Friday, March 19, 2010

பாசத் தலைவனுக்கு பிறந்தநாள்

இன்று பிறந்த நாள் காணும் 

தி.கு.ஜ.மு.கழகத் தலைவரும் 


எங்களின் அன்புக்குரிய 


அண்ணனுமாகிய குடுகுடுப்பை 


அவர்களை வாழ்த்த வயதில்லாததால் 


வணங்குகிறோம்.

இவண்
முகிலன், தலைவர், இலக்கிய அணி
நசரேயன், செயலாளர், கள்ளக் காதலர் அணி
வானம்பாடிகள், தலைவர், மாணவரணி
அதுசரி, தலைவர், சட்ட அணி
எம்.எம்.அப்துல்லா, தலைவர், குழந்தைகள் அணி
வில்லன், பொருளாளர்

இலக்கிய அணி சார்பில் பாசத்தலைவனுக்கு பிறந்த நாள் விழா எதிர் வரும் சனி மாலை நடைபெறும். இடமும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும். பொருளாளர் வில்லன் அவர்கள் விழாவுக்கு ஆகும் செலவுக்கு வசூலை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சட்ட அணித்தலைவர் உப்புக்கண்ட மாலைக்கு ஏற்பாடு செய்வார் என்று தெரிகிறது.

Friday, March 12, 2010

அமெரிக்கா: செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் பதிவர் சந்திப்புக்கான அழைப்பு


Florida மற்றும் Boston பதிவர் சந்திப்பு முடிச்ச கையோட, Washington D.C பதிவர் சந்திப்புக்கான ஆயத்த வேலைகள் மக்களே!


செந்தமிழ்க் காவலர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிறையப் பதிவர்கள் விழா அரங்கில் குழும இருக்கிறார்கள். எனவே வர வாய்ப்பு இருப்போர், அவசியம் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

=====================================



புறநானூற்றுக் கருத்தரங்கம்

செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா

தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு பிறபகல், கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்


1.30 - 2.00
அளவளாவுதல்
2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து


2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்

2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்
முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ

2.35-3.00
புறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம்
முனைவர் இர.பிரபாகரன்
3.00-3.25
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்
உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.

3.25-3.40
புறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார்
முனைவர் இ.மதியழகி

3.40-4.00
தேனீர் இடைவேளை

4.00-4.15
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் அரசு செல்லையா அவர்கள்

4.15-4.30

தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்

4.30-5.30
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)

கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்

5.30-5.35
நன்றி நவிலல்
திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்



அனைவரும் வருக!
ஆதரவு தருக!!