோ. அண்ணா பழமைபேசி வெளக்கம் போடலாம் நீங்க தாராளமா!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//ரேஸ் நல்லா இருக்கு, ஆனா மாட்டை இந்த அடி அடிக்கறாங்க. பாவமா இருக்கு


வாங்க, வணக்கம்! ஆமுங்க...அது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.//

அப்ப வாத்தியார் பசங்கள மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கும்போது (பழமைபேசி விளக்கம் போடுவார்) ?????????????

குடந்தை அன்புமணி said...

கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கேவிலில் மாட்டுப்பொங்கல் அன்று குதிரை ரேஸ் நடக்குமுங்க.

தேவன் மாயம் said...

இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000 வருஷம் இருந்தது. முதலில் எழுதிய கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை, முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன் நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும் அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும் கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் - மாயணர் வழிவந்த சாயணர்-மாதவர் இல்லையாயின் இந்து சமயம் தென்னாட்டில் இல்லாதொழிந்து சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.)
///

நல்ல வரலாற்றுத் தகவல்!!
தேவா....