Monday, November 23, 2009

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.

அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.

கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..

நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.

கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.

நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.

கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..

நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.

கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...

நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.

கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....

நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?

கொங்குப்பையன்:துக்ளக்குங்..

நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.

கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..

நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.

கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.

காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்

கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.

கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.

கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..

கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..

கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..

கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..

கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....

பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...

37 comments:

Anonymous said...

// பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்.//

ஆமாம் வாலுகிட்ட கேளுங்க.. சரியான வைத்திய சொல்லுவாரு...

KarthigaVasudevan said...

அல்வா கொடுத்த சத்யராஜ் கூட கொங்குப் பையன் தான??? அடடா என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் !!!பாவம் அந்த கொங்குப் பையன் ?! நல்லா சிரிக்க வைக்குது இந்தப் பதிவு !!!

புதுகை.அப்துல்லா said...

ha...ha...ha.... maattunaara mahesh annan :))

S.R.Rajasekaran said...

ha,ha,ha,.................

Anonymous said...

என்னங் என்ர ஊரு காரருக்கு அல்வா கொடுத்து அடிச்சிப் புட்டீங்களேங்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))))

குடுகுடுப்பை said...

Anonymous இராகவன், நைஜிரியா said...

// பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்.//

ஆமாம் வாலுகிட்ட கேளுங்க.. சரியான வைத்திய சொல்லுவாரு...//

ஆள இன்னும் காணோம்.

பழமைபேசி said...

அஃகஃகா!

நசரேயன் said...

வந்துட்டேன்.. வந்துட்டேன்

நசரேயன் said...

ஏனுங்க, அந்த புள்ள என் வையத்தை மட்டும் கட்டலை, ஆளை வச்சு என் முதுகையும் கட்டிட்டா

ஸ்ரீதர்கண்ணன் said...

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..


Super :))))))

Mahesh said...

வாயையும் வயித்தயும் கட்டலாம் அப்பறம்... முதல்ல அந்த அல்வா நெய் டின்ன முதுகுல கட்டலாம் !!!

அணிமாஆஆஆஆ... எங்கப்பா போயிட்ட?.... சொமாலியா கொள்ளைக்காரனுக கிட்ட சொல்லி சோலிய முடிக்கச் சொல்லுப்பா... கொசுத் தொல்லை தாங்கல...

:))))))))))))))))))))

நெம்ப ரசிச்சனுங்.... அடி வெளுத்துக் கட்டுங்....

Mahesh said...

புதுகை.அப்துல்லா said...

//ha...ha...ha.... maattunaara mahesh annan :))//

ஆஹா... கொண்டாட்டத்தப் பாருய்யா... புது வருசத்துல மொத போணி "புது"கை அண்ணல்தானாம்ல!!

Anonymous said...

// Mahesh said...
வாயையும் வயித்தயும் கட்டலாம் அப்பறம்... முதல்ல அந்த அல்வா நெய் டின்ன முதுகுல கட்டலாம் !!!

அணிமாஆஆஆஆ... எங்கப்பா போயிட்ட?.... சொமாலியா கொள்ளைக்காரனுக கிட்ட சொல்லி சோலிய முடிக்கச் சொல்லுப்பா... கொசுத் தொல்லை தாங்கல...

:))))))))))))))))))))

நெம்ப ரசிச்சனுங்.... அடி வெளுத்துக் கட்டுங்....//

சோமலியா எல்லாம் கிழக்கால இருக்குதுங்க, நாங்க இருக்கிறது எல்லாம் மேற்காலங்க..

எங்களுக்கு சோமாலிவிக்கும் சம்பந்தம் இல்லங்க..

S.R.Rajasekaran said...

\\\புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்\\\

யாரையோ மனசுல வச்சிக்கிட்டு இப்படி எழுதி இருக்கிங்க .சுய சரிதய இப்படி எல்லாமா ஒப்பனா சொல்றது

குடுகுடுப்பை said...

மிஸஸ்.டவுட் said...

அல்வா கொடுத்த சத்யராஜ் கூட கொங்குப் பையன் தான??? அடடா என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் !!!பாவம் அந்த கொங்குப் பையன் ?! நல்லா சிரிக்க வைக்குது இந்தப் பதிவு !!!
//

நன்றி டவுட்டக்கா

குடுகுடுப்பை said...

வ்புதுகை.அப்துல்லா said...

ha...ha...ha.... maattunaara mahesh annan :))
//

ஓட்டுப்பொறுக்கிய தான் ஹீரோவாக்கலாம்னு இருந்தேன், துக்ளக் பேர்ல உள்ள கவர்ச்சி இவருக்கு சான்ஸ் கெடச்சிருச்சு

ஓட்டு பொறுக்கி said...

என்ன குடுகுடுப்பையரே குதுகலமா போய்ட்டு இருக்கிற குடும்பத்துக்குள்ள குசும்பு பண்ணிடாதீங்கப்பு..
அப்புறம் பொழைக்க வந்த ஊர்ல கஞ்சி தண்ணி ஊத்தமாட்டேன்னு ஊட்டுகார அம்மணி சொல்லிபுடும்

குடுகுடுப்பை said...

ஓட்டு பொறுக்கி said...

என்ன குடுகுடுப்பையரே குதுகலமா போய்ட்டு இருக்கிற குடும்பத்துக்குள்ள குசும்பு பண்ணிடாதீங்கப்பு..
அப்புறம் பொழைக்க வந்த ஊர்ல கஞ்சி தண்ணி ஊத்தமாட்டேன்னு ஊட்டுகார அம்மணி சொல்லிபுடும்//

தண்ணிதான் நீங்க பார்ல ஊத்திக்கிறீங்களே

Anonymous said...

ஹி,,,,,,ஹிஹிஹிஹிஹீ

அது சரி(18185106603874041862) said...

நல்லா கத சொல்ரீருவே...கருப்பட்டிய சாஸ்தியா போட்ட காப்பி மாதிரி இனிச்சி கெடக்குன்னேன்...அந்த புள்ள யாருன்னு சொன்னீருன்னா நாம்போயி பாப்பமுல்லா....கோட்டிக்கார பயலுவளுக்கு அல்வா குடுக்குற புள்ளிகள பாராட்டணும்வே...

சந்தனமுல்லை said...

:-)))

நானானி said...

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..."

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
இராகவன், நைஜிரியா
மிஸஸ்.டவுட்
புதுகை.அப்துல்லா
S.R.ராஜசேகரன்
Sriram
T.V.Radhakrishnan
பழமைபேசி
நசரேயன்
ஸ்ரீதர்கண்ணன்
Mahesh --ரொம்ப நன்றி மகேஷ்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
ஓட்டுப்பொறுக்கி
கவின்
அது சரி
சந்தனமுல்லை
நானானி

Tech Shankar said...

ஆகா

குடுகுடுப்பை said...

நன்றி தமிழ்நெஞ்சம்

Anonymous said...

நமக்குத்தான் டாவடிக்க முடியல. கொங்கு நாட்டில சான்ஸ் இருக்கா?

புள்ளிராஜா

Kumky said...

ஹி...ஹி.
அய்ய்யோ அய்யோ.

வல்லிசிம்ஹன் said...

எப்படித்தான் கற்பனை ஓடுது உங்களுக்கு. எங்க ஊருப் பொண்ணுங்களையெல்லாம் என்னவென்னு நினைச்சாரு அந்தத் துகுளகு:))
சிரிச்சு முடியலை. ரொம்ப நல்லா இருந்துச்சு.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
புள்ளிராஜா
கும்க்கி
வல்லி சிம்ஹன்

வில்லன் said...

துக்ளக்குங்ரத சைகைல கட்டிபுட்டருவே. பாவம் என்ன பண்ண நெல்லை காரிட்ட மாட்டினா அப்புறம் நெல்ல உமி ஆக்கிபோடுவா.

காயல்பட்டினம் அல்வா இல்ல மஸ்கொத்து அல்வா. பல்லு புடுங்க டாக்டர் கிட்ட போக வேண்டாம். கொஞ்சம் வாங்கி சாபிட்டா போதும்.

பித்தனின் வாக்கு said...

IMSAI ILLAVAL :- HA HA INTHA KONGU PAGE REMBA ARUMAIYA IRUKAUNGA, ENGA OORU KUDA DHARAPURAM THANGA, ANGA NAGALUM PODATHA ATTAM POTTU THAN VALANTHANGA. KONGU MANDALAM MATHIRI VERA EDAM PAKKA MUDIYATHUNGA. KARAM PORRI, ADI PORUKKU VILA, PONGAL ELLAM NALLA IRUKUMNGA. THIRUMOORTHI FALLS, KOVAI KUTHALAM.AALIAYARU FALLS KOLLIMALAI FALLS ELLAM KULIKKA KUDIKKA SUPERANA IDAMUNGA

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அருமையான நகைச்சுவை - படித்தேன் - ரசித்தேன் - விழுந்து விழுந்து சிரித்தேன்

சூபர் - பாவம் மகேசு - நசரேயன் எல்லாம்

அரசூரான் said...

ஓ... கோவையும் நெல்லையும் நல்ல காம்பினேசன்... ஆந்திரா எம்.எல்.ஏ பெஸரட்டு போல... சூப்பர்

Anonymous said...

//அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..//

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

Unknown said...

அருமைனே